வியாழன், ஜனவரி 14, 2010

ஸ்லீபத ரோக (யானைக்கால் )சிகிச்சைகள்

சிலீபத சிகிச்சை 
 

சித்திரகாதி கல்கம் :- சித்திரமூலம், தேவதாரு, வெள்ளை கடுகு, முருங்கைப்பட்டை இவைகளை கற்கஞ்செய்து கோமூத்திரத்துடன் கலந்து சிறிது வெதுப்பி லேபனம் செய்தால் ஆனைக்கால் நிவர்த்தியாகும்.

ஹிரீதகீ கல்கம் :- கடுக்காய் தோலை அரைத்து கற்கஞ்செய்து கோமூத்திரத்திலாவது அல்லது வெந்நீரிலாவது கலந்துகுடித்தால்  ஆனைக்கால் நீங்கும்.

விருத்ததாறு சூரணம் :- விருத்ததாறு சூரணத்தை கோமூத் திரத்திலாவது அல்லது காடியிலாவது கலந்து சாப்பிட்டால் ஒரு வருஷமாயிருக்கும் ஆனைக்கால் குணமாகும்.

பிப்பலியாதி சூரணம்:- திப்பிலி, கடுக்காய், தானிக்காய்,நெல்லிவற்றல், மரமஞ்சள், சுக்கு, வெள்ளைசாரணை இவைகள் வகைக்கு பலம்-2, இவைகள் யாவற்றிற்கும் சமஎடை தேவதாரு இவைகளை சூரணித்து 1/4 முதல் 1/2 தோலாவீதம் காடியில் சாப்பிட்டு சீரணித்தப் பிறகு அன்னத்தை புசித்தால் ஆனைக்கால், வாதரோகம், பிலீகை, குன்மம் முதலியன நிவர்த்தியாவதுடன் அக்கினிதீபனம் உண்டாகும்.

குடூச்சியாதி லேபனம் :- சீந்தில்கொடி, கடுகுரோகணி, சுக்கு, தேவதாரு, வாய்விளங்கம் இவைகளை கோமூத்திரத்தில் அரைத்துலேபனம் செய்தால் ஆனைக்ால் குணமாகும்.

அபயாதி லேபனம் :- கடுக்காய், வெள்ளை கடுகு, சுக்கு,பெருங்காயம், வசம்பு, முருங்கை வேர், எருக்கன் வேர் இவைகளைச் சமஎடையாய் எருக்கன் பாலினால் அரைத்து லேபனஞ் செய்தால் bஆனைக்கால் நிவர்த்தியாகும்.

பித்தசிலீபத லேபனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், சிற்றரத்தை, ஜடாமாஞ்சி, வெள்ளைச்சாரணைவேர் இவைகளை சமஎடை காடிவிட்டு அரைத்து லேபனஞ் செய்தால் பித்தசிலீபதம் நிவர்த்தயாகும்.

தத்தூராதி லேபனம் :- ஊமத்தன், ஆமணக்குவேர், நொச்சி, வெள்ளைச்சாரணைவேர், முருங்கைவேர், வெள்ளை கடுகு இவைகளைச் சமஎடையாய் அரைத்து தடவினால் கொஞ்சகாலமாயிருக்கும் சிலீபதரோகம் நிவர்த்தியாகும்.

சித்தாதி லேபனம் :- வெள்ளைகடுகு, முருங்கைவேர்பட்டை, தேவதாரு, சுக்கு இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து லேபனம்  செய்தாலும் அல்லது வெள்ளைகடுகு, வெள்ளைச்சாரணை இவைகளை
கற்கஞ்செய்து காடியினால் அரைத்து லேபனம் செய்தாலும் ஆனைக்கால் குணமாகும்.

சவுரேசுர கிருதம் :- நொச்சி, தேவதாரு, திரிபலை, திரிகடுகு, யானைத்திப்பிலி, பஞ்சலவணம், வாய்விளங்கம், சித்திரமூம், செவ்வியம், மோடி, குங்கிலியம், சிவகரந்தை, வசம்பு, யவக்ஷ¡ரம், வட்டத்திருப்பி, முத்தக்காசு, ஏலக்காய், விருததாறு இவைகளை வகைக்கு 1-தோலா விகிதம் கற்கம்செய்து அதில் நெய், தசமூலகியாழம், தானிய கியாழம், தயிமீது தேட்டை இவையாவும் வகைக்கு 20-பலம் சேர்த்து கிருதபக்குவமாய் காய்ச்சி 1/2-பலம்
விகிதம் குடித்தால் கபவாதத்தினால் உண்டான ஆனைக்கால், மாமிசரசத்துடன்கூடிய ஆனைக்கால், மேதோபிகாதமான ஆனைக்கால், அபசி, களகண்டம், ஆந்திரவிருத்தி, அற்புதரோகம், கிரஹணி, தோஷம், வீக்கம், மூலவியாதி, கோஷ்டகிருமிரோகம் இவையாவும்நிவர்த்தியாவதுடன் அக்கினிதீபனம் உண்டாகும்.

விடங்காதி தைலம் :- வாய்விளங்கம், நன்னாரிவேர், எருக்கன்வேர், சுக்கு, சித்திடமூலம், தேவதாரு, ஏலக்காய், பஞ்சலவணம் இவைகள் சமஎடையாய்ச் சேர்த்து தயிலத்தில் கலந்து தயிலபதமாய்க் காய்ச்சி குடித்தால் ஆனைக்கால் குணமாகும்.

ஆனைக்காலுக்கு பத்தியங்கள் :- பழயசிகப்பு, நெல், சம்பாஅரிசி, கொள்ளு, வெங்காயம், புடலங்காய், கத்தரிக்காய், முருங்கக்காய், பாவக்காய், வெள்ளைசாரணைவேர், ஆமணக்கு என்ணெய்கோமுத்திரம், காரம், துவர்ப்பு, தீபனமான பதார்த்தங்கள் இவைபத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பழைய சாப்பாடு, பாலினால் செய்யப்படும்பதார்த்தங்கள், வெல்லம், நீர், ஐந்து மாமிசம், தித்திப்பான பதார்த்தங்கள், புளிப்பு, விந்தியபருவத சார்பிலுள்ள ஆற்றுசலங்கள், பசபசப்புள்ள பதார்த்தங்கள், குருபதார்த்தங்கள், இவைகள் ஆகாது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக