நேத்திர நோய்களுக்கு காரணம் :- கண்களுக்கு ஆகாதப்
பொருட்களை அருந்துதல், பாஷாண்ம் முதலிய புகைப்படுதல், சிரசிலும் கண்ணிலும் அடிபடுதல், மிகுசுமை எடுத்தல், பாதஞ் சுடும்படி யாக கடூரவெய்யிலில் அலைதல், அப்பியங்க ஸ்தானம் தவறுதல், அல்லது அந்த ஸ்தானத்தில் எண்ணெய் சிக்குவிடாமை, உள்ளங்
காலில் உஷ்ண ஒத்திடம், அவ்வித லேபனம், முதலியவைகளை செய்தல் என்னும் இச்செய்கைகளினால் அதிகரித்த வாத பித்த சிலேஷ்ம
தோஷங்கள் நரம்புகளின் துவாரவழியால் சிரசில் வியாபித்து கண் களைப்பற்றி 96-வகை கண்நோய்களை பிறப்பிக்கும்.
நேத்திரரோக வகை :- நேத்திர நோயானது கருவிழி, வெள் விழி, இமை, கடைக்கண் என்னும் நான்கு ஸ்தானங்களைப் பற்றி 96-வகை நோய்களை பிறப்பிக்குமென்றும் அவைகளில் கர்விழியில்
காசம், படலம், குமுதம், விழியுந்தல், நெரிசல், வரி, குந்தம், திமிரம் சுக்கிரன், பூ என்னும் பத்து வகை பிரிவினால், (45 வித ரோகமும்) வெள்விழியில் எழுச்சி, படாத்தி, நெரிசல், புற்று, குமிளம் வரி என்னும் ஆறு வகைப் பிரிவினால்
5. நீலகாசம் :- இது கருவிழியில் கருவிழம்பு நிறத்தை உண்டாக்கும்.
6. மந்தாரகாசம் :- இது கருவிழியில் செம்பஞ்சு அல்லது
மேகமிவைகளை நிறத்தைப் பிறப்பிக்கும்.
7. விரணகாசம் :- இது கருவிழியில் முத்தத்தை போல் தளதளப்பான நிறத்தை உண்டாக்கும்.
8. கருப்பகாசம் :- இது கருவிழியில் சுத்தகருமை நிறத்
தைக் காண்பிக்கும்.
இவற்றுள் பித்தகாசம், நீலகாசம், மந்தாரகாசம் ஆகிய
3-ம் சிகிச்சையினால் நிவர்த்தியாகும். மற்ற ஐந்தும் அசாத்தியம்.
படலம் :- படரோகமானது சதைபடலம், ரத்தபடலம்,
நீர்ப்படலம், வரிப்படலம், கருநாகப்படலம்,மாமிசப்படலம், பசு விழிப்படலம், என 7 வகைப்படும்.
1. சதைபடலம் :- இது கருவிழியில் குத்தலுடன் நோயை
யுண்டாக்கி மேலில் சிவந்த சதயை வளர்ப்பிக்கும்.
2. ரத்தபடலம் :- இது கண்மணியில் உறுத்தல், குமுறல்
காத்தல், பிளைச்சாரல்,எரிதல், ரத்தங்கட்டுதல், புருவம், நெற்றி பிடரி உச்சி ஆகிய இடங்களில் குத்தல் என்னும்மிவைகளை யுண்டாக்கும்.
3. நீர்ப்படலம் :- கருவிழியின் மீது மேகம் கருத்தது போல் இருத்தல், கனத்தல், மிகுந்தசலம்வடிதல், கண்மயக்கம், சிரசில் குத்தலுடன் சலக்கோவை என்னும்மிவைகளை யுண்டாக்கும்.
4. வரிப்படலம் :- கருவிழியின் மீது கயிறு போல் வரிகளும் காந்தலும், குத்தலும், அகண்டேநோயுடன் உறுத்தலும், புகைச்சலும் உண்டாகும்.
5. கருநாகப்படலம் :- கருவிழியில் இந்திர தனுவைப் போல் பலநிறமும் குத்தலும், நோயும், உறுத்தலும்,சலப்பெருக்கமும் உண்டாகும்.
6. மாமிசப்படலம் :- விழிமணியின் முனையில் சதை வளர்ந்து அதிக ஊறல், கூசுதல், இடித்தல், சலம்வடிதல், பிடரியில் நோய் என்பவைகளை யுண்டாக்கும்.
7. பசு விழிபடலம் :- கருவிழியில் பசுமை நிறச்சதயை
வளர்ப்பித்து, அதில் குத்தல், தீயிருக்குமிடம்போல் காந்துதல், பார்வை மந்தம் என்னும் குணங்களை உண்டாக்கும்.
இவற்றுள் சதைபடலம், ரத்தபடலம், நீர்ப்படலம், வரிப்படலம், இவை நான்கும் சாத்தியமாம், மற்ற 3-ம் அசாத்தியமாம்.
குமுதம் :- குமுதரோகமானது செங்குமுதம், கருங்குமுதம் வெண்குமுதம், என மூன்று வகைப்படும்.
1. செங்குமுதம் :- கருவிழியில் செங்கழு நீர்ப்பூவைபோல்
சிவந்தசதயை வளர்ப்பித்து, அதில் தீயினாற் சுட்டபுண்போல் எரிச்சலையும் குத்தலையும் உண்டாக்கும்.
2. கருங்குமுதம் :- கருவிழியில் கருங்குவளை பூவைப்
போல் விரணத்தை எழுப்பி பார்வையில் இருள் கம்மியது போல் உண்டாக்கும்.
3. வெண்குமுதம் :- கண்களில் பஞ்சு போல் வெளுத்த
புள்ளி வீழ்ந்து பரவுதல், குத்தல், பார்வை மழுங்கல் என்பவைகளை யுண்டாக்கும்.
இவற்றுள் செங்குமுதம் சாத்தியம். மற்றவைகள் அசாத்தியம்.
விழியுந்தல் :- இது செஞ்சதை விழியுந்தல், வெண்சதைவிழி யுந்தல், சர்வநேந்திரவிழியுந்தல், என 3 வகைப்படும்.
1. செஞ்சதை விழியுந்தல் :- இது குமுத ரோகத்தினாலும்
மற்றும் நேந்திரரோகங்களினாலும் கருவிழியில் சிவந்தசதயை படரச்செய்து அதிக உறுத்தலை உண்டாக்கும்.
2.வெண்சதைவிழியுந்தல் :- இது வெண்மைசதையைப்
படரச்செய்து அதிக நோயை மாத்திரம் உண்டாக்கும்.
3. சர்வநேந்திரவிழியுந்தல் :- கண்முழுதும் துற்றுக்
கொள்ளும்படிக்குச் சதையைப்படரச்செய்யும்.
இம்மூன்றும் அசாத்தியம்.
நெரிசல் :- இது உஷ்ணநெரிசல், சோணித நெரிசல், நீர்
நெரிசல் என மூவகைப்படும். இந்த ரோகமானது உஷ்ணம், வெகு நடை, அவுஷதவேகம், மிகு சுமைஎடுத்தல், கண்சிவத்தல் நீர் ஒதுக்கல் என்னும் இச் செய்கைகளினால் பிறக்கும்.
1. உஷ்ணநெரிசல் :- கருவிழியில் விருத்தமான வெளுப்பை உண்டாக்கும்.
2. சோணித நெரிசல் :- விழி நடுவில் ரத்த நிறத்தையும் உஷ் ணத்தையும் உண்டாக்கும்.
3. நீர் நெரிசல் :- விழி நடுவில் மாந்தளிர் நிறத்தையும் குளிர்ச்சி யுடன் நீர்க்கோவையையும் உண்டாக்கும்.
வரி :- இது கருவிழியில் வரி போன்ற கோடுகளை உண்டாக்கி கண்ணில் நீர்வடிதல், சிவத்தல், நோய் முதலியவைகளைப் பெற்றிருக்கும் வரி ரோகமானது நீர்வரி, இமைவரி, சோரிவரி என மூன்று வகைப்படும்.
1. நீர்வரி :- இது நீண்டு வெளுத்துருக்கும்.
2. இமைவரி :- இது பிறையைப்போல் வளர்ந்திருக்கும்.
3. சோரிவரி :- இது இரண்டு கடைக்கண் வரைக்கும் ரத்த
நிறத்துடன் படர்ந்திருக்கும்.
குந்தம் :- குந்தரோகமானது சதைக்குந்தம், ரத்தக்குந்தம்,
மோர்குந்தம், என மூன்று வகைப்படும். இவற்றுள் ரத்தக்குந்தம் அசாத்தியம், மற்ற இரண்டும் சாத்தியம்.
திமிரம் :- திமிரரோகமானது வெள்ளெழுத்து, மாலைக்கண் மந்தாரதிமிரம், வறட்சிதிமிரம், நீர்த்திமிரம், சிலேஷ்மத்திமிரம், மேக திமிரம் என ஏழு வகைப்படும்.
1. வெள்ளெழுத்து :- இது அகாலத்தினாலும், காலத்தினா
லும், இரு விதப்படும். இவற்றுள் அகாலவெள்ளெழுத்து என்பது ஆலோசக பித்தத்தின் விருத்தியினால் சிறுவர்களுக்கு உண்டாகும். இதனால் எழுத்தாதி சிறிய வஸ்துகள் கண்ணுக்கு புலப்படுவது போல் இருந்து காரணமில்லாமலே மயங்கி மறைபடும். காலவெள்
ளெழுத்து என்பது 37 வயதிற்கு மேல் எழும்பும் பித்த தோஷ விரித்தியினால் பிறந்து ஒவ்வொரு வேளை கொஞ்சம் வயிற்று நோயைத் தருவதுமன்றி, கருவிழியில் அற்பப்புகை மேகம் கம்மியது போல்செய்து நுட்ப பொருட்களை தெரியவொட்டாமல் மறைக்கும்.
இந்தரோகம் பாலர் முதல் விருந்தர்பரியந்தமுண்டாகும்.
2. மாலைக்கண் :- இது மாலை காலத்தில் பார்வை
இருளடையும் படி செய்வதும், உதய காலத்தில் அவ்விருள்
நீங்கும்படி செய்வதுமாக இருக்கும்.
3. மந்தாரதிமிரம் :-இது கருமணியில் பஞ்சு போல்
புகையை எழுப்பி அந்தி நேரத்தில் இருளை யுண்டாக்குவதும் பின்பு ஒரு சாமத்திற்குள் தெளிவைத்தருவதுமாக இருக்கும்.
4. வறட்சிதிமிரம் :- இது கருவிழியில் மந்தம், நடுநரம்பில்
குத்தல், பீளையுடன் சலப்பெருக்கு, முதலியவற்றை யுண்டாக்கும். இது கபாலமூளையை பித்தம் வரட்டும்போது பிறக்கும்.
5. நீர்த்திமிரம் :- இது நாசி, செவி,கண் ஆகிய இடங்களில்
விரணத்தை உண்டாக்குவதும், கருவிழி பக்கத்தில் குத்தலையும், நடுவில் புகைச்சலையும் உண்டாக்கும்.
6. சிலேஷ்மத்திமிரம் :- இது கருவிழியை வெளுப்பாக்கி
பார்வைக்குள்ளும் அப்படியே தோற்றுவிக்கும்.
7. மேக திமிரம் :- இது கருவிழியில் மேகம் கம்மியது போல் இருளை அடையச்செய்யும்.
வெள்ளெழுத்து, மாலைக்கண், மந்தாரதிமிரம், ஆகிய இம்
மூன்றும் சாத்தியம். மற்றவை அசாத்தியம்.
சுக்கிரன் :- சுக்கிர ரோகமானது விரணசுக்கிரன், கருஞ்சுக்கி ரன், விழி விழுங்கி சுக்கிரன், வெண்சுக்கிரன், கணர்சுக்கிரன், என ஐந்து வகைப்படும்.
1. விரணசுக்கிரன் :- இது கருமணியின் மீது மிகுந்த விர
ணத்தை உண்டாக்கும்.
2. கருஞ்சுக்கிரன் :- இது விழியைச்சுற்றிலும் உழுந்துப்
போல் துவாரங்களை உண்டாக்கும்.
3. விழி விழுங்கி சுக்கிரன் :- இது கருவிழியின் கீழ்சந்தி
னின்று வெள்ளெழுத்து போல் படர்ந்து விழியை மறைக்கும்.இத னால் அதிக வேதனையும், எரிச்சலும் உண்டாக்கும்.
4. வெண்சுக்கிரன் :- இது குழந்தைகளின் கருவிழியைவிட்டு சுற்றிலும் அக்னி நிறத்தை உண்டாக்கும்.
5. கணர்சுக்கிரன் :- இது விழியில் நோயையும் உள்ளில்
அனல் போல் காந்தலையும் உண்டாக்கும். இவற்றுள் விரணசுக்கிரன், கருஞ்சுக்கி,ரன், விழி விழுங்கி
சுக்கிரன், ஆகிய இம்மூன்றும் சாத்தியம். மற்றவை அசாத்தியம்.
பூ :- மசூரிகை ச் உஷ்ணரோகத்தினாலும்,
மிகுநீர்கோவையினாலும், கருவிழியில் ஆணி, உந்தல், புகை என்னும் மூன்று விதப்பூ உண்டாக்கும். இவற்றுள் புகை சாத்தியம், மற்றவை அசாத்தியம்.
வெள்விழிநோய் :-
வெள்விழியில் ஏற்படக்கூடிய நோய்கள் எழுச்சி, பாடாத்தி
நெரிசல், புற்று, குமிழம், வரி என்னும் ஆறு வகைப்படும்.
அவை யாவன : -
எழுச்சி :- எழுச்சிரோகமானது வரிஎழுச்சி, விரணஎழுச்சி
குவைஎழுச்சி, நீர்எழுச்சி, உந்தெளிச்சி என ஐந்து வகைப்படும்.
1. வரிஎழுச்சி :- இது வெள்விழியில் தேமலைப் போல் வட்ட மாகத் தசையை பரவச்செய்யும்.
2. விரணஎழுச்சி :- இது வெள்விழியில் கருங்குன்றியைப்
போல் மாமிசத்தை வளர்பிக்கும். இது விரணத்தை உண்டாக்கும்.
3. குவைஎழுச்சி :- இது உழுந்தினது பிராமணமான சதை
யை பிறப்பிக்கும்.
4. நீர்எழுச்சி :- இது நீர்த்துளியைப்போல் தள தளப்பான
சதயை உண்டாக்கும்.
5. உந்தெளிச்சி :- இது பருத்திக்காயைப்போல் துர்மாமிசத்
தை வளரப்பண்ணும்.
இவற்றுள் வரிஎழுச்சி, குவைஎழுச்சி, நீர்எழுச்சி ஆகிய மூன்றும் சாத்தியம். மற்றவை அசாத்தியம்.
படாத்தி :- படாத்தி ரோகமானது சதைபடாத்தி, வரிபடாத்தி
சோரிப்படாத்தி என மூன்று வகைப்படும்.
1. சதைபடாத்தி :- இது வெள்விழியில் மிருதுவான சதயை
தடிக்கும் படிச்செய்யும்.
2. வரிபடாத்தி :- இது வெள்விழியில் வலைக்கண்களைப்
போல் மாமிசத்தை வளர்ப்பிக்கும்.
3. சோரிப்படாத்தி :- இது வெள்விழியில் ரத்தம் குழம்பும்
படியான செந்நிறச்சதயை வளர்ப்பிக்கும்.
இவற்றுள் வரிபடாத்தி ரோகம் சாத்தியம். மற்றவை அசாத்தியம்.
நெரிசல் :- நெரிசல் ரோகமானது துளிநெரிசல், உந்துநெரிசல், விரணநெரிசல், என மூன்று வகைப்படும்.
1. துளிநெரிசல் :- இது வெள்விழியில் விந்துவினது துளியைப்போல் மாமிசத்தை உண்டுபண்ணும்.
2. உந்துநெரிசல் :- இது துர்மாமிசத்தை எழுப்பும் .
3. விரணநெரிசல் :- இது விரணத்தை உண்டாக்கும்.
இம்மூன்றும் சாத்தியமாம்.
புற்று :- புற்றுரோகமானது சதைப்புற்று, நீர்புற்று , அழற்புற்று என மூன்று வகைப்படும்.
1. சதைப்புற்று :- இது வெள்விழியில் ரத்தத்தினால் சிவந்த
சதயை வளர்ப்பிக்கும்.
2. நீர்புற்று :- இது வெள்விழியில் நீர்குழியைப்போல் சதயை எழுப்பும் .
3. அழற்புற்று :- இது வெள்விழியில் காந்தலுடன் விம்ம
லான தசையை உண்டாக்கும்.
இவற்றுள் அழற்புற்று சாத்தியம். மற்றவை அசாத்தியம்.
குமிளம் :- குமிளரோகமானது சதைக்குமிளம், ரத்தக்குமிளம், நீர்க்குமிளம் என மூன்று வகைப்படும்.
1. சதைக்குமிளம் :- இது வெள்விழியில் கருத்த கொப்பு
ளத்தை உண்டாக்கும்.இது வெள்விழியில் .
2. ரத்தக்குமிளம் :- இது வெள்விழியில் செங்குன்றியைப்
போல் சிவந்த கொப்புளத்தை உண்டாக்கும்.
3. நீர்க்குமிளம் :- இது வெள்விழியில் சங்கம்பழம் போல்
கொப்புளத்தை உண்டாக்கும். இவற்றுள் சதைக்குமிளம் அசாத்தியம். மற்றவை சாத்தியம்.
வரி :- வரிரோகமானது வெள்வரி, நீல வரி, ரத்த வரி, என
மூன்று வகைப்படும்.
1. வெள்வரி :- இது வெள்விழியில் மீனின் செதிளைப் போல் வரையை உண்டாக்கும்.
2. நீலவரி :- இது மிகுந்த பசுமையுள்ள துரிசினது நிறத்தை
ஒத்த வரையை உண்டாக்கும்.
3. ரத்தவரி :- இது செந்நிற வரையை பிறப்பிக்கும்.
இவற்றுள் நீலவரி சாத்தியம், மற்ற 2-ம் அசாத்தியம்.
உண்டாக்கும்.
இமைநோய் :-
இவைகளில் வரக்கூடிய நோய்கள் பில்லம், தடிப்பு, பதுமம்
சுழலை, நீர்ப்பாய்ச்சல், என்னும் 5 வகைப்படும். அவைகளாவன :-
பில்லம் :- பில்லரோகமானது நீர்ப்பில்லம், அமரப்பில்லம்,
இடர்ப்பில்லம், என மூன்று வகைப்படும்.
0 comments:
கருத்துரையிடுக