யானைஏற்றம், குதிரைஏற்றம், எந்நேரமும் குந்திக்கொண்
டிருத்தல், சதா கடின ஆசனத்தில் உட்காரல், மூல வியாதிக்கு காரணமான வஸ்த்துவையும், இந்த வியாதி பிறப்பதற் கேது வான வஸ்த்துவையும், விருப்பமில்லாத வஸ்த்துவையும், புசித்தல் ஆகிய இச் செய்கைகளினால் வாதாதிகள் அதிகரித்து அடிவயிற்றுக்கும் மூத்திரைப்பைக்கும், சமீபத்தில் இருக்கின்ற கெட்ட உதிரமாமிசங்களை ஒட்டி, உள்ளிலாவதுவெளியிலாவது ஒரு அங்குலம் இரண்டு அங்குலம் கட்டிகளைச் சேர சேர உண்டாக்கும். அபோதவ்விடத்தில் வியர்வையும் விரணமும் பிறக்கும். இந்த நிதானத்தை அறிந்து உடனே வைத்தியம் செய்யாவிடில், அல்குல் கீழ்வயிறு, குதம் ஆகிய இடங்களில் விரைவில் துவாரங்களை உண்
டாக்கி அத்துவாரங்களின் வழியால் காற்றும் மலமும், மூத்திரமும் சுக்கிலமும், வெளிப்படும்படிச்செய்யும், இதுவே பவுத்திரம் எனப்படும்.
இப்பகந்தரங்களினால் உண்டாகின்ற கட்டியானது உடையாமல் அப்படியே குணமாகும். அதனை பகந்திரக் கட்டி என்றும், உடைந்து வேரானது தூரத்தில் ஓடி உட்புறத்திலேயே விஸ்தரித்து வெளிப்புறத்திலும் தோன்றி நோய் முதலியவைகளை அதிகரிக்கு
மாகில் அதனை பகந்திரவிரணம் எனவும் கூறப்படும். இந்நோய் எண் வகைப்படும்.
1. வாத பகந்தரம் :- குதஸ்தானங்களில் கருத்தும் சிவந்தும் எழும்பி அந்த இடத்தில் விரிந்து போவதுபோல் இருத்தல், குத்தல், அதிர்தல், நோதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.
2. பித்த பகந்தரம் :- இது புகைநிறத்துடன் சிவந்தும் நீண்ட உருவத்தில் மெலிந்தும், ஒட்டைக் கழுத்தைப்போல் உயர்ந்தும், தொட்டால் சுடுகையாயும் பிறக்கும். இதனால் தபசுரம் உண்டாகும்.
3. சிலேஷ்ம பகந்தரம் :- இது நிலை பெற்ற வேருடன் வெளுத்தும், கனத்தும், வழுவழுத்தும் பிறக்கும். இதனால் அதிக நமைச்சல் உண்டாகும்.
4. வாதபித்த பகந்தரம் :- கருமை, செம்மை கலந்த முகத்துடன் பிறக்கும். இதனால் அந்த இடத்தில் சீழ் வடியும் போது ஒரு சத்தம் உண்டாகும்.
5. வாதசிலேஷ்ம பகந்தரம் :- இது வெளுத்த நிறமும் கொஞ்சம் கருத்த நிறமும் உடையதாகப் பிறந்து கஷ்டத்தின் மேல் பழுத்து உடைவதாயிருக்கும்.
6. சிலேஷ்மபித்த பகந்தரம் :- இது சிலேஷ்மபித்த பகந்தர குறிகளை உடையதாயிருக்கும்.
7.திரிதோஷ பகந்தரம் :- காலில் பெருவிரற் பிரமாணத்தையும் பற்பல நிறத்தையும் உடையதாகப் பிறந்து அவ்விரணத்தில் எரிச்சலுடன் குத்தலையும் உண்டாக்கும். அப்போது சுரமும் அரோசகமும் தாகமும் வாந்தியும் காணும்.
8. ஆகந்துக பகந்தரம் :- அடிபடுதல் முதலில் காரணங்களினால் குதத்தில் பகந்தரக்கட்டிகள் போன்ற கட்டிகள் எழும்பிபழுத்து உடைந்து சிறுசிறு துவாரங்களை உள்ள விரணங்கள் விருத்தியாகும். இதிலிருந்து துர்க்கந்த சீழ் ரத்தம் வடிவதுமன்றி சில
வேளை நுரையுடன் சுத்த சலம் வடிவதாயுமிருக்கும்.
0 comments:
கருத்துரையிடுக