ஞாயிறு, ஜனவரி 10, 2010

முக ரோகம் -ரோக நிதானம்

முகரோகம்

மீன், எருமைமாமிசம், பன்றி மாமிசம், சைத்தியவஸ்து,
முள்ளங்கிக்கிழங்கு, உளுத்தம்பருப்பு, தயிர், பால், காடி, இலவண வஸ்து, கரும்பு ரசம், காந்திய அன்னம் இவைகளை இடைவிடாது விஷேசமாக அக்காலத்தில் புசித்தலினாலும், ஒருக்களித்து படுத்தல் பல் விளக்காதிருத்தல், சலத்தை கொப்புளித்து கொப்புளித்து விசை யாக உமிழல், புகைபிடித்தல், வாந்தி செய்தல், விடாத தலைநோய், ஆகிய இவைகளினாலும் வாதபித்த கபங்கள் அதிகரித்து முகத்தில் இருக்கின்ற சப்த தாதுக்களில் பரவி அந்தந்த இடங்களில் நோய்களை பிறப்பிக்கும்.

இது முகத்திலுள்ள எட்டு ஸ்தானங்களைப் பற்றி 75 வகை
நோய்களை பிறப்பிக்கும். உதட்டில் 11 தாடைக்கு நடுவில் 1 பற்களில் 10, பற்களின் வேரில் 13, நாவில் 6, தாடைகளில் 8 ,தொண்டையில் 18, முகமுற்றிலும் 8 ஆக 75 வகைகளாம்.

 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக