ஞாயிறு, ஜனவரி 10, 2010

ஒஷ்ட ரோகம் -ரோக நிதானம்

ஓஷ்டரோகம்

உதட்டில் வரும் வியாதிக்கு ஓஷ்டரோகம் எனப் பெயர். இது 11 வகைப்படும்.

1. கண்டோஷ்டம் :- இது வாய்வு உதட்டல் சேரும் போது பிறந்து அவ்வுதடுகளில் வெடிப்பை உண்டாக்கும்.

2. வாதோஷ்டம் :- இதில் உதடுகளில் கத்தியின் வாயைப்போல் கூர்மையான வெடிப்புகளும், மறத்தலும் அதிக நோய் உண்டாகும்.

3. பித்தோஷ்டம் :- உதடுகளில் அதிக காங்கையுடன் கடுகை போல் மஞ்சள் நிறமான கொப்புளங்களை நிறைப்பிக்கும். அப்போது
அவைகளினின்று வியர்வை கசிவு உண்டாகும். அக்கொப்புளங்கள் சீக்கிரத்தில் உடைவதாயிருக்கும்.

4. சிலேஷ்மோஷ்டம் :- உதடுகளில் அதிக சீதளத்தைக்கொண்டு சகிக்கக்கூடாத நோயையும், வீக்கத்தையும், வெளுப்பான சிறிய கொப்புளத்தையும் உண்டாக்கும். அவைகளினின்று வியர்வை பெருகும்.

5. சந்நிபாதோஷ்டம் :- உதடுகளில் வெடிப்பு, அதிக நோய் மரத்தல், நானாவித கொப்புளங்கள் எழும்புதல், அதில் மாறாது சலம் வடிதல், துர்கந்தம், ஒரு வேளை வாடுதல், ஒரு வேளை உப்பு தல், வறளல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

6. ரத்தோஷ்டம் :- உதடுகள் ரத்த நிறமாகவும், ரத்தத்தை கக்குவது போலவும் இருக்கும்.

7. அற்புதோஷ்டம் :- உதடுகளில் சிறிய பேரிச்சங்காயை யொத்த வீக்கத்தை உண்டாக்குவதுடன் அவைகளின் மேல் சிவந்த
நிறத்தையும் உண்டாக்கும்.

8. மாமிசாதோஷ்டம் :- உதடுகளில் சிவந்த மாமிசத்தை ஒத்த விரணத்தை உண்டாக்கும். அப்போது அதிலிருந்து அந்த நிறத்தைப் பெற்ற கிருமிகள் நெளிவதும், நமைச்சலும் நோயும் உண்டாகும்.

9. மதோஷ்டம் :- உதடுகளில் எண்ணெய் தடவினது போல் மினுமினுத்த வீக்கம், அதில் கொளுப்பைப்போல் நல்ல மிருது வியர்வை, மிகுந்த தினவு என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

10. க்ஷதோஷ்டம் :- உதடுகளில் காயங்கள் படுங்காலத்தில் பிறந்து அந்த இடத்தில் கட்டிகளை பிறப்பித்து அவைகளை யுடையும் படிச்செய்து விரணத்தையாவது, அல்லது வெடிப்பையாவது
உண்டாக்கும். அவைகளில் தினவும் அற்ப வலியும் இருக்கும்.

11. சலாற்புதோஷ்டம் :- உதடுகளில் வாத சிலேஷ்மங்களினால் நீர்க்குமிழியைப்போல் மாமிசத்தை வளரச்செய்யும். இதில் சலமும்
சீழும் கசிந்தாலும் கசியும்.
 
Post Comment

0 comments:

கருத்துரையிடுக