வியாழன், ஜனவரி 14, 2010

வெட்டை நோய்க்கு சிகிச்சைகள்

வெட்டைக்குசிகிச்சை

சந்தனாதி கியாழம் :- சந்தனம், பற்பாடகம், தற்பைவேர்,வெட்டிவேர், கோரைக்கிழங்கு, தாமரைப்பூ, தாமரைத்தண்டு,சோம்பு, தனியா, தாமரை ஈர்க்கு, நெல்லிவற்றல் இவைகள் சம எடையாய் சேர்த்து கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை கலந்து குளிர்ச்சி யாகயிருக்கும்போது தேன் கலந்து குடித்தால் தேக அனல் அல்லது தேக எரிச்சல் நிவர்த்தியாகும்.

லாஜாதிக்கியாழம் :- குருவேர், ரக்தசந்தனம், வெட்டிவேர்இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் சர்க்கரை கலந்து குடித்தால் தேக அனல் அல்லது தேக எரிச்சல்  பித்தசுரம் இவைகள் நிவர்த்தியாகும்.

தசசார சூரணம் :- அதிமதூரம், நெல்லிக்காய்வற்றல், திரா¨க்ஷ, ஏலக்காய், சந்தனம், வெட்டிவேர், இலுப்பைப்பூ, பேரிச்சம் பழம், மாதுழம்பழத்தோல் இவைகளை சமஎடையாய் சூரணித்து இந்தச்சூரணத்திற்குச் சமமாக சர்க்கரை கலந்து 1/4 பலம் விகிதம் சாப்பிட்டால் சகலபித்த விகாரங்கள் தேக அனல்முதலியன
நிவர்த்தியாகும்.

கர்ஜீராதி சூரணம் :- கர்ஜீரம், நெல்லிவற்றல், திப்பிலி சிலாஜித்து பற்பம், ஏலக்காய், அதிமதூரம், கல்லுருவிவேர், சந்தனம் வெள்ளரிவிரை, கொத்தமல்லி, கற்கண்டு, இவைகளை சமஎடை யாய் சூரணித்து அதிமதூர கியாழத்துடன் சாப்பிட்டால், சரீரம், குதம், லிங்கம் இந்த இடத்தில் இருக்கும் அனல், சுக்கில க்ஷயத்தினால் உண்டான தாபம், சர்க்கராஸ்மரீ, மூத்திர ரோகம், சுக்கிலதோஷத்தினால் உண்டான ரோகங்கள் இவைகள் நிவர்த்தியாகும். வீரியவிருத்தி பலம் இவைகளை உண்டாக்கும்.

சந்தனாதி சூரணம் :- சந்தனம், வெட்டிவேர், கோஷ்டம்,கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல், அல்லிக்கிழங்கு அதிமதூரம், இலுப்பைப்பூ, திரா¨க்ஷ, பேரிச்சம்பழம், இவைகளை சமஎடையாய் சூரணித்து சூரணத்திற்குச் சமம் சர்க்கரை கலந்து காலையில் சாப்பிட்டு குளிர்ந்தசலம் சாப்பிட்டால் ரக்தபித்தம், சுவா
சம், பித்தகுன்மம், தேககாங்கை, காமாலை, பிரமேகம், பித்தசுரம், இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

திலதைலம் :- எள் எண்ணெய் 16 பலம், காஞ்சிகம் 256 பலம், தைலமாகச் செய்து லேபனம் செய்தால், தேக அனல்
சுரம், இவைகள் நிவர்த்தியாகும்.

புனர்வாதி தைலம் :- வெள்ளைச்சாரணைவேர் 100 பலம் காராம்பசுநெய் 64 பலம், பால் 64 பலம், மேற்கூறிய வேரை பால்விட்டு அரைத்து எண்ணெய் 100-பலம், தூபம் 14-பலம்,மிளகு, இலவங்கசக்கை 2-பலம், கிச்சிலிக்கிழங்கு, வெட்டிவேர், குறுவேர், மஞ்சிஷ்டி, காசுக்கட்டி, சந்தனம், ரக்தசந்தனம், கிருஷ்ணா அகரு, ருத்திராக்ஷம் இவைகள் வகைக்கு 1-பலம் விகிதஞ் சூரணித்து அதில் சேர்த்து ஆவாரை விறகுகளினால் மந்தாக்கினியால் தைலப்பக்குவமாக காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

இந்த தைலத்தை இராத்திரி காலங்களில் தேகத்திற்கு செவ்வையாக தடவி குளித்தால் அங்கசூலை, அங்கதாகம், நேத்திர ரோகம், பீநசம், பாண்டுரோகம், காமாலை, உஷ்ணம், கர்ப்ப க்ஷயங்கள், கிருச்சிரரோகம், கஜகரணம், சிரோரோகம், பிரமை, பித்தம், திருஷ்டிரோகம், ஜீரணசுரம், அஸ்திசுரம் மேஹசுரம் இவைகள் நிவர்த்தியாகும்.

தாஹரோகம் தேகம் அனல் எறிச்சல் இந்த ரோகத்திற்குபத்தியங்கள் :- பழையசிகப்பு நெல்தானியம், பச்சைபயறு,
சிறியகடலை, கடலை, யவதானியம், மேட்டுப்பூமியில் இருக்கும் ஐந்து மாமிசரசம், பொரிமாவு, கற்கண்டு, பால், வெண்ணெய், கலியாண பூச்னிக்காய், வெள்ளரிக்காய், வாழைப்பழம், தித்தீப்பு, மாதுளம் பழம், புடலங்காய், பற்பாடகம், திரா¨க்ஷப்பழம், நெல்லிவற்றல்,பெரியயீச்சம்பழம், கோவைப்பழம், மொச்சை, இஞ்சி, பேரீச்சம் பழம், கொத்தமல்லி, இளநுங்கு, சாரைபருப்பு, கிச்சிலிக்கிழங்கு, இலுப்பைப்பூ, வெட்டிவேர், கடுக்காய், கசப்புபதார்த்தங்கள், சீத பதார்த்தங்களின் லேபனம், குளிர்ந்தஜலம் தேகத்தின் மீது தெளித்தல், அப்பியங்கனம், தாமரைபுஷ்பங்களின் மீது படுக்கை, குளிர்ந்தவனத்தில் சஞ்சரித்தல், சித்திரகதைகள், சங்கீதம், வாத்தியங்கள் முதலியவைகள் சிவரணாநந்தமாக கேழ்க்கல், நல்லவார்த்தைகளை கேழ்க்குதல், வெட்டிவேர் விசிறியின் காற்றைவாங்குதல், சந்தனத்தை தேகத்திற்கு தடவிக்கொள்ளல், நிலா, குளிர்ந்தகாற்று, மாதருடன் ஆலிங்கனம், ஆற்றுவோரத்தில் சஞ்சரித்தல், பச்சைகற்பூரம், சந்திரன் கிரணங்கள், நீராடுதல், இரத்தினாபரணங்கள் தரித்தல், தித்திப்புரசம், பித்தத்தை நசிக்கும் திரவியங்கள் இவைகள் தேக அனல் ரோகத்தில் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பால்க்குடித்தல், மீன்களைசாப்பீடல், விருத்த அன்னபானங்கள் செய்தல், கோபம், மலமூத்திரங்களை தடுத்தல், அலுப்பு, புணர்ச்சி, வயிறுப்பலான க்ஷ¡ரங்கள், பதார்த்தங்கள், வெய்யல், மோர், தாம்பூலம், தேன், பெருங்காயம், காரம், கசப்பு, வெப்பம் இவைகள் கூடாது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக