புதன், ஜனவரி 13, 2010

சீத பித்த ரோக (அரிப்பு நோய்க்கு ) சிகிச்சைகள்

சீதபித்த சிகிச்சை

கம்பாரிபல கல்கம் :- பூசினிப்பலத்தை உலர்த்தி கல்கஞ்செய்து பசும்பாலில் கலந்து குடித்து பத்தியமாக சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.

யஷ்டியாதி கியாழம் :- அதிமதுரம், இலுப்பைப்பூ, சித்தரத்தை, சந்தனம், ரத்தசந்தனம், நொச்சி, திப்பிலி இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.

அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி, மஞ்சல், வேப்பன்கொத்தமல்லி, பூனைகாஞ்சொரி, இவைகளிலேதேனுமொன்றை கியாழம்வைத்து சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.

சீதாரிரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு வெள்ளைச்சாரணை, சித்திர மூலம் இவைகளின் ரசத்தினால் அரைத்து இதற்கு எட்டுபாகம்
அதிகமாக பழுத்த எருக்கன் இலை ரசத்தினால் சமைத்து பாதரசத்தில் பேர்பாதி சுத்திசெய்த நாபியைகலந்து அரைத்து மறுபடியும், சித்திரமூல ரசத்தினால் கொஞ்சநேரம் அரைத்து குன்றி எடையா
வது 1 1/2-குன்றிஎடையாவது இஞ்சிரசம் அல்லது மிளகு சூர்ணம், நெய் இந்த அனுபானத்துடனாவது ஒருமாதஞ் சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகி சவுக்கியங் கொடுக்கும் பத்தியத்தில் நெய்யைக் கலக்கவேண்டியது.

சாமானிய சிகிச்சா கிரமம் :- சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளின் சூரணத்தை பாலுடன் கலந்து சர்க்கரை சேர்த்து அல்லது வர்த்தமான திப்பிலியையாகிலும் அல்லது வெள்ளைபூண்டையாகி லும் சாப்பிட்டால் சீதபித்தம் நிவர்த்தியாகும்.

சீதபித்தம், உதர்த்தம், கோஷம் இவைகளில் கிருமி, நமைச்சல்களைப் போக்கும் உபசாரங்களை செய்யவேண்டியது.சீதபித்தத்தில் கடுகு தைலத்தினால் அப்பியங்கனம், வெந்நீரில் வியர்வை பிடித்தல், பேய்ப்புடல், வேப்பன், ஆடாதோடை இவைகளின் கியாழத்தினால் வாந்தி இவைகளை செய்விக்கவேண்டியது.

திரிபலாதி ரேசனம் :- திரிபலை, குங்கிலியம், திப்பிலிஇவைகளினால் பேதிக்கு கொடுத்த பிறகு மிகவும் காரமான (மஹாசித்த) கிருதத்தை பானஞ்செய்து ரத்தமோக்ஷணம் செய்ய சீதபித்தம் குணமாகும்.

குடாதியோகம் :- வெல்லம், ஓமம் இவைகளைத் தின்று பத்தியத்துடன் ஆகாரத்தைச் சாப்பிட்டால் தேகம் முழுமையிலும் உண்டாகிய உதார்த்தம் ஏழுநாளைக்குள் நிவர்த்தியாகும்.

அக்கினிமந்த மூலயோகம் :- கூலநெல்லிவேரை அரைத்து நெய்யுடன் கலந்து ஏழுநாள் சாப்பிட்டால் சீதபித்தம், உதார்த்தம் கோஷ்டம் இவைகள் நிவர்த்தியாகும்.

நிம்பபத்திரயோகம் :- வேப்பன் இலையை அரைத்து நெய்யுடன் கலந்தாவது அல்லது நெல்லிவற்றல் சூரணத்தை கலந்தாவது சாப்பிட்டால் விஸ்போடகம், கோஷ்டம், க்ஷதம், சீதபித்தம் நமைச்சல், ரத்தபித்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

சைந்தவாதி லேபனம் :- இந்துப்புவைச் சூரணித்து நெய்யுடன் கலந்து கொஞ்சம் சூடு செய்து லேபனம் செய்தாலும் அல்லது துளசி இலை ரசத்தை லேபனம் செய்தாலும் சீதபித்தம்
நிவர்த்தியாகும்.

வெள்ளைக்கடுகு, கோஷ்டம், தகரைவிரை, எள்ளுஇவைகளை சூரணித்து கடுகு தைலத்தில் கலந்து லேபனம் செய்தால் ஹிதகரமாகயிருக்கும்.

சீதபித்தத்திற்கு பத்தியங்கள் :- சம்பாஅருசி, பச்சைப்பயறு கொள்ளு, பாகற்காய் மூங்கில்முனை, வெந்நீர், பித்தசிலேஷ்ம கரங்கள் பதார்த்தங்கள் இவைகள் சீதபித்தரோகிகளுக்கு ஹிதகரங்கள்.

அபத்தியங்கள் :- நீராடுதல், வெய்யிலில் இருத்தல், புளிப்புகுருகரமான அன்னங்கள் இவைகளை சீதபித்தரோகி விடவேண்டியது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக