ஞாயிறு, ஜனவரி 10, 2010

கண்ட ரோகம் -ரோக நிதானம்

கண்டரோகம

இது கழுத்து என்னும் கண்டத்தைப் பற்றிய நோய்களாம்.
இது 18 வகைப்படும்.

1. கண்டவாதம் :
- கழுத்திற்கு உட்புறத்தில் துர்மாமிச முளைகளை முளைப்பித்து அம்மார்க்கத்தை அடைந்து நாவை அசைக்க வொட்டமற் செய்யும். இதனால் நெஞ்சும் வாயும் உலரல், கண்டத்திலும் செவியிலும் நோய் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

2. கண்டபித்தம் :- கழுத்திற்கு உட்புறத்தில் மூங்கில் பந்
தைப்போல் துர்மாமிசத்தைப் பிறப்பிக்கும். இதனால் அந்த இடத்தில் அதிக நோயுடன் புகை கம்மியது போலிருத்தல், மேலில்  தொடக்கூடாத உபத்திரவம், சுரம், காங்கை, தாகம்,சோர்வு என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. கண்ட சிலேஷ்மம் :- கண்டத்திற்கு உட்புறத்தில் தடித்த
துர்மாமிசத்தைப் பிறப்பிக்கும். இதனால் ஆமணக்கின் நெய்யைப்போல் வாயில் மாறாது சலம் வடிதலும் தேக வெளுப்பும் உண்டாகும்.

4. கண்டரத்தம் :
- கண்டத்திற்கு உட்புறத்தில் துர்மாமிசத்
தைப் பிறப்பித்து அதில் கரி நெருப்பை ஒத்த கொப்புளங்களை நிறைப்பிக்கும். இதனால் காதுக்குள் நோயும் கண்ட பித்த ரோக குணங்களும் உண்டாகும்.

5. கண்டதிரிதோஷம் :- திரிதோஷகண்ட நோய்களின்
குணங்களெல்லாம் உண்டாகும். இது நாட் சென்று பழுத்து
உடையும்.

6. கண்டசாலிகம் :- இது சிலேஷ்மகதியை யடைந்த வாதபித்தத்தைக் கொண்டு கழுத்திற்கு உட்புறத்தில் சாதிக்காயைப் போல் திரட்சியான வீக்கத்தை உண்டாக்கி அதன் மேல் நெல்வாலை ஒத்த முட்களை முளைப்பித்து கழுத்தைத் திருப்பக் கூடாமையாகச் செய்யும்.

7. களபிருந்தம் :
- கழுத்திலிரண்டு பக்கங்களிலும் சமூகமாயும் வட்டவடிவ மாயும் உயர்ந்ததாயும் உள்ள துர்மாமிசத்தைப் வளர்ப்பிக்கும். இதனால் கண்டத் துவாரம் அடைபடுதல், தாகம், சுரம், என்னும்
குணங்கள் உண்டாகும்.

8. துண்டகேரிகம் :- கண்டத்திற்குட் புறத்தில் பருத்திக்
காயைப்போல் கெட்டியாய் மினுமினுத்த வீக்கத்தை உண்டாக்கும். இதனால் அற்ப உபத்திரவம் உண்டாகும்.

9. களஓகம் :- கண்டத்திற்கு உள்ளிலும் வெளியிலும் பார்ப்பதற்கு பயங்கரமான வீக்கத்தை உண்டாக்கும். இதனால் அம்மார் கத்தில் ஆப்பு அடித்தது போல் இருத்தல், சிரோபாரம், சோம்பல், சொள்ளு சலம் வடிதல், சுரம் என்னும் குணங்களை உண்டாக்கும்.
இன்னும் நீளமாக உயர்ந்து அதிக நோவில்லாமல் கழுத்தைச்சுற்றிலும் வீங்கினால் வளையா ரோகமென்றும் பெயர்.

10. அலாபுகம் :- கழுத்திற்கு உட்புறத்தில் திரிதோஷத்தால்
புடைகள் உண்டாவது போல் அடியகண்ட சிறிய சுரைப்பிஞ்சை ஒத்த மாமிசக்கண்டத்தை, ஒத்தையேனும் பலவாயேனும் பிறப்பிக்கும். இதனால் அதிநோயும், பிரையாசையின் மேல் சுவாசமும் உண்டாகும்.

11. சதக்கினி :- கண்டத்திற்கு உட்புறத்தில் விரித்தியடைந்து துர்மாமிசத்தைக்கொண்டு பலமுட்களை ஒத்த முட்களை நிறையப்பட்ட பெரிய இரும்புத்தண்ட்த்தைப்போல் கழுத்தை வீங்கச்செய்யும்.
இதனால் மிகுந்த நோயும்,தாகம், சுரம், தலைநோய் முத்லியவைகளும் ஏற்படும்.

12. களவித்திரதி :- கழுத்து முற்றிலும் வீக்கத்தை
உண்டாக்கும். இதனால் மிகுந்த நோயும் பழுத்தால் துர்க்கந்த சீழும் உண்டாகும்.

13. களாற்புதம் :- நாவின் முடிச்சிலும் அடிக்கழுத்திலும் நோயில்லாதா வீக்கங்களை உண்டாக்கும். அவை திரிதோஷத்தால் பழுக்காமலே இருக்கும். ஒரு வேளை பழுத்து உடைந்தால் அதிலிருந்து குழம்பான ரத்தம் ஒழுகும்.

14. வாதகள கண்டம் :- வாதகபத்தினாலும் மேதோ தாதுவினாலும் கழுத்திற்கும் தாடைக்கும் இடைவெளியிற் வனியைப் போல் நோவில்லாத மாமிச மொத்தைய தொங்கச்செய்யும். இது எந்தப்பக்கத்திலாவது பிறக்கும். இதனைப் புரைக்குழை என்பர். (கண்ட மென்பது தாடை).

15. பித்தகள கண்டம் :- கண்டத்திற்கு உள்ளிலும் தாடைக்கு உள்ளிலும் விரணமான புடைகளை பிறப்பிக்கும். அப்புடைகள் கருமையாயும் செம்மையாயும் இருக்கும். இதனால் நோய் அதிகரிப்பதும் உருசி கெடுவதுமாயும் இருக்கும்.

16. சிலேஷ்ம கள கண்டம் :- முற்கூறிய ஸ்தானங்களில்
மிக விரணமான புடைகளை பிறப்பிக்கும். அப்புடைகள்
வெளுத்து சில்லிட்டு நிலைத்து நமைச்சலுடன் விரித்தியடைவதும் வாயில் இனிப்பு உண்டாவதுமாக இருக்கும்.

17. மேதோகள கண்டம் :- மேற்கூறிய ஸ்தானங்களில் விரணப்புடைகளை பிறப்பிக்கும். அப்புடைகளோ அதிகரிப்பதும் சாந்தியை அடைவதுமாக இருக்கும். இதனால் தேகம் ஸ்தூலித்தல் வாயால் கோழை
விழுதல், கண்டத்தில் ஒரு சத்தம், ஈனத்தொனி என்னும் குணங்களை
உண்டாக்கும்.

18. சுரக்கினி :- கண்டத்திற்கு உள்ளிலும் தாடைக்குள்ளிலும் படருகின்ற விரணப் புடைகளை பிறப்பித்து தொனியை அடக்கும். அப்புடைகளோ அதிகரிப்பதும் சாந்தியை அடைவதுமாக இருக்கும்.
இதனால் நோயினின்று நித்திரைப் பிடிக்கில் பெருமூச்சு விடுதல், கபங்கக்கல், நெஞ்சுலரல், ஈனத்தொனி என்னும் குணங்களை உண்டாக்கும்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக