புதன், ஜனவரி 13, 2010

குரல் கம்மல் ( ஸ்வர சாத )ரோக சிகிச்சைகள்

குரற்கம்மல் சிகிச்சை

யஷ்டிமதுக கியாழம் :- மிளகு சூரணத்தை நெய்யில் அருந்த வாத குரற்கம்மல் தீரும். அதிமதுர சூரணத்துடன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில் அருந்த பித்த குரற்கம்மல் தீரும். அரிசித்திப்பிலிசூரணத்தை ஆடாதோடை சாற்றுடன் தேன் சேர்த்து அருந்த கப குரற்கம்மல் தீரும்.

கடுகாதி கியாழம் :- கடுகுரோகணி அதிவிடையம், வட்டத்திருப்பி, மரமஞ்சள், கோரைக்கிழங்கு, வெட்பாலை இவைகளை கோமூத்திரத்தில் கியாழம்வைத்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.

பதரீ கல்கம் :- இலந்தை இலை கல்கமாவது அல்லது நெய்யில் வருத்த இலந்தை இலையுடன் இந்துப்பை கலந்தாகிலும் சாப்பிட்டால் குரற்கம்மல், காசங்கள் இவைகள் நீங்கும்.

மரீசிகிருத பானம் :- அன்னம் புசித்தபிறகு மிளகு சூரணத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகிய குரற்கம்மல் நீங்கும்.

நெய் வெல்லம் இவைகளுடன் கலந்த அன்னம் புசித்து வெந்நீர் குடித்தாலும் அல்லது கரசனாங்கண்ணிச்சாற்றை நெய்யுடன் கலந்து பானஞ்செய்தாலும் அல்லது கரசனாங்கண்ணிச்சாற்றை நெய்யில் விட்டு கிருதபதமாகக் காய்ச்சிய கிருதத்தை பானஞ்செய்தாலும் வாதகுரற்கம்மல் நிவர்த்தியாகும்.

விரேசன சிகிச்சைபெற்று பிறகு மதுர பதார்த்தத்துடன் பக்குவமான பாலையாவது, மதுவஸ்துக்களை சூரணித்து அதில் தேன் கலந்தாவது சாப்பிட்டால் பித்த குரற்கம்மல் நிவர்த்தியாகும்.

பயப்பானம் :- மதுர பதார்த்தங்கள் போட்டு காய்ச்சிய பாலை சர்க்கரை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.

பிப்பலீ யோகம் :- திப்பிலி, திப்பிலிமூலம், மிளகு, சுக்கு இவைகளைச் சூரணித்து கோமூத்திரத்தில் கலந்து சாப்பிட்டால் கபகுரற்கம்மல் நிவர்த்தியாகும்.

காகஜங்காதி தாரியம் :- காகஜங்கா, உத்தாமணி, வசம்பு,கோஷ்டம், திப்பிலி இவைகளை சூரணித்துத் தேன் கலந்து ஏழுஇராத்திரிகள் வாயில் வைத்துக்கொண்டு அதன் ரசத்தை விழிங்கிக் கொண்டிருந்தால் குரற்கம்மல் நீக்கி கின்னரியைப்போல் கானம் செய்வான்.

நெல்லிக்காயை அரைத்து பாலில் சாப்பிட்டால்குரற்கம்மல் நீங்கும்.

கதிரதாரியம் :- கதிரசாரம், திப்பிலி, கடுக்காய் இவைகளை சூரணித்து நெய்யில் கலந்து அல்லது சுக்குடன் கலந்தாவது சாப்பிட்டால் ஸ்வரபேதம் நிவர்த்தியாகும்.

சதாவரீ சூரணம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணமாவது அல்லது சிற்றாமுட்டி சூரணமாவது, தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணம் நெற்பொரி சூரணமாவது தேன் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.

ஆமலவேதம் சூரணம் :- செவ்வியம், கொன்னைப்புளி, சுக்கு மிளகு, தாளிசபத்திரி, திப்பிலி, சீரகம், தவஷீரி,சித்திரமூலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகளை சமஎட
யாய் சூரணித்து வெல்லங் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல், பீனசம் கபம், அருசி இவை நீங்கும்.

அஜாமோதாதி சூரணம் :- ஓமம், மஞ்சள், நெல்லிவற்றல்,யவக்ஷ¡ரம், சித்திரமூலம் இவைகளை சமஎடயாய் சூரணித்து நெய், தேன் கலந்து சாப்பிட்டால் திரிதோஷ குரற்கம்மல் நீங்கும்.

பலத்திரிகசூரணம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகளை சூரணித்து ஏழுராத்திரிகள் சாப்பிட்டால் சகலமான குரற்கம்மல்கள் நீங்கும்.

பிராஹ்மாதி சூரணம் :- கண்டுபாரங்கி, சிவகரந்தை, வசம்பு சுக்கு, திப்பிலி, இவைகளை சூரணித்து தேனுடன் ஏழுராத்திரிகள் சாப்பிட்டால் சகலமான குரற்கம்மல்கள் நீங்கும்.

வசாதி சூரணம் :- கண்டுபாரங்கி, வசம்பு, ஆடாதோடைதிப்பிலி, இவைகளை சூரணித்து தேனுடன் கலந்து சாப்
பிட்டால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.

நீதிக்காதி லேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், திப்பிலி மூலம் 50 பலம், சித்திரமூலம் 25 பலம், தசமூலம் 25 பலம், இவை யாவும் 512 பலம் ஜலத்தில் போட்டு 64 பலம் மீறும்படியாய் சுண்டக்காய்ச்சி அதில் 32 பலம் பழைய வெல்லத்தை கலந்து  மந்தாக்கினியால் பாகுபதமாய் சமைத்து அதில் 8 பலம், திப்பிலி சூரணம், இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி,மிளகு, இவைகள் வகைக்கு 1 பலம் இவை யாவும் சூரணித்து அந்தப் பாகில் கொட்டி அத்துடன் தேன் 8 பலம் கலந்து  தானியராசியில் புடமிட்டு சாப்பிட்டுவந்தால் குரற்கம்மல், பீனசம், காசரோகம், மேல்மூச்சு, அக்கினிமந்தம், குன்மம், மேகம், மூத்திர கிரிச்சிரம், கிரந்தி இவைகள் நிவர்த்தியாகும்.

ஜாதிபலாதி லேகியம் :- சாதிக்காய், ஏலக்காய், கொடிமா துளம்பழம், இலவங்கப்பத்திரி, பொரி, திப்பிலி இவைகளைச் சமஎடையாய்ச் சூரணித்துத் தேன் கலந்து லேகியம்போல் செய்து சாப்பிட்டால் கண்டத்தொனியானது வீணை தொனிக்குச் சமமாக இருக்கும்.

ஜாதீதசாதி லேகியம் :- ஜாதிபத்திரி, ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், கொடிமாதுளம்பழம், இலவங்கப்பத்திரி, இவைகளைச் சூரணித்துத் தேன் கலந்து லேகியபதமாக்கி சாப்பிட்டால் கண்டத்தில் வீணையைப்போல் மதுரமான குரலுண்டாகும்.

குடூச்யாதி லேகியம் :- சீந்தில்கொடி, நாயுருவி, வாய்விளங்கம், சங்கிணி, வசம்பு, சுக்கு, தண்ணீர்விட்டான்கிழங்கு, இவைகளைச் சூரணித்துத் நெய்யுடன் கலந்து மூன்று நாள் சாப்பிட்டால்
குரல் கம்மல் நீங்கி ஆயிரம் பாட்டுகளைப் பாடுவான்.

காசமர்த்த கிருதம் :- பேயாவரை இலைரசம், கண்டுபாரங்கி கல்கம், இவைகளால் தயார் செய்த கிருதத்தை குடித்தால் வாயுவினால் உண்டான குரல்கம்மல் நீங்கும்.

வியாக்கீரி கிருதம் :- கண்டங்கத்திரசம், சித்தரத்தை, சிற்றா முட்டி, நெரிஞ்சல் இவைகள் கலந்து காய்ச்சிய நெய்யைக் குடித்தால், குரற்கம்மல், ஐந்துவித காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

சுண்டீ கிருதம் :- சுக்கு, இலவங்கப்பட்டை இவைகளின் சூரணம், ஆலன் முதலிய பால் உள்ள விருக்ஷங்களின் பாலில்வேக வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் அல்லது அதிமதுரத்தைச்சூரணித்து அத்துடன் நெய் சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும்  பித்தத்தினால் உண்டாகிய குரல்கம்மல் நீங்கும்.

கோரக்ஷ வடுகங்கள் :- இரசபற்பம், தாம்பிரபற்பம், லோஹ பற்பம், இவைகளை கண்டங்கத்திரிபழரசத்தினால் 21-நாள் அரைத்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து வாயில் வைத்துக்கொண்டு ரசத்தை விழுங்கிக் கொண்டிருந்தால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.

கண்டூஷம் :- இஞ்சிரசத்தில், இந்துப்பு, திரிகடுகு, கொடிமாதுளம்பழரசம், அரத்தைச் சூரணம் இவைகளைச் சேர்த்துகண்டூஷஞ் செய்து சாப்பிட்டால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.

குரல்கம்மலுக்கு பத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், வஸ்தி கருமம், புகைகுடித்தல், விரேசனம், ஔஷதங்களை வாயில்வைத்துக்கொண்டிருக்குதல், நசியம், தலையில் சிட்டிக்கை போடுதல், யவதானியம், சிகப்பு நெல் அன்னம், காட்டுகோழி, மயில் இவைகளின் மாமிசம், நெரிஞ்சில் இலை, ஆடாதோடை இலை, மணத்தக்காளி, ஜீவந்திக்கீரை, பிஞ்சுமுள்ளங்கி, திரா¨க்ஷ, கடுக்காய், கொடி
மாதுளம்பழம், வெள்ளைப்பூண்டு, உப்பு, இஞ்சி, தாம்பூலம், மிளகு, நெய் இவைகள் குரற்கம்மல் வியாதிக்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- மாம்பழம், விளாம்பழம், எலுமிச்சன், குளிர் ந்த ஜலம், சீதளபொருள்கள், வாந்தி, நித்திரை, விசேஷமாகப்பேசுதல், விருத்த அன்னபானங்கள் இவைகள் அபத்தியங்கள்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக