வியாழன், ஜனவரி 14, 2010

விசர்ப ரோக சிகிச்சைகள்

பேய்புடல், ஆடாதோடை ஈர்க்கு, சீமைநிலவேம்பு, வேப்பன்கடுகுரோகணி, தானிக்காய், கடுக்காய், நெல்லிவற்றல், இவைகளைச்சமஎடையாய் கியாழமிட்டு அதில் குங்கிலிய சூரணத்தை தக்க கலந்து சாப்பிட்டால் சகல தோஷத்தினால் உண்டான அக்கினி விசர்பி, வாந்தி, அனல், தாகம், பிரமை இவைகள் நீங்கும்.

குடுச்யாதிகியாழம் :- சீந்தில்கொடி, ஆடாதோடை, பேய்புடல், வேப்பன்பட்டை, திரிபலை, கருங்காலிவேர், கொண்ணை இவைகளை சமஎடை கியாழம் செய்து அதில் குங்கிலிய சூரணம் கலந்து சாப்பிட்டால் விசர்ப்பி, குஷ்டம் இவை சாந்திப்படும்.

படோலாதி கியாழம் :- பேய்புடல், வேப்பன், மரமஞ்சள்கடுகுரொகணி, அதிமதூரம், கொத்துப்புங்கன், இவை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தால் விசர்ப்பி நீங்கும்.

துராலாபாதி கியாழம் :- பூனைக்காஞ்சொரிவேர், பற்பாடகம் சீந்தில்கொடி, சுக்கு இவைகள் சமஎடை இடித்து இரவில் ஜலத்தில் ஊறவைத்து காலையில் கியாழம் காய்ச்சி குடித்தால் தாகம், விசர்பி இவை நீங்கும்.

முஸ்தாதி கியாழம் :- கோரைக்கிழங்கு, பேய்புடல், வேப்பன் இவைகளது கியாழமாவது, அல்லது கீழாநெல்லிவேர், பேய்ப்புடல், பச்சைபயறு இவைகளை கியாழம் வைத்து அதில் நெய் கலந்தாவது சாப்பிட்டால் விசர்ப்பி நீங்கும்.

பூநிம்பாதி கியாழம் :- சீமைநிலவேம்பு, ஆடாதோடை, கடுகு ரோகணி, பேய்ப்புடல், திரிபலை, சந்தனம், வேப்பன் இவைகளைச்சமஎடையாய்க் கியாழம் வைத்து குடித்தால் விசர்ப்பி, தேக எரிச்சல், சுரம், வீக்கம், நமை, விஸ்போடகம், தாகம், வாந்தி இவைநீங்கும்.

விசர்ப்பிகளுக்கு கௌராதி கிருதம் :- மஞ்சள், மரமஞ்சள், முக்காவேளை, பெருங்கடம்பை, சந்தனம், ரத்தசந்தனம், அதிமதுரம், அவுரி, தாமரைத்தண்டு, தாமரைப்பூ இதழ், வெட்டிவேர், அல்லிக் கிழங்கு, திரிபலை, பஞ்சவல்கள் இவைகளை வகைக்கு 1/4-பலம்வீதம் சேர்த்து கல்கஞ்செய்து அதில் நெய் 16-பலஞ் சேர்த்து நெய் பதமாகக் காய்ச்சி குடித்தால் விசர்ப்பி, விஸ்போடகம், கீடலூதவிரணம் சிலேஷ்ம ரோகம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

விருஷாதி கிருதம் :- ஆடாதோடை, கருங்காலி, பேய்ப்புடல், வேப்பன் இவைகளின் இலை அல்லது பட்டை, சீந்தில்கொடி, நெல்லிவற்றல் இவைகளின் கியாழமவது கல்கமாவது கலந்து அதில் நெய் சேர்த்து நெய் காய்ச்சி சாப்பிட்டால் ரத்த விசர்ப்பி, குஷ்டம், குன்மம், இவைகள நிவர்த்தியாகும்.

தூர்வாதி கிருதம் :- அறுகம்புல், ஆல், அத்தி, நாவல், மருத மரம், சிற்றாமல்லி, அரசன் இவைகளின் பட்டைகளை கியாழமவது கல்கமாவது செய்து அதில் நெய் கலந்து நெய் பதமாக காய்ச்சி குடித்தால் விசர்ப்பி, சுரம், அனல், எரிச்சல், கட்டி இவைகள்நீங்கும்.

வாதவிசர்ப்பிக்கு ராஸ்னாதி லேபனம் :- சிற்றரத்தை, கரும் அல்லிகிழங்கு, தேவதாரு, சந்தனம், அதிமதுரம், சிற்றாமுட்டி இவைகளை பாலால் அரைத்து நெய்யில் கலந்து லேபனஞ் செய்தால் வாதவிசர்ப்பி நிவர்த்தியாகும்.

பித்தவிசர்ப்பிக்கு புரவுண்டரீகாதி தைலம் :- பிரபொண்ட ரீகம் மஞ்சிஷ்டி, தாமரிப்பூ, சந்தனம், அதிமதுரம், அல்லிக்கிழங்கு இவைகளை பாலில் அரைத்து லேபனஞ் செய்தால், பித்தவிசர்ப்பி நிவர்த்தியாகும்.

கபவிசர்ப்பிக்கு காயத்தியாதி லேபனம் :- கருங்காலிபட்டை, சித்தாமல்லிபட்டை, கோரைக்கிழங்கு, ஆடாதோடை, கொன்னைச்சதை, தேவதாரு, பெருவாகைப்பட்டை இவைகளை அரைத்து
லேபனஞ் செய்தால், சிலேஷ்ம விசர்ப்பி நிவர்த்தியாகும்.

சந்நிபாதவிசர்ப்பத்துக்கு தசாங்லேபனம் :- காட்டுவாழை, அதிமதுரம், கிரந்திதகரம், சந்தனம், ஏலகக்காய், ஜடாமாஞ்சி, மஞ்சள், மரமஞ்சள், கோஷ்டம், வெட்டிவேர், இந்த பத்து தினுசுகளை சமஎடையாககொண்டு கல்கஞ்செய்து நெய்யுடன் கலந்து லேபனஞ்செய்தால் சந்நிபாதவிசர்ப்பம், விரணம், வீக்கம் இவைகள் நீங்கும்.

அக்கினிவிசர்ப்பிக்கு மாமிசாதி லேபனம் :- ஜடாமாஞ்சி, சர்ஜரசம், லோத்திரம், அதிமதுரம், காட்டுமிளகு, பெரும்கடம்பை, கருப்பு அல்லிக்கிழங்கு, தாமரைத்தண்டு, காட்டுவாழைப்பூ இவைகளை அரைத்து லேபனஞ் செய்தால் அக்கினிவிசர்ப்பி நிவர்த்தியாகும்.

கிரந்திவிசர்ப்பிக்கு ஞாகோரோதாதி லேபனம் :-ஆலம்விழுது குன்றி, வாழைக்கிழங்கு இவைகளை அரைத்து நெய்யில் அரைத்து லேபனஞ் செய்தால் கிரந்தி, விசர்ப்பி நிவர்த்தியாகும்.

சகலவிசர்ப்பிகளுக்கு ஹரீதகீயோகம் :- மஞ்சிஷ்டி, வெட்பாலை பட்டை, கோரைக்கிழங்கு, சீந்தில்கொடி, மஞ்சள், மரமஞ்சள், கண்டங்கத்திரி, வசம்பு, சுக்கு, கோஷ்டம், வேப்பன், பேய்ப்புடல், சாதிக்காய், வாய்விளங்கம், மணத்தக்காளி, பெருங்கடம்பை, இத்தி, தேவதாரு, வெட்பாலை, கரசனாங்கண்ணி, கொத்துபுங்கன், வட்டத்திருப்பி, பூசினி, கெந்தகம், கருங்காலி திரிபலை, கடுகு ரோகணி, நன்னாரி, புங்கன், ஆடாதோடை, வெட்டிவேர், பெரிய மரம், கார்போக அரிசி, ஞாழல், சந்தனம், பற்பாடகம், பூனைகாஞ்சொரி, தும்மட்டி, சிவதை, குற்வேர், சுக்கு, திப்பிலி, மிளகு, குராசாணி ஓமம், இவைகள் வகைக்கு 1-பலம், கடுக்காய் 32-பலம், இவைகளை 256-பலம் ஜலத்தில் போட்டு எட்டில் ஒருபாகம் மீறும் படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி இரும்பு சிலாக்கினால் ஒவ்வொரு கடுக்காயை துளைசெய்து தேனில்போட்டு 21-நாள்வரையில்வைத்து அதில் தேன் உள்ளே இல்லாததை எடுத்துவிட்டு மறுபடியும் தேனில் போட்டு பிறகு தேனில் நன்றாய் ஊறிய கடுக்காயை காலையில் ஒவ்வொன்றாக சாப்பிட்டுவந்தால் விசர்ப்பங்கள் 18-வித குஷ்டரோகங்கள் பாமா, கண்டு விஸ்போடகம், தத்ரூ, வித்திருதி முதலிய சகல் சரும தோஷங்கள் ரத்தரோகங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

விசர்ப்பிக்கு உபசாரங்கள் :- சகல விசர்ப்பிகளில், வமனம், விரேசனம், குருதிவாங்கல் இவைகளை செய்தல் நலம். மேலும் சித்தாமல்லி, மேல்மல்லி, காட்டுபயறு, காட்டு உளுந்து இவைகளை சமஎடையாகச் சேர்த்து கியாழங்காய்ச்சி அதில் பசு நெய் கலந்து கொடுத்தாலும் அல்லது சித்தாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி,
இந்த மூன்றை கலந்து பசு நெய்யுடனாவது வமனத்திற்கு கொடுத்தால் சகல விசர்ப்பிகள் நிவர்த்தியாகும்விசர்ப்பிகள் பக்குவமாகில் வைத்தியன் விரணசிகிச்சை செய்தல் வேண்டும்.

விசர்ப்பிரோக பத்தியங்கள் :- பழைய யவதானியம், கோதுமை வரகு அரிசி, பழைய நெல் அரிசி, பச்சைபயறு, சிறுகடலை, கடலை, துவரை, மாமிசம், வெண்ணெய், நெய், திரா¨க்ஷ, மாதுளம்பழம், பாவக்காய், நெல்லிக்காய், கருங்காலி, காட்டுவாழை, கற்பூரம், சந்தனம், எள்ளு இவைகளின் லேபனமும் தோஷத்தின் பலா
பலத்தை அறிந்து பத்தியமும் செய்யவேண்டியது.

அபத்தியங்கள் :- சஞ்சாரம், பகல்தூக்கம், மாதர் புணர்ச்சி,காற்று, கோபம், துக்கம், வாந்தி, மலம், மூத்திரம், இவைகளை  அடக்குதல், சில்லிட்டசாதம், குளிர்ந்த சலபானம், வெள்ளைப்பூண்டு, கொள்ளு, உளுந்து, எள்ளு, காட்டினது ஐந்து மாமிசங்கள், வியர்வை, வாங்கல், உப்பு, புளிப்பு, காரம், கள்ளு, வெய்யில் இவைகளை விசர்ப்பிரோகங்கள் விடவேண்டியது.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக