ஞாயிறு, ஜனவரி 10, 2010

கணம் & மாந்தம் நிதானமும் சிகிட்சைகளும்


கணம் 

இது மாதா பிதாக்களின் நாதவிந்துகளில் அடங்கிய வாதாதி தோஷங்களினின்று உற்பத்தியாகிக் கருப்பாசயத்துச் சிசுவைப்பற்றி அச்சிசுவினது சப்ததாதுக்களும் வன்மையை யடையுங்காலத்தில் விருத்தியடைவதால் கணரோகம் எனப் பெயர் பெற்றது.

இந்நோயில் தேகவாட்டம் வாய்நாற்றம், தலைசுற்றல், உட்சுரம், வெளிச்சுரம், வயிற்றின்மேல் சுடுகை, மயக்கம், வறண்ட மலம் என்னும் குணங்கள் ஏற்படும். இது 12-வயது வரையிலும் டரும். கணம் எண்வகைப்படும். அவையாவன :-

குலிகணம், முக்குகணம், ஆமகணம், தேரைக்கணம், மகா கணம், கழிகணம், சுழிகணம், றள்கணம் என்பதாம்.

1. சூலிகணம் :- மேல்மூச்சு, இருமல், நெஞ்சு, நாவு, நாபி புண்போலிருத்தல், பாலுண்ணாமை, முகநாற்றம் என்னும் குணங்க ளுண்டாகும்.

2. முக்குணம் :- வயிற்றுக்கடுப்பு, நாவில் வெடிப்புடன் வெந்ததுபோலிருத்தல், சுரம், தலைவலி, எரிச்சல், ஆசனம் வெளிப்பட்டு முக்கலுடன் ரத்தமும் சீதமும் ஒழுகுதல், தேக வாட்டத்திலும் கறுத்த நிறம், முடிச்சோறுதல், தாகம் என்னும் குணங்களுண்டாகும். இதுவே மூலகணமாம்.

3. ஆமக்ணம் :- நெஞ்சில் துடித்தல், சிறுநீர் மஞ்சலாக இறங்குதல், தேகத்தில் புகை கப்பினது போல் மாறு நிறம், ஒருவேளை சர்வாங்கத்திலும் வெதும்பல், இருமல், வயிற்றிறைச்சல் புகைந்து புகைந்து மேல் மூச்சு என்னும் குணங்களுண்டாகும்.

4. தேரைக்கணம் :
- வாதநாடி மற்ற நாடிகளில் பின்னிக்கொண்டு நடத்தல், புளிப்பு, துவர்ப்பு, வஸ்த்துக்களில் வெறுப்பு அன்னத்துவேஷம் திரிதோஷாதிக்கம், நாபியில் புண்போலிருத்தல்
உட்காய்ச்சல், தேகவாட்டம், எரிகுன்மம், பித்தவெட்டை தாது நஷ்டம் என்னும்   ங்களுண்டாகும்.

5. மகாகணம் :- முகம் புறங்கால், புறங்கை இவைகளில் மினுமினுப்பு, நகமும் விழியும் வெளிறல், மயக்கம், மிகு வெப்பம், உதடு புண்போல் சிவந்திருத்தல், என்னும் குணங்களுண்டாகும்.

6. கழிகணம் :- சீதஞ்சீதமாயும் மலமாயும், பலைபோல சலஞ்சலமாயும், பேதியாதல் உள்ளங்கை, உள்ளங்கால்களில் சிலசமயம் காங்கை என்னும் குணங்களுண்டாகும்.

7. சுழிகணம் :- கண்சோருதல், மார்புநோய், வயிறு ஈறல், நெஞ்சு நரம்பு இவைகள் வெந்ததுபோலிருத்தல், பாலுண்ணாமை  அலறுதல், மேல்மூச்சு, இருமல் கைகால்களில் சீதளம் வயிற்றுப் பொருமலுடன் வலி, சுரம் நாக்குவறளல் என்னும் குணங்களுண்டாகும்.

8. வறள் கணம் :- மேனி வறளல், நெஞ்சு துடித்தல், புகை இருமல், மாறுநிறம், விட்டுக்கூடு வயிற்றில் இரைச்சல் என்னும்  குணங்களுண்டாகும்.


மாந்தம்

வெல்லம், தேங்காய், மாங்காய், சுண்டற்கரி, வழுக்கைக்கீரை வாளைமீன், வரால்மீன், கெட்டுலர்ந்த பள்ளை ஆட்டின் இறைச்சி, புளிப்புவேர், பாகற்காய், முதிற்ந்த வாழைக்காய், கிழங்குவகை மந்தவஸ்து, எருமைப்பால், தினசையோகம், சரகு ஊறிய சலம், சலதோஷம், பசி, துயரம், என்பவைகளை அதுசரிக்கும் ஸ்திரிகளின் முலைப்பாலை குடிக்கும் சிசுக்களுக்கு மந்தரோகம் உண்டாகும்.

இந்நோயில் பசியில்லாமை, சீதங்கலந்த நானாவித நிறத்துடன் பால்போலவும் தெளிந்த சலம்போலவும் துர்க்கந்தமாகவும், பேதி யாதல், சுரம், மயக்கம், கையும், காலும் சில்லிடல், கண்களில் வெப்பம் சிலசமயம் குளிர்ச்சி, உடர்சோர்வு, முகத்தில் பல நிறத்துடன் பளபளப்பு, முதலிய குணங்கள் உண்டாகும். இது செரியாமாந்தம், பீர்மாந்தம், சுரமாந்தம், விஷமாந்தம், கழிமாந்தம், ஊது மாந்தம், நீர்மாந்தம், தலைமாந்தம் என 8 வகைப்படும்.

1. செரியாமாந்தம் :- வயிறு உப்பலோடு மாவைக் கரைத்தது போல் கண்டலும், கரைதலுமான பேதி, விக்கல், சுரம், தலைவலி அரைக்கண் மூடியபார்வை, துர்ப்பலம், துயரம், சோர்வு, என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பீர்மாந்தம் :- 
வயிறு பொருமலுடன் பால் நிறமான பேதி புகைந்திருமல், பால் உண்ணாமை, வாந்தி, கண்களில் குழிவிழுதல் தாகம், அதிகவெப்பம், மார்பு நோய், தலைநடுக்கல், வயிற்றுவலி சீறிச்சீறி அழுதல், பெருமூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. சுரமாந்தம் :- சுரம், அற்ப்பமாக பாலுண்ணுதல், அடிக்கடி அழுகை, பொடீருமல்,  லசலக்கட்டு, மயக்கம், என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. விஷமாந்தம் :- அரைக்குகீழ் சீதளம், வயிற்றிரைச்சல் பயந்த பார்வை, தாய்கையில் தங்காமை, சோர்வு, மயக்கம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

5. கழிமாந்தம் :- நானாவிதகழிச்சல், வாந்தி, மயக்கம், சுவாசம், வாயுங்குறலும் சில்லிட்டது போல் தோன்றுவதுமன்றி,  வயிறு, கை, கால் இவைகளில் சீதளத்துடன் வியர்வை என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. ஊது மாந்தம் :- கால்,கை, வீக்கம், சோர்வு, சுரம், அன்ன பானாதிகள் இறங்காமை, நாவில் புண்போலிருத்தல், மிகுந்தசுவாசம் எழும்புதல் என்னும் குணங்களுண்டாகும்.

7. நீர்மாந்தம் :- சர்வாங்க வியர்வை, சீதளம், குளிர், முகத் தின் பளபளப்பு, தேகத்திலாவது, கைகால்களிலாவது தினவுடன் வீக்கம், தலைநோய், முக்கலுடன் நீர் இறங்குதல், இறைந்துறைந்து வயிறுகழிதல், வாய்நீரூறல், ஒக்காளம், மெலிந்தவார்த்தை, உறக்கம், நகைப்பு என்னும் குணங்களை உண்டாக்கும்.

8. தலைமாந்தம் :-
 தலையிலும் கழுத்திலும் ஊதல், கைகால் களில் குளிர்ச்சி, சர்வாங்கநோய் சிலசமயம் குலையில் வலி, அதனால் துள்ளித்துள்ளிவிழுதல் குளிர்ச்சுரம், முகத்தில் வியர்வை, புருவ   வேதனை, பலவிதமானபேதி, வயிற்றுப் பொருமலுடன் வலி, ஏப்பம், நாசியில் புண்போல் நோயுடன் நீர்வடிதல் மார்புவலி  பற்கிட்டலுடன் நெற நெறவென்றகடித்தல் , கைகால்களில் இசிவு, எழுந்திருக்ககூடாமை, அன்னபானதிகளில் வெறுப்பு அசதி, கொட்டாவி, இளைப்பு, வயிற்றுப் என்னும் குணங்களுண்டாகும்.

மேலும் சில நூல்களில் உள்ளில் வேப்பம் இருந்தால் கணாமாந்தம், கண்சோருகினால் சொருகுமாந்தம்,உச்சியில் குழி விழுந்தால் குழிமாந்தம், கைகாலை இழுத்தால் இழுப்புமாந்தம் வயிறுப்பினால் உப்புமாந்தம், விலாவை தூக்கினால் அள்ளுமாந்தம்
விக்கல் இருந்தால் விக்கல் மாந்தம், வாதபித்த சேஸ்டைகள் அதிகரித்தா லவைகளின் பெயர் கொண்ட மாந்தம், சந்நிபாத குறிகளிருந்தால் சன்னிமாந்தம் என மாந்த நோயை 21 வகையாக வகுத்து கூறப்பட்டுள்ளது.

 


Post Comment

0 comments:

கருத்துரையிடுக