ரசாஞ்சனாதிகியாழம் :- கஸ்தூரிமஞ்சள், மஞ்சள், மரமஞ்சள் சிவதை, மஞ்சிஷ்டி, வேப்பனிலை இவைகளை கற்கஞ்செய்து குடித்தால் நாடீ விரணம் பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.
ரவிதாண்டவ ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு கற்றாழைச்சாற்றினால் 3-நாள் அரைத்து உருண்டைசெய்து மேற்கூறிய ரசகெந்திகளுக்கு சமஎடையாய்ச் செம்பை சேகரித்து டப்பிசெய்து அதில் அந்த உருண்டையை வைத்து சந்துகளை லேபனஞ் செய்து வாலுகாயந்த்திரத்
தில் வைத்து அது நிறைய சாம்பல்போட்டு அடுப்பிலேற்றி தீவிரமான அக்கினியால் 3-ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்துn கல்வத்திலிட்டு சூரணித்து எலுமிச்சம்பழச்சாற்றினால் ஏழுமுறை அரைத்து ஏழுமுறை புடமிட்டு அதில் ஒரு குன்றுஎடை தேனுடனாவது அல்லது நெய்யுடனாவது அல்லது நிலபனங்கிழங்கு வெள்ளைப்
பூண்டு இவைகளை காடியினால் அரைத்து இந்த அனுபானத்துடனாவது கொடுத்துவர பகந்தரம் குணமாகும்.
இந்த ரசம் சாப்பிடும்போது மதுரமான ஆகாரங்கள் சாப்பிடவேண்டியது. பகல் நித்திரை, புணர்ச்சி, சீதள ஆகாரம் இவைகளை விடவேண்டியது.
பிடால அஸ்தி லேபனம் :- திரிபலை கியாழத்தினால் காட்டுபூனை எலும்பை அரைத்து தடவினால் துஷ்டவிரணங்கள் பகந்தரம் குணமாகும்.
குஷ்டாதி லேபனம் :- கோஷ்டம், சிவதை, எள்ளு, தந்திமூலம், திப்பிலி, இந்துப்பு, தேன், மஞ்சள், திரிபலை, துத்தம் இவை சமஎடையாய் அரைத்து தடவினால் பகந்தரம் குணமாகும்.
திலாதி லேபனம் :- எள்ளு, சிவதைவேர், நாகதந்தி, மஞ்சிஷ்டி, இந்துப்பு இவைகளைச் சமஎடையாய் சூரணித்து நெய், தேன் இவைகளைவிட்டு அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.
வடபத்திராதி லேபனம் :- ஆலிலை, செங்கல், சுக்கு, சீந்தில் கொடி, வெள்ளைச்சாரணைவேர், இவைகளைச் சமஎடையாய் மைபோல் அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.
திலாதி லேபனம் :- எள்ளு, கடுக்காய், லோத்திரம், வேப்பன் இலை, மஞ்சள், வசம்பு, கோஷ்டம் இவைகளை சமஎடையாய் அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம், நாடீவிரணம், உபதம்சம், துஷ்ட விரணம் முதலியன குணமாகும்.
யஷ்டியாதி லேபனம் :- அதிமதுரம், சீந்தில்கொடி, சுக்கு,ஆலிலை, வெள்ளைச்சாரணைவேர் இவைகளைச் சமஎடையாய்த் தண்ணீர் விட்டு அரைத்து தடவினால் பித்தபகந்தரம் குணமாகும்.
சிலேஷ்ம பகந்தரத்திற்கு கான்சன்யாதி லேபனம் :- தேவ ாஞ்சனம், மஞ்சள், மரமஞ்சள், சிவகரந்தை, மஞ்சிஷ்டி, தண்ணீர் விட்டான்கிழங்கு, கெந்தி, காட்டாத்திப்பூ, பஞ்சலவணம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு கற்றாழை சாற்றினால் அரைத்து தடவினால் சிலேஷ்ம பகந்தரம் குணமாகு.
கிருமியுக்தபகந்தரத்திற்கு விடங்காதி லேபனம் :- வாய் விளங்கம், திரிபலை, திப்பிலி, இவைகளை சமஎடையாய் சூரணித்து தேன் எண்ணெய் கலந்து லேபனம் செய்தால் கிருமியுடன் நீர் ஒழுகிக்கொண்டிருக்கும் பகந்தரம் குணமாகும்.
அபக்குவபகந்தர சிகிச்சை :- அபக்குவமான பகந்தர விரணங்களை புகைகள், சுரங்கள், சுரதாரங்கள், முதலியவைகளினாலும் அட்டைகளினாலும் ரத்தத்தை எடுத்து கார்த்திகை கிழங்கு, கரும் ஊமத்தை, விஷமுட்டி, இவைகளை அரைத்து அல்லது எருகன் வேரை நொச்சி இலை சாற்றினால் அரைத்து தடவவேண்டியது.
வாதபகந்தரவிரணங்களுக்கு விடங்காதி வடுகங்கள் :-வாய் விளங்கம், வெட்பாலை, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக குங்கிலிய சூரணம் இதற்குச் சமஎடை திரிபலை சூரணம் சேர்த்து நெய்யுடன் அரைத்து 1/4 பலம் வீதம் தேனுடன் சாப்பிட்டால் வாதபகந்தரம்
குணமாகும்.
பகந்தரத்திற்கு யோகராஜ குக்குலு :- திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, வட்டத்திருப்பி, வாய்விளங்கம், வெட்பாலை, கண்டுபாரங்கி, வசம்பு, வெள்ளைக்கடுகு, சீரகம், காடுமிளகு கடுகுரோகணி, பெருங்கடம்பைவேர், இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்கு இரண்டுபாகம் அதிகமாக திரிபலை சூரணம் இவைகள் யாவற்றிற்கும் சமம் சுத்திசெய்த குங்கிலியம் கலந்து நெய்யுடன் அரைத்து தானிக்காய் அளவு மாத்திரைகள் செய்துநாலுமண்டலங்கள் காலை மாலை சாப்பிட்டுவந்தால் மூலம் வாதகுன்மம், பாண்டுரோகம், வீக்கம், அருசி, நாபி, சூலை, உதாவர்த்தம், பிரமேகம், ரத்தவாதம், குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், இருத்ரோகம், கிறாணி, அக்கினிமந்தம், சுவாசம், இருமல், பகந்தரம் கீழத்தனம், சுக்கிலதோஷம், யோஇதோஷம், சகலதோஷம், இவைகள்யாவும் நிவர்த்தியாகும்.
நிஷாதைலம் :- மஞ்சள், எருக்கம்பால், இந்துப்பு, சித்திரமூலம், கொள்ளுக்காவேளை, மஞ்சிஷ்டி, வெட்பாலை இவைகளினால் தயார் செய்த தைலத்தை லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.
தார்விகவர்த்தி :- சதுரக்கள்ளி, எருக்கன் பால், இவைகளால் மரமஞ்சளைரைத்து வஸ்திரத்திற்கு தடவி வத்திசெய்து பகந்தரம்
நாடீவிரணங்களில் வைத்தால் நாடீவிரணம் பகந்தரம் இவைகள் குணமாகும்.
நிசா வர்த்தி :- கடுகு, மஞ்சள், இந்துப்பு, குங்கிலியம் இவைகளை தேனுடன் அரைத்து வஸ்திரத்திற்கு தடவி நாடீவிரணம் பகந்த ரத்தில் வைத்தால் நாடீவிரணம் பகந்தரம் இவைகள் நிவர்த்தியாகும்.
பகந்தரத்திற்கு புகை :- நரிமலத்தைப் பொடித்து கரிநெருப்பினிலிட்டு அதினின்று எழும் புகையை பகந்திர விரணங்களில் தாக்கும்படிச் செய்துவர விரணம் விரைவில் ஆறும்.
பகந்தர விரணத்திற்கு பத்தியம் :- பகந்தரம் பக்குவமாகாம லிருந்தால் சோதனம், லேதனம், லங்கனம், ரத்தமோஷம் இவைகளைச் செய்யவேண்டியது.
பக்குவமான விரணத்தில் சஸ்திரகருமம், க்ஷ¡ராக்கினி கருமங்களைச் செய்யவேண்டியது.
மேலும் அரிசி, பச்சைபயறு கூட்டு, கஞ்சி, மாமிசரசம், புடலங்காய், முருங்கைகாய், பொடுதலை, இளமுள்ளங்கி, எள் எண்ணெய், கடுகு எண்ணெய், துவர்ப்பான பதார்த்தங்கள், நெய், தேன் இவைகள் ஆகும்.
அபத்தியங்கள் :- புணர்ச்சி, சண்டை, யானைஏற்றம், குதிரை ஏற்றம், குருத்துவமான பதார்த்தங்கள் இவைகளை பகந்தரரோகி நிவர்த்திக்க வேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக