ஞாயிறு, ஜனவரி 10, 2010

நாசி ரோகம் -ரோக நிதானம்


நாசிரோகம்

1.வாத ச்லேச்மா பீனசம்  
வறட்சி,நாசி வலி,மூக்கடைப்பு போன்றவைகள் 
2.பித்த  ச்லேச்மா பீனசம் 
தாம்பிர நிறத்தையும் பெற்றுச்சளி விழுதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. சிலேஷ்ம பீநசம் :- இருமல், அரோசகம், இரைப்பு
வாந்தி, தேககனதி, வாயினிப்பு, நமைச்சல், அடைப்புடன் அத்துவார வழியாக வெண்மையான சழி விழுதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. திரிதோஷபீநசம் :- வாதபித்த கப பீநசங்களின் குணங்
கள் ஏககாலத்தில் உண்டாகும். இக்குணங்கள் காரணமின்றி அதிகரிப்பதும், குறைவதுமாய் இருக்கும்.

5. ரத்த பீநசம் :- நாசிக்குள் நமைச்சலுடன் திமிர், சிவந்த
சளியும் ரத்தமும் ஒழுகுதல், கண்ணிலும் காதிலும் தினவு, சருமம் கண் முதலியவைகள் சிவக்குதல், உருசி தெரியாமை என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. துஷ்ட பீநசம் :- மேற்கூறிய ஐவகை பீநச ரோகங்களை
நிவர்த்தி செய்யாவிடில் இந்நோய் உண்டாகி அவைகளைவிட அதிக உபத்திரவத்தையும், இந்தீரியங்களுக்கு அயர்ச்சியையும் உண்டாக்கும். அப்போது அக்கினிமந்தம், சுரம், இருமல், இரைப்பு, மார்
பிலும், பக்கங்களிலும் நோய், வாய் வரளுடன் துர்கந்தம், நாசியில் வியர்வை, அதன் உட்புறம் வரளல், அம்மார்கத்தினின்று சீழை போல் வெளுத்தும் சிவந்தும் உண்டை உண்டையாக சளி விழுதல், அந்த இடத்தில் வெளுத்தும் மினுமினுத்தும் நீண்டு முள்ள சிறு சிறு கிருமிகள் பிறத்தல் என்னும் இக்குணங்கள்
உண்டாகும்.

7. அதிதும்மல் பீநசம் :- தீக்ஷண ஆக்கிராணம், சுவாசத்தை நிறுத்தல், சூரியனை சிமிட்டாது பார்த்தல், வாத வஸ்துவை புசித்த்ல், ஆகிய இவைகளினாலும் நாசித்தண்டாகிய எலும்பில் அடிபடுவதினாலும் வாயுவானது அதிகரித்து நாசி, வாய், கண், செவி ஆகிய இடத்து நரம்பின் துவாரங்களை அடைக்குங்காலத்தில் பிறந்து எந்நேரமும் தும்மலை உண்டாக்கும்.

8. நாசிகாசோஷம் :- இது வாய்வு அதிகரித்து நாசியில்
சேருங்காலத்தில் பிறந்து நாசி துவாரங்கள் வரளல், அத்துவாரத்தின் பக்கத்து தண்டுகளில் முள்ளால் குத்துவது போலிருத்தல், கபாதிக்கம், பிரயாசத்தின் மேல் மூச்சு வருதல் என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

9. நாசிகாநாகம் :- இது சிலேஷ்மமானது அதிகரித்து வாயுவை எழுப்பி நாசி துவாரங்களை அடைப்பிக்குங்காலத்தில் பிறந்து மூக்கடைப்பு, மூச்சு திணறல் முதலிய குணங்களை உண்டாக்கும்.

10. கிராணபாகம் :- பித்தத்தை கொண்டு நுணி மூக்கு பக்கங்களின் உட்புறத்தை வெந்தது போல் செய்விக்கும். இதனால் அச்சரு மத்திலும், மாமிசத்திலும் எரிச்சலுடன் மிகு நோய் உண்டாகும்.

11. நாசிகா சிராவம் :- இது சிலேஷ்மத்தைக் கொண்டு
நாசி வழியாக கலங்கலில்லாத தெளிவையுடைய சுத்த ஜலத்த  மிகவும் வடியப்பண்ணும்.

12. அபிநசம் :- இது சிலேஷ்மத்தைக் கொண்டு மிக்கிய
நரம்புகளை அடைப்பிக்கும். இதனால் முன்பு சொன்ன பீநசங்களைப்பார்க்கிலும் அதி உபத்திரவம் பிறக்குதல் சுவாசம் விடும்போது குருகுரு வென்னும் சத்தம், நாசியில் எந்நேரமும் வியர்வை என்னும் குணங்களுண்டாகும். இது பழுத்தால் நாசியில் பிசுபிசுத்து குழம்பிய மஞ்சள் நிறமான சளி விழுகும்.

13. நாசிகாதீபிகை :- இது நாசியை அக்னி சுவாலையில்
பட்ட வஸ்துவைப்போலவும், ரத்தம் குழம்பியது போலவும் செய்யும். இதனால் அந்த இடம் சிவக்குதல் உள்ளிலும், வெளியிலும் தொடக்கூடாத வேதனை, மூச்சானது புகையைப்போல் வெப்பமாய் வருதல் என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

14. பூதி நாசிகம் :- வாத பித்த கபங்களானவை தாடையில்
மூலத்தை பற்றுங்காலத்தில் இந்நோய் பிறக்கும். இதனால் நாசியில் சலம் வடிதலும் துர்கந்தமு முண்டாகும்.

15. பூயாசிர நாசிகம் :- இது திரிதோஷத்தினாலும், அபிகா
தத்தினாலும் பிறக்கும். இதனால் நாசியில் சீழானது ரத்த நிறமாக விழுதலும், சிரசில் நோயுடன் எரிச்சலும் உண்டாகும்.

16. நாசிகா புடகம்
 :- பித்த சிலேத்துமங்களினால் நாசியில்
அடைப்படுங்காலத்தில் இது பிறக்கின்றது. இதனால் சளி
வரண்டு கட்டியாக விழுவதுமன்றி அவ்விடத்தில் கொப்புளமும் உண்டாகும்.

17. நாசாரசம் :- நாசியின் மூலத்தில் முளைபோல் துர்மாமிசத்தை வளர்பிப்பதுடன் வாதகப பீனிசக் குணங்களையும் உண்டாக்கும்.

18. நாசிகாற்புதம் :- நாசியில் வீக்கத்துடன் பித்தகப பீனி
சக்குறிகளையும் உண்டாக்கும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக