வியாழன், ஜனவரி 14, 2010

மதாத்யாய ரோக(குடி நிறுத்த ) சிகிச்சைகள்



விஷம் அருந்துவதினால் உண்டாகும் பத்து வித குணங்கள் சாராயம், கள் இவைகளை குடிப்பதினாலும் தடையில்லாமல் உண்டாகும். ஆகையால் அளவுக்கு அதிகமாக குடிப்பதினால் தனது நினைவு மறந்து மரம்போல் சாய்ந்து விடுகிறான். மூர்ச்சைரோகத் தைப்போல் தேகம் அசைவற்று இருக்கிறான். இந்தரோகத்திற்கு மதாத்தியரோகம் என்று பெயர்.

விக்கல், காய்ச்சல், வாந்தி, நடுக்கல், பக்கநோய், விலாஎலும்புநோய், இருமல், பிரமை முதலிய உபத்திரவங்களான நோய்கள் முழு குடியர்களுக்கு உண்டானால் அதிசீக்கிரத்தில் அவர்களை எமனுக்
காளாக்கிவிடும் என்று அறியவும்.

வாதமதாத்தியத்திற்கு சவ்வர்ச்சலாதி கிசிச்சை :- கள், இந்துப்பு, திரிகடுகு இவைகளை சமஎடையாக ஒன்றாய் கலந்து அதில் கொஞ்சஞ் சலத்தை கலந்து கள் அல்லது சாராயத்தைக் குடித்து ஜீரணம் ஆனபிறகு குடித்தால் வாதமதாத்தியம் நிவர்த்தியாகும்.

சூக்தசிருங்கியாதி கிசிச்சை :- காஞ்சிகம், இந்துப்பு, கடுக்காய்ப்பூ, திரிகடுகு, இஞ்சி, சித்திரமூலம் இவைகளை சமஎடையாய் சூரணித்து அதற்கு சமமாக கள் கலந்து குடித்தால் பயங்கரமான வாதமதாத்தியம் நிவர்த்தியாகும்.

பித்தமதாத்திய சிகிச்சை :- ஆலம்விழுதுகளை குளிர்ந்த ஜலத்தில்கரைத்து சர்க்கரை கலந்து குடித்தாலும் அல்லது கள்ளுடன் சலத்தை கலந்து சாப்பிட்டாலும் பித்தமதாத்தியம் நிவர்த்தியாகும்.

க்ஷத்திராமலகாதி பானம் :- கீழாநெல்லி, கர்ஜீரம், பச்சைகற்பூரம், கற்கண்டு இவைகளை சமஎடையாக ஒன்றாய் கள்ளுடன் கலந்து குடித்தாலும் பித்தமதாத்தியம் நிவர்த்தியாகும்.

கபமதாத்தியத்திற்கு அஷ்டாங்க லவணம் :- சவ்வர்ச்சலவ ணம், சீரகம், நெல்லிவற்றல், கொன்னைப்புளி, இலவங்கப்பட்டை, ஏலக்காய். மிளகு இவைகளை சமஎடையாய் சூரணித்து இரண்டு பாகம் அதிகமாக அத்துடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அக்கினி தீபனம் உண்டாகும். கபமதாத்தியரோகம் நிவர்த்தியாகும்.

ஜாதிக்கா மதத்திற்கு சிகிச்சை :- ஜாதிக்காய் மதத்திற்கு வெண்ணெய் சர்க்கரை இவைகளுடன் ஜாபத்திரியை சாப்பிட்டால் அல்லது வெண்ணெய், சந்தனத்தூள் சர்க்கரை இவைகளை சாப்பிட்டாலும், கள்ளினால் உண்டாகும் மயக்கத்திற்கு வாழைப்பழரசம் சாப்பிட்டாலும், விஷமுஷ்டிவிரை மயக்கத்திற்கு பசும்பால் நெய் இவைகள் கலந்து சாப்பிட்டாலும் நிவர்த்தியாகும்.

கடுக்காய் அல்லது குளிர்ந்தஜல ஸ்நானமாவது சர்க்கரை,தயிராவது இவைகள் குடித்தால் ஜாதிக்காயினால் உண்டாகும் விஷம் நீங்கும்.

பசும்தயிர், எண்ணெய் இவைகளை ஒன்றாய் சேர்த்து கடைந்து அதில் கர்ப்பூரத்தை கலக்கி நசியஞ் செய்தால் மதாத்தியரோகம் நிவர்த்தியாகும். கள் குடித்தவன் கற்கண்டு நெய் இவைகளை ஒன்றாய் கலக்கி சாப்பிட்டால் அவ்வெறியானது அடங்கும்.


மதாத்திய பத்தியங்கள் :- விரேசனம், துக்கம், லங்கணம்,சஞ்சாரம், பழைய அருசி, யவதானியம், பச்சைப்பயறு, உளுந்து கோதுமை, பக்ஷமாமிசங்கள், கவுதாரி, காடை, முதலியவைகளின் மாமிசம், பொங்கல், தித்திப்புகள், பால், கற்கண்டு, சிறுகீரை, புடலங்காய், கொடிமாதுழம்பழம், பலாப்பழம், கர்ஜீரங்கள், மாதுழம் பழம், நெல்லிக்காய், திரா¨க்ஷ, தேங்காய், பழைய நெய், கற்பூரம், ஆற்றுவோரம் குளிர்ந்தகாற்று, ஜலத்தின் மந்திரம்,சந்திர னது கிரஹணங்கள், முந்துஹாரங்கள், சினேகிதனைப்பார்த்தல், பட்டு வஸ்திரங்கள், மாதர்புணர்ச்சி, சங்கீதம், வாத்தியங்கள், குளிர்ந்த ஜலம், சந்தனம் இவைகள் மதாத்தியரோக பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், கலிக்கமிடல், புகை குடித்தல், நசியமிடல், பல்துலக்கல் இவைகள் ஆகாது.



மேலும் உங்களுக்கு தேவையான விஷயங்களுக்கு 
http://alshifa-deaddiction.blogspot.com
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக