ஞாயிறு, ஜனவரி 10, 2010

கிரந்தி & கரப்பான் - ரோக நிதானம்


கிரந்தி

சிசுக்களுக்கு கிரந்தி ரோகமானது இருவகைப்படும்.
 
1. செங்கிரந்தி :- முழங்கால், முழங்கைவரைக்குமாவது தேகமுழுவதுமாவது சிவந்த நிறமான வீக்கமும், அவ்வீக்கம் ஒடியோடிக்கட்டுதல் வாய்கடித்தல் மலமூத்திரபந்தம், பூனை குரலோசையை யொத்து விம்மிவிம்மி அழுதல், பிரேதம் போல் கிடக்குதல் என்னும் குணங்களுண்டாகும்.

2. கருங்கிரந்தி :- தேகம் முழுவதுமாவது முழங்கால், முழங்கைவரைக்குமாவது நீலம்போற் கறுத்தல், வெளிறல், முலையுண்ணாமை அல்லது வலது முலையுண்ணாமை, நாவறளல், உடலிலாவது, தோளிலாவது சுடுகை, விழித்து விழித்து பார்ப்பது, குணம் மாறுவது, அலறுவது, இருமல், குறற்கம்மல், வயிற்றில் வேதனை என்னும் குணங்களுண்டாகும்.
 

கரப்பான்

சர்வாங்கத்திலும் பரபரப்பான ஊரல், பல நிறத்துடன் சாரைப்பாம்பின் தோலையொத்த சொறி, அதில் சிவந்த நீர் கசிவது, கண்டத்தில் விஷக்கடி ரோகம் போல வெடித்து நீர் கசிவது, விகாரரூபம் இளைப்பு என்னும் குணங்களுண்டாகும். அன்றியும் கறுத்தாற் கருங்கரப்பான், சிவத்தற் செங்கரப்பான், வரிவரியாக இருக்கில் வரிகரப்பான். சொறி எழும்மினாற் சொறிக்கரப்பான், தினவு உண்டானால் ஆனந்தக்கரப்பான், தலையிற்காணில் மண்டைக்கரப்பான் என கரப்பான் நோயை பலவகையாகவும் சில நூல்களிற் கூறப்பட்டுள்ளது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக