ஞாயிறு, ஜனவரி 10, 2010

கபால ரோகம்- ரோக நிதானம்


கபாலரோகம்

இது ஒன்பது வகைப்படும். அவையாவன :-

1. உபசீரிஷம் :- இந்நோயில் கபாலத்தில் வாயு சேர்வதால் கருப்ப ஸ்திரீக்கு சிரசில் வீக்கமும் அவ்வாறே அவள் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உண்டாகும். தாய்க்கு சிகிச்சை செய்ய சிசுவுக்கும் குணமாகும்.

2.முர்தபிடகம் 
:- வாதத்தினால் உச்சந்தலையில் கட்டிப்
போல் வீக்கத்தை உண்டாக்கும்.

3. சிரோற்புதம் :- பித்தத்தால் கபாலத்தில் ஆச்சரியமான
வீக்கத்தை உண்டாக்கும்.

4. சிரோ வித்திரதி :- கபத்தால் கபாலத்தில் வித்திரதியைப்போல் வீக்கத்தை உண்டாக்கும்.

5. அரூம்ஷீகை :- பித்தத்தினால் கபால முளை கரையும்போது பிறக்கும். இதனால் கபாலத்தின் மீது ரத்தத்தினாலாவது கபத்தினாலாவது கிருமிகளினாலாவது தினையைப்போலும், கடுகைப்போலும் அநேக கொப்புளங்கள் உண்டாகும்.

6. தாருணம் :- இது சிலேஷ்ம வாதங்களினால் பிறந்து கபாலத்தில் தினவு, மயிர் உதிர்தல், சுறசுறப்பு சருமப்பொட்டுகள் உதிரல், மிகு நித்திரை முதலிய குணங்களையுண்டாக்கும்.

7. இந்திரலுத்தம் :- பித்தமானது உரோம துவாரத்தில் வியாபித்து வாதத்துடன் கூடுங்காலத்தில் பிறக்கும். இதனால் கபாலத்தி லிருக்கும் உரோமமெல்லாம் உதிரும். இவ்வண்ணமாக பித்த முதலியவைகள் உரோமதுவாரங்களை அடைவதனால் உதிர்ந்த ரோமம்
முளையமாட்டாது. எப்படி இந்திரலுத்தமெனும் ஒரு எரிப்பூச்சி யானது பயிர்முதலிய பச்சிலைகளை ஒன்றுமில்லாமல் செய்து விடுமோ அது போல் இதுவும் உரோமக்கால்களைக் கெடுத்து விடும்.

8. கலதி :- முற்கூறிய இந்திரலுத்தரோக குணத்துடன்
உரோமங்களை உதிரச்செய்வதுடன் கபாலத்தை மூடிய சருமத்தின் மேல் வழுவழுப்பான ஒரு மழுங்கலை யுண்டாக்கும். இது வாதத்தால் பிறந்தால் அச்சருமம் அக்கினியால் சுட்டாரிய வடுப்போல் மச்சத்தைப் பெற்றிருக்கும். பித்தத்தால் பிறந்தால் முற்கூறிய குணத்
துடன் அவ்விடத்தில் வியர்வை நீர் கசியும். சிலேத்துமத்தால் பிறந்தால் அச்சருமமானது மிகவும் கடினமாக இருக்கும். திரிதோஷத்தால் பிறந்தால் அச்சருமமெல்லாம் நகத்தினது நிறம்போல்
தோற்றுவதுந் தவிர அதில் மாறாது எரிச்சலை யுண்டாக்கும்.

9. பலிதரோகம் :- அதிதுக்கம், கனகோபம், மிகுபயம், தடி
முதலியவற்றாலடிபடல், சதாசிந்தனை, பலவிதகடின உழைப்பு, மனசஞ்சலம், தேக காங்கை, ஆகிய இவைகளினால் உண்டான வெப்பமானது தேகமுற்றிலும் வியாபித்து சிரசைப்பற்றி அங்குள்ள கபால
ரோமங்களின் வேர்களை எல்லாம் வேகும்படிச்செய்து நரையை யுண்டாக்கும். அப்போது அம்மயிர்கள் வாதத்தால் நரைத்தால் முனைபிளந்து கொஞ்சங்கருமை நிறத்தையும், நகங்களின் நிறத்தையும் பெற்று தொட்டால் வெப்பத்தை தருவதாய்யிருக்கும். பித்தத்தால் நரைத்தால் செம்மைபீதம் என்னும் நிறங்களைப் பெற்றிருப்ப
தன்றியும், அந்த ரோமக்கால்கள் தோறும் எரிச்சலை யுண்டாக்கும். சிலேத்துமத்தால் நரைததால் அம்மயிர்கள் வெள்ளிக் காசை போல் வெளுத்து மினுமினுத்தும் நரை அதிகரித்தும் இருக்கும். ஆனால் நரைக்குமிடங்களில் நமைச்சல் உண்டாகும். திரிதோஷத்தால் நரைததால் வாத முதலிய மூன்று ரோகங்களுக்குள்ள குணங்களெல்லாம் இதிலுண்டாயிருக்கும்.

கபாலரோகத்தின் சாத்தியா சாத்தியம் :- கபாலரோகம் 9-ல்
கபாலசருமமும், புரை புரையாக உதிர்ந்து அந்தைடத்தில் உபத்திரவங்கள் உண்டாயிருக்கின்ற ரோகமும், சரீரம் பழுத்ததினால் பிறந்த நரை ரோகமும் அசாத்தியம். மற்றவை சாத்தியமாம்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக