வாதநாடீவிரணத்தை கத்தியினால்கீறி வெள்ளை நாயுருவி விரை, எள்ளு இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.
பித்தநாடி விரணத்திற்கு எள்ளு, மஞ்சிஷ்டி, நாகதந்தி, மஞ்சள் இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.
கபநாடி விரணத்தில் எள்ளு, அதிமதுரம், நாகதந்தி, வேப்பன், இந்துப்பு இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.
நாடீவிரண சாமானிய சிகிச்சை :- வைத்தியர் நாடீ கிரமத்தை அறிந்து சஸ்திரத்தினால் அதைச் சேதித்து சகல விரணங்களில் செய்யும் சிகிச்சைகளை செய்யவேண்டியது.
மெலிந்திருத்தல், துர்பலம், பயம் இவைகளை யுடையவர்களுக்கு உண்டான நாடீவிரணங்களையும் மர்ம தலங்களை சேர்ந்திடுககும் நாடீவிரணங்களையும் அறுக்காமல் க்ஷ¡ரத்தினால் சுடவேண்டியது. கத்திகளினால் என்றைக்கும் அறுக்கக் கூடாதென்று அறிய வேண்டியது.
நாடீ விரண சிகிச்சை :- விழுதல், வெட்டுதல், சேதித்தல்முதலியவைகளினால் எலும்பு உடைந்திருந்தால் முதலில் குளிர்ந்தஜலம் போட்டு பிறகு கத்திகளினால் சிறிய நரம்புகள் அராமல் படிக்கு அறுத்து சரீரத்தில் பொத்தியிருக்கும் எலும்புகளை எடுத்து வைத்து கட்டுகட்டி பிறகு மஞ்சிஷ்டி அதிமதுரம் இவை
களின் எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து லேபனம் செய்து நெய்யில் அரிசி மாவை கொட்டி லேபனம் செய்யவேண்டியது.
விடங்காதி குக்குலு :- வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் சுக்கு, திப்பிலி, மிளகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணத்திற்குச் சமம் குங்கிலிய சூரணத்தைக் கலந்து நெய்விட்டு அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டு ஹிதமானபோசனம் செய்தால் துஷ்டவிரணம் அபசி, மேகம், குஷ்டம்
நாடீவிரணம் இவைகள் நீங்கும்.
நர அஸ்தி தைலம் :- மனிதர்களின் எலும்புகளிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை லேபனம் செய்தால் அது உடைந்து பக்குகட்டி காய்ந்ததுவிடும்.
நிர்குண்டீ தைலம் :- நொச்சி செடி சமூலமாக இடித்துரசத்தை எடுத்து அத்துடன் எண்ணெயைச் சேர்த்து காய்ச்சி
லேபனம் செய்தால் துஷ்ட விரணம் ஆறும்.
அரக்வதார வர்த்தி :- கொண்ணை, மஞ்சள், இலந்தைக்காய் இவைகளை சூரணித்து அத்துடன் நெய், தேன் கலந்து தூவினால் வத்திசெய்து அதில் நனைத்து விரணங்களின் மீது போட்டால் விரணம் சுத்தமாகும்.
குக்குலு லேபனம் :- சுத்திசெய்த மைஷாசி குங்கிலியம்,திரிபலை, திரிகடுகு இவைகளை சமஎடையாக நெய்விட்டு அரைத்து லேபனம் செய்தால் துஷ்ட நாடீவிரணங்கள் பகந்தரம் இவைகள் குணமாகும்.
0 comments:
கருத்துரையிடுக