ஞாயிறு, ஜனவரி 10, 2010

பால ரோக சிகிட்சைகள்

பாலரோகசிகிச்சை

காய்ச்சல்களுக்கு அஷ்டமங்கள கிருதம் :- வசம்பு, கோஷ்டம் வல்லாரை, கடுகு நன்னாறி, இந்துப்பு, திப்பிலி இவைகளை அரைத்து கற்கஞ்செய்து அத்துடன் நெய்யில் கலந்து கிருத பக்குவமாக காய்ச்சி வைத்துக்கொண்டால் இதற்கு அஷ்டமங்கள கிருதம் என்று பெயர். இந்த கிருதங்களை குழந்தைகளுக்கு பானஞ்செய்வித்தால் நல்ல அறிவு, தீவிரமான மூளை, குக்ஷ்மபுத்தி இவைகள் உண்டாகும். பிசாசுகள் இராஷச பாதைகள், பூதங்கள், மாத்ரு
கள் இவைகள் பிடிக்காது. மேலும் கிரகங்கள் நிவர்த்திக்காக சாந்தி கருமங்கள் இவைகள் முதலியவைகளை செய்யவேண்டியது.

வாதசுர கியாழம் :- பஞ்சமூலங்களை கியாழம் வைத்து குடித்தாலும், அல்லது சீந்தில்கொடி, திரா¨க்ஷ , வெட்பாலையரிசி, சிற்றா முட்டி, கோரைக்கிழங்கு இவைகளை கியாழம் வைத்து சிசுவுக்குகுடிப்பித்தாலும், வாதசுரம் நீங்கும்.

பித்தசுரகியாழம் :-நன்னாரி, அல்லி, பூசனி, சீந்தில் கொடி தாமரைத்தண்டு, பற்பாடகம், இவைகளை கியாழம் வைத்து பிள்ளை களுக்கு ஊட்டினால் பித்த சுரம் நீங்கும்.

வேறு :- கோரைக்கிழங்கு, பற்பாடகம், வெட்டிவேர், அதி மதுரம், தாமரைத்தண்டு இவைகளை கியாழம்வைத்து பிள்ளைகளுக்கு குடிக்கவைத்தால் எரிச்சல், வாந்தி, சுரம் இவைகள் நீங்கும்.

சந்ததசுர சிகிச்சை :- வேப்பிலை, சீந்தில்கொடி, பேயாவாரை, பேய்ப்புடல், வெட்பாலையரிசி இவைகளை கியாழம்வைத்து பிள்ளைகளுக்கு கொடுத்துவர சந்ததசுரம் நிவர்த்தியாகும்.

வாதபித்தசுர கியாழம் :- கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, சீமைநிலவேம்பு, சுக்கு இவைகளை முறைப்படி கியாழம் வைத்து சிசுவுக்கு தக்கபடி அளவாய் கொடுத்துவர வாதபித்தசுரம் நீங்கும்.

பித்தகபசுர கியாழம் :- கொத்தமல்லி, சந்தனம், தாமரை தண்டு, கோரைக்கிழங்கு, வெட்பாலையரிசி, நெல்லிவற்றல், பேய்ப்புடல் இவைகளை முறைப்படி குடிநீரிட்டு பிள்ளைக்குக் கொடுத்துவர
பித்தகபசுரம் நிவர்த்தியாகும்.

வாதகபசுர கியாழம் :- சீமைநிலவேம்பு, கோரைக்கிழங்கு, சீந்தில்கொடி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து பிள்ளைக்குக்கொடுத்துவர வாதசிலேஷ்மசுரம் நிவர்த்தியாகும்.

கபசுர கியாழம் :- கடுக்காய், நெல்லிவற்றல், திப்பிலி, சித்திர மூலம் இவைகளை கியாழம்வைத்து பிள்ளைக்கு குடிப்பித்தால் சிலேஷ்மசுரம் நிவர்த்தியாகும். அக்கினி தீபனம் உண்டாகும்.

சந்நிபாதசுர சிகிச்சை :-
 தசமூல கியாழத்தில் திப்பிலிச்சூரணத்தைக் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவர சுரம், மயக்கம், இவைகளுடன் கூடிய சந்நிபாதசுரம் நீங்கும்.

சுரக் கியாழம் :- அதிமதுரம், ஆடாதோடை, பற்பாடகம், வெட்டிவேர், வேப்பங்கொழுந்து, சீமைநிலவேம்பு இவைகளை கியாழம் வைத்து பிள்ளைக்குக் கொடுத்துவர, இருமல், பித்தம், சுரம் சுவாசம் இவைகள் நீங்கும்.

முறைசுர கியாழம் :- திரா¨க்ஷ, பேய்ப்புடல் திரிபலை, வேம்பு, ஆடாதோடை இவைகளை கியாழம்வைத்து கொடுத்து வந்தால் முறைக்காய்ச்சல் நீங்கும்.

வேறு :- சீந்தில்கொடி, சந்தனம், வெட்டிவேர், கொத்தமல்லி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து அதில் தேன், சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவர முறைக்காய்ச்சல் நீங்கும்.

சர்வசுர கியாழம் :- கோரைக்கிழங்கு, கடுக்காய்த் தோல், வேம்பு, பேய்ப்புடல், அதிமதுரம் இவைகளை கியாழம்வைத்து கொஞ்சம் உஷ்ணமாக குடிக்கும்படி செய்தால் சகல சுரங்களும் நீங்கும்.

பால் குடிக்க சிகிச்சை :-
 பிள்ளைகள் பிறந்த பிறகு பால் உண்ணாமல் போனால் இந்துப்பு, நெல்லிவற்றல் இவைகளை கற்கம் செய்து தேன் கலந்து சிசுவுக்கு நாக்கில் தடவினால் பால் உண்ணும்.

அதிசார சிகிச்சை :- தேள்கொடுக்குச்செடி, ஆனைத்திப்பிலி லோத்திரப்பட்டை இவைகளை சமனெடை கியாழம் வைத்து சிசுவுக்கு பானஞ்செய்தால் அதிசாரம் நீங்கும்.

வேறு :- நெல்பொறி, இந்துப்பு, மாம்பட்டை, இவைகள் சம எடை சூரணித்து தேன்கலந்து சிசுவுக்கு நாக்கில் தடவினால் வாந்தி அதிசாரம் இவைகள் நீங்கும்.

வேறு :- மாங்கொட்டைப்பருப்பு, லோத்திரப்பட்டை, நெல்லிச்சாறு இவைகளை சமனெடை எருமை மோரில் கலந்து பிள்ளைகளுக்கு பானஞ்செய்வித்தால் அதிசாரம் நீங்கும்.

வேறு :- புங்கண் ரசாஞ்சணம், கோரைகிழங்கு இவைகளை சூரணித்து தேன்விட்டு கலந்து நாக்கில் தடவினால் தாகம் வாந்தி அதிசாரம் இவைகள் நீங்கும்.

வேறு :- திப்பிலி, ரசாஞ்சணம், மாம்பருப்பு, இவைகள் சம எடை சூரணித்து தேன்கலந்து பிள்ளைகளுக்கு ஊட்டினால் அதிசாரம் நீங்கும்.

வேறு :- நட்டாத்திப்பு, வில்வம்பழம், கொத்தமல்லி, லோத்திரப் பட்டை, வெட்பாலவிரை, வெட்டிவேர், இவைகளை லேகியம் செய்து தேன்விட்டு கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் சுரம் அதிசாரம் நீங்கும்.

வேறு :- லோத்திரச்சக்கை, திப்பிலி வெட்டி வேர் இவைகளை சூரணித்து தேன்விட்டு கலந்து பிள்ளைகளுக்கு ஊட்டினால் அதிசாரம் நீங்கும். காட்டுஅத்திப்பூ தூபமிட்டாலும் அதிசாரம் நீங்கும்.

வேறு :- வாய்விளக்கம், ஓமம், திப்பிலி, வெட்பாலையரிசி, இவைகளை சூரணித்து வெந்நீரில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் அதிசாரம் நீங்கும்.

கிராணிக்கு சிகிச்சை :- ஓமம், திப்பிலி, சீரகம், மிளகு, வெட்பால விரை, சுக்கு இவைகளை சூரணித்து தேன்விட்டு கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் கிராணி ரோகம் நீங்கும்.

வேறு :- திப்பிலி, அதிவிடயம், வில்வம்பழம், சுக்கு, ஓமம், இவைகளை சூரணித்து தேன் நெய் கலந்து குழந்தைகட்கு கொடுத்தால் கிராணி ரோகம் நீங்கும்.
 


வேறு :- சுக்கு, வில்வபழம் இவைகளை சூரணித்து வெல்லத்துடன் கலந்து பிள்ளைக்கு கொடுத்தால் திரிதோஷத்தினால் உண்டான கிராணி நிவர்த்தியாகும்.

ரத்தாதிசார சிகிச்சை :- இலவன்பிசின், மேல்மல்லி, காட்டாத்திப்பூ, தாமரைப்பூ இவைகளை சூரணித்து தண்ணீர் விட்டுக்காய்ச்சி பிள்ளைக்கு கொடுத்தால் ரத்தாதிசாரம் நீங்கும்.

சர்வாதிசார சிகிச்சை :- சுக்கு, அதிவிடயம், கோரைக்கிழங்கு, வெட்டிவேர், வெட்பாலைவிரை இவைகளை கியாழம்வைத்து பிள்ளைக்கு கொடுத்தால் சகல அதிசார ரோகங்கள் நீங்கும்.

அசீரண சூலைக்கு சிகிச்சை :- கொத்தமல்லி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து சாப்பிட்டாலும், அல்லது மிளகு, திப்பிலி, சித்திரமூலம், சீரகம் இவைகள் சூரணத்தை மேற்கூறிய கியாழத்
தில் கலந்து சாப்பிட்டாலும் சூலை, ஆமம், அஜீரணம் முதலிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

அஜீரணபேதி சிகிச்சை :- இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிற்றரத்தை, சுக்கு, முருக்கன்ப்பட்டை, கோஷ்டம், சிற்றா முட்டி இவைகளை எலுமிச்சம்பழச் சாற்றினால் அரைத்து சர்க்கரை கலந்து பிள்ளைக்கு கொடுத்தால் அசீரணம், பேதி முதலியன நிவர்த்தியாகும்.

இருமல் காச சிகிச்சை :- பூனைகாஞ்சொரிவேர், திப்பிலி, திரா¨க்ஷ, கடுக்காய்பிஞ்சு, இவைகளை சூரணித்து தேனில் கலந்து மூன்றுநாள் பிள்ளைகளுக்கு ஊட்டச்செய்தால் இரைப்பு, இருமல் இவை நீங்கும்.

காச சுவாசாதி சிகிச்சை :- பூனைகாஞ்சொரிவேர், திப்பிலி, திரா¨க்ஷ, கடுக்காய்ப்பூ, ஆனைதிப்பிலி இவைகளை சூரணித்து தேன் அல்லது நெய் கலந்து பிள்ளைகளுக்கு கொடுக்க இரைப்பு, இருமல் சுரம் இவைகளை குணமாக்கும்.

காச சிகிச்சை :- வெல்லம் பாகுபிடித்து சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, இவைகளை சூரணித்து அதில்போட்டு இளகமாக்கி பிள்ளைகளுக்கு கொடுக்க காசரோகம் நீங்கும்.

கிருமிக்கு சிகிச்சை :- வாய்விளங்கத்தை சூரணித்து தேனுட னாவது அல்லது முருக்கன் விரையைச் சூரணித்து தேனுடனாவது கொடுத்துவர அல்லது எலிக்காது இலைரசம் கொடுத்துவர குழந்தைகளின் வயிற்றிலிருக்கும் கிருமிகள் நாசமாகும்.

காச சிகிச்சை :- கோஷ்டம், அதிவிடயம், கடுக்காய்ப்பூ, திப்பிலி, பூனைகாஞ்சொரிவேர், இவைகளை சூரணித்து தேனில் கலந்து  பிள்ளைகளுக்கு கொடுக்க ஐந்துவித இருமல்கள் நீங்கும்.

வேறு :- கண்டங்கத்திரி, இலவங்கம், சிறுநாகப்பூ, இவைகளை சூரணித்து, தேனில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் வெகு காலமாகயிருக்கும் இருமல் நீங்கும்.

விக்கல் சிகிச்சை :- பொன்னிறமான கானிக்கல்லை சூரணித்து, தேனில் கலந்து பிள்ளைகளுக்கு நாவில் தடவினால் அந்த க்ஷணமே விக்கல் நீங்கும்.

வேறு :- திப்பிலி, காட்டுமிளகு, இவைகளை கியாழம் வைத்து அத்துடன் சுட்டப்பெருங்காய சூரணத்தையும் தேனையும் விட்டு கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் நானாவித விக்கல்கள் நீங்கும்.இது தன்வந்திரி மதம்.

வேறு :- கடுகுரோகணி சூரணத்தை தேனில் கலந்து பிள்ளை களுக்கு நாவில் தடவினால் சீக்கிரமாக விக்கல் நீங்குவதுடன் வெகு நாளாக யுருக்கும் கக்குதலும் நீங்கும்.

வாந்திக்கு சிகிச்சை :- கடுக்காய் ரணத்தை தேனில் கலந்து பிள்ளைகளுக்கு நாவில் தடவினால் அந்த க்ஷணமே வாந்தி நீங்கும்.

வேறு :
- அரசன் பட்டையை உலர்த்தி அதை சுட்டு, சாம்ப லாக்கி தண்ணீரில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் வாந்திகள் நிற்கும்.

வேறு :- மாம்பருப்பு, நெற்பொறி இந்துப்பு இவைகளை சூரணித்து தேனில் கலந்து பிள்ளைகளுக்கு நாவில் தடவினால்  வாந்திகள் நிற்கும்.

விக்கலுக்கு சிகிச்சை :- திப்பிலி அதிமதுரம், இவைகளை சூரணித்து தேனுஞ் சர்க்கரையும் கலந்து கொடி மாதுளம்பழச்சாற்றில் சிசுவுக்கு கொடுத்தால் விக்கல் வாந்தி இவைகள் நீங்கும்.

ரோதன நிவாரக சிகிச்ச
ை :- திப்பிலி, திரிபலை இவைகளை சூரணித்து தேன் நெய் கலந்து சிசுவுக்கு கொடுத்தால் அழுகையை விட்டு சுகமாக யுருக்கும்.

விரேசனத்திற்கு லேபனம் :- ஆமணக்கு விதைப்பருப்பு எலி புழுக்கை, இவ்விரண்டையும் வேப்பிலை சாற்றினால் அரைத்து சிசு வின் குதத்திலும், தொப்புளிலும் தடவினால் சுகமாக பேதியாகும்.

தேகபுஷ்டிக்கு அசுவகந்திகிருதம் :- அமுக்கிறாக்கிழங்கு கற்கம் ஒருபாகம், பால் எட்டுபாகம், பசுநெய் இரண்டு பாகம் இவை களை வொன்றாகச் சேர்த்து தைல பாண்டத்திலிட்டு நெய்பதமாக காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்துவர தேகபுஷ்டி, பலம் இவைகளை யுண்டாக்கும்.

முகசிராவ சிகிச்சை :- நன்னாரி, நிலவேம்பு, லோத்திரப்பட்டை, அதிமதுரம் இவைகளை கியாழம்வைத்து அக்கியாழத்தினால் குழந்தையின் வாயைக் கழுவினால் வாயிலிருந்து வடியும் சொள்ளு நிவர்த்தியாகும்.

மூத்திர கிருச்சர சிகிச்சை :- வெட்டிவேர், சீந்திற்கொடி, சுக்கு, அமுக்கிறாக்கிழங்கு, நெல்லித்தோல், நெருஞ்சில் இவைகளை கியாழம்வைத்து தேன்கலந்து குழந்தைக்கு ஊட்டினால் மூத்திர கிருச்சரரோகம் நிவர்த்தியாகும்.

வாதரோக சிகிச்சை :- ஆமணக்கெண்ணையிற் பசும்பால் அல்லது கோமூத்திரமாவது கலந்து அதில் குங்கிலிய சூரணம்சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் வாதரோகம் நிவர்த்தியாகும்.

ரத்த பித்தத்திற்கு சிகிச்சை :- ஆடாதோடை இலைச்சாற்றில் தேன் சர்க்கரை கலந்தாவது அல்லது ஆலந்துளிர் கற்கத்தில் தேன் சர்க்கரை கலந்தாவது குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் ரத்த பித்தம் நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகலுக்கு சிகிச்சை :-
 மாதுளம்பழம் அல்லது பூச்சாறு, அருகம்புல் சாறு இவைகளை நசியஞ் செய்வித்தால் சிசுக்களுக்கு மூக்கிலிருந்து ஒழுகும் ரத்தமானது நின்று விடும்.

வாதகுன்ம சிகிச்சை :- சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்துப்பு, சீரகம், கருஞ்சீரகம், வருத்த பெருங்காயம் இவைகளை சம எடையாக சூரணித்து முதற் சாதபிடியில் இந்த சூரணங்கலந்து நெய்யுடன் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு அக்கினி புஷ்டியுண்டாவதுடன் வாதகுன்மநோயும் நிவர்த்தியாகும்.

அபஸ்மார சிகிச்சை :-
 கலியாண பூசனிக்காய் சாற்றில் அதிமதுரத்தை சூரணித்து போட்டு ஏழுநாள் குழந்தைக்கு கொடுத்து வர அபஸ்மாரரோகம் நீங்கும்.

மூர்ச்சை சிகிச்சை :- இலந்தைவிரை, தாமரைக் கிழங்கு, வெட்டிவேர், சந்தனம், சிறுநாகப்பூ இவைகளை சூரணித்து தேன் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் மூர்ச்சைரோகம் நிவர்த்தியாகும்.

பாண்டுரோக சிகிச்சை :- யவாக்ஷ¡ரம், வாய்விளங்கம், திப்பிலி இவைகளை சூரணித்து தேன் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் பாண்டுரோகம், பக்கசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

வேறு :- லோகபற்பம், திரிபலை இவைகளை கோமூத்திரத் தினாலரைத்து தேன் அனுபானத்திற் கொடுத்து மோர்சாதம் பத்தியம் வைத்தால் குழத்தைக்கு உண்டாகும் பாண்டுரோகம், இரு மல், சூலை இவைகள் நிவர்த்தியாகும்.

காசசுவாச சிகிச்சை :- ஆடாதோடை, சுக்கு, கண்டங்கத்தரி சீந்திற்கொடி இவைகளை கியாழம் வைத்து குழந்தைகட்கு கொடுத்து வர இருமல் இரைப்பு நீங்கும்.

சரீரபுஷ்டிக்கு சிகிச்சை :
- வெண்ணெய் சர்க்கரை, தேன் இவைகளை ஒன்றாக ஊட்டி வைத்தவுடனே பால் சாதம் ஊட்டினால் குழந்தைகட்கு சரீரம் புஷ்டியாகும்.
 




கஸ்தூரி மாத்திரை :- கஸ்தூரி குன்றிஎடை-4, கோரோசனை குன்றிஎடை-8, குங்குமப்பூ குன்றிஎடை-16, பச்சைக்கர்ப்பூரம் குன்றிஎடை-16, பொரித்த வெங்காயம் குன்றிஎடை-16, சுத்தி செய்த லிங்கம் குன்றிஎடை-32, அதிமதுரச் சூரணம் குன்றி எடை-16, திப்பிலிச் சூரணம் குன்றிஎடை-16, கோஷ்டச் சூரணம் குன்றிஎடை-16, அக்ராகாரச் சூரண்ம் குன்றிஎடை-16, கிராம்புச் சூரணம் குன்றிஎடை-16.

முதலில் லுங்கத்தைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து மிருது வானபின்பு கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சைக்கர்ப்பூரம் நீங்கலாக மற்ற சரக்குகளைச் சேர்த்து இஞ்சி சுரசம் விட்டு இரண்டுசாமம் அரைத்து, இறுதியில் கஸ்தூரி முதலாதி வாசனைச் சரக்குகளை சேர்த்து ஒருமணிநேரம் அரைத்து நன்கு உறவாகி மெழுகுபதம்வரும்போது பயறளவு மாத்திரைகளாக திரட்டி நிழலி லுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரைவீதம் தினம் இரு வேளை தாய்ப்பால் தேன் அல்லது தக்க அனுபானங்களில் குழந்தை கட்கு கொடுத்துவர எத்தகைய சுரங்களும் குணமாகும். பாலுண்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக