ஞாயிறு, ஜனவரி 10, 2010

பித்த ரோகங்கள் (நாப்பது வகையான பித்த நோய்கள் )- ரோக நிதானம்



பித்த ரோகங்கள் (நாப்பது வகையான பித்த நோய்கள் )


அரோசகம், அன்னவெறுப்பு, வாந்தி, கைப்பு, வெள்ளோக்
காளம், வாய் நாற்றம், தேகத்தின் நிறைக்குறைவு,குளிர்
சுரம், பதரல், எரிச்சல், சித்தபிரமை, நா உலரல், மயக்கம்,
மூர்ச்சை,தலை சுழலலுடன் கனத்தல், தலைவலி, கண்சிவக்குதல் சுழலல், விழித்தபடியிருத்தல், அதில் சலம் வடிதல், உடல் நடுக்கல் கொட்டாவி, விக்கல், பல்லைக்கடித்தல், கூவுதல், சோம்பல் தேகம், கண்,நகம், மலம், மூத்திரம், ஆகிய இவைகளில் மஞ்சள்
நிறமுண்டாயிருத்தல், தூர்நாற்றம், அதிக உஷ்ணத்தினால் சீதளமும் வியர்வையும், சிலேஷ்மமும் மேலிடுதல், அச்சிலேஷ்மத்தால் இனித்த வாந்தி, வாயும் உமிள் நீரும் கைப்பு, புளிப்பு இனிப்பாயிருத்தல் மந்தாக்கினி, அசீரணம், மலபந்தம், வயிறு பொறுமல், பேதி, இருமல், இரைப்பு, கோபம், துக்கம், பயம், வெறித்த பார்வை, வாயும்
சுவாசமும் நாறுதல், திடுக்கிடல், மனக்கிலேசம், சருமந்திரைதல் என்னும் இக்குணங்களை பித்தரோகமானது தனக்குற்ற முதற்காரணமாகப் பெற்றிருக்கின்றது. இக் குணங்கள் சகலபித்த
நோய்களுக்கும் பொதுவென்று அறியவும்.

பித்தரோக பேதம் :- பித்தரோகமானது ரத்த பித்த ரோக
மாதியாக மருந்திடு பித்த ரோக ஈறாக 40 விதப்படுகின்றன. அவை களின் பெயரையும் செய்கைகளையும் முறையே இதனடியில் சொல்லப்படும்.




1. ரத்தபித்தம் :- ரத்தவாந்தி, வயிறுப்பல், வியர்வை, துர்
பலம், குளிர்சுரம், சதா சீதளம், கால்கை நேத்திரம் இவ்விடங்களில் எரிச்சல், இரைப்பு, கோழை, கொட்டாவி, விக்கல், மந்தாக்கினி, அரோசகம், நிரக்குறைவு, வயிற்றுவலி, நாவுலரல், அருசி, அசீரணம், என்னும் இக்குணங்களை யுண்டாக்கும். இது வாய், குதம், ஆன்குறி
அல்குல் வழியாகவும் ரத்தத்தைவிழச்செய்வதால் அசாத்தியமாம்.

2. ஆம்லபித்தம் :- மஞ்சளை கரைத்தது போல் புளித்த
வாந்தி சூலை அக்னிமந்தம்.நடுக்கல், சோம்பல், தாகம், துர்ப்பலம் வியர்வை, நித்திரைபங்கம், கீல்களில் நோய், துக்கம், தேகத்தில் வளையம்போல் புடைகள், எழும்புதல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

3. ஆவரணபித்தம் :- தலைவலி, ஏப்பம், வாந்தி, கோழை
உடர்சோர்வு, தாகம், மலபந்தம், தேகம் வாட்டத்திலும் ஸ்தம்பித்தல் எரிச்சல், வியர்வை, நெஞ்சு வாளல், அசீரணம், கைப்பும் புளிப்புமான வாந்தி, மூர்ச்சை, விக்கல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.
4. உன்மாத பித்தம் :- அறிவீனம், மந்தபுத்தி , ஏப்பம்,
வாந்தி, வயிறுப்பல், அக்கினிமந்தம், அதிகமாகப் பேசுதல், கூவுதல், அழுதல், நித்திரைபங்கம், அதிகதாகம், மூர்ச்சை, கோழை, எரிச்சல் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

5. விஸ்மிருதி பித்தம் :-ஞாபகமறதி, மந்தவசனம், பிரமை, ஓக்காளம், சூலை, மலபந்தம், துர்பலம், வியர்வை, சீதளம், கீல்களில் அசதி, தொடையிலும் முழங்காலிலும் நோய், சோர்வு. தாகம், தலையில் நோயுடன் பாரிப்பு, மார்பு எரிச்சல், நாவிலும் வாயிலும் கைப்பு, புளிப்பு, இனிப்பு சுவைகள் தோற்றல், நித்திரைபங்கம், வீரிய நஷ்டம், என்னும் குணங்களை யுண்டாக்கும். (விஷ்மிருதி
என்பது மறதி).

6. திக்தபித்தம் :- வேப்பங்காய் போல் வாய்கசத்தல்
நா உலரல், தாகம், சுகம், சுரம், சிரசு கனத்தல், தலைசுழலல், கபா லத்திலும் காதிலும் இரைச்சல், துர்பலம், அவயங்கள் சுட்கித்தல் இருமல், நெஞ்சிற்கபம், கோபம், கண்சுழலல் என்னும் குணங்களை
யுண்டாக்கும். (திக்தம் என்பது கசப்பு).

7.ஆசியபாக பித்தம் :- வாயில் கொப்புளங்கள் எழும்பி
பழுத்துடைதல், துர்நாற்றம், மார்பில் நெருப்புபட்டது போலெரிச்சல் அரோசகம்,வியர்வை, மலபந்தம், வயிறுப்பல், பலயீனம், ஏப்பம், சுரம், சீதளம், மந்தாகினி, தொடைநோய், கோபம், கொட்டாவி, விக்கல், சூலை, அற்ப்பபோஜனம், என்னும் குணங்களை
யுண்டாக்கும்.

8. ஜிம்மிகபித்தம் :- நாவில் எள்ளுபோல் கொப்புளங்கள் எழும் புதல், இனிப்புடன் குழம்பாக வாய் நீறுரல், அசீரணம், அன்னத்தில் வெறுப்பு, பலயீனம், தலையிலும், கண்ணிலும் உபத்திரவம், நடுக்கல், கபாலத்திலும் செவியிலும் இரைச்சல், தொடையிலும் முழங்காலிலும் நோய் வியர்வையுடன் சர்வாங்க சீதனம் என்னும்
குணங்களை யுண்டாக்கும். இதுவே மதுர பித்தமாம்.

9. துர்கந்தபித்தம் :- ஒருவித நாற்றமுள்ள வாந்தி
சர்வாங்கத்திலும், கொப்புளங்கள் எழும்புதல், நாக்கு
துர்நாற்றத்துடன் முட்கள் போலிருத்தல், வியர்வை, கண்ணீர் வடிதல், மண்டயிலும், காதிலும் இரைச்சல், கண்டத்தில் நமைச்சல், திமிர் என்னும் குணங்களை யுண்டாக்கும்.

10. தத்ருபித்தம் :- சர்வாங்கத்திலும்,தடித்தலுடன் நமைச்சல் நாவும், வாயும் உலரல், உரோமச்சிலிர்ப்பு, சுரம், வியர்வை, நிறமாறல், இருமல், சோர்வு, பிரமை, கோபம், என்னும் குணங்களை யுண்டாக்கும்.

11. சோகபித்ததம் :- துக்கம், உள்ளங்கை, உள்ளங்
கால் எரிச்சல், சிரசிலும் காதிலும் இரைச்சல், நாவும் வாயும் சிலவேளை கைப்பாகவும், புளிப்பாகவும், இனிப்பாகவும் யிருப்பது மன்றி யுலரல், தேகத்தில் தடிப்பு, வாந்தி, சைத்தியம், அசீரணம் சூலை, வயிறுப்பல், தொடைகளில் நோய் என்னும் குணங்களை யுண்
டாக்கும். (சோகம் என்பது துக்கம்).

12. மூர்ச்சை பித்தம் :-
 மூர்ச்சை, மார்பின் பள்ளத்திலும்
நாபியிலும் நெருப்புபட்டது போல் எரிச்சல், ஸ்தம்பித்தல், அதிக தாகம், வியர்வை, இரைப்பு கபாலத்திலும் காதிலும் ஒரு வித சப்தம் நிறக்குறைவு, உடலில் தினையரிசி, வரகரசிபோல் கொப்புளம் எழும்புதல், நாவுலரலுடன் கசப்பு புளிப்பு இனிப்பாக இருத்தல் தேகத்திலும் அவ்வகை வாசனையே வீசுதல், நடுக்கல்,சிரசிலும் வயிற்றிலும் குத்தல் என்னும் குணங்களுடையது.

13. கண்டுபித்தம் :- சர்வாங்கத்திலும் திமிருடன் தினவு,
தடிப்பு, சாமை அரிசி, பிராமணங் கொப்புளங்கள் எழும்புதல், சோர்வு, நடுக்கம், பலயீனம், வாந்தி, அசீரணம், தலைநோய், மார்பு எரிச்சல், சிதாதிக்கம், வியர்வை, சூலை, நித்திரையின்மை, விக்கல், ஸ்தம்பித்தல், தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னும் குணங்களுடையது.

14. பீடக பித்தம் :- தேகமுழுதுந் தடித்து சிறுசிறு கட்டி
கள் எழும்புதல், அவைகளில் சுடுகையான சலம் வடிதல், பலவீனம், அதிக உஷ்ணம், ஒருவேளை குளிர்ச்சி, உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், காதடைப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

15. அனல பித்தம் :- சர்வாங்கத்திலும் மிக்க காங்கையுடன்
தடிப்பு, நித்திரைபங்கம், தலைவலி, ஸ்தம்பித்தல், வயிற்றிற்சூலை, நாவில் திமிருடன் படலம் எழும்புவதுமன்றி கசப்பும் புளிப்புமாக யிருத்தல், விக்கல், அவயவங்கள் இளைத்தல், எரிச்சல், மூர்ச்சை, தாகம் தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னுங் குணங்
களுண்டாகும்.

16. சுவேத பித்தம் :- சர்வாங்கத்திலும் வியர்வை, அதில்
கைப்பு நாற்றம், நாவும் வாயும் கைத்தல், பலவீனம், ஸ்தம்பித்தல், விக்கல், சுரம், சைத்தியம், சிரோபாரம், தாகம், அக்கினிமந்தம், தொடையிலும் முழங்காலிலும் நோய் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (சுவேதம் என்பது வியர்வை.)

17. இத்மா பித்தம் :- மாறாத விக்கல், ஏப்பம், மூர்ச்சை,
வியர்வை, உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் கொப்புளங்கள் எழும்புதல், இருமல், சுவாசம், தலைநோய், சுரம், தேகம் சில்லிட லுடன் ஸ்தம்பித்தல், பிரமை என்னுங் குணங்களை யுண்டாக்கும்.
(இத்மா என்பது விக்கல்.)

18. இக்கா பித்தம் :- ஒயாத கொட்டாவி, சர்வாங்கத்திலும்
வியர்வை, கொப்புளம் எழும்புதல், சீதளம், உரோமச் சிலிர்ப்பு, சுரம், நடுக்கல், சூலை, நடுமார்பில் எரிச்சல், சிரோபாரம், நித்திரை பங்கம், கண்ணீர் வடிதல் என்னுங் குணங்களுண்டாகும். (இக்கா என்பது கொட்டாவி.)

19. சூலைப் பித்தம் :- உடல் முழுதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி, நாபியில் குத்தல், ஏப்பம், அதிக தாகம், துர்க்கந் தத்துடன் கசப்பான வாந்தி, உரோமச் சிலிர்ப்பு, வியர்வை, தடிப்பு, திமிர், தினவு, தலைசுழலல், நடுக்கல், இரைச்சல், அவய வங்கள் சுட்கித்தல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், என்னுங்
குணங்களுண்டாகும்.

20. விஷ்டம்ப பித்தம் :- தேகங் கட்டுப்பட்டதுபோ லசை
வற்று இருத்தல், மார்பை சுற்றிலும் எரிச்சல், குளிர், சுரம், பல வீனம், ஈனத்தொனி, ஞாபகமறதி, பிரமை, மய்க்கம், மூர்ச்சை, மிகு தாகம் என்னுங் குணங்களை யுண்டாக்கும். (விஷ்டம்பம் என் பது ஸ்தம்பித்தல்.)

21. விரண பித்தம் :- தேகத்தில் சிறிதும் பெறிதுமான விர
ணங்கள் மிக ஏற்படுதல், திமிர், கனத்தல், நமைச்சல், நா கசத்தல், கறுத்தல், கோசஞ்சிவக்குதல், நித்திரையில் திடுக்கிட்டு எழுதல் கையில் நாடியானது படபடத்து துடித்தல், என்னுங் குணங்களுடையது.

22. ஊர்த்துவ பித்தம் :- அதிககோபம், சதாசண்டை செய்தல் இரைந்து கூவுதல், பூமியிற் குழி விழும்படியான பேதி, பிரமை, கண்சிவத்தல், நித்திரையின்மை, சரீரந்துலித்தல், என்னுங் குணங்க ளுடையது.

23. சுவாசபித்தம் :- அதிகசுவாசம், வயிறு கனத்தலோடு
பொருமல், §தைகமிளைத்தல், அதிகமாய் வாய் நீறுரல், கண் கலங்கலுடன் பார்வை மந்தம், மார்பு வலித்தல், இருமல் பசியின்மை என்னுங் குணங்களுடையது.

24. செம்பித்தம் :- தேகம் சிவத்தல், செம்பின் களிம்பு
நிறமாயும் சிவந்த நிறமாயும் வாந்தியாதல், மலம் இருகலோடு சிவந்து நழுகல் , மயக்கம், முத்து முத்தாக சிவந்த வியர்வை கசிதல் மிகுதாகம், தயக்கம், திடுக்கிடல், பயந்தெழுதல் என்னுங் குணங்களுடையது.

25. கறும் பித்தம் :- உடல் கருத்தல், கறுத்த நிறமான
வாந்தி, தயக்கம், சிரசிலும் சரீரத்திலும் நடுக்கல், தலைவலி
நித்திரை, கடைக்கண் சிவந்து மினுமினுத்தல், தேகங்கனற்று வற்றுதல், அருசி, பசியின்மை என்னுங் குணங்களுடையது.

26. கரப்பான் பித்தம் :- சர்வாங்கத்திலும் சொறி, உபத்திர
வத்துடன் கட்டிகள் எழுப்புதல், குழம்பான பேதி, வயிற்றில்
இரைச்சலுடன் பொருமல், இசிவு, கால்களில் விலவிலப்பு, இடுப்பு நோய், திமிருடன் சரீரத்தில் இடைவிடாத காந்தல், நிறக்குறைவு என்னுங் குணங்களுடையது.

27. எரிபித்தம் :- அடித்தொடை, பாதம், கண், உள்ளங்கால்
உள்ளங்கை, இவ்விடங்களில் எரிச்சல் காது, முதுகு இவ்விடங்களில் வறட்சி, முழங்கால் முழங்கை இவ்விடங்களில் விருவிருப்பு குளிர்ச்சியான இடத்திலும் குளிர்ந்த காற்றிலும் இருக்க விருப்பம் என்னுங் குணங்களுடையது.

28. துடிப்பித்தம் :- தேகத்தில் துடிதுடித்தலுடன் வெளிறல்,
சற்று நேரமாவது நிலையில்லாத அலைச்சல், அரிசி மீதும்
மாதர் மீதும் மிக்க விருப்பம், யாருடனாவது சண்டை செய்தல் சுறுசுறுப்பு எந்த வஸ்துவிலும் இச்சை என்னுங் குணங்களுடையது.

29. விஷம பித்தம் :- சோர்ந்து விழுதல், கடிந்து பேசுதல்
தேகம் முற்றிலும் விஷம் போற் பரவி விஷமிக்குதல், சரீரநோய் வீக்கம் அன்னத்தில் வெறுப்பு, என்னுங் குணங்களுடையது.

30.மூல பித்தம் :- வயிற்றில் இரைச்சலுடன்பேதி, மனச்
சலிப்பு, தாறுமாறான கோபம், மூலவளையத்தினின்று முளை தொஙகுதல், அடித் தொடையிலும் மேல் தொடையிலும் நோய், தேகத்தில் வெளிறலுடன் வீக்கம், அதிகநித்திரை, சோம்பல், கண் எரிச்சல் என்னுங் குணங்களுண்டாகும்.

31. களப் பித்தம் :- குரல்வளை கனத்தல், கைப்பான வாந்தி, தொண்டையினுள் புண்போலிருத்தல், நாவில் வழுவழுப்புடன் வறட்சி, பாதத்தில் வீக்கம், காதிரைச்சல், சிவந்த மயிர்முளைத்தல், புற இசிவு என்னுங் குணங்களுண்டாகும்.

32. ஓடு பித்தம் :- எழுந்தெழுந்து ஓடுதல், பிதற்றல், யாரையு மிகழ்ந்து பேசல், பல்லைக்கடித்தல், கண்சிவத்தலுடன் மூடி மூடி விழித்தல், கூச்சல், கொக்கரித்தல், கூத்தாடுதல், குதித்தல், அகங்
காரம் என்னுங் குணங்களுண்டாகும்.

33. மூடு பித்தம் :- பொன் ஆபரணம் முதலிய வஸ்துக்களை ஒருவருக்குந் தெரியாமல் கண்டவிடத்தில் மறைத்தல், யாரையும் இகழ்ந்து பேசல் முணு முணுத்தல், கையினாலும் காலினாலும் வீண் செய்கைகளைச் செய்தல் அன்னத்தில் வெறுப்பு என்னுங் குணங்களுண்டாகும்.

34. நடுக்கு பித்தம் :- சிரசு, நெற்றி, பிடரி, முதுகுத்தண்டு,
கண்டம் தாடை ஆகிய இவ்விடங்களில் நடுக்கம், கனத்தல், எரிச்சல், கைப்பான வாந்தி, அற்ப இருமல், நித்திரைபங்கம், வாய் நீரானது மார்பில்விழும்படி வடிதல், எந்நேரமும் நா துடித்தல் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

35. கபால பித்தம் :- கபாலமும், சிரசும் அதிரலுடன் அம்பு
பட்ட புண்போல் கடுத்தல், சர்வாங்கத்திலும் சீதளத்துடன் மஞ்சள்நிறம், முதுகுதண்டில்நோய், முகத்தில் வீக்கம், மூர்ச்சை, அடிக்கடி எழுந்திருத்தல் என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

36. தாக பித்தம் :- அதிக தாகம், அடிவயிறு துடித்தல், சர்
வாங்கத்திலும் அனல்வீசுதல், சீதளம், புளிப்பு வஸ்துக்களில் இச்சை, கண்டத்தில் மிகு வியர்வை, பிடரியையும் அடிநாவையும் இழுத்துக் கொள்ளுதல் போலிருத்தல் என்னுங் குணங்களுண்டாகும்.

37. திமிர்ப் பித்தம் :- சர்வாங்கத்திலும் திமிர், கனத்தல்,
மயக்கம், வயிறு பொருமலுடன் முள்ளைச் செருகினதுப் போலிருத்தல், உதயகாலத்தில் வாந்தி, மறதி, அசந்த நித்திரை என்னுங் குணங்களுண்டாகும்.

38. வலிப் பித்தம் :- அடிவயிற்றில் இசிவுடன்வலி, இரைச்சல், நாவரளல், சிரோபாரம், கீல்களில் நோய், ஈரலும் குடலும் வலிததல், பசுமஞ்சள் நிறம் போன்ற மலம், சர்வாங்கமும் துடிப்புடன் முடங்குதல், மாரடைப்பு என்னுங் குணங்களுடையது.

39. கிருமிபித்தம் :- மலத்தில் கிருமிவீழல், வயிற்றை
புரட்டி புரட்டி வலித்தல், சர்வாங்கத்திலும் தினவு, நோய், மல மும் சலமும் வரளல், கை கால் வாழத்தண்டைப்போல் சில்லிட்டு கனத்தல், தேகத்தில் ஒருவித நாற்றம் என்னுங் குணங்களுடையது.

40. மருந்திடு பித்தம் :- அடிகுடலில் நிலைத்து நின்று மெள னமாக இருத்தல், தேகம் ஊறல் மனக்கலக்கம், அசதி, வயிறு வெளிறல், நித்திரையின்மை, உணவில் வெறுப்பு, உழலல் என்னுங் குணங்களுடையது.

சகலபித்தரோகத்திலும் வாதமாவது சிலேஷ்மமாவது தனித்தனியே சேர்ந்தால் கஷ்டசாத்தியம். இவ்விரண்டும் சேர்ந்தால் அசாத்தியமாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக