ஞாயிறு, ஜனவரி 10, 2010

ஸ்திரீ ரோக நிதானம்


ஸ்திரீரோக நிதானம்

மலடு ரோகம்


சுக்கில சுரோணிதங்களில் வாதாதிகளின் தோஷத்தினாலும் ஜன்மாந்த பாவத்தாலும் மலட்டுரோகம் உண்டாகும். அது ஆண்
மலடு பெண் மலடு என இருவகைப்படும். இவற்றில் பெண் மலட்டில் ஆதி மலடு, காகமலடு, கதலி மலடு, கருப்ப மலடு என நான்கு
பிரிவுகள் உண்டு. இது பெரும்பாலும் ஸ்திரீகட்கே விசேஷமாக காணப்படுதலால் இந்நோயை ஸ்திரீ ரோகத்தின் கீழ் கூறப்பட்டது.

ஆண் மலடு :- ஆண்களின் விந்துவானது இனிப்பு இல்லாததும் சலத்தில் விட்டால் கரைந்து மிதப்பதும், உயிர்ப்பற்றதும், மூத்திரத்தில் நுரைகட்டுவதுமா யிருக்குமாயின் அதனால் கர்ப்பந்தரிக்கமாட்டாது.

பெண் மலடு :- பெண்களுக்கு மாதாந்த ருதுகாலத்தில் வெளிப்படும் ரத்தமானது சிவந்தும், கருத்தும் வீழ்ந்து தேகத்தில்
வாதகுணத்தை உண்டாக்கில் அது வாததோஷமென்றும், மஞ்சள்
நிறமாயும் நீலநிறமாயும் தேகத்தில் பித்த குணத்தை யுண்டாக்கில் அது பித்ததோஷமென்றும், சீழைப்போல் வெளுப்பாக வீழ்ந்து மந்தாக்கினி முதலிய சிலேத்தும குணத்தை யுண்டாக்கில் அது
சிலேத்தும தோஷமென்றும், பிரேத ரத்தத்தைப்போல் உருண்டை
யுருண்டையாய் வீழின் அது ரத்தபித்த தோஷமென்றும், உதிரமானது கண்டு உடனே மறைந்தால் வாதபித்த தோஷமென்றும்,
மலமூத்திர நிறமாக வீழின் சந்நிபாத தோஷமென்றும் அறியவும்.இவற்றுள் வாதபித்த கப தோஷங்கள் சாத்தியம். தொந்த தோஷங்
கள் கஷ்ட சாத்தியம். சந்நிபாத தோஷம் அசாத்தியமாம்.

புருஷன் புணரும்போது அந்த ஸ்திரீக்கு தலைநோய் காணுமாகில் கருக்குழியில் பாரம் அல்லது பாசிபற்றி விளக்க மற்றிருக்கு
மென்றும், அக்காலத்தில் அந்த ஸ்திரீக்கு சர்வாங்கத்திலும் நோய் காணுமாகில் கருக்குழியில் வாயுவு வியாபித்துருக்குமென்றும்,
நெஞ்சுவலி காணுமாகில் யோனி சுருங்கி தசை வளர்ந்திருக்கும் என்றும், முதுகு நோயுண்டாகில் யோனியில் கிருமி நிறைந்திருக்குமென்றும், கண்டசதை வலிக்குமாகில் யோனியில் ரத்தங் கட்டியிருக்குமென்றும், ஏப்பங் காணுமாகில் யோனிமதத்து கொழுப்படைந்திருக்குமென்றும், விந்து சேராமல் நஷ்டப்படுமாகில் பேயி
னாலும், பயத்தினாலும், யோனிக்குள் வியாதிகள் யுண்டாயிருக்கு மென்றும், இவைகள் ம்லட்டு நோயைக் குறிக்குமெனவும் சில நூல்
களில் கூறப்பட்டுள்ளன.
 
1. ஆதிமலடு :- வயிற்றில் மூன்று மடிப்பு விழுந்து இடுப்பு பருத்து சரீரம் ஸ்தூலித்தால் கர்ப்பம் உண்டாகாது. இதுவே ஆதி
மலடு எனப்படும்.

2. காக மலடு : - முதலில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுபிறகு இல்லாதிருப்பது காகமலடாம்.

3. கதலி மலடு :- வாழை மரத்தில் உண்டாகும் தாறுபோல் ஒரு பிள்ளையை பெற்று மறுபடியும் கருப்பம் இல்லாதிருத்தலுக்கு கதலிமலடாம்.

4. கருப்பமலடு :- வயிற்றிலே செத்து செத்து விழும் பிள்ளையை சாதாரணமாய் வருஷந்தோறும் பெறுவது கருப்ப மலடாம்.
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக