ஞாயிறு, ஜனவரி 10, 2010

வலி (இசிவு ரோகம்) - ரோக நிதானம்

வலி(இசிவு)

இது அமரக்கண்டவலி, குமரக்கண்டவலி, காக்கைவலி, பிரமகண்ட வலி, முயல் வலி என ஐந்து வகைப்படும்.

1. அமரக்கண்டவலி :- இது வரும்போது தேகத்தில் நோயுண்டாகி மூர்ச்சை காணுதல், கையும் காலும் அடித்துத் துவைத்தது போல் அசைவற்று கிடத்தல், குடைச்சல், பல்லை இளித்து மூடல், கழுத்து
சிரசில் மிகு வியர்வை, நெஞ்சதோள் முதுகில் உதிரத்தை
பற்றிய உபத்திரவம், என்னும் இக்குணங்கள உண்டாக்கும். இதுவே குதிரை வலியாம்.

2. குமரக்கண்டவலி :- இது வாதாதி சிலேத்துமத்தாற் பிறந்து முன்கழுத்தையும், முகத்தையும் முறுக்கி தோள் பக்கத்தில் வைத்தல் தாடை, செவி, கண், உதடு, இவைகள் கோணுதல், அப்பக்கத்தில் அதிக உபத்திரவம், சந்நிபாத குறிகள் என்னும் இக்குணங்களை உண்டாக்கும். இது மாதர்களுக்கு கண்டால் வயிற்றில் உதிரத்தை
கட்டிக்கொண்டு கர்ப்பசயத்தில் லடங்கியிருந்து சில நாள்
பொரித்து சந்நிபாதம் போலவே காணும், இது திரிதோஷத்தால் பிறக்கும்.

3. பிரமகண்ட வலி :- இது கைகால் நீட்டியபடியே இருந்து
துடித்தல், ஆகாயத்தை சிமிட்டாமல் பார்த்தல், தேகத்தில்லதிக உபத்திரவம் என்னும் குணங்களை யுண்டாக்கும். இது சுத்த சிலேத்து மத்தினாற் பிறக்கும். இதனை குறக்கு வலியெனச் சொல்கிறார்கள்.

4. காக்கை வலி :- இது கண்களை மலர மலர விழித்தல், அவ்வேளையில் மலசலம் நழுதல், இரண்டுகால்களும் முறைத்துக் கொள்ளுதல், தொண்டையும், நாவும் உளரல், சிலேத்துமத்தினாலே வாயிலிருந்து கோழை விழுதல், என்னும் இக்குணங்களைஉண்டாக்கும். இது வாத சிலேத்துமத்தால் பிறக்கும்.

5. முயல்வலி :- உடல் வாய்வு நிறைந்தகாலத்தில் எழும்புதல் வயிற்றில், நோய், வாயால் நுரை தள்ளுதல், கை கால் கண் முறைக்குத லென்னும் குணங்களுடையது. இந்த ரோகம் தண்ணீரைக் கண்டாலும் தண்ணீரைச் சிரசில் தெளித்தாலும் அலது அக்கினியை கண்டாலும் அக்கினி சுடுகைபட்டாலும், ஜனப்பெருக்கத்தை கண்டாலும் அடிக்கடி உண்டாகு.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக