வியாழன், ஜனவரி 28, 2010

சித்த மருத்துவம் -part 6


சித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்
மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water)ஆகிய பொருள்கள் உள்ளன.
துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம்  எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.
சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.
மருந்து முறை
சித்த மருத்துவ நூல்கள் கூறும் மருந்து முறைகளில் உடலுக்கு உள்மருந்தாக அளிக்கப்படும் அக மருந்துகள், உடலுக்கு வெளிமருந் தாகப் பயன்படும் புற மருந்துகள், என இரண்டு வகைகள் குறிப்பிடப் படுகின்றன.
அக மருந்துகள் 32
1. சுரசம் 12. நெய் 23. பதங்கம்
2. சாறு 13. இரசாயனம் 24. செந்தூரம்
3. குடிநீர் 14. இளகம் 25. நீறு (அ) பற்பம்
4. கற்கம் 15. எண்ணெய் 26. கட்டு
5. உட்களி 16. மாத்திரை 27. உருக்கு
6. அடை 17. கடுகு 28. களங்கு
7. சூரணம் 18. பக்குவம் 29. சுண்ணம்
8. பிட்டு 19. தேனூறல் 30. கற்பம்
9. வடகம் 20. தேநீர் 31. சத்து
10. வெண்ணெய் 21. மெழுகு 32. குளிகை
11. மணப்பாகு
புற மருந்துகள் 32
1. கட்டுதல் 12. நசியம் 23. பொடி
2. பற்று 13. ஊதல் 24. முறிச்சல்
3. ஒற்றடம் 14. நாசிகாபரணம் 25. கீறல்
4. பூச்சு 15. களிம்பு 26. காரம்
5. வேது 16. சீலை 27. அட்டைவிடல்
6. பொட்டணம் 17. நீர் 28. அறுவை
7. தொக்கணம் 18. வர்த்தி 29. கொம்பு கட்டல்
8. புகை 19. சுட்டிகை 30. உறிஞ்சல்
9. மை 20. சலாகை 31. குருதி வாங்கல்
10. பொடிதிமிர்தல் 21. பசை 32. பீச்சு
11. கலிங்கம் 22. களி
என்பனவாகும்.
மேலே கூறப்பட்ட அகமருந்துகள்32, புற மருந்துகள்32, ஆக 64 மருந்துகளில், அகமருந்துகளுக்குத் தயாரிக்கப்படும் முறைகளினாலும், புறமருந்துகளுக்குச் செயல்படுத்தப்படும் முறைகளினாலும் பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இம்மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயராகவே இருப்பது, தமிழ் மருத்துவத்துக்கு உரிய மருந்துகள் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

மருந்து செய்முறைகள்
மருந்துகள் 64–ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட 24 வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.
1. கருக்கல் 9. உலர்த்தல் 17. பொசுக்குதல்
2. அரைத்தல் 10. உறைத்தல் 18. நனைத்தல்
3. கசக்கல் 11. குழைத்தல் 19. எரித்தல்
4. கலக்கல் 12. உடைத்தல் 20. வழிக்குதல்
5. வறுத்தல் 13. நறுக்குதல் 21. இறுக்குதல்
6. சுழற்றுதல் 14. உருட்டுதல் 22. இழைத்தல்
7. உருக்குதல் 15. நகத்துதல் 23. குழைத்தல்
8. இறுத்தல் 16. நசுக்குதல் 24. எடுக்குதல்
என்பனவாகும். இவை, மருந்து செய்யும் வினையாகக் கொள்ளலாம்.

மருந்துகளின் மூலங்கள்
சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகள் இம்மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த வல்லவையாக இருக்கக் காண்கிறோம். அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25 4. பாடாணங்கள் – 64
2. உலோகங்கள் – 12 5. மூலிகைகள் – 1008
3. உபரசங்கள் – 120 6. கடை மருந்துகள் – 64
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன. 1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் வேறு எந்த மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். அதே போல், எல்லா மருத்துவ முறைகளிலும் பொதுவாக 4 வகைகளில் மட்டுமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், சித்த மருத்துவத்தில் 1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே என்பர். அவ்வாறு பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,
1. இரசம் செய்முறை 2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை 4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை
இயற்கையில் கிடைக்கக் கூடிய பாடாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாடாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாடாணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
"" வயதென்ன நல்லபாம் பொன்றை வாங்கி
மாளாம லதன்விஷத்தை வாங்கிக் கொண்டு
அயதென்ன சூதமொரு கழஞ்சு கொண்டு
ஆலகால விஷத்தில் ஊற்றிக் கொண்டு.''
நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை   அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தைகுயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்குஉடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு  போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை உயிரினங்களும் மருந்திற்குப் பயன்படுவன என்று ஆராய்ந்து காண்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என எண்ணிப் பார்த்தால், இந்த மருத்துவ முறைகள் எத்தனை ஆண்டுகள் பழைமை கொண்டவை என்பது விளங்கும்.
சுத்தி
சுத்தி என்பது தூய்மைப்படுத்துதல் அல்லது பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கியிருக்கின்ற மாசுகளை நீக்குதல், குற்றம் களைதல் என்பதாகும். மூலிகை, மருந்துப் பொருள், உலோகம், பாடாணம், இரச வகை ஆகிய அனைத்தையும் சுத்தி செய்த பின்பே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பது, சித்த மருத்துவ நெறிகளுள் ஒன்றாகும்.
சுத்தி செய்யப்படாமல் செய்யப்படுகின்ற மருந்தினால் முழுமையான மருத்துவக் குணமில்லாமல் போவதுடன், தீமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதால், சுத்தி முறைகள் வலியுறுத்தப் படுகின்றன. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்னும் மருத்துவப் பழமொழியும் இதனையே வலியுறுத்துகிறது.
"" சுசியா னதுலோகத் தோமகற்ற லென்ன
சுசியா னதுலோகந் துவ்வாய்ச் சுசியா
முளரி யுலகை முயறலின் மாலுத்தி
முளரியுல கையுறு முன்.''
பிரபஞ்சம் என்று சொல்லக் கூடிய இந்த உலகத்தின்கண் சிறப்பினை வளரச்செய்ய, இவ்வுலகத்திலுள்ள குற்றங்கள் என்று சொல்லக் கூடிய உட்பகையை எப்படி நீக்க வேண்டுமோ அப்படி, மருந்துப் பொருள்களிடத்திலே தங்கியுள்ள மாசுகளை நீக்கி ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் ஏற்றவாறு வகுத்துரைக்கப் பட்டதே சுத்திமுறையின் சிறப்புத் தன்மையாகும் என்று, தேரையர் கூறக் காணலாம்.
இஞ்சிக்கு மேல் தோலும், கடுக்காய்க்குக் கொட்டையும் மரங்களுக்குச் செதிலும் நஞ்சு என்பர். மருந்துக்குப் பயன்படுத்து முன், அந்நஞ்சு நீக்கப்பட்டால் சுத்தியாகும். குண்டுமணி, அலரிவிதை ஆகியவற்றை உண்டால் மரணத்தை உடனே வருவிக்கும். ஆனால், மருந்துகளில் அவை அரிய பணியைச் செய்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்தை உண்பவர் மரணமடைவதில்லை. காரணம், சுத்தி செய்த பின்னர் மருந்தாகச் செய்யப்படுவதாலேயாம். பாடாணங்கள் எல்லாம் உயிரைக் கொல்லும். ஆனால், மருந்தாகப் பயன்படுகின்றன என்பதால், சுத்தி என்பதன் தேவை மருத்துவத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.
சுத்திப் பொருள்கள்
உலோகங்கள், பாடாணங்கள், நச்சுத்தன்மையுடைய கொட்டை, பருப்பு, விதை போன்ற பொருள்களைச் சுத்தி செய்வதற்காக, மூலிகைச் சாறு, கள், நீர், பால், மோர், பூநீர், இளநீர், சிறுநீர், சுண்ணாம்பு நீர், காடி நீர், எண்ணெய், பழநீர், செம்மண், செங்கல்தூள் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.
ஒரு பொருளால் எல்லாவித மருந்துகளையும் சுத்தி செய்ய முடியாது. பொருள்களின் குணமும், சுத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற பொருள்களின் குணமும் கண்டறிந்து, அவற்றின் சேர்க்கை யால் உண்டாகும் எதிர் விளைவுகளையும் கண்டறிந்தே சுத்தி செய்யப் படும். மருந்துகளைச் சுத்தி செய்யும் முறை விரிவாகவும் விளக்க மாகவும் சித்தர்கள் கலைக் களஞ்சியத்தில் விளக்கப் பட்டுள்ளது.

மூலிகைகள்
தாவர இனங்களில் மூலிகைகள் தலை சிறந்தவை. உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தாவரங்களைச் சார்ந்து வாழ்ந்திருப்பதைப் போல, மருத்துவ முறைகள் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ மூலிகைகளைச் சார்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும், மருத்துவமும் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குண நலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும், மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.
தமிழ் மருத்துவ நூலார் அவற்றின் குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் தோன்றிய பல்லாயிரக் கணக்கான தாவரங்கள் அனைத்தையும் மருத்துவம் ஏற்றுக் கொள்ளா விடினும், அறிந்தவற்றைப் பயன்படுத்தத் தக்கவை என்றுணர்ந்த வற்றை மூலிகை எனப் பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறது.
"" மூலி யனேக மூவாயிரத்து முன்னூ ரெனினுங்
காலியின் வேகங் கடற் சூழ்ந் தகில காட்ட கத்திற்
பாலினம் நீரினம் நீரில்லா வேரினம் படரினமுஞ்
ஜோலிய தாட்டம் வாதத்தின் மூலியுஞ் சொர்ணமிதே.''
கடல் சூழ்ந்த நில உலகத்திலுள்ள காடுகளில் பாலினம், நீரினம், வேரினம், படரினம் எனும் வகைப்படுத்தப் பெற்ற மூலிகைகள் 3300 என்பர். இதனால் இத்தனை மூலிகைகளைச் சித்தர்கள் அறிந்திருந்தனர் எனக் கருதலாம்.
"" சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு
சுளுக்காக நானூற்று யெழுபத்து மூன்று''
என்று, 473 மூலிகைகளின் பெயர்கள் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ளன. இதனால், இந்நூலாசிரியர் தொகுத்த மூலிகை 473 எனக் கொள்ள வேண்டும். திருவருட்பாஉரைநடைப் பகுதியில், சீந்தில் தொடங்கி துளசி ஈறாக 485 மூலிகைப் பெயர்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மருந்தாகும் மூலிகைகளாக இருக்கக் காணலாம். அவை, வடலூர் இராமலிங்க வள்ளலார் அறிந்திருந்த மூலிகைகள் எனக் கருதலாம்.
இந்தியாவில் சுமார் 2000 வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. அதில் 500 வகைகள் நாட்டு மருத்துவத்திலும் 100 வகை ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பர். இது, இந்நூலாசிரியர் அறிந்திருந்த செய்தியாக இருக்கலாம். என்றாலும், இவர் 300 வகை மூலிகைகளின் பெயர்களைத் தான் பட்டியலிட் டுள்ளார். எனவே, அவரவர் தொகுத்த காலத்திற்கு ஏற்ப மூலிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை மருத்துவ மூலிகையின் தொகுப்பு பெயர் பெற்று விளங்கக் காணலாம்.
ஏலாதி : சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே 1,2,3,4,5,6 என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.
திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.
சிறுபஞ்சமூலம் : கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில்நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.
இவ்வாறு தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,
இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,
பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.
""மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர
ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்''
எனக் கம்பன் உரைக்கக் காணலாம். மாண்டாரை உய்விப்பதும், உடலை இரு வேறாக வகிர்ந்தாலும் பொருந்துவிக்கச் செய்வதும், படைக்கலங் களைக் கிளர்ச்சி செய்யச் செய்வதும், இழந்த உருவத்தை மீளச் செய்வது மாகிய மருந்து மூலிகையாகும் என்றதனால் மூலிகையின் சிறப்பு விளங்கச் செய்யும்.
தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்ற இருவேலி வேலூர்ப்பாளையச் செப்பேட்டிலும், ‘வழுதிலையைச் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செப்பேட்டிலும் காண முடிகிறது. செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை எனப்படுகின்ற செங்கழுநீர் சமயத்தோடு தொடர்புடைய மூலிகையாகும். இதனை நடுவதற்கு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும், இதை உரிமை மலர் என்று தேவாரமும், தாரமங்கலம், செங்கம் இடங்களிலுள்ள சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. செங்கழுநீர் சிவனுக்கு உகந்த மலர் என்பதால், இதற்கு வழங்கப்பட்ட வரி குவளைக் காணம் எனப்பட்டது. அதே போல், மருத்துவக் குணமிக்க நீலமலர்   வளர்க்க குவளை நடுவரியும், கண்ணோய், ஆஸ்துமா, காமாலை, இரத்தக் குறைபாடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் கரிசலாங்கண்ணிக்கு கண்ணிட்டுக் காணம் என்னும் வரி செலுத்தி வளர்க்க வேண்டும் என்று, பல்வேறு வரி முறைகள் முடியாட்சிக் காலத்தில் மூலிகைகளுக்கு இருந்ததை அறியலாம். மூலிகைகளின் சிறப்பினையும் அதன் தன்மையையும் கருத்திற்கொண்டு, மூலிகைகளைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.

மூலிகைகளும் மருத்துவ மலர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் வனங்கள் (கச்ணூடு) ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டன. அவற்றைப் பராமரிக்கும் பொருப்பும் கோயில்களைச் சார்ந்தே இருந்தால், அவை பாதுகாக்கப்பட்டதுடன் அவற்றின் புனிதமும் போற்றப்பட்டதெனலாம்.
1. கடம்பவனம்  மதுரை 7. மதுவனம்  நன்னிலம்
2. குண்டலி வனம்  திருவக்கரை 8. மறைவனம்  வேதாரணியம்
3. சண்பகவனம்  திருநாகேச்சுரம் 9. மாதவிவனம்  திரு முருகன் பூண்டி
4. சூதவனம்  திருவுச்சாத்தானம் 10. முல்லைவனம்  கருகாவூர், திருமுல்லைவாயில்
5. பாரிஜாதவனம்  திருக்களர் 11. வில்வவனம்  திருவாடனை
6. மகிழவனம்  திருநீடூர் 12. வேய்வனம்  திருநெல்வேலி
மூலிகை எனக் கொண்ட மரம், செடி, கொடி ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதில் சைவத் திருக்கோயில்கள் அதிக ஆர்வம் கொண்டன வாகக்காணப்படுகின்றன. சைவத் திருக்கோயில்கள் (தமிழ கத்தில் உள்ளவை மட்டும்) அனைத்திலும் தல விருட்சம் எனும் பெயரில் ஏதேனும் ஒரு மூலிகைக் குணங்கொண்ட தாவரத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன.

ஏகமூலிகை : ஏகமூலிகை என்பது கையான் தகரையைக் குறிக்கும். முறைப்படி செய்தால் அம்மூலிகை 9 உலோகங்கள், 64 பாடாணங்களையும் புடமிட்டுப் பற்பமாக்கப்பயன்படும். அதனாற்றான் அதற்கு அப்பெயர். 
வேலு மூலிகை:“பல்லுக் கடுத்த பலநோ யகற்றியரைக் கல்லுக்கு நேராகக் காட்டுமே’’ வேல் என்னும் மூலிகை பற்களின் நோய்கள் பலவற்றையும் நீக்கு வதுடன், பற்களை வலிமையடையச் செய்து கற்களைப் போல உறுதிப் படுத்தும்.
பூனைக்காலி : வாத, பித்த, ஐயம் என்னும் இம்மூவகைக் குற்றங்களால் வரும் நோய்களைப் போக்கும்.
காந்தனள் : சங்க இலக்கியம் குறிப்பிடும் காந்தளை. அதன் கிழங்கு ஏர்போல வளைந்து காணப்படுவதனால் கலப்பைக் கிழங்கு என்றும் பெயர் பெறும். அக்கிழங்கின் மேல்பகுதியும் கீழ்ப் பகுதியும் பண்பால் வேறு பட்டவை. ஒரு பகுதி இதய ஓட்டத்தை ஊக்குவிக்கும். மறுபகுதி, எதிராகப் பணிபுரியும். அதில் அடங்கிய கோகோசின் என்ற அல்கலாய்ட் புற்றுநோய்க்கு நல்ல மருந்து. விஷமும் அதில்; மருந்தும் அதில். அமுதமும் நஞ்சும் ஒரே இடத்து
என்னும் சிறப்பிற்குரியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருப்பவை மூலிகைகளாகும்.
அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரிய சாலை, சிறுகீரை ஆகியவற்றின் சாற்றைத் தனித்தனியே பாண்டத்தில் வைத்து,வெண்கரு, குன்றி, சீனம் இவற்றைப் பொடி செய்து, மேற்கண்ட சாற்றில் போட்டுக் காய்ச்சும் போது தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடிசீலை செய்து எரித்தெடுத்து,அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்துசரஉலையில் ஊத மூலிகை செம்பாகும்
என்பதனால், மூலிகையிலிருந்து செம்பு உருவாகும் என்பதுடன்,
இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர்.
"" விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை
மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை
பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு
பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்
கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு
கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்
மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்
மகத்தான வாசியுமே இறுகும் பாரே.''
கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும்மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது.
கறுப்பு மூலிகை
மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.
இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.
இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின்,
குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டை யிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்துஇவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம். மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகை களை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:
மச்சமுனி வல்லாரை பலர் குமரி
கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்
பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை
வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி
கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி
கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை
சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை
போகர் கொல்லங் கோவை
மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.
மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.
"" போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா
போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்''
என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.
 போக்கான கிளிமூக்கு மரம தொன்று
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.
என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 8,000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும்,சராசரியாக 1700 முதல் 1900 மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் (ஊணிடூடு டஞுச்டூt tணூச்ஞீடிtடிணிண) பயன் படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய 2000 தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’
இவற்றிலிருந்து மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் உண்மையான நிலைமை புலப்படும். ஆனால், சித்த மருத்துவ நூல்களில், மருத்துவத்துக்காகப் பயன்பட்ட மூலிகைகளின் முழு விபரங்கள் காணப்படவில்லை. காரணம், அவ்வாறான நூல்கள் அருகி விட்டன போலும்.
சென்னை, அரும்பாக்கத்தில் செயல்படும் இந்திய மருத்துவத் துறை வெளியிட்ட குணபாடம்மூலவர்க்கம் நூலில் ஏறக்குறைய 800 மூலிகை இனங்களின் பெயர்களும், அவற்றின் மாற்றுப் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.
மருத்துவக் கலைக் களஞ்சியத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மருத்துவத் தாவர இனங்கள் இடம் பெற்றுள்ளன.
மூலிகைக் கலைக்களஞ்சியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களுடன், அவற்றின் உபயோகங்களும் தாவரவியல் பெயர் களும் குறிப்பிட்டுள்ளன.
ஆனால் மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார். அவை,
1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)
2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)
3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)
4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)
5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)
6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)
7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)
8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)
9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)
10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)
11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)
12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)
13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)
14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)
15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)
16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)
17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)
18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)
என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட நூல்களில் இடம் பெற்றுள்ள மூலிகைகள், மூலிகை பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவடைந்து மருத்துவப் பயனுக்குத் துணைபுரிய வேண்டும்.
மூலிகைகளின் பட்டியல்கள் மட்டும் பயன்தந்து விடாது. அத்தகைய மூலிகைகள் எந்தெந்த மருந்துகளுடன் இணைந்து மருந்தாகி, எவ்வகையான நோய்களைத் தீர்க்கின்றன என்பதும் கண்டறியப் படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் தான், மூலிகை ஆய்வு முழுமை கொண்ட தாக அமையும்.
புடம்
மருந்தியல்
சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும் பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த மருந்தியல் ஆகும்.
ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.
இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம் என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.
புடம்
மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.
தீயின் அளவு
புடமிடும் போது, விறகின் மூலம் எரிக்கப்படும் தீ நான்கு வகைப் படும். அவை,
தீபாக்கினி : விளக்கின் சுடரைப் போல எரிவது.
கமலாக்கினி : தாமரைப் பூப்போல எரிவது.
கதலியாக்கினி: வாழைப் பூப்போல எரிவது.
காடாக்கினி : தீப்பந்தம் போல எரிவது.
புடத்தின் வகை
எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும்.
"" புடம் போடச் சொல்வேன் பேஷான காடை
நடமாடு விராட்டி நல் ஒன்று திடமாக
கவுதாரி விராட்டி கனமா யெருமூன்று
நவுதாரி சேவல் நலம்பத்துப் பவமாகும்
பண்ணி புடவிராட்டி பதமாக ஐம்பது தான்
எண்ணிக் கனபுடமே எழுநூறாம் பின்னாம்
கசபுடமே விராட்டி கடிபடவே ஆயிரமாம்
தசமாக இப்படியே சாற்றுவீர்''
என்று, உலாநூலில் உரைக்கக் காணலாம்.
காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும்.
"" புடம்போடுந் திட்டங்கள் பேசக் கேளு
பேரான யெருவொன்று காடை யாகும்
நடம்போடுங் கவுதாரிப் புடமும் நல்ல
நாடியே யெருமூன்று ஞானிக்குத்தான்
விடம்போடு பத்தெருவில் புடமு மாகும்
விராட்டிதான் ஏனத்தின் செயலுக்குத்தான்
கடம்போடு அறைதோறு மழுக்கி நல்ல
களமாகப் போடுவது கணக்கு மாமே
திடமா யெருநூறு கன புடந்தான்
திடமான கெசபுடமும் ஆயிரந்தான்''
என்னும் வாத சூத்திரம், காடை 1; கவுதாரி 3; ஏனம் 10; கனம் 100; கெசம் 1000 என்னும் எண்ணிக்கையைத் தருகிறது.
மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் வருமாறு;
வரிசை எண் புடம் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1. காடைப் புடம் 1
2. கவுதாரிப் புடம் 3
3. குக்குடப் புடம் 10 (அ) 8
4. வராக புடம் 50
5. கஜம் (அ) யானை புடம் 500 (அ) 1000
6. கன புடம் 700 (அ) 800
7. மணல் மறைவுப் புடம் 800
8. கோபுடம் 1000
என்னும் செயற்கைப் புட வகையால் மருந்து தயாரிக்கப் பட்டன. தீயினால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு மட்டுமே மருந்து தயாரிக்கப் படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பத் தைக் கொண்டும் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப் பயன்படும் புடங்கள் இயற்கைப் புடம் எனப்படும். அவற்றின் விபரம் வருமாறு:
வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்
1. கோபுர புடம் மணல்
2. பாணிடப் புடம் தண்ணீர்
3. உமிப் புடம் உமி
4. தானியப் புடம் நெல்
5. சூரியப் புடம் வெயில்
6. சந்திரப் புடம் நிலவொளி
7. பருவப் புடம் பௌர்ணமி நிலவு
8. இருள் புடம் அமாவாசை இரவு
9. பனிப்புடம் பனி
10. பட்டைப் புடம் மரத்தூள்
11. நிழற்புடம் சூரிய ஒளி படாத அறை
எரி பொருள்கள்
தைலம், எண்ணெய், களிம்பு, குழம்பு போன்ற மருந்துகள் எரிப்பு முறையால் தயாரிக்கப்படுபவை. அவை, எரித்தெடுக்கப் பயன்படும் விறகுகள் பல வகையாகும். ஒரே வகையான விறகுகளால் தயாரிக்கப் படாமல், மருந்தின் குணத்திற்கு ஏற்ற விறகுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
விறகின் வகையும் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்தின் விபரமும்  வருமாறு:
வரிசை விறகின் பெயர் தயாரிக்கப்படும் மருந்தின் பயன்
எண்
1. ஆவாரை உடலில் ஏற்படும் வெப்பு முதலிய
2. சிற்றா முட்டி நோய்களுக்கான தைலம்
3. உசில் கண், காது, மூக்கு, பாதம் ஆகிய
4. இலந்தை இடங்களுக்கு இடும் நெய், தைலம்
5. இலுப்பை உடலில் பூசுவதற்காகப் பூசும்
6. புளி பிடித் தைலம்
7. வேம்பு வாத நோய்களுக்குப் பயன்படும்
8. பூவரசு குடிநீர், தைலம்
9. அரசு
10. நுணா
11. வன்னி வாத நோய் தைலம்
12. மாவிலிங்கம்
13. நெல்லி
14. வேம்பு பித்த நோய் தைலம்
15. விளா
16. உசில்
17. வேலன் ஐய நோய் தைலம்
18. கொன்றை
19. வேங்கை
20. பனை
21. தென்னை இரசம் சேர்ந்த மருந்து
22. வேம்பு
23. வேலன் இரும்பு சேர்ந்த மருந்து
24. வேங்கை
மேற்கண்ட பட்டியல்களைக் கொண்டு சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்கப்பட்ட முறைகளை அறியலாம்.
மருந்து செய்முறை
சித்த மருத்துவத்தில் பயன்படும் அகமருந்துகள் முப்பத்திரண்டு. இவற்றின் செய்முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முறைகளைக் கொண்டிருக்கும். அவற்றை முறைப்படி செய்து முடிக்க வேண்டுமானால், மருந்துப் பொருளின் குணத்தையும், செய்யப்படும் மருந்துக்கு உரிய காலத்தையும் அறிந்திருக்க வேண்டும். செய்யப்படும் மருந்து ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால எல்லைக்குள் பலனளிப்பது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அம்மருந்து பலனளிப்ப தில்லை என்பன போன்றவை மருத்துவர் அறிந்து செய்ய வேண்டியவை.
அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும் வருமாறு:
வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு
1. சுரசம் மூலிகைகளின் இலை, வேர், பட்டை, 3 மணி
பூ, காய் இவற்றைத் தனித்தோ சேர்த்தோ நேரம்
இடித்து, காய்ச்சி, முரித்து எடுப்பது
2. சாறு மூலிகைகளின் சாறு பிழிவது 3 மணி
நேரம்
3. குடிநீர் மருந்துகளை இடித்துக் காய்ச்சி 3மணி
வடிகட்டி எடுப்பது நேரம்
4. கற்கம் இரும்புத்தூளை மருந்துகளுடன் சேர்த்துக் 3 மணி
கெட்டியாக அரைப்பது நேரம்
5. உட்களி வறுத்து அரைத்த அரிசி மாவுடன் உளுந்து, 3 மணி
விதைப் பொடி கலந்து வெல்லம், சர்க்கரை நேரம்
சேர்த்துக் காய்ச்சி, களிபோலக் கிளறி வைப்பது
6. அடை அரிசிமாவுடன் சில மூலிகைகள் 3 மணி
கூட்டியரைத்துத் தட்டி, வேகவைப்பது நேரம்
7. சூரணம் மருந்து, மூலிகை உலர்த்தி, வறுத்து, 3
பொடித்து, வடிப்பது தினங்கள்
8. பிட்டு மருந்துகள் உலர்த்திப் பொடித்துப் பாலின் 3
ஆவியில் இட்லிபோல் அவிப்பது திங்கள்
9. வடகம் பிட்டு அவிப்பது போல் அவித்து, உரலிட்டு 3
இடித்து, உருண்டையாக உருட்டுவது திங்கள்
10. வெண்ணெய் மருந்துகளைப் பொடித்து 3
ஆவின் நெய்விட்டு இரும்புக் திங்கள்
கரண்டியில் எரித்து, கடைவது.
11. மணப்பாகு தேவையான மருந்துகளுடன் மூலிகைச்சாறு 6
விட்டு, கற்கண்டு, சர்க்கரை கலந்து திங்கள்
காய்ச்சி மணப் பக்குவத்தில் காய்ச்சுவது.
12. நெய் மூலிகைச்சாறு, கிழங்குச் சாறு, கற்கம், 6
சிலவகைக் குடிநீர் ஆகியவற்றுடன் நெய் திங்கள்
கூட்டிக் காய்ச்சி, நெய் பதத்தில் வடிப்பது.
13. இரசாயனம் மருந்துப் பொருள்களைச் சூரணஞ் செய்து 6
(சுவைப்பு) சர்க்கரை, நெய் சேர்த்துக் குழம்பு போலச் திங்கள்
செய்வது.
14. இளகம் மூலிகைச் சாறு வகைகளுடன் சர்க்கரை, 6
வெல்லம் சேர்த்து வற்றக் காய்ச்சி, திங்கள்
மருந்துப் பொடிகளைத் தூவி, நெய்
சேர்த்துக் கிளறி இளக்கமாக எடுப்பது.
15. எண்ணெய் நல்லெண்ணெய்யுடன் மருந்துகளைச் ஓராண்டு
சேர்த்துக் காய்ச்சி வடிப்பது.
16. மாத்திரை மருந்துகளை மூலிகைச்சாறு, பால், குடிநீர் ஓராண்டு
இவற்றில் அரைத்து உருட்டி உலர்த்துவது.
17. கடுகு மருந்துகளை நெய், எண்ணெய் விட்டுக் ஓராண்டு
காய்ச்சிக் கடுகு பதத்தில் எடுப்பது.
18. பக்குவம் மருந்துகளைப் பக்குவப்படுத்த ஓராண்டு
ஊறவைப்பது, கழுவுவது,பொடிப்பது
போன்ற செயல்களாகும்.
19. தேனூறல் நெல்லிக்காய், கடுக்காய், இஞ்சி ஓராண்டு
போன்றவற்றை நீரில் ஊறவைத்து,
அவற்றின் மேல் துளை செய்து,
உள்ளிருக்கும் நீரைப் போக்கி, பாகு,
தேன் போன்றவற்றில் ஊறவைப்பது.
20. தேனீர் மருந்துகளை வாலையில் நீர்விட்டு ஓராண்டு
எரித்து எடுப்பது.
21. மெழுகு இரச கலப்புள்ள மருந்துகளைத் ஐந்தாண்டு
தனியாகவோ, மருந்துப் பொருள்களுடனோ
தேன், மூலிகைச் சாறுகளில் அரைத்து
மெழுகு பதத்தில் செய்வது.
22. குழம்பு மூலிகைச்சாறு, மருந்து, சர்க்கரை ஐந்தாண்டு
போன்றவற்றைக் குழம்பு பதத்தில் காய்ச்சி
வடிப்பது.
வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு
23. பதங்கம் இரசம் தனியாகவோ கலப்புள்ள பத்து
மருந்துகளையோ மண்சட்டியில் உப்பு ஆண்டுகள்
செங்கல் தூள் நடுவில் மருந்துகளை
வைத்துச் சீலை செய்து எரித்து, மேல்
சட்டியில் படிந்திருப்பதை வழித்தெடுப்பது.
24. செந்தூரம் உலோகம், பாடாணம் போன்றவற்றை 75
மூலிகைச்சாறு, புகை நீர், செயநீர் இவற்றில் ஆண்டுகள்
அரைத்துப் புடம் போட்டு எடுப்பது.
25. பற்பம் உலோகம், பாடாணம், உபரசம் ஆகிய 100
இவற்றை மூலிகை, புகைநீர், செயநீர் ஆண்டுகள்
இவற்றில் அரைத்துப் புடமிட்டு நீறாக்குவது.
26. கட்டு பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்து, 100
பற்பம், செந்தூரம் போன்ற பொருள்களுடன் ஆண்டுகள்
சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்வது.
27. உருக்கு பாடாணம், உலோகம் இவற்றுடன் நட்பு, 100
பகைப் பொருள்களைக் கூட்டி எரித்து ஆண்டுகள்
எடுப்பது.
28. களங்கு இரசம், பாடாணம் போன்ற மருந்துகளை 100
மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் ஆண்டுகள்
சுருக்குக் கொடுத்து, புடமிட்டு, மணியாக்கி,
தங்கம் நாகம் சேர்த்துக் கூட்டி எடுப்பது
29. சுண்ணம் இரசம், பாடாணம், உலோகம் என்னும் இவை 500
தனியாகவோ கலந்தோ மூலிகை, செயநீர், ஆண்டுகள்
புகைநீர் இவற்றில் அரைத்து சீலை செய்து
நெருப்பில் ஊதி எடுப்பது.
30. கற்பம் மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பல
வற்றைப் பக்குவத்துடன் செய்வது. ஆண்டுகள்
31. சத்து காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல
பாடாணங்களைச் சேர்த்து அரைத்து ஆண்டுகள்
ஊதி இரசம், கந்தகம், தங்கம் சேர்த்து
எரித்து எடுப்பது.
32. குளிகை வாலை ரசத்தை மணியாக்கிக் கோவை பல
யாக்கிக் கொள்வது. ஆண்டுகள்
மேற்கண்ட பட்டியலின்படி மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப் படும் என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இம்மருந்துகள் செயல்புரியும் கால அளவு மூன்று மணி நேரத்திலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு, அம்மருந்துகளின் வன்மையைக் கண்டறியலாம். சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும், களங்கு, உருக்கு, கட்டு, பற்பம் ஆகிய மருந்துகள் நூறு ஆண்டுகளும் வன்மையுடையது என்றால், அவற்றை உண்பவர் உடம்பில் அத்தனை ஆண்டுகள் மருந்தாக நின்று செயல்படும் என்பதே சரியாம். அத்தனை ஆண்டுகள் உடலைக் காக்கக் கூடிய மருந்தென்றால், அவை மக்களைக் காக்கும் மகத்தான மருந்தெனலாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக