ஞாயிறு, ஜனவரி 10, 2010

உன்மாத ரோகம்,அபஸ்மார ரோகம் - ரோக நிதானம்

உன்மாதம்(பைத்தியம்)

வாதம், பித்தம் சிலேஷ்மம் அதனதன் மார்கத்தை தப்பி
நடக்கும் போது மனதில் ஒருவித மதம் பிறக்கும். அதுவே உன்மாத ரோகமாம். இது வாதோன்மாதம், பித்தோன்மாதம், சிலேஷ் மோன்மாதம், திரிதொஷோன்மாதம், வியாத்தியோன்மாதம்
விசேஷோன்மாதம் என ஆறு வகைப்படும்.

1. வாதோன்மாதம் :- கைகளை தட்டுதல், நகைத்தல்,
ஒருவனை பிடிக்க எழுந்திருத்தல், என்னும் குணங்களை
யுண்டாக்கும்.

2. பித்தோன்மாதம் :- யாவரையும் பயப்படுத்தல், எழுந்
தெழுந்தோடுதல், சீதள பதார்த்தத்தில் இச்சை என்னும் குணங்களை யுண்டாக்கும்.

3.சிலேஷ்மோன்மாதம் :- அநித்திரை, யாவரையும் பயப்
படுத்தல், ஸ்திரீகளிடத்தில் மிகுந்த விருப்பம், சகல பதார்த்தத்தில் இச்சை என்னும் குணங்களையுண்டாக்கும்.

4. திரிதொஷோன்மாதம் :- மேற்கூறிய மூன்று நோய்களின் குணங்களை ஏககாலத்தில் உண்டாக்கும்.

5.வியாத்தியோன்மாதம் :- இது பணத்தை போக்கடித்த
விஷனத்தினாலும், மனைவியை இழந்த துக்கத்தினாலும்,
இன்னும் பந்பல ம்னோவியாதிகளினாலும், அதைரியம், அடிக்கடி வியாகூலப்படல், தேகம் வெளிரல், பிரலாபித்தல், காரணமில் லாமல் அழுதல், தானே ஆச்சரியப்படுதல், நித்திரை பங்கம், புரளல் என்னும் குணங்களையுண்டாக்கும்.

6. விசேஷோன்மாதம் :- இது இடுமருந்து முதலியவைகளி னால் உண்டாகி முகங்கறுக்குதல், தேகம், பலம், பஞ்சேத்திரியங்கள் நசித்தல், திகைத்து திகைத்து திரிதல் முன் அருந்தினமருந்தின்
விஷம் தேகத்தில் ஊற ஊற கண்கள் சிவக்குதல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

அபஸ்மாரம்(மூர்ச்சை)

சிந்திப்பினாலும், துக்கத்தினாலும், பயத்தினாலும் மனது மிகவும் பதைத்து தவிக்கும் காலத்தில் வாதபித்தங்கள் மிகவும் அதிகரித்து மனதிற்கு தெளிவைத்தருகின்ற நரம்புகளை யுலர்த்தி புத்தியின் தெளிவைக்கெடுத்து சத்துவகுணத்தை அக்மார்க்கங்களை அடைந்து
நீக்கி தகாத நடத்தையை நடப்பித்து உன்மாதரோகத்தைப்
போலவே இந்த அபஸ்மார ரோகத்தை பிறப்பிக்கும். இது வாத அபஸ்மாரம், பித்த அபஸ்மாரம், சிலேத்தும அபஸ்மாரம், திரி தோஷ அபஸ்மாரம் என நான்கு வகைப்படும்.

அபஸ்மார நோயின் முக்குறிகள் :- அபஸ்மாரரோகம் மார்பு துடித்தல், புத்திக்குத் தெளிவின்மையா லொன்றுந் தோன்றாமலிருத்தல், பிரமை, கண்ணிலிருட்கம்மல், கிடந்தவிடத்திலேயே கிடத்தல், கண்ணிமைநோதல், விகாரப்பார்வை, காதுகேளாமை, ஊமைப்
போலிருத்தல், சர்வாங்க வியர்வை, சொள்ளுவடியுஞ் சலத்தை சப் புதல், நாசியிற் சலம்வடிதல், அசீரணம், அரோசகம், மூர்ச்சை, வயிற்றிலிரைச்சல், துர்ப்பலம், சரீரவலி, தாகம், அநித்திரை, சில சமயம் அற்பநித்திரை, அந்தநித்திரையில் தான் ஆடினதுபோலவும்
பாடினது போலவும், சாராயம் கள்ளு இவைகளை குடித்தது போலவும் தோற்றுவது, பின்பு அவைகளி லிச்சைப்படுவது என் னுங் குணங்களைத் தனக்குற்ற முதற்குறிகளாப் பெற்றிருக்கும்.

அபஸ்மார நோயின் இலக்கணம் :- பற்கடித்தல், நுரை நுரை யாக கக்குதல், கைகாலுதறல், பார்க்கும் உருவமெல்லாம் கண்ணுக்குத் தோற்றாமை, நடக்கும்போது கால்கள் பின்னிக்கொள்வது,
நாக்கு, மூக்கு, கண் இவைகள் விகாரப்படுவது என்னும் பொதுக்குணங்களையுடையது. இந்த ரோகத்தில் வாதசஞ்சாரம் மட்டாகில் அறிவு சிறிது தெளிவடையும். அது அதிகரிக்கில் தெளிவின்மையாம்.

1. வாத அபஸ்மாரம் :- இது இரு தொடையும் ஒடிந்து விழு வதுபோலிருத்தலுடன் அதிரல், அறிவு நீங்குவது, ஞாபகமறதி, அழுகை, கண்ணை விழித்தப்படியே நித்திரைசெய்தல், நுரைநுரை யாக கக்குதல், நடுக்கல், சிரசிலடித்துக்கொள்வது, பற்களை நறநற வென்று கடித்தல், தலைதொங்கவிடல், திமிர், முறுக்குதல், குரக்கு
வலிபோல விரல்களெல்லாம் வளைதல், கண் முகம் நகம் சருமம் ஆகிய இவைகள் தேஜசு நீங்கி கறுத்தல் சிலவேளை சிவத்தலென்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

2. பித்த அபஸ்மாரம் :- இது தேக மறதி உடனே தெளிவது, கண் முகம் சருமம் ஆகிய இவைகள் மஞ்சள் நிறமாவது, ஒருவேளை கண்கள் வெளுப்பது அல்லது சினங்கொண்டவன் கண்போல சிவப்பது, வெறித்த பார்வை, பூமியைக் கையாலறைவது என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

3. சிலேஷ்ம அபஸ்மாரம் :- இது சகல காரியத்திலும் மறதி, வெகுநேரம் பொறுத்து தெளிவது, வெறிச்சேஷ்டை யதிகரிப்பது, ஒருவேளை குறைவது, சதா சொள்ளுசலம் வடிவது, கண் முகம் நகம் ஆகிய இவைகள் வெளிறல், தேகம் பழுத்ததுபோல ஒருவித வெளுப்பு என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

4. திரிதோஷஅபஸ்மாரம் :- இது வாதம் முதலிய மூன்று
அபஸ்மாரரோகங்களுக்குள்ள குணங்களை எல்லாம் ஒரே காலத்தில் உண்டாக்கும். இது அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக