காதில் ஏற்படக்கூடிய மற்ற நோய்களாவன :-
1. கர்ணநாதம் :- காதுகளில் சத்தத்தை உண்டாக்குகின்ற
நரம்புகளில் வாயு சேருங்காலத்தில் பிறக்கும். இதனால் காரணமில் லாமலே காதுக்குள் நானாவித சத்தமான நாதங்கள் உண்டாகும்.
2. பாதிரியம் :- வாயுசிலேஷ்மத்துடன் கூடி சத்த நரம்புகளை வியாபிக்கும் போது பிறக்கும். இதனால் காதுக்குள் சகல சத்தத்தையும் தெரிவிக்கின்ற நாதமானது கெடுதி அடையாதிருந்தாலும் அதற்கு வெளிஓட்டம் இல்லாமையால் அதிக கூச்சலிட்டு உறக்கக் கூவினாலும் கிணற்றுக்குள் பேசுவது போல் பிரயாசத்தின் மேல்
கொஞ்சம் சத்தம் கேட்கும்.
3. பிரதிநாதம் :- வாயுவினால் சிலேஷ்மம் உலர்ந்து சத்த நரம்பு களை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பிறக்கும். இதனால் காதுகளில் அதிக நோயும் சத்தக் கெடுதியும் உண்டாகும். இது சத்தத்தை மிகவும் வெளியிடாமல் கட்டுதலால் பிரதிநாதரோகமென பெயர் பெற்றது.
4. கர்ணகண்டு :- இது காதுக்குள் கபத்தினால் அதிக நமைச்சலை உண்டாக்கும்.
5. கர்ணசோபை :- இது காதுக்குள் அதிக வீக்கத்தை
மாத்திரம் உண்டாக்கும்.
6. கர்ணபூதிகம் :- பித்தத்தினால் கபமானது கெடுதியையும் அடையுங் காலத்தில் பிறக்கும். இதனால் காதுகளில் இருக்கும் குரும்பியின் சருமத்தில் நோய், ஒரு வேளை நோயின்மை, மிகுந்த துர்க்கந்தம், வியர்வை போல் ஓயாது சலம் வடிதல் என்னும் குணங்
களை உண்டாக்கும்.
7. கர்ணவித்திரதி :- செவிக்குளுண்டாகின்ற நமைச்சலால்
சில கருவிகளை கொண்டு குடைவதால் புண்ணாகின்ற காலத்தில் பிறக்கும். இதனால் வித்திரதி கட்டிகளின் குணங்களெல்லாம் உண்டாக்கும்.
8. கண்ணாரசோர்புதம் :- காதுகளின் மூலத்தில் மூலரோக உபத்திரவம்போல் உபத்திரவமும் துர்க்கந்தமும் செவிடும் உண்டாக்கும்.
9. கர்ணாற்புதம் :- இது காதுகளில் முன்பு சொன்ன கண்ணார சோர்புதரோக குணங்களுடன் செவிப் பிரதேசமெல்லாம் ஏகவீக்கத்தையும் உண்டாக்கும்.
201
10. கர்ணகிருமி :- காதுகளில் திரிதோஷ சேர்க்கையால்
பிறக்கும். இதனால் கிருமிகள் சன்னித்து அவ்விடத்திலுள்ள சீழ்ரத்தம், மாமிசம், இவைகளை புசித்துக்கொண்டு அதிக ஊரலையும் நோயும் உண்டாக்கும்.
11. கர்ணகூசிதம் :- காதுக்குள் வாயு தங்கும் காலத்தில்
பிறக்கும். இதனால் செவியினது உட்கருவியாகிய குரும்பி முடங்கிக்கொண்டு மிகுந்த உபத்திரவத்தை உண்டாக்கும்.
12. கர்ணபிப்பிலி :- இது மாமிசத்தைப்பற்றி பிறக்கும்.
அப்போது காதுக்குள் துர்மாமிசமானது திப்பிலிக்காயைப்போல் ஒன்றாயேனும், பலவாயேனும் உண்டாக்கிக்கொண்டே இருக்கும்.
13. கர்ணபிதாரிகம் :- திரிதோஷத்தினால் காதுக்குள் சிறிய நிலப்யூசினிக்கிழங்கைப் போல் மாமிசத்தை உண்டாக்கும். இதனால் அந்த இடத்தில் நோய், மரத்தல், வீக்கம், கடுகு தைலம் போல் ஜலம் வடிதல், விட்டு விட்டு வலி காணல், குரும்பி முடங்குதல் என்னும் குணங்களெல்லாம் உண்டாக்கும்.
14. கர்ணபாலதோஷம் :- காதுக்குள் இருக்கும் நரம்புகளில் வாயு தங்கி சஞ்சரிக்கும் போது பிறக்கும். இதனால் நெற்றியானது மிகவும் உலர்ந்த சுட்கத்தை அடையும்.
15. கர்ணதந்திரிகம் :- காதுக்குள் பிசினைப்போல் இளகலா யும் இழுத்தால் அறாமல் தந்தியைப்போல் நீளுவதாயும் இருக்கின்ற சீழை உண்டாக்கும்.
16. கர்ணபரிபோடகம் :- வாயுவினால் காதுக்குள் அற்ப வீக்கத்தையுடைய கொப்புளத்தை பிறப்பிக்கும். அது நெடு நாள் அப்படியே இருக்கும். பின்பு விரித்தியடைய ஆரம்பித்தால் சீக்கிரத்தில் விரித்தியடையும். இதனால் அக்மார்க்கத்தில் மிகு சிவப்பு நிறத்தில் நோயும் உண்டாகும்.
17. கர்ணோபாதம் :- ரத்தபித்த ரோகத்தினாலும், மிக
கனத்த காதணிகளாலும், காதுகளில் வியர்க்குரு போல் சிறிய கொப்புளத்தை உண்டாக்கும். அது பழுத்து உடைகயில் வீக்கம், அத்துடன் பருங் கொப்புளங்கள் பரவி எழும்புதல் அவைகளில் வியர்வையும், சுடுவையும், ரத்தமும் பிறத்தல் அதிக நோய் எரிச்சல்
என்னும் குணங்களெல்லாம் உண்டாகும்.
18. கர்ணோன்மந்தம் :- இது வாத சிலேஷ்மங்களினால் பிறக்கும், இதனால் செவி மார்கத்தில் நிலைபெற்ற வீக்கம், அதில் நோவின்மை, அதிக நமைச்சல், சீக்கிரத்தில் வசப்படாமை என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.
19. கர்ணதுக்கவர்த்தனம் :- இது காது குத்தும் போது கை தவறி நரம்பின்மார்க்கங்களில் குத்துவதனால் பிறந்து வேதனையைச்செய்யும். அப்போது நமைச்சல் எரிச்சல், வீக்கம், நோய் என்னும் இக்குணங்களை யுண்டாக்கும்.
20. கர்ணலிகியம் :- சிலேஷ்மத்துடன் கூடிய ரத்தத்தினால் காதுக்குள் கிருமிகளை பிறப்பிக்கும். அக்கிருமிகள் சிறு சிறு கொப்புளங்களை யுண்டாக்கும். இதனால் காதுகளில் தினவு வியர்வை வேதனை அக்மார்கத்தில் எநேரமும் ஒரு கருவியை
குடைதற்கே நினைவு என்னும் இக்குணங்களை யுண்டாக்கும்.
கர்ணரோக சாத்தியா சாத்தியம் :- கர்ணரோகம் 25 ல் கர்ணபிப்பிலி, கர்ணபிதாரிகை, கர்ணகூசிகை இம்மூன்றும் அசாத்தியம். கர்ணதந்திரி முதல் கர்ணலிகியம் ஈறாக 6ம் கஷ்ட சாத்தியம். மற்ற 16 ம் சாத்தியம்

0 comments:
கருத்துரையிடுக