சிகிச்சாகிரமம் :- சரீரத்தில் நீரை தெளித்தல், நீராடு தல், இரத்தத்திணாபரணதாரணம், குளிர்ந்த லேபனம், விசிறி
களின் காற்று, சுகந்தத்துடன் கூடிய குளிர்ந்த பானம், இந்த உபச்சாரங்களை சகலமான மூர்ச்சைகளிலும் செய்யவேண்டும்.
துராலபாதி கியாழம் :- போயாவரை கியாழத்தில் நெய் கலந்து குடித்தால் , மூர்ச்சைரோகங்கள் நிவர்த்தியாகும்.
பஞ்சமூலாதி கியாழம் :- பஞ்சமூலகியாழத்தில் தேன் சர்க்கரை கலந்து குடித்தாலும் அல்லது சுரத்தைப்போக்கும் கியாழங்களை தோஷங்கள் அறிந்து குடித்தாலும் மூர்ச்சைகள் நிவர்த்தியாகும்.
க்ஷத்திராதி கியாழம் :- முள்ளங்கத்திரிவேர், சீந்தில்கொடி மோடி, சுக்கு, வாய்விளங்கம் இவைகளை சமஎடையாகக் கியாழம் வைத்து குடித்தால் மூர்ச்சைகள் நிவர்த்தியாகும்.
திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷ, சர்க்கரை, மாதுழம்பழம் சிகப்புத்தாமரை, கருப்புத்தாமரை இவைகளை கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது பித்தசுர கியாழத்தை யாகிலும் குடித்தாலும் மூர்ச்சைகள் நிவர்த்தியாகும்.
தாம்பிராதி சூரணம் :- ரக்தசந்தனம், வெட்டிவேர், சிறு நாகப்பூ, இவைகளை சமஎடையாய் சூரணித்து ஜலத்துடன் குடித்தால் மூர்ச்சைகள் நிவர்த்தியாகும்.
மூர்ச்சைரோகத்திற்கு பத்தியங்கள் :- புகை குடித்தல்,அஞ்சனமிடல், நசியம், ரத்தத்தை வாங்குதல், சூடுபோடுதல் வாந்தி, லங்காணம் இவைகளை செய்வதுமுண்டு.
அபத்தியங்கள் :- தாம்பூலங்கள், கீரைகள், பற்கடித்தல் வெய்யில், விருத்தமான அன்னபானம், புணர்ச்சி, வியர்வை வாங்குதல், காரமான பதார்த்தங்கள், மலமூத்திரங்களைதடுத்தல் மோர், இவைகள் மூர்ச்சைரோகத்திற்கு அபத்தியங்கள்
0 comments:
கருத்துரையிடுக