தந்தமூலரோகத்தை கத்தியினால் கீறி ரத்தத்தை வெளியாக்குவதுடன் க்ஷ¡ரங்கள் லேபனங்கள் செய்யவேண்டியது.
அதிமாமிச சிகிச்சை :- அதிமாமிசமென்கிற தந்தமூலரோகத்தை அறுத்து அதின் மீது வசம்பு, வட்டத்திருப்பி, வசம்பு, யவாக்ஷ¡ரம் இவை களின் கற்கத்தில் தேன் கலந்து அல்லது திப்பிலி சூரணத்தில் தேன் கலந்து வாயில் வைத்துக் கொள்ளவேண்டியது. பேய்ப்புடல், வேப்பன், திரிபலை இவைகளின் கியாழத்தில் அதிமாமிசத்தை கழுவ வேண்டியது.
தந்த வித்திரதிக்கு சாமானிய சிகிச்சை :- தந்தவித்திரதிக்கு சொல்லிய சாமானிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய தல்லது அறுக்கக்கூடாது.
கிருமிதந்த சிகிச்சை :- அவுரி, உத்தாமணி, பேச்சுரைஇவைகளின் வேர்களை பிரத்தியேகமாக சூரணித்து பற்களில் வைத்தால் பற்களிலிருக்கும் பூச்சிகள் நாசமாகும்.
சாரிபாபர்ண தாரணம் :- வெள்ளை நன்னாரி இலையை அரைத்து பற்களில் வைத்துக்கொண்டால் பற்களிலிருக்கும் புழுக்கள் விழுந்து தந்தங்கள் கெட்டியாகும்.
காசீ சாதிகுடிகைகள் :- அன்னபேதி, பெருங்காயம், துவர்மண், தேவதாரு இவைகளை சமஎடையாய் நீரில் அரைத்து மாத்திரைகள் செய்து தந்தத்தின் மீது வைத்தால் கிருமிதந்தசூலை நிவர்த்தியாகும்.
சர்க்கராசிகிச்சை :- தந்தமூலங்களில் நோய் உண்டாகாமலி ருக்கும்படிக்கு அதின் மீதுள்ள அழுக்கு அல்லது காரயை எடுத்து அரக்கு சூரணத்தை தேனில் கலந்து மிருதுவாக தேய்க்க வேண்டியது.
கபாலிகா சிகிச்சை :- தந்தனசர்க்கரை ரோகத்திலும், கபாலிகா என்கிற தந்தரோகத்திலும் சொல்லிய சிகிச்சைகளை செய்ய வேண்டியது
நாடீ விரண சிகிச்சை :- நாடீ விரணத்தைச் சுற்றிலும் மாமிசமிருந்தால் சஸ்த்திரத்தினால் சேதித்து க்ஷ¡ரத்தினாலாவது அல்லது அக்கினியினாலாவது சுடவேண்டியது.
தந்தரோகத்திற்கு லாஷாதி தைலம் :- எண்ணெய், அரக்கு ரசம், பால், இவைகள் வகைக்கு 16 பலம் அதில் லோத்திரம், பூசினி, தேக்கு, மஞ்சிஷ்டி, தாமரைத்தண்டு, சந்தனம், கருமல்லிக்கிழங்கு, அதிமதூரம், இவைகளின் கியாழத்தை எண்ணெய்க்கு நாலுபாகம் அதிகமாய் கலந்து தைலபதமாய்க்காய்ச்சி வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து வாய்கொப்பளித்துவர பற்கள் உடைதல்பற்கள் அசைவு, அக்காலத்தில் பற்கள் விழுதல், பல்லில் சீழ்ரத்தம் வடிதல், பல்வலி முதலிய பலதந்தநோய்கள் நிவர்த்தியாகும். தந்தமானது கெட்டிப்படும்.
குஷ்டாதி சூரணம் :- கோஷ்டம், மஞ்சள், லோத்திரம்கோரைக்கிழங்கு, மஞ்சிஷ்டி, சுக்கு, க்டுகுரோகணி, பெருங்
கடம்பை, மஞ்சள் இவைகளின் சூரணத்தினால் பற்களைத்தேய்த்து வர ரத்தசிராவம், நமை, குத்தல் நீங்கும்.
ஜாதீபத்திபத்திராதி சூரணம் :- சாரணை, ஆனைத்திப்பிலி, கோஷ்டம் வசம்பு, சுக்கு, ஓமம், கடுக்காய், எள்ளு இவைகளை சமஎடையாகச்சூரனித்து வாயில் வைத்துக்கொண்டால் தந்தசூலை, பல் அசைவு தந்தவிரணம், வீக்கம், குத்தல், நலம், பூச்சிகள் இவையாவும் நிவர்த்திாகும்.
தந்தரோகத்தில் பத்தியங்கள் :- புளிப்பான பழங்கள், குளிர்ந்த ஜலம், சூடான உணவு, கடின பதார்த்தங்கள், சாப்பிடுதல் இவைகளை தந்தரோகிகள் விடவேண்டியது.
0 comments:
கருத்துரையிடுக