ஞாயிறு, ஜனவரி 10, 2010

சர்வ முக ரோகம்- ரோக நிதானம்





சர்வமுகரோகம்

இது வாயிலும் மற்றும் முகத்தில் சர்வவிடங்களிலும் ஏற்படும் நோய்களை குறிக்கும். இவை எண் வகைப்படும்.

1. வாதமுகபாகம் :- இது வியான வாயுவைக் கொண்டு வாய்க்குள் சிவப்பான விரணத்தைப் பிறப்பிக்கும். அவ்விரணத்தால் உதடுகள் சுறசுறத்தும், கனத்தும், நா கனத்து வெளுத்து வெடிப்பதும், இதனால் காரம் படக்கூடாமல் வாயானது முட்கள் பொத்துக்
கொண்டது போல் அருகுவதுமாக இருக்கும்.

2. பித்தமுகபாகம் :- பித்தத்தைக் கொண்டு வாய்க்குள்
ஒரு வித ஆவியைப்போல் புகையை எழுப்பும், இதனால் வாயில் அடிபட்ட காயம் போல் சகிக்கக்கூடாத நோயும் நாவில் கசப்பும் ஒரு வேளை உப்புக்கரிப்பும் உண்டாகும்.

3. சிலேஷ்மமுகபாகம் :- இது கபத்தைக் கொண்டு நாவில் வழுவழுப்பான விரணத்தைப் பிறப்பிக்கும். இதனால் வாயில் தினவும் புண்ணும் வாயில் இனிப்பும் உண்டாகும்.

4. திரிதோஷமுகபாகம் :- மூன்று தோஷமுகமாக ரோக
குணங்களை எல்லாம் வாயில் உண்டாக்கும்.

5. ரத்தமுகபாகம் :- இது பித்தமுக ரோகத்தை ஒத்தி
ருக்கும். ஆனால் வாய்குள் ரத்தம்போல் சிவந்த நிறமாத்திரம் ஒன்று அதிகமாக இருக்கும்.

6.பூத்தியாசியம் :- நெஞ்சில் துர்க்கந்தத்தை உண்டாக்குவ
துடன் பற்களை சுறுங்கச்செய்து குச்சியினால் பல் விளக்கக்கூடாத நோயையும் அருவருப்பையும் உண்டாக்கும்.

7. கண்டாற்புதம் :- இது கண்டத்தில் பிறந்த விரண வேகம்
கபாலத்தில் அடிபடுதல் முதலியவற்றால் பிறக்கும். இதனால் அங்கிருக்கும் கபமாகிய கோழைசலம் கருத்தாவது வெளுத்தாவது நாசிவழியாவது தொண்டைவழியாவது மாறாது விழுந்து கொண்டே
இருக்கும்.

8. ஊர்த்துவகுதம் :- இது தொப்புளின் கீழிருக்கும் அபான
வாயு மூலரோகத்தினாலாவது, குன்மரோகத்தினாலாவது, ச்லேஷ்ம ரோகத்தினாலாவது, மேல் நோக்கி ஏறும் போது பிறக்கும். அவ்வாய்வு மலசலாதிகளில் தோய்ந்து மேல் நோக்கலால் வாயில் துர்க்கந்தம் உண்டாகிக்கொண்டே இருக்கும். இது வாயிற்கு குதத்தொழிலைப்
புரிவிப்பதால் ஊர்த்துவகுதரோகம் எனப் பெயர் பெற்றது.

9. முகரோக சாத்தியா சாத்தியம் :- முகரோகம் 75ல் ரத்
தோஷ்டம், அற்புதோஷ்டம், மாமிசோஷ்டம், சலாற்புதோஷ்டம் தந்தகபாளம், தந்த சியாவம், தந்தகஷீரம், தந்தமகாத ஷீரம், வாததந்தகாலம், பித்ததந்தகாலம், சிலேஷ்மதந்தமூலம், தோஷதந்தமூலம், க்ஷததந்தமூலம், ஜிக்வலஜம், உபஜிக்வாரோகம்
தாளு பீடகம், தாளுவற்புதம், தாளுகச்சபரோகம், கண்டர்ந்த
ரோகணி, களபிருந்தம், களஒகரோகம், வளையரோகம், சதக்கினி களாற்புதம், களகண்ட்ம், சுரக்கினி,ஊர்த்துவகுதம், ஆக 27 க்ஷ
டத்தின்மேல் ஒரு வருஷத்திற்கு பின்பு சாத்தியமாம். மற்ற 48 ம் ஆயுத சிகிச்சையால் சாத்தியமாம்.
 


Post Comment

0 comments:

கருத்துரையிடுக