வாதகளகண்டத்திற்கு தாமரைத்தண்டு முதலிய சரக்குகளையாவது அல்லது வாதத்தை ஹரிக்கும் செடிகளுடைய இலைகளையாவது அரைத்து கற்கஞ்செய்து கட்டவேண்டியது.
வாதகளகண்ட சிகிச்சை :- மாவேர், முருங்கைவேர், தசமூலம், இவைகளை அரைத்து சிறிது சூடாக்கி, லேபனம் செய்தால் வாதகள கண்டம் நிவர்த்தியாகும்.
கபகள கண்ட சிகிச்சை :- கபகள கண்டத்தில் வியர்வையை வாங்குதல், அதை அறுத்தல், கபரோகத்தை ஹரிக்கும் பதார்த்தம் சாப்பிடுதல், முதலியவைகளை செய்தல் வேண்டும்.
மேதகள கண்ட சிகிச்சை :- சரஸ்திரப்பிரதாரம், சிநேஹம்லேபனம் செய்தாலும் அல்லது சிரொவேதஞ்செய்து திப்பிலி சுண்ணாம்பு, லோகசிட்டம், நேர்வாளம், ரசாஞ்சணம் இவைகளை அரைத்து லேபனம் செய்தாலும் மேதகளகண்டத்திற்கு ஹிதமா இருக்கும்.
சர்ஷயாதி லேபனம் :- வெள்ளைக்கடுகு, முருங்கைவிரை, சணப்புவிரை, அகத்திவிரை, யவதானியம், முள்ளங்கிவிரை, இவை களை புளித்த மோரினால் அரைத்து லேபனம் செய்தால் கள கண்டம் கிரந்தி, கண்டமாலை இவை நீங்கும்.
பாலாசமூலலேபனம் :- அலரிவேரை கஞ்சிஜலத்தினாலரைத்து காதுகளில் லேபனம் செய்தால் கள கண்டம் நீங்கும்.
சூரியாவர்த்த லேபனம் :- சூரியாவர்த்தம், வெள்ளைப்பூண்டு இவைகளை அரைத்து உருண்டை செய்து அதன் மீது வைத்து கட்டு கட்டினால் கொப்புளம், ரத்தம், சீழ்வடிதல், முதலியவைகளுடன் கூடிய கள கண்டம் நிவர்த்தியாகும்.
தேவதார்யாதி லேபனம் :- தேவதாரு, தும்மட்டி இவைகளை அரைத்து லேபனம் செய்தால் சகலகள கண்டங்களிலும் ஹிதகரமாயிருக்கும்.
அமிருதாதி தைலம் :- சீந்தில்கொடி, வேப்பன்ம் பெருங்காயம், கடுக்காய்ப்பிஞ்சு, நெல்லிக்காய், திப்பிலி, பேராமுட்டி, சிற்றாமுட்டி, தேவதாரு இவைகளின் கற்கத்தைச் சேர்த்துத்தயார்செய்த தயிலத்தை பானம் செய்தால் கள கண்டம் நிவர்த்தியாகும்.
தும்பீதைலம் :- வாய்விளங்கம், யவாக்ஷ¡ரம், இந்துப்பு,வசம்பு சிற்றரத்தை, திரிகடுகு, சித்திரமூலம், தேவதாரு இவைகளின் கியாழம், பேய்சுர ரசம், வெள்ளைக்கடுகு, எண்ணெய், இவைகளை
கலந்து தைலபக்குவமாய்க் காய்ச்சி நசியம் செய்தால், கொஞ்சமாய் இருக்கும் கள கண்டம் நிவர்த்தியாகும்.
தும்பியாதி தைலம் :- பேய்ச்சுரக்காய்சுரம் 4 பாகம், திப்பிலி கற்கம் 1 பாகம், இவைகளுக்குச் சமம் எண்ணெய் கலந்து தைலபக்குவமாய்க் காய்ச்சி லேபனம் செய்தால் கண்ட மாலை களகண்டம் இவை நிவர்த்தியாகும்.
வியோஷாதி தைலம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், அதிமதூரம், இந்துப்பு, தேவதாரு இவைகளின் கற்கத்தினால் தயார்செய்த தைலத்தினால் லேபனம் செய்ய கண்ட மாலை களகண்டம் இவை நிவர்த்தியாகும்.
சந்தனாதி கியாழம் :- கடுக்காய்பிஞ்சு, அரக்கு, வசம்புகடுகுரோகணி, இவைகளினால் தாயார் செய்த தைலத்தை பானஞ்செய்தால் அபஸிரோகம் நிவர்த்தியாகும்.
மண்டூர லோஹம் :- இரும்புச்சிட்டத்தை ஒரு பானையில் போட்டு ஆட்டுமூத்திரத்திலிட்டு ஒரு மாதம் வரையிலும் ஊறவைத்து பிறகு அரைத்து கஜபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்துச் சூரணித்து தேனுடன் சாப்பிட்டால் கள கண்டம் நிவர்த்தியாகும்.
அலாபுஜல பானம் :- பழுத்த பேய்ச்சுரையில் ஜலம் வார்த்து ஏழு நாள் வைத்து பிறகு அந்த ஜலத்தை குடித்து பத்தியமாக சாப்பிட்டால் களகண்டம் நிவர்த்தியாகும்.
ஜீரணகர்காருகயோகம் :- பழுத்த பூசனிக்காய் ரசத்துடன்பீடாலவணம் இந்துப்பு இவைகளை கலந்து நசியம் செய்தால் களகண்டம் ரோகம் நிவர்த்தியாகும்.
0 comments:
கருத்துரையிடுக