ஞாயிறு, ஜனவரி 10, 2010

கப ரோகங்கள் (இருபது வகையான சிலேஷ்ம நோய்கள் )- ரோக நிதானம்

சிலேஷ்மநோய்

தேகங்கனத்து நறுக்கித்துவைத்தது போல் இருத்தல்,
தேகத்திலும், முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், இருமல், இரைப்பு, ஆயாசம், நடுக்கல், சிரோபாரம், நெஞ்சிற்கபாதிக்கத்துடன் குளிர்ச்சி , வியர்வை, கீல்கள் கட்டுவிட்டுப் போவது போலிருத்தல் விக்கல், சுரம், குளிர், மந்தாக்னி, கண்ணில் கலக்கோவை, அடைப்பு தும்மல், நாற்றம், வாந்தி என்னுங் குணங்களை சிலேஷ்மரோகமானது தனக்குற்ற முதற்காரணமாக பெற்றிருக்கின்றது. இக்குணங்கள் சகல சிலேஷ்ம நோய்களுக்கும் பொதுவென்று அறியவும்.

சிலேஷ்மரோகபேதம் :- சிலேஷ்மரோகமானது வாதசிலேஷ்ம ரோகம் ஆதியாக இக்கா சிலேஷ்மரோகம் ஈறாக இருபது விதப்படுகின்றது. அவைகளின் பெயரையும் செய்கைகளையும் முறையே இதனடியிற் காண்க .

1. வாதசிலேஷ்மம் :- சர்வாங்கத்திலும் நறுக்கித்துவைத்தது போல் இருத்தல், குளிர்ச்சி , வியர்வை, குடைச்சல், இருமல், தும்மல், நாற்றம், வாந்தி, தலை நோய், நெஞ்சிற் கபாதிக்கத்துடன் வரளல், தொடையிலும் முழங்காலிலும் நோய் கடுகடுத்து மலசலம் இறங்குதல், சர்வாங்கத்திலும் பள்ளம் வீழ்தல் என்னுங் குணங்களுண்டாகும் .

2. பித்தசிலேஷ்மம் :- தலைசுழலல், விக்கல், சிலசமயம்
ரத்தங்கக்கல், நாவும் வாயும் முள்ளைப்போல் உறுத்தல் மஞ்சள் கோழை விழுதல், கண்டத்தில் கபங்கட்டுதல், மேல்மூச்சு விடுதல் வேதனை, சுரம், வியர்வை, சோம்பல், தாகம், நித்திரையின்மை, ஒரு வேளை உறக்கம், கண்ணீர் பெருகுதல், மார்புநோய், வயிற்றுப்பல், வாந்தி, இருமல், இரைப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும்.
அன்றியும் மயக்கம், பித்தாதிக்கம், அன்னத்துவேஷம், வாய்நீருறல், தேகத்தில் மஞ்சள் நிறம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

3. ரத்த சிலேஷ்மம் :- தினந்தினமும் ரத்த வாந்தி, அதில்
துர்கந்தமான கோழைவிழுதல், பலமும் காந்தியும் கெடல், அவயவங்கள் சுருங்கல், உள்ளங்கை உள்ளங்கால் காந்தல், மார்பிலும் தலையிலும் குத்தல், சுரம், வயிற்றுப்பல், தேகம் மரத்தல், மயக்கம்,
சிரோபாரம், காதிரைச்சல், மூர்ச்சை, கண் சுற்றலுடன் மயக்கம், முழங்கால், முதுகு, விலா, முழங்கை, கணுக்கை, கீல் இவ்விடங்களில் கடினமான வீக்கத்துடன் குடைச்சல், சளி, இருமல், நா இனிப்புடம் வரட்சி என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

4. க்ஷய சிலேஷ்மம் :- இது நாளுக்கு நாள் அவயங்கள் மெலி தல், சுரம், கண்டத்தில் கபாதிக்கம், கொட்டாவி, விக்கல், ஈனத் தொனி, சிரசிலும் செவியிலும் ஒரு வித இரைச்சல், தொடையிலும் முழங்காலிலும் நோய், அரோசகம், அசீரணம், மலபந்தம், நிறக் குறைவு, மூர்ச்சை, சோம்பல், தாகம், நித்திரையின்மை என்னுங்
குணங்களை யுண்டாக்கும். அன்றியும் நெய்யையொத்த சளிவிழு தல், முகத்தில் பளபளப்பு, குளிர், நாசியில் சலம் வடிதல், தேகத் தில் பாண்டு நிறம், அதில் அற்ப உஷ்ணம், சிதங்கலந்தமலம், மஞ்சள் நிறத்துடன் மெதுவாக மூத்திரம் இறங்குதல் என்னுங்குணங்களையும் உடையதென்பது சிலரின் கொளகை.

5. மூர்ச்சை சிலேஷ்மம் :- இது மூர்ச்சை, அதிக கோழை,
சரீர எரிச்சல், சுரம் சைத்தியம், தலைநோயுடன் கனத்தல், சுழலல், நடுக்கல், சுவாச வேதனை, கண்களில் உபதிரவம், சோர்வு, பிரமை, அன்னத்தில் வெறுப்பு, தொடையிலும் முழங்காலிலும் நோய், வயிற்றுப்பல், இரைச்சல், மலபந்தம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

6. சுட்க சிலேஷ்மம் :- இது சர்வாங்கமும் மெலிதல், கபா
திக்கத்துடன் இருமல், மேல்மூச்சு, சுரம், பலவீனம், அன்னத்தில் வெறுப்பு, அசீரணம், வியர்வை, தாகம், மார்புநோய், நித்திரைபங்கம், அதிக எரிச்சல், கழுத்து நேர்ந்து மெலிதல், கண்களில் நோயுடன் குத்தல், கண்டத்தில் ஒருவித சத்தம், ஈனத்தொனி
தலைச்சுற்றலுடன் நோய், மலபந்தம், வயிற்றுப்பொருமல், அக்கினி மந்தம், என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

7. சுர சிலேஷ்மம் :- சுரம், எரிச்சல், தாகம், வியர்வை, கீல்
களில் துர்பலம், ஏப்பம், அசீரணம், இருமல், தேகவன்மை குன்றல் கண்டத்தில் கோழை நிறைதல், மார்பில் சூலை, கபாதிக்கத்துடன் சீதளம், கொட்டாவி,சோர்வு, பிரமை, தேகங்கனத்தல், வலித்தல் நாவரளல், தாகம் என்னுங் குணங்களுண்டாகும் .

8.மூகைச்சிலேஷ்மம் :- கழுத்துக்குள் ஊமையைப்போல்
சப்தம், மிகுதியாக கோழை விழுதல், மார்பு நோய், சுரம், வாதாதிக்கம் நாவும் வாயும் உலர்ந்து கசப்பு புளிப்பு இனிப்பாக இருத்தல் கொட்டாவி, மலபந்தம், சீதளம், துர்ப்பலம் ஸ்தப்பித்தல் என்னுங்குணங்களுண்டாகும் .

9. துக்கச்சிலேஷ்மம் :- துக்கம், கண்டத்தில் கோழை கட்டிக் கொண்டு ஒலித்தல், சூலை, சர்வாங்கமும் மெலிதல், முழங்காலில் நோய் இரண்டு தொடைகளும் மெலிவதுடன் நோதல், நித்திரைப்பங்கம் எரிச்சல், துர்பலம், வயிறு பொருமல், மலபந்தம், தீபனக் கெடுதி சிரோபாரம், சுவாசம்,இருமல், எப்போதும் கபமே பெருகுதல், வாயில்
கசப்பு, புளிப்பு, இனிப்பாயிருத்தல் என்னுங் குணங்களுண்டாகும் .

10. தொனிச்சிலேஷ்மம் :- ஈனத்தொனி, மார்பு கனத்தல்
வியர்வை, கபாதிக்கம்,எரிச்சல், சுரம், குளிர், தலைவலி,
மண்டைக்குள்ளும் காதுக்குள்ளும் இரைச்சல், சர்வாங்கத்திலும் வாட்டம், தொடைகளுக்குள்ளும் முழங்காலுக்குள்ளும் குடைச்சல், நித்திரையின்மை என்னுங்குணங்களுண்டாகும் .

11. கோஷ சிலேஷ்மம் :- கண்டத்தில் கோழை நிறைதலினால் ஒட்டை, வெங்கலதொனி போன்ற ஒலி, தினவு, தேகம் மெலிதல் அக்கினிமந்தம், கொட்டாவி, இருமல், விக்கல், தேகம் சில்லிட்டு ஸ்தம்பித்தல், வரவர கண்டத்தில் அதிக சத்தம் உண்டாதல் நடுக்கல் ன்னுங்குணங்களுண்டாகும் .

12. சுவேத சிலேஷ்மம் :- தேகம் முற்றிலும் வியர்வை, உடல் மெலிதல், கண்டத்தில் கபம் அடைத்தல், மார்பு உலர்தல் நித்திரையும் சமாக்கினியும் கெடல், மலக்கட்டு, விக்கல் என்னுங்குணங்களுண்டாகும் .

13. மகாசிலேஷ்மம் :- சர்வாங்கத்திலும் வாயுவு வியாபித்தல் அதிக கோழை விழுதல், உடல் மெலிதல், நெஞ்சுக்குழியில் கலகலப்பு, சுரம், குளிர், சிரோபாரம், வியர்வை, அன்னத்திலும் வெறுப்பு, அஜீரணம், துர்பலம், சகல் கீல்களிலும் நோய்,  வயிறுப்பல், அக்கினிமந்தம், பித்தாதிக்கம், காசசுவாசம், என்னுங்குணங்களுண்டாகும் .

14. பேன சிலேஷ்மம் :- தினந்தோறும் மிக்ககோழையாக
வாந்தி, மார்பில் எரிச்சல், குத்தல், மேற்சுவாசம், அஜீரணம்,
இருமல், ஒக்காளம், அரோசகம், மலபந்தம், சீதளம், குளிர், வியர்வை தேகமிளைத்தல், துர்பலம், தலைவலி என்னுங் குணங்களுண்டாகும் . (பேனம் என்பது நுரை).

15. லாலா சிலேஷ்மம் :- சொள்ளுவடிதல்போல கோழை,
சலம் மிகுதியாக வடிதல், கண்டத்திலும் மார்பிலும் கோழைக்கட்டு, சுவாசம்நீடல், சர்வாங்கசீதளம், ஏதேனும் ஒரு அவயவவூனம், மார்பில்குத்தல், இருமல், வேதனை,அக்கினிமந்தம், மலபந்தம், சுரம், குளிர், அஜீரணம், வியர்வை, கொட்டாவி, பலவீனம்,
வீக்கம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

16. வமன சிலேஷ்மம் :- மாறாதவாந்தியுடன் கோழை வடி தல், கண்டத்தில் கபம் அடைத்துக்கொள்ளல், மார்பிற்குத்தல், உடல் மெலிவுடன் எரிச்சல், ஏப்பம், வீக்கம், கொட்டாவி, மலபந்தம், அக்கினிமந்தம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (வமனம் என்பது வாந்தி.)

17. க்ஷ£ண சிலேஷ்மம் :- பலக்குறைவு, சுரம், சிரோபாரம், தேகம் இளைத்தல், அதிக தாகம், விக்கல், இரைப்பு, நாவும்வாயும் கசக்குதல், மார்பில்குத்தல், குளிர், தொடைநோய், தலை நடுக்கம், நித்திரைபங்கம், மலபந்தம் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

18. சோஷ சிலேஷ்மம் :- இது பித்தமும் வாயுவும் அதிகரித்தலினால் பிறந்து சோர்ந்துவிழல், சுரம், குளிர், வியர்வை, வீக்கம், அதிக சீதளம், தசைகளில் நோய், தொடைகளிலும் முழங்கால்களிலும் வேதனை, கொட்டாவி என்னுங் குணங்களை யுண்டாக்கும்.
(சோஷம் என்பது சோர்வு.)

19. உத்கார சிலேஷ்மம் :- மாறாத ஏப்பம், அதிக வாந்தி,
மிக்க கோழைவிழல், வயிறுகல்லைப்போல் இருத்தல், ஈனத்தொனி, கண்ணீர் பெரிகல், அசீரணம், தேகவேதனை, தலைவலி, மலபந்தம், அக்கினிமந்தம், சூலை, பொருமல், அதிக எரிச்சல் தாகம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (உத்காரம் என்பது ஏப்பம்.)

20. இக்கா சிலேஷ்மம் :- விக்கல், கொட்டாவி, சிரோபாரம், சர்வாங்கவேதனை, மார்பிற்குத்தல், சீதளம், துர்ப்பலம், இரைப்பு, தொண்டைகம்மல், வயிறு கற்போல் இருத்தலுடன் நோதல், கண்ணீர் வடிதல், வாயும்நாவும் புளித்தல், நெஞ்ச உலர்தல் என்னுங்குணங்களை யுண்டாக்கும்.

மேற்கூறிய சிலேஷ்ம நோய்களை காச சிலேஷ்மரோகம், வாத சிலேஷ்மரோகம், பித்த சிலேஷ்மரோகம், ரத்த சிலேஷ்மரோகம், க்ஷமய சிலேஷ்மரோகம், சுர சிலேஷ்மரோகம், சுவாச சிலேஷ்ம ரோகம், தீபன சிலேஷ்மரோகம், மந்த சிலேஷ்மரோகம், தொந்த
சிலேஷ்மரோகம், சந்நிபாத சிலேஷ்மரோகம், அதிசார சிலேஷ்ம ரோகம், சல சிலேஷ்மரோகம், அக்கினி சிலேஷ்மரோகம், முசல் சிலேஷ்மரோகம், வெறி சிலேஷ்மரோகம், விகார சிலேஷ்மரோகம்,
விரண சிலேஷ்மரோகம், துர்கந்தசிலேஷ்மரோகம், நித்தியா சிலேஷ்மரோகம், பூதசிலேஷ்மம் என வேறு வகையாகவும் சில நூல்களில் வகுக்கப்பட்டுள்ளது.
சகல சிலேஷ்மங்களும் கபாலத்திலேயே நீடித்து உபத்திரவம் செய்யத்தக்கவைகள். இவைகளுடன் பித்தமாவது, வாதமாவது கூடில் கஷ்ட சாத்தியமும் அசாத்தியமுமாம் .

Post Comment

0 comments:

கருத்துரையிடுக