வியாழன், ஜனவரி 14, 2010

அந்தர் வித்ரதிக்கு ரோக சிகிச்சைகள்

வித்திரதிக்கு வருணாதி கியாழம் :- அன்னபேதி, இந்துப்பு, சிலாசத்து, பெருங்காயம், இவைகளை சூரணித்து உலிமிடிபட்டை கியாழத்தில் போட்டு சாப்பிட்டால் உள்ளிருந்து பக்குவமாகாமல் மிகவும் சிக்கமுள்ளதாயும் பயங்கரமானதுமான வித்திரதி நிவர்த்தியாகும்.

சிக்வி ராதி கியாழம் :- முருங்கவேர்ப்பட்டை, ஓமம், உமிலிடி பட்டை, மஞ்சள். மரமஞ்சள், அரசன் பட்டை இவைகளை சம எடையாய் கியாழம் வைத்து அதேபோலவே சூரணமும் செய்து இரண்டு கூட்டி சாப்பிட்டால் உள்புறமான வித்திரதி நிவர்த்தியாகும்.

புனர்னவாதி கியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், உமிலிடி வேர் இவைகளை கியாழம் வைத்து கொடுத்தால் பக்குவமாயிருக்கும் வித்திரதி குணமாகும்.

தசமூலாதி கியாழம் :- தசமூலம், சீந்தில்கொடி, கடுக்காய்த்தோல் தேவதாரு, வெள்ளைச்சாரணை, முருங்கவேர், சுக்கு இவைகளை கியாழ்ம் வைத்துக் குடித்தால் சுரம், வித்திரதி, வீக்கம், முதலியயன குணமாகும்.

வாதவித்திரதிக்கு கியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், மரமஞ்சள், சுக்கு, தசமூலம், இவைகளை சம எடையாய் கியாழம் வைத்து  சாப்பிட்டால் வாதவித்திரதி குணமாகும்.

கபவித்திரதிக்கு கியாழம் :- திரிபலை, முருங்கவேர்ப்பட்டை,  உமிலிடிபட்டை, தசமூலம், இவைகளை கியாழம் வைத்து அதில்  குங்கிலிய சூரணம் கோமூத்திரம் இவைகளை கலந்து சாப்பிட்டால் கபவித்திரதி குணமாகும்.

வித்திரதி லேபனம் :- யவதானியம், கோதுமை, பச்சைப்பயறு இவைகளை மிருதுவாக அரைத்து லேபனம் செய்தால் பக்குவமாகிய வித்திரதி உடைந்து குணமாகும்.

வாத வித்திரதி லேபனம் :- சிகப்பு ஆமணக்குவேரை கல்கஞ்செய்து மாமிசரசம், நெய் இவாஇகளை எண்ணெய் இவைகளை சேர்த்து கொஞ்சம் சூடாக்கி தட்டமாக லேபனம் செய்தால் வாதவித்திரதி நிவர்த்தியாகும்.

திரிபலாதி குக்குலு :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு பலம்1, திப்பிலி 2 பலம், குங்கிலியம் 5 பலம் இவைகள் யாவையும் சமஎடையாகச் சூரணித்து 1/4 வராகனெடைவீதம் உட்கொண்டு வர அந்தரவீர்த்தி நிவர்த்தியாகும்.

கஜ்ஜலி யோகம் :- வருணாதி கியாழத்துடன் ரசம், கெந்தி இவைகளை குழம்பு போல் அரைத்து இரண்டு குன்றி எடை சாப்பிட்டால் வெளிவிர்த்தி, அந்தரவிர்த்தி நிவர்த்தியாகும்.

அதுபக்குவமாக இருந்தால் இதை தான் செய்யவேண்டியது. பக்குவமான பிறகு விரண சிகிச்சை களை செய்யவேண்டும்.

ஜலவுகா பாதனம் :- சகல வித்திரதிகளிலும் அட்டயை கடிக்க விட்டு இரத்தத்தை வாங்கி பிறகு விரேசனம், வியர்வை வாங்குதல் முதலிய வித்திரதி சிகிச்சைகளை செய்ய வேண்டியது.

திரிபலா யோகம் :- பக்குவமான வித்திரதிகளிலும், இரத்தம் சீழ்வொழுகும் வித்திரதிகளிலும், நாடி விரணங்களிலும், பகந்தரத்தி லும், கண்டமாலைகளிலும் திரிபலாதி குக்குலு சிறந்தது.

சொளபாஞ்சன நிர்யாசரோகம் :- முருங்கைப்பிசின், பெருங்காயம், இந்துப்பு இவைகளை சேர்த்து சூரணித்து காலையில் சாப்பிட்டால் வித்திரதி குணமாகும்.

வித்திரதிக்கு பத்தியங்கள் :- வித்திரதி அபக்குவமாக யிருந்தால் விரேசனம், பழுக்கவைக்கும் லேபனம், வியர்வை வாங்கல் முதலிய சிகிச்சைகளை செய்தல் நன்று. வித்திரதி பக்குவமாகயிருந்தால் சஸ்த்திர சிகிச்சை, உடைப்பதற்கு லேபனம் விரணத்தை ஆற்றும் மருந்துகள் முதலியவைகளைப் பயன்படுத்தவேண்டும்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக