ஞாயிறு, ஜனவரி 10, 2010

விரண ரோகம் - ரோக நிதானம்

விரணம்

தேகத்திலுண்டாகின்ற விரணமானது நிசவிரணமென்றும் ஆகந்துக விரணமென்றும் இருவகைப்படும். வாதபித்த சிலேத்தும தோஷஙகளால் உண்டாகும் விரணம் நிசவிரணம். காயங்களினால் உண்டாகின்றது ஆகந்துக விரணம். இருவகை விரணங்களும் குணங்களினால் துஷ்ட விரணம் என்றும் அதுஷ்ட விரணம் என்றும் இருவகைப்படும். என்றைக்கும் ஆறாதிருப்பது துஷ்ட விரணம். சீழ் ரத்தம் சிலைத்தண்ணீர் முதலியவைகள் வடிந்து கொண்டிருந்தாலும் சில நாள் பொருத்து ஆறப்படுமாகில் அது அதுஷ்ட விரணமாம். இந்த விரணங்கள் யாவும் 65 வகைப்படும். இவற்றுள் துஷ்ட விரணம் 15, அதுஷ்ட விரணம் 49. சுத்த ரத்தத்தால் உண்டாகும் விரணம் ஒன்று.

துஷ்ட விரணம் :-
இது ஒவ்வொரு வேளை வாய் மூடியும், திறந்தும், கெட்டிப்பட் டும் மிருதுவாயும், உலர்ந்தும், உலராமலும் எரிச்சலைத் தருவதும்
குளிர்ச்சியைத் தருவதும், சிவப்பதும், கருப்பதும், வெளுப்பதும், துர்க்கந்தசீழை வடிப்பதும், சில வேளை ரத்தம் சீழ் நரம்பு என்னும் இவைகளில் துர்வாசனை வீசுவதும் , வியர்வையைத் தருவதும், கெடு நாள் சென்று ஆறாததும், ஒரு வெளை நோய், வீக்கம், நமைச்சல் முதலிய குணங்களை பிறப்பிப்பதுமாக இருக்கும். இது 15வகைப்படும்.

1. வாத துஷ்ட விரணம் :- இது சாம்பல், கருமை, வெண்மை ஆகிய இந்நிறம் உள்ளதாயிருக்கும், இதில் வருகிற சலமானது புஞ்சை தானியத்தையும், மாமிசத்தையும் கழுவிய சலம் போலவும்
இதனால் அவ்விடத்தில் மாமிசம் கரைதல், நோதல், குத்தல், வறளல், உள்ளில் சிடுசிடுப்பாகிய ஒரு சத்தம் என்னும் குணங்களுண்டாகும்.

2. பித்த துஷ்ட விரணம் :- இது சீக்கிரத்தில் பிறந்து
கருமை, செம்மை இவைகள் கலந்த நிறங்கள் உள்ளதாயிருக்கும். இதில் வரும் சலமும் கோமூத்திரம் போலவும் முருக்கம் பூசாம்பல்
கழுவிய சலம் போலவும், எண்ணெய்யைப்போலவும் கடுகையுடன் அதிக மாக ஒழுகும். ஆனால் அவ்விடத்தில் உப்புச்சலத்தை தெளித்
தது போல் எரிச்சல், காயம் பட்டதுபோல் நோதல், அளவில் வெந்த மாமிசம் போல் சிவத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. சிலேத்தும துஷ்ட விரணம் :- நமைச்சலுடன் வெளுத்தும் கெட்டியாக உயர்ந்தும், உஸ்ணத்தைப் பெற்று நரம்புகளில் சிலை யோடுவதாயும் இருக்கும். இதில் வருகிற சலமானது வெளுத்து
பிசினைப்போல் குழம்பாக மிகவும் வடியும். அப்போது கொஞ்சம் குத்தலோடு கூடிய நோயும் உண்டாகும்.

4. வாத பித்த துஷ்ட விரணம் :- வாத துஷ்ட விரணம் பித்த துஷ்ட விரணம் இவைகளின் குணங்களை உண்டாக்கும்.

5. வாத சிலேஷ்ம துஷ்ட விரணம் :- வாத துஷ்ட விரணம் சிலேத்தும துஷ்ட விரணம் இவைகளின் குணங்களை உண்டாக்கும்.

6. சிலேஷ்மபித்த துஷ்ட விரணம் :-
 சிலேத்தும துஷ்ட விரணம் பித்த துஷ்ட விரணம் இவைகளின் குணங்களை உண்டாக்கும்.

7. திரிதோஷ துஷ்ட விரணம் :- வாதம் பித்தம் சிலேஷ்மம் என்கிற மூன்று வீததுஷ்ட விரணங்களை யெல்லாம் உண்டாக்கும்.

8. ரத்ததுஷ்ட விரணம் :- இது பவளத்தைப ்போலவும் இரத்தத்தைப்போலவும், நிறத்தைப்பெற்று பித்ததுஷ்ட விரணக் குறிகளை
யெல்லாம் பெற்றிருப்பதுடன் அதில் குதிரை லாயத்தில் உண்டாகிய வாசனையும் ஏற்படும்.

9. ரத்த வாத துஷ்ட விரணம் :- 
இது சிகப்பு கருப்பு நிறமுள்ளதாயும், ரத்தம் போலும் மோர்ச்ச்லம் போலும் சீலைத்தண்ணீர் ஒழுகுவதுடன் குத்தலும் வாந்தியும் உண்டாகும்.

10. ரத்தபித்த துஷ்ட விரணம் :- இது சிவப்பு மஞ்சள் நிறமாயும் இருக்கும். இதில் கோமூத்திரம் போலும் ரத்தம் போலும் சலம் ஒழுகும். எரிச்சலும் விருவிருப்பும் உண்டாகும்.

11. ரத்தசிலேஷ்ம துஷ்ட விரணம் :- இது வெளுத்தும் சிவத்தும் இருக்கும். இதிலிருந்து சீழும் ரத்தமும் ஒழுகும். வீக்கமும் வாந்தியும் உண்டாகும்.

12.ரத்த வாதபித்த துஷ்ட விரணம் :- இது ரத்தவாதம், ரத்தபித்தம் ஆகிய இவ்விரண்டு துஷ்டவிரணங்களின் குணங்களை உண்டாகும்.
 

13. ரத்தவாத சிலேஷ்ம துஷ்ட விரணம் :- இது ரத்தவாதம், ரத்தகபம் இவைகளின் துஷ்ட விரணக் குணங்களை யுண்டாக்கும்.

14. ரத்தசிலேஷ்ம பித்த துஷ்ட விரணம் :- இதில் ரத்தகபபித்த துஷ்ட விரணக் குணங்களை யுண்டாக்கும்.

15. ரத்ததிரிதோஷ துஷ்ட விரணம் :- இது ரத்தவாதம், ரத்த பித்தம் ரத்தகபம் என்கிற மூன்று வித துஷ்ட விரணக் குணஙகளை யுண்டாக்கும்.

அதுஷ்டவிரணம் :-

1.பிரவிளம்பி விரணம் :
- இது விச்சின்ன விரணம் அதிகரிப்பினால் பிறக்கும். இதில் எலும்புகள் வெளியில் தோற்றப்படும்.

2. நிபாதித விரணம் :-
 இது பிரவிளம்பி விரண விபரீதத்தால் பிறக்கும். அப்போது நடுவில் கொஞ்சம் எலும்பை தெரிவிக்கும் படிக்கு வைத்து மற்றைய யிடத்தையெல்லாம் துர்மாமிசம் விழுந்து
மறைக்கும்.

3 :- வித்த விரணம் :- முள்ளு முதலியவைகள் தவிர கல் முதலியவைகளால் அடியுண்ட பிறந்து விஷமிக்கும்.

4. பின்ன விரணம் :- இது யுத்தகாலத்தில் அல்லது கபால காலத்தில் ஆயுதங்களினால் பிறந்து உபத்திரவத்தை யுண்டாக்கும்.

5. விதகளி விரணம் :
- இது ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கின்ற விரணத்தை பிடித்து அழுத்தப்படுதலினாலும், கல் முதலியவைகளால்
அடிபடுதலினாலும் பிறந்து உபத்திரவத்தை யுண்டாக்கும். இதனால் எலும்புகள் நோதலும், விரணம் பருத்தலுமாக இருக்கும்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக