புதன், ஜனவரி 13, 2010

ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்

ஊருஸ்தம்பவாதசிகிச்சை

புனர்னவாதிகியாழம் :- வெள்ளைச்சாரணைவேர், சுக்கு, தேவதாரு, கடுக்காய்த்தோல், சீந்தில்கொடி, தசமூலங்கள் இவைகள் சமஎடையாக கியாழம் வைத்துக்குடித்தாலும், அல்லது கோமூத்திரத்தை கலந்து குடித்தாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

சேபாலிகாதி கியாழம் 
: - நொச்சியிலைக்கியாழம் வைத்து அத்துடன் திப்பிலிச் சூரணத்தைக்கலந்து குடித்து கபத்தை நாசமாக்கும்படியான உபச்சாரங்களை செய்தால் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

வசாதிகியாழம் :- அதிவிடயம், கோஷ்டம், சித்திரமூலம், தேவதாரு, வட்டத்திருப்பி, வாலுழுளுவை அருசி, கோரைக் கிழங்கு, கொன்னை, கண்டங்கத்திரி, வெட்பாலை, ஆமணகுவேர்காளான், கடுகுரோகணி, சிற்றாமுட்டி, வேங்கைமரம், திரிபலை, மிளகுஇவைகளை சமஎடையாக சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்லது இந்தக்கியாழத்தில் இந்த அரிசியை வாகவைத்துசாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி சூரணம் :- திரிபலை, செவ்வியம், கடுகுரோகணி,மோடி இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்துச்  சாப்பிட்டாலும் அல்லது குங்கிலிய சூரணத்தை கோமூத திரத்துடன் கலந்துச் சாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

வேறுவிதம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி மூலம், சுக்கு, திப்பிலி, மிளகு, இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்துச் சாப்பிட்டாலும் அல்லது குங்கிலிய சூரணத்தை கோமூத்திரத்துடன் கலந்துச் சாப்பிட்டாலும் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி குக்குலு :- திரிபலை, சிவதை, சர்க்கரை, நேர்வாளம், சிறிய அவுரி, கொன்னைச்சதை இவைகளை வகைக்கு 25-பலம் இடித்து 1024-பலம் ஜலத்தில் கொட்டி 256-பலம் மீறும்படியாக கியாழங்காய்ச்சி, வடிகட்டி அதில் 50-பலம் குங்கிலியத்தைச் சேர்த்து மறுபடியும் கெட்டியாகிற வரையிலும் காய்ச்சி பிறகு இலங்கப்பட்டை, ஏலக்காய், சிறுநாகபூ, சுக்கு, மிளகு திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், இலங்கபத்திரி, ஓமம், சீரகம், ஆனைதிப்பிலி, சித்திரமூலம், சோம்பு, கருஏசீரகம்,சீரகம், குரோசோணியோமம், புளியந்தோல், புளிவஞ்சி, சவ்வர்ச் சலவணம் இவைகள் வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்து அதில் கலக்கி நித்தியம் 1/4-பலம் விகிதம் சாப்பிட்டால் ஊருஸ்தம்பம், கிரந்தி கண்டமாலை, உதரரோகங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

இதேபிரகாரம் சிலாஜித்தையும் செய்து சாப்பிட்டால் மேல்கூறிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

லசுன யோகம் :- வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், சீரகம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், சுக்கு, திப்பிலி, மிளகு, இவைகள்  வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்து ஆமணக் கெண்ணெயைச் சேர்த்து அக்கினிபலத்தை அறிந்துகொடுத்துபிறகு ஆமணக்குவேர் கியாழம் ஒருமாதம் வரையிலும் கொடுத்தால் சகலவாத ரோகங்கள்
ஏகாங்கவாதம், ஊருஸ்தம்பம், கக்குவாயிருமல், எலும்பு சந்துக்கள் இடுப்பு இவைகளில் யிருக்கும் அர்திவாதம், தாதுகதசுரம், ஜீரணசுரம், சதாயிருக்கும் கரபாதசீதளம் இவைகள் நிவர்த்தியாகும்.

ஊருஸ்தம்பவாதத்திற்கு லேபனம் :- தேன், பசும்பால், புற்ற மண் இவைகளை அரைத்து இலேசாக லேபனஞ் செய்தால் ஊருஸ்தம்பம் நிவர்த்தியாகும்.

வேறுவிதம் :- அமுக்கிறாக்கிழங்கு, அல்லது எருக்கன்வேர், அல்லது வேப்பன்வேர் அல்லது தேவதாரு, தேன், கடுகு, புற்று மண் இவைகளை மைபோல் அரைத்து வேகவைத்து கொஞ்சம்

உஸ்ணமாயிருக்கும்போதே மேலுக்கு தடவினால் ஊருஸ்தம்பவாதம் நிவர்த்தியாகும்.

ச்¢லாஜித்து யோகம் :- ச்¢லாஜித்து, குங்கிலியம், திப்பிலி சுக்கு இவைகளில் எதையாவது சூரணித்து இதை கோமூத்திரத்தில் கலந்தாவது அல்லது தசமூலகியாழத்தை கோமூத்திரத்தில் கலந்தாவது குடித்தால் பயங்கரமான ஊருஸ்தம்பம் நிவர்த்தியாகும்.

ஊருஸ்தம்பத்திற்கு பத்தியங்கள் :-சகலவித உஸ்ண உபச் சாரங்கள் வியர்வை வாங்குதல், சிகப்புநெல், யவதானியம், கொள்ளு சாமை, அரிசி, முருங்கைக்காய், பாவல்காய், புடலங்காய், மணத்தக்காளி, வெந்நீர், நெய் இல்லாமல் சமைத்த காட்டு மிருகங்கள் பஷிமாமிசங்கள், உப்பில்லாமல் சமைத்த பதார்த்தங்கள் இவைகள்
பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- கடினமாயும், சீதளமாயும், திரவரூபமாயும் சிநிக்தமாயும், விருத்தமாயும் உள்ள பாதார்த்தங்கள், தனக்கு ஆகாத பதார்த்தங்கள், விரேசனம், குளிர்ந்தபானம், வாந்தி, ரத்தபித்தம், வியர்வை வாங்கல், வஸ்திகர்மம், இவைகள் ஆகாது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக