புதன், ஜனவரி 13, 2010

ஹ்ருத் ரோகதிற்க்கு ( இதய நோய்க்கு ) சிகிச்சைகள்

பெளஷ்க்கராதி கியாழம் :- புஷ்கரமூலம், கொடிமாதுழம் பழவேர், முருங்கன்வேர், ஓமம், கிச்சிலிக்கிழங்கு, தேவதாரு சுக்கு, சீரகம், வசம்பு, இவைகள் சமஎடையாக கியாழம் வைத்து அதில் யவாக்ஷ¡ரம், சத்திக்ஷ¡ரம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம் இவைகளை கலந்து சாப்பிட்டால் ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

தசமூலாதி கியாழம் :- தசமூலத்தை கியாழம் வைத்து அதில் யவாக்ஷ¡ரம், இந்துப்பு, கலந்து சாப்பிட்டால் ஹிருதரோகம், குன்மம், சூலை, காசரோகம், சுவாசரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

ஏரண்டாதி கியாழம் :- ஆமணக்குவேர் 2 பலம் 16 பலம்ஜலத்தில் போட்டு கியாழம் காய்ச்சி அதில் யவாக்ஷ¡ரம் போட்டு  சாப்பிட்டால் ஹிருதயசூலை, பாரிசசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

பாம்ஹிலீகாதி கியாழம் :- பெருங்காயம், சுக்கு, சித்திரமூலம் யவக்ஷ¡ரம், க்டுக்காய்த்தோல், கோஷ்டம், பீடாலவணம், திப்பிலி பாதிரிலவணம், புஷ்கரமூலம் இவைகளை சமஎடையாக கியாழம் போட்டு சாப்பிட்டால் ஹிருத்ரோகம், அக்கினிமந்தம், மலபந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

நாகராதி கியாழம் :- சுக்கு கியாழம் போட்டு கொஞ்சம் உஷ்ணமாக சாப்பிட்டால் அக்கினிதீபனம் உண்டாகும், காசரோகம், சுவாசரோகம், வாதரோகம், சூலை, ஹிருத்ரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

வாதஹிருத்ரோகத்திற்கு பப்பல்யாதி சூரணம் :- திப்பிலி ஏலக்காய், வசம்பு, சுக்கு, ஓமம், பெருங்காயம், சவ்வர்ச்சி லவணம், யவக்ஷ¡ரம், இந்துப்பு இவைகளை சமஎடையாச் சூரணித்து இதில் மூன்று விராகனெடை நெல்லிவற்றல் அல்லது விளாம்பழங்களில் எதிலாவது வாந்தியாகவும் பேதியாகவும் மருந்து கொடுத்து
பின்பு கொடுத்துவர ஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.

திருவிருகாதிசூரணம் :- சிவதைவேர், கோரைக்கிழங்கு, சிற்றாமுட்டிவேர், சிற்றரத்தை, சுக்கு, கடுக்காய்த்தோல், கோஷ்டம்  இவைகளைச் சூரணித்தாவது அல்லது கியாழம் வைத்தாவது கோமூத்திரத்தைச் சேர்த்து சாப்பிட்டால் ஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.

சூஷ்மைலா சூரணம் :- சிறிய ஏலக்காய், மோடி, இவைகளைச்சூரணித்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் உபத்திரவத்துடன் கூடிய கபஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.
 

ஹிங்குபஞ்சக சூரணம் :- சுக்கு, சவ்வர்ச்சலவணம், மாதுளம் பழத்தோல், கொன்னைப்புளி, சுட்டபெருங்காயம் இவைகள் சமஎடை யாகச் சூரணித்து உட்கொண்டால் ஹிருதயரோகம் நிவர்த்தி யாகும்.

ஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம், வசம்பு, பிடாலவணம், சுக்கு, திப்பிலி, கோஷ்டம், கடுக்காய்த்தோல், சித்திரமூலம், யவ க்ஷ¡ரம், சவ்வர்ச்சலவணம், புஷ்க்கரமூலம், இவைகளை சூரணித்து யவதானிய கியாழத்தில் சேர்த்து சாப்பிட்டால் சூலை, ஹிருதயரோகம் இவைகள் நீங்கும்.

பாடாதி சூரணம் :- வட்டத்திருப்பிவேர், வசம்பு, யவக்ஷ¡ரம்,  கடுக்காய்த்தோல், கொன்னைப்புளி, பூனைகாஞ்சோரி, சித்திர மூலம், திரிகடுகு, திரிபலை, புஷ்க்கரமூலம், புளியங்க்காய்த்தோல், மாதுளம்பழத்தோல், கொடிமாதுளவேர் இவைகள் சமஎடையாய்மைபோல் சூரணித்து வெந்நீர், சாராயம், கள் இத்துடன் கொடுத்தால் மூலவியாதி, சூலை, ஹிருதயரோகம், குன்மம் இவைகள் நிவர்த்தியாகும்.

ஹிருதயாரவை ரசம் :- சுத்திசெய்த ரசம், தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த கெந்தி இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு திரிபலை கியாழத்தினால் ஒரு நாள் அரைத்து மறுபடியும் அம்மருந்தை
மணத்தக்காளி இலை ரசத்தினால் ஒரு நாள் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து அதில் ஒரு மாத்திரை விகிதம் சாப்பிட்டால் ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

ரசாயனம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி அப்பிரகபற்பம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு மருதம்பட்டை ரசத்தினால் 21-நாடகள் அரைத்து 3-குன்றிஎடை தேனுடன் கலந்து சாப்பிட்டால் திரிதோஷ ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

யஷ்டியாதி கிருதம் :- அதிமதுரம், நாகமல்லி, வெட்டிவேர், மருதம்பட்டை இவகளை சேர்த்து காய்ச்சிய நெய்யை சாப்பிட்டால் ஹிருதயரோகம், க்ஷயரோகம், பித்தரத்தம், சுவாசம், காசம் சுரம், பீடை இவைகள் நிவர்த்தியாகும்.

புனர்னவாதி தைலம் :- வெள்ளைச்சாரணை, மரமஞ்சள், பஞ்சமூலங்கள், சிற்றரத்தை, யவதானியம், இலந்தைவேர், விலாம்வேர், விலவபழம் இவைகளின் கியாழத்தில் நெய்கலந்து தைலபக்குவமாய் காய்ச்சி, அப்பியங்கனம், பானம் இவைகளை செய்தால் வாதஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

கோமூத்திரபானம் :- வாய்விளங்கம், கோஷ்டம் இவைகளை சூரணித்து கோமூத்திரத்தில் கலந்து சாப்பிட்டால் ஹிருதயத்திலிருக்கும் அசாத்தியமான கிருமிகள் போம்.

துக்தபானம் :- பசும்பால் 24 பலம், மந்தாக்கினியால் பேர்பாதி மீறும்படியாய்ச் சுண்டக்காய்ச்சி ஆறிய பிறகு சர்க்கரை தேன் நெய் இவைகளை வகைக்கு 1/2 பலம் விகிதம் சேர்த்து திப்பிலி சூரணம் 1/4 பலம் சேர்த்து சாப்பிட்டால் சகலதோஷங்களினால் உண்டான ஹிருதயரோகம், சுரம், காசங்கள், க்ஷயங்கள் இவைகள்
சூரியனைக் கண்ட இருளைப்போ நிவர்த்தியாகும்.

நாக பலாதி துக்தபானம் :- சிற்றாமுட்டி மூலத்தை பசும்பாலி போட்டு காய்ச்சி சாப்பிட்டால் ஹிருத்ரோகம், சுவாசம், காசம் இவைகள் நீங்கும். இலவன்பட்டையை பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் மிகவும் பலத்தை விருத்தியாக்குவதுடன் வாதத்தை  நாசஞ்செய்யும், இதை ஒரு வருஷம் சாப்பிட்டால்  100 வருஷங்கள் உயிருடன் வியாதிகளற்று இருப்பான்.

ஹரிண சுருங்க பற்பம் :- மான்கொம்பு பஸ்பத்தை பசும்நெய் யுடன் சாப்பிட்டால் ஹிருதயசூலை நிவர்த்தியாகும்.

ஹிருதுரோக பத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், பேதியாகும் படிக்கு மருந்து கொள்ளல், வாந்தியாவதற்கு மருந்து கொள்ளல், லங்கனம் செய்தல், வஸ்தி, லேபனம் செய்தல், பழைய சிகப்பு அரிசி, காட்டில் வாழும் ஜந்துக்கள், பஷிகள் இவைகள் மாமிசங்கள், பச்சைப்பயறு, கொள்ளு, இவைகளின் கூட்டு, புடலங்காய், வாழைகச்சல், மாங்காய், மாதுழம், எண்ணெய், மழைஜலம், இந்துப்பு, ஆடு, செம்மரிஆடு, இவைகளீன் மோர், பழையவெல்லம்சுக்கு, ஓமம், கடுக்காய், வெள்ளைப்பூண்டு, கோஷ்டம், கொத்தமல்லி இஞ்சி, மிளகு, கஞ்சி, தேன், கள் அல்லது சாராயம், கஸ்தூரி சந்தனம், தாம்பூலம், இவைகள் ஹிருத்ரோகிகளுக்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- தாகம், வாயு, இருமல், பொடி, வாந்தி, மூத்திரம் அலுப்பு, மேல்மூச்சு, மலம் கண்ணீர் இவைகளைத் தடுத்தல் சிந்துநதி, இமயமலை, விந்தியமலை இவைகளின் ஆறுகளில் உள்ள சலம், ஆட்டுப்பால், கெட்டநீர், புளிப்பு, அதிமதூரம் பல்குச்சி, ரத்தம் வாங்குதல் இவைகளை ஹிருத்ரோகி நிவர்த்திக்கவேண்டியது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக