ஞாயிறு, ஜனவரி 10, 2010

வாத ரோகங்கள் (எண்பது வகையான வாத நோய்கள் )- ரோக நிதானம்

வாதா நோய

சகல உயிர்களுக்கு ஆதாரமாயும் படைப்பிற்குக் காரணமாயு முள்ள வாயுவானது உண்ணுகின்ற உணவாதி பேதங்களினாலும், தகாத நடத்தைகளினாலும், தன்னிலை மாறி நோய்முகத்திரும்பி எண்பது வித வாதநோய்களை உண்டாக்குகின்றது. அவைகளாவன :-

1. பாதா§க்ஷபக வாதரோகம் :- சீதள பொருள்களையே
புசித்து வருதல் முதலிய காரணங்களினால் வாதமானது இருபாதங்களிலிருக்கின்ற சப்த தாதுக்களை அநுசரித்து அப்பாதங்களை நடக்கும்போது ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளச் செய்யும். எழுந்தாலும் நின்றாலும் நடந்தாலும் சுற்றி விழுவதுபோலிருத்தல், கால்கள் உதறுதல் தொடைகளில் வேதனை முதலிய குணங்கள் உண்டாகும். [பாதம் என்பது கால், ஆ§க்ஷபகம் என்பது தடை.]

2. பாதலகவாதம் :- அதிக சீதள பிரதேசத்தில் இருப்பதி
னாலும், சீதள காற்றினாலும் இந்நோய் உண்டாகி, வாதமானது உள்ளங்காலில் சேர்ந்துக்கொண்டு பாதத்தை தூக்கும்போதும் வைக்கும்போதும் களிமண் அப்பியதுப்போலும், செத்தை முதலியன ஒட்டிக்கொண்டதுப்போலும் தோற்றும். அப்போது கால்களில் மரத்தலும், கனத்தலும், நோதலும் ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளுதலும் அதிக உறக்கமும் உண்டாகும். இது நெடுநாள் நீங்காது. இத்துடன் பித்தமாவது சிலேத்துமமாவது சேர்ந்தால் சாத்தியம். இரண்டும்சேர்ந்தால் அசாத்தியம். (லகம் என்பது பற்றுதல்)

3.பாதஹரிஷவாதம் :- பாதத்தில் அநுசரித்த சீதளத்திற்கு
சூடான ஒற்றடம் போடுவதினாலும், அக்கினியில் காய்ச்சுவதினாலும், கூறிய சாத்தியக் குறிகள் மாறாக இருந்தாலும், முதலில் குதம் குய்யம் உள்ளங்கை, உதடு, என்னும் இடங்களில் உண்டாகி கோரமாக சீக்கிரத்தில் பரவினாலும் அசாத்தியம்.
4. அபிகாதவாதரோகம் :- அதிகநடை,வாகனங்களில் ஏறி
விரைவில் செல்லுதல், மல்யுத்தம் செய்தல், சீதள வஸ்த்துகளை புசித்தல் என்னுஞ் செய்கைகளினால் உண்டாகி சர்வாங்கத்திலும் வியாபிக்கும், அப்போது உடலில் அசதி, நோய், பக்க இசிவு, திமிர், முறுக்குதல்
சர்வாங்கமும் அடித்து துவைத்தது போலிருத்தல் ஆயாசம்
நீட்டலில் முடக்கலில் நோய் என்னுங் குணங்களுடையது.

5. புச்சாவர்த்தவாதரோகம் :- பாதத்தில் சீதளம் அது
சரித்து இருக்கும் போது மீளவும் சீதள வஸ்துகளை புசித்து நித்திரை செய்வதினால் இந்த ரோகம் பிறந்து கை கால் விரல்களை அது சரிக்கும். அப்போது விரல்களில் சிவந்த நிறமும், நோயும், மரத்தலும் உண்டாகும். இது விருத்தியடைய விரல்களை நீட்ட மடங்க கூடாமை ஏற்படும். (புச்சம் என்பது விரல்கள் ஆவர்த்தம் என்
பது சூழல்)

6.சீதகண்டுவாதரோகம் :- பாத நரம்பில் மிகு சீதளம்
சேருவதனால் இந்நோய் பிறந்து உள்ளங்காலில் அடிக்கடி சீதளத்துடன் நமைச்சலை பிறப்பிக்கும். அப்போது பாதத்தில் கனப்பு நோய், குத்தல், மிகு தினவு உண்டாகும். இது சாத்தியம். (சீதம் குளிர்ச்சி கண்டு என்பது தினவு).

7.கப்திவாதரோகம் :- சீதள காலத்தில் சீதள வஸ்துகள்
மிகுதியாய் சாப்பிடுதல் , பகல் நித்திரை, ஆழ்ந்த பள்ளத்தில்
உட்காரல், ஆகிய இவைகளில் ஏற்பட்டு குதிக்க்கால், பாதம், விரல்கள் முழங்காலுக்கு கீழ் மேல் சிறு தோடைகவுட்டி என்னும் இடங்களில் எதிலாவது நிலைத்து விடும், அப்போது அதி உறக்கம் , தேகத்தில் மரத்தல், கனத்தல், வீக்கம், குத்தல் உண்டாகும். இதற்கு உடனெ சிகிச்சை செய்யில் கஷ்டசாத்தியம்.இல்லாவிடில் அசாத்தியம். (கப்திஎன்பது உறக்கம்).

8. பாதகண்டகவாதரோகம் :- உள்ளங்காலில் சீதளம் அது சரிக்கும் போது உஷ்ண ஒற்றடம் போடுவதினாலும்,காய்ச்சுவதினாலும் உண்டாகி கணுக்கால்களில் தங்கி கால்விரல்களின் சந்துகளில்
பரவும். கலை தூக்கும் போதும் வைக்கும் போதும் காலில் முள்ளு, சிராய் ஊசிமுனை,கல், நகம், இவைகளால் குத்துவது போல் வேதனை வலி உண்டாகும். இது அசாத்தியம். (கண்டம் என்பது முள்ளு).

9. களாயகஞ்ச வாதரோகம் :- சீதளகாலத்தில் சீதள பூமி
யில் சஞ்சரிப்பதனாலும் சகா உட்கார்ந்திருப்பதனாலும் மிகு நித்திரையாலும் பிறந்து சகல கீல்களிலும் தங்கி யிருக்கும். அப்போது தேகத்தில் நோய், வீக்கம், எழுந்திருந்தால் நடுக்கல், நொண்டுதல், கீல்கள் தளரல், மரத்தல், கனத்தல் என்னுங் குணங்களுண்டாகும்.
(களாயம் என்பது கீல், கஞ்சம் என்பது ஊணம்)

10. சம்பூகசீரிஷ வாதரோகம் :- சீதளகாலத்தில் சிலேத்தும வஸ்த்துகள், பிண்ணாக்கு, வாயுவுள்ள வற்றல் முதலியவைகளைப்புசித்த்ல், அதிக நடை, பகல் நித்திரை, மிகுசையோகம் இவைகளால் பிறந்து முழங்காலில் கீல்களில் தங்கிவிடும். அப்பொழுது முழங்காலில் வீக்கம், தடித்தல், மரத்தல், நோய், குத்தல், மலபந்தம், நித்திரை என்னுங் குணங்களுண்டாகும். இதுவே நரித்தலை
வாதம். (சம்பூகம் என்பது நரி, சீஷணம் என்பது தலை)

11. பாதோபகாத வாதரோகம் :- அதிகசீதள மந்த சிலேத்
தும பொருட்களைப் புசித்தல், உட்கார்ந்து உறங்கல், மிகுசஞ்சாரம், புல், கல், கட்டை காலிற்பட்ட வேதனை ஆகிய இவைகளினாலுண் டாகி தொடைகளிற் பரவி தங்கியிருக்கும். அப்போது நீட்டின காலை முடக்கில் திமிர், மரத்தல், கனத்தல், விரல்களில் நோய், காலில் எதுவோ பூசினதுபோலிருத்த என்னுங் குணங்களுண்டாகும். (உபகாதம் என்பது அறை உண்டல்.)

12. கிருத்திரசி வாதரோகம் :- சதாகாலம் நடையின்றியிருததல், பகல் நித்திரை, பதினான்கு வேகத்தை யடக்கல், மாமிசம் இனிப்பு, உப்புப்பொருட்கள், எண்ணெய்ப் பொருட்கள், மந்தத்தையும் சீதளத்தையும் உண்டாக்கும் பொருட்கள் இவைகளை மிதமின்றி
புசித்தலினாலும் உண்டாகி தொடைகளின் நரம்புகளை அநுசரித்து பாதவிரல் முதல் அடிமுதுகுவரையிலு மிருக்கின்ற நரம்புகளின் துவாரத்திற் சேர்ந்துகொள்ளும். அப்போது தேகத்தில் குத்தல், கனத்தல், நோய், வேதனை என்னுங் குணங்களுண்டாகும். (கிருத்திரசி என்பது தொடை நரம்பு.)

13. சோணித வாதரோகம் :- உஷ்ண வஸ்த்துகள், காந்திய
அன்னம், உலர்ந்த பதார்த்தம் இவைகளை புசித்தலினாலும், பகல் நித்திரை, மிகுசையோகம், பதினாலுவேகத்தை மறித்தல் இவைகளினாலும் நரம்பின் துவாரங்களில் ஒடப்பட்ட உதிரமானது தடைப்படுபதனாலும் இந்நோயுண்டாகி கைகால்களின் கீல்களிலாவது அல்
லது சகல கீல்களிலாவது தங்கி அவைகளிற் குத்தல், நோய் வீக்கம், தினவு, சரீரத்தில் கருமைநிறம், சீதளம், சிரசிலுபத்திரவத்துடன் பாரிப்பு என்னுங்குணங்களையுடையது. இதுவே உதிரவாத
ரோகமாம். (சோணிதம் என்பது ரத்தம்.)

14.உருஸ்தம்பவாதரோகம் :- அதிசீத அல்லது தீயுஷ்ண
தன்மையுள்ள பொருட்கள் திரவப்பொருட்களை மிகுதியாகப்புசித்தலினாலும், சீதள காலத்தில் யானை முதலிய வாகனாதி வேகம், பகல் நித்திரை, இரவில் அநித்திரை, ஆகிய இ¨வாகளினாலும் பிறந்து தொடைகளிலிருக்கும், சிலேஷ்ம நீரிலும் மேதோ தாது விலும் மற்ற இதர தோஷத்திலும் வாயுவானது வியாபித்து தொடை மரத்தல் கனத்தல், நடையின்மை என்னுங் குணங்களுண்டாகும்.

15. சகனாவர்த்தவாதரோகம் :- தயிர், அதி சீதள சலம், மாப்பண்டம், கிழங்கு, கீரைக்கட்டை, கனிவர்கம், மஞ்த மாமிசமச்சங்கள் முதலியவைகளை அதிகமாய்ப் புசித்தலினாலும், சீரண காலசையோகத்தினாலும், கனநடையினாலும் உண்டாகி இடுப்பில் வாச
மாய்த்தங்கி இரண்டு சகனத்திலும் தொடைக்கு கீழிலும், மேலிலும் சஞ்சரித்துக்கொண்டே இருக்கும். அப்போது தொடைகளிலும் குடைச்சல் நோய், மரத்தல் குனியக்கூடாமை என்னும் குணங்களுண்டாகும்.

16. துனி வாதரோகம் :- சிலேத்தும மந்தவஸ்துகளினாலும் பதினாலு வேகத்தை யடக்குதலாலும் உண்டாகி கீழ்வயிறு குதம்
அல்குல், பிட்டம், இவ்விடங்களில் வியாபித்து வேதனை செய்யும். அப்போது வயிற்றில் மிகு உபத்திரவமும், அறுப்பது போலும், இழுத்து பிடிப்பது போலும் மரத்தல், கனத்தல், மலமூத்திரச்சிக்கல் என்னும் குணங்களுடையது.

17. பிரதி துனி வாதரோகம் :- துனிவாதத்தை பிறப்பித்த
வாறே இந்நோயும் பிறந்து முன்சொன்ன இடத்தைத்தாண்டி மேல் நோக்கி வியாபித்து பக்குவாசயம், மேல்வயிறு, முதலிய விடங்களில்
வேதனையை உண்டாக்கும்.

18. மூட வாதரோகம் :- சீதளப் பொருட்கள், மிகு உணவு,
அக்கினிமந்தம் இவைகளினாற்பிறந்து நாபிஸ்தானத்தில் கட்டியைப்போல கட்டிக்கொண்டு வேதனையை செய்யும். அப்போது மலபந்தம், வயிறுப்பல், நோதல், குத்தல், தேகமரத்தல் குடலை இழுத்துப்பிடிப்பதுபோலிருத்த லென்னுங் குணங்களுண்டாகும்.

19. ஆத்மான வாதரோகம் :- மலபந்தத்தை யுண்டாக்கும்
பொருட்கள், சீதள சிலேத்தும புள்ப்புத்தன்மைகளுள்ள பொருடகள், மாப்பண்டம், பனிக்காற்று இவைகளினாலுண்டாகி அடிவயிற்றிற்றங்கி வேதனையை செய்யும். அப்போது கிடலின் துவாரத்தில் நோய், சிறிது மலமும் மூத்திரமும் கட்டுப்படல், வயிற்றில்
கடகடவென்ற சத்தம், வயிறுப்புசம் வாதசுரக்குறி என்னுங் குணங்களுண்டாகும்.

20. பிரத்தியாத்மான வாதரோகம் :- மலபந்தத்தையும், மந்தத்தையும் உண்டாக்கும் பொருட்கள், நடையில்லாதிருத்தல், எந்நேரமும் ஈரத்தில் உட்காரல் ஆகிய இவைகளினால் உண்டாகி முன் சொன்ன ஆத்மான வாதத்தைபோலவே குடலின் துவாரத்தில் தங்கி அதிகரித்து மேல்நோக்கி வயிற்றில் இரைச்சல், நோய், எக்
காலமும் மரத்தல், மூத்திரபையில் நோயுடன் குத்தல், மலமூத்திர பந்தம், வயிற்றைக் கையால் அரக்குவதுபோலிருத்தல், மேல் மூச்சி, பக்கநோய் என்னுங் குணங்களுண்டாகும்.

21. அபதந்திரக வாதரோகம் :- மந்தவஸ்து, இலைக்கறி, மாமிசம் முதலிய பதார்த்தங்கள், பால், எள்ளு, பிண்ணாக்கு, பயரு இவைகளை அதிகமாக புசித்தலினாலும், பயம், துக்கம், பகல் நிததிரை, உபவாசம் ஆகிய செய்கைகளினாலும் பிறந்து சிலேஷ்ம நரம்பு, வாத நரம்பு, பித்த நரம்பு, ரத்த நரம்பு என்னும் நரம்புகளின் துவாரங்களினாலும் குடலுலும் வியாபித்து பின்பு மேல்நோக்கி மார்பு நரம்புகளில் பரவி மார்பிலும் சிரசிலும் நெற்றியிலும் நோயை பிறப்பித்து பிறகு சர்வாங்கத்திற்கும் வேதனையைக்கொடுத்து அவ்வங்கத்தை வில்லைப்போலவே வளைத்து வருத்தமுறச்செய்வதுமன்றி ஊர்த்துவகாயத்திலிருந்து அதோ காயத்தை மரத்தல் அடையசெய்வதும், அதோகாயத்திலிருந்து ஊர்த்துவகாயத்தை மரத்தலடையச் செய்வதுமாக இருந்து மிகுந்த உபத்திரவத்தை விளைவிக்கும். அப்போது கண்விழி கீழே செறிந்ததுப்
போல் இருத்தல் அல்லது மூடிக்கொள்ளுதல், புறாச் சத்தத்தைப்போல் நெஞ்சில் ஒரு வித சத்தம் எழும்பல், ஞாபகமறதி, விசையாக நடக்கும் போது தடுக்கி விழுதல், நடுக்கல், இளைத்தல், பிரமை, முதலிய குணங்கள் உண்டாகும். இது மார்பை விட்டு கீழ் இறங்கு
மாயின் கஷ்டத்தின் மேல் சாத்தியமாகும். இறங்காவிடில் அசாத்தி யம். இது மாதர்க்கு கருப்பங்கலைந்த காலத்திலும் மாதாந்திர ருதுகாலத்திலும் உற்பத்தியாகில் மிகவும் கஷ்டசாத்தியம்.

22. மனோவிருத்தி வாதரோகம் :- அனலாதி வெய்யல்,
கோபம் மனந்தபித்தல், அதிநடை, பயம், துக்கம், குத்துப்படல் இவைகளினால் பிறந்து மனோசக்தியைக் கெடுத்து, கீழ்வயிற்றிலும், பக்கத்திலும் மூத்திர நரம்புகளிலும், சிலேத்தும நரம்புகளிலும்
வாத நரம்புகளிலும் அநுசரித்து மலமூத்திரம் நழுகல் தேக உளைவு மனக்கெடுதி என்னுங் குணங்களுண்டாகும். இது ஒரு வருஷத்திற்குமேல் இருப்பின் அசாத்தியம்.

23. ஆந்திர பித்வாதரோகம் :- இது வாதவஸ்து சீதளவஸ்து மச்சம், மாமிசம், வெல்லம், அதிரசம் முதலிய பண்டங்கள், காந்திய அன்னம் இவைகளை அதிகமாக புசித்ததினால் உண்டாகி வயிற்றில் பெருங்குடலின் துவாரத்தில் வியாபித்து, வயிற்றில் கலக்குதல்
போலும், அறுத்தலுபோலுமிருத்தல், பொறுத்துப்பொறுத்து உப்பல், நோதல், வருத்தத்தின் மேல் மலமூத்திரம் கட்டுப்படல், வாந்தி ஏப்பம், மூர்ச்சை, பிரமை என்னுங் குணங்களுண்டாகும். இதற்கு குடல்வாதமென்றும் பெயர். இது கஷ்டசாத்தியம். (ஆந்திரம் என்பது குடல், பித் என்பது பேதித்தல்.)

24. அபதானக வாதரோகம் :- இனிப்பு, சீதள, மந்தப்
பொருட்களை மென்மேலும் புசித்தலாலும், பயம், உபவாசம், பகல் நித்திரை இவைகளினாலும் உண்டாகி சரீரத்தில் சப்த தாதுக்களிலும் நரம்புகளிலும் வியாபித்து, அடிக்கடி திடீலென்று எழுந்திருத்தல் பேச்சுக்குப் பேச்சு நகைத்தல் முதலிய குணங்கள் உண்டாகும். இதில் இன்னுஞ் சில துர்க்குணங்கள் உண்டானாலும் அல்லது நெடுநாட் சென்றாலும் கஷ்டசாத்தியம்.

25. நாளாவர்த்த வாதரோகம் :
- அதிக சீதள சலபானம்
மிகுந்த நடை, பதிநாலு வேகத்தை யடக்கல், வெகு சையோகம், ஆகிய இவைகளினால் உண்டாகி ஆண்குறி துவாரத்தின் அடியிலும் நடுவிலும் முனையிலும் தங்கி நிலைத்துவிடும். அப்போது மூத்திரமானது மாமிசம் மேதை எலும்பு மா இவைகளின் நிறங்களைப்
பெற்று கலங்கிய சுக்கிலம்போலும் நாளத்தின் வழியாய் பொறுத்து பொறுத்து ஒழுகும். இவ்வாய்வு அதிகரிக்க அதிகரிக்க அடிநாள முதல் முனைநாளம் வரையிலும் நோயும் குத்தலும் உண்டாகும்.
(நாளம் என்பது ஆண்குறியின் துவாரம்.)

26. மூத்திரசர வாதரோகம் :- உலர்ந்த பதார்த்தம், காந்த
லன்னம், உஷ்ணவஸ்து, லவணவஸ்து, காங்கைவஸ்து, பிரமாணந்தப்பி தினந்தோறும் புசித்தல், அதிக சையோகம், மலமூத்திர விருத்தி, மிகுந்தநடை ஆகிய இவைகளினால் பிறந்து ஆண் குறியின் துவாரத்தில் வியாபித்து மூத்திரத்தை கொஞ்சங் கொஞ்சமாகவும் அதிகம் அதிகமாகவும் இடைவிடாமல் ஒழுகச்செய்வதும், அன்றி
மூத்திரப்பைக்குள் தங்கி கனத்தல், எரிச்சல், நோய், திமிர் என்னும் குணங்களுடன் மூத்திரம் இறங்கும். இது மூத்திரத்தை சரம் போல் இறங்கலால் மூத்திரசரவாதம் எனப்பெயர் பெற்றது.

27. மேட்ரக்ஷ£ய வாதரோகம் :- வாதவஸ்து, சீதளவஸ்து
களி இவைகளை மிகவும் புசித்தல், மிகுபோகம், பதினாலுவேகத்தை மறித்தல், பகல் நித்திரை, வேகநடை இவைகளினால் பிறந்து ஆண் குறியின் வன்மையைக் குறைத்து அத்துவாரத்தை அநுசரித்து அவ்விடத்தில் எரிச்சலாவது நோயாவது கனத்தலாவது உண்டாகும்
படிச் செய்யும். இதனால் சையோக வெறுப்பும், பீசக்கெடுதியும் பிறக்கும். இது அதிகரிக்கில் பீச கோசங்களில் வீக்கமும், அதனால் நீர்க்கட்டும் உண்டாகும். இது அசாத்தியம். மேட்ரம் என்பது
ஆண்குறி. க்ஷ£யம் என்பது பலநாசம்.

28. இருதாவிருத வாதரோகம் :- இது லவண, சிலேத்தும, மந்தப்பொருட்கள், வரகரிச்சோறு முதலியவவைகளை புசிப்பதி னால், உண்டாகி இருதயத்தில் தங்கி உபதிரவத்தை செய்யும்.
அப்போது மார்பில் வாளால் அறுப்பதுப்போலிருத்தல், தேகம் கனத்தல், நோய், சீதளம், அரோசகம், வாந்தி, பிரமை, வியர்வை, புரளல், எரிச்சல், இளைப்பு கீல்களில் நோய் என்னுங் குணங்களுண டாகும். இது மார்பு விலா முதுகு என்னும் இவ்விடங்களில் வியாபித்து பின்பு வெளிப்புறத்தில் வியாபிக்கும். (இருத் என்பது மார்பு, ஆவிருதம் என்பது சூழல்.)

29. சுரோணி சூலைவாதரோகம் :- இது வாதவஸ்து, மந்த வஸ்து, மலபந்தவஸ்து, பதினாலுவேகத்தை யடக்கல் இவைகளிலை பிறந்து இடுப்பின் பக்கங்களில் தங்கி அவ்விடத்தில் அதிக குத்தல், வயிற்றில் சங்கடத்துடன் அறுப்பதுபோ லிருத்தல், பிரமை, மல மூத்திரக்கட்டு, வயிற்றிலும் பக்கத்திலும், நாபிக் குள்ளிலும் கனத்
தல் வயிறுப்பல், வாந்தி, ஏப்பம், எரிச்சல், உதடுலரல், இளைப்பு, நடுக்கல் என்னுங் குணங்களுண்டாகும். (சுரோணி என்பது பிட்டம். சூலை என்பது குத்தல்.)

30. நாபிசாருவாதரோகம் :- அதிகவாதவஸ்து, வயிற்றுப்பிச வஸ்து மலபந்தவஸ்து இவைகள் சேர்ந்த போஜனம், மிகுந்த சையோகம் பதினாலு வேகத்தை யடக்கல், அதிக நடை இவை களினால் பிறந்து நாபியை அனுசரித்து அவ்விடத்தைப்பற்றிய வாதவாத நரம்புகளிலும், சிலேத்தும நரம்புகளிலும் வியாபிக்கும், இதனால் கனத்தல், வாந்தி, கொட்டாவி, கீழ்வயிற்றில் சூலை, வயிற்றிலும் சூதசந்திலும், ஆண்குறியிலும், நோய் என்னும் குணங்களுண்டாகும். இது தொப்புளை பற்றியதால் நாபிசாரு வாதம் என்று பெயர்பெற்றது.

31. அஸ்டிலாவாதரோகம் :- இது நாபிசாரு வாதத்தை
யுண்டாக்கும் வஸ்துகளினால் பிறந்து அதைப்போல் நாபிஸ்தானத் தின் கீழ்நின்று அதிகரித்து மூத்திரப்பையில் துவாரத்திலும் அதற்குள்ளிலும், வெளியிலும், பக்கங்களிலும், கட்டிபோல் வீக்கத் தைப்பிறப்பிக்கும். அப்போது வயிற்றில் கனத்தல், உப்பல் மல
மூத்திரக்கட்டு, நோய், அரோசகம், நானாவித வேதனை என்னும் குணங்களுண்டாகும்.

32. பிரத்தியஸ்டில்லாவாதரோகம் :- சிலேத்துமவஸ்து, சீத வீரியவஸ்து, தயிர், கடலோரமாமிசம், நூலிழைந்துசலம் உண்டாகிய அன்னம், அஜீரணதோஷம், அதிககாற்று, பதினாலு வேகத்தை யடக்கல், சஞ்சாரமின்மை ஆகிய இவைகளினால் முன் சொன்ன அஷ்டிலா வாதத்தைப்போலவே பிறந்து நாபிஸ்தானத்திற்கு கீழே
னும் மேலேனும் கட்டிபோல் வீக்கத்தைப் பிறப்பித்து அவ்விடத்தில் குத்தல் முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.

33. ஸ்தனருக்கு வாதரோகம் :- இது முறுக்குப் பலகாரம், மந்தமாமிசம், சிலேத்துமவஸ்து, சேற்றுநீர் இவைகளின் சேர்ககையால் பிறந்து ஸ்தனத்தின் அடியில் வியாபிக்கும் அப்போது மூலைக்கு உள்ளீலும், வெளியிலும், மூளைக்கு நேர்முதுகிலும்
வேதனை யுண்டாவதன்றி மூலைக்காம்பை வாளால் அறுப்பது போலிருக்கும். அடிக்கடி வாந்தியுண்ட்டாகும். (ஸ்தனம் என்பது முலை ருக்கு என்பது அதிக நோய்).

34. பஷகாத வாதரோகம் :- மந்தவஸ்து, மலபந்தவஸ்து,
மயக்கவஸ்து, குளிர்ச்சி இடத்தில் நித்திரை, குளிர்ச்சி ஆசனம், தேகத்தில் சீதளசேர்க்கை, ஆகிய இவைகளால் பிறந்து உதிர ஓட்டம் குறைந்த பாதி சரீரத்தில் தங்கி அப்படியே சப்ததாதுக்களிலும் நரம்புகளிலும் அதுசரிக்கும். அப்போது பாதி உடம்பில் கனத்தல், நோய், மரத்தல், வேதனை அப்பக்கத்து கால்கள் மெலிதல், பிரமை, சுவாசம், அறிவின்மை, நானாவித நோய், பயங்கரம் என்னும் குணங்களுண்டாகும். இது ரத்த நரம்பையும்,
சன்ன நரம்பையும், உலர்த்தி கீல்களை தளரப்பண்ணி பிரபலப்படும். இதனைப் பஷவாதம், ஏகாந்தவாதம், அர்தாங்கவாதம், பாரிசவாதம், பக்கவாதம், இளம் பிள்ளை வாதம், எனவும் கூறுவர். (பஷம் என்பது பக்கம் காதம் என்பது அடித்தல்).

35. உதாவர்த்தவாதரோகம் :- வேகத்துடன் வருகிற மல
மூத்திராதிகளை யடக்கல், மந்தவஸ்து மல பந்தவஸ்துகளை புசித்தல், முதலிய செய்கைகளினால் பிறந்து கீழ்வயிற்றில் நிலைத்துவிடும். அப்போது அடிவயிற்றில் கனத்தல், உப்பல், நோய், மலசலகட்டு
என்னும் குணங்களுண்டாகும். இதில் கண்களும் குழி விழுந்து முற்கூறிய குணங்களும் மேலிடில் இது அசாத்தியமாம்.

36. தண்டகவாதரோகம் :- மந்தவஸ்து, சீதவீரியவஸ்து,
தயிர், அதிகலவணம், பகல்நித்திரை, பதினாலு வேகத்தையடக்கல், இவைகளின் செயலை மாற்றிவிடும்.இதனால் ரசாதி தாதுக்களில்
மரத்தல், சீதளம், உள்ளெரிச்சல், அதிவேதனை, நீர்கட்டு, என்னும் குணங்களோடு தேகமானது தண்டத்தைப்போல் விழுந்து நீட்டல் முடக்கல், அசைதல் முதலியது இல்லாமல் சலம் போல் இருக்கும்.

37. தனுஷ்தம்பவாதரோகம் :- இது சிலேஷ்தும மதுரவஸ்து சஞ்சாரமின்மை, சீதளச்சேர்க்கை இவைகளினால் பிறந்து தாதுக்களிலும், வியாபித்து உள்ளிலேனும் வெளியிலேனும் சஞ்சரித்து
தேகத்தின் முன்புறமாவது, பின்புறமாவது தேகத்தை வில்லைப்போல்வளைக்கும். அபோது தேகத்தில் கனத்தல் மரத்தல், நோய் பின்பு ஒருசாமம் பொறுத்து அதிகவேதனை, இளைப்பு முதலியன உண்டாகும். இதற்கு முன்னிசுவு பின்னிசுவு என்றும் பெயர்.


38. ஆ§க்ஷபக வாதரோகம் :- சீதளஞ் சேர்ந்த காலத்தில்
மந்தவீரிய வஸ்துவை புசித்தல், கடினமானவில்லை வளைத்தல் யானை யேற்றம் இவைகளினால் உண்டாகி இரண்டுபிட்டம், அக்குள், தோள், உள்ளங்கை, முன்கை ஆகிய இவ்விடங்களில் இருக்கின்ற வாத கப
ரத்த நரம்புகளில் வியாப்பித்துதேகத்தை முன்னும் பின்னும் உதைத்துக் கொள்ளச்செய்யும். அப்போது கைகால்களை அசைத்தல், நீட்டல் முடக்கல் இவைகளைச் செய்தல் அதிக நோய் சர்வாங்கமும் வாளால் அறுப்பதுப்போலிருத்தல், நடுக்கல், பிரமை என்னும்
குணங்களுடையது.

39. பாகியாயாமவாதரோகம் :- 
சீதளவஸ்து மந்தவஸ்து சல பதார்த்தம், அசீரணம் சஞ்சாரமின்மை முதலியவைகளினாலுண்டாகி சரீரத்துக்கு வெளிப்புறம் இருக்கிற சன்னநரம்பு, ரத்தநரம்பு, வாதாநரம்பு, சிலேஷ்மநரம்பு இவைகளின் மத்தியஸ்தானத்திலும்
ஆமாசயஸ்தானத்திலும் வியாபித்துக்கொண்டு சரீரமுற்று மிருக் கின்ற சகல அவயங்களும் நீட்டி முடக்கும்போது மரத்தல், குத்தல், சீதளம், கனத்தல், இடைவிடாத குடைச்சல் முதலிய துர்க் குணங்களைச்செய்யும் இதனால் தேகமும் சிரசும் பின்புறமாக வளைதல், மல மூத்திரக்கட்டு, மரத்தல், தாழ்வாய் பிடித்தல், நோய்
கம்மியவார்த்தை, நகைத்தல், வியர்வை, எரிச்சல் என்னும் குணங்களை யுண்டாகும். இவ்வாதம் மாதர்களுக்கு பிரசவகாலத்திலும், பிரசவித்த பிறகும் காணில் அசாத்தியம். இது அடிக்கடி வேகத்துடன் காணுமாகில் தனூர் வாதம் என்றும் பெயர். (ஆயாமாம்
என்பது சஞ்சரித்தல்)

40. அந்தராயாம வாதரோகம் :- மேற்கூறிய வாதத்தை பிறப் பித்த வஸ்துக்களை அதிகமாகப் புசிப்பதினால் உண்டாகி சரீரத்தின் உட்புறத்து நரம்புகளில் சேர்ந்துக்கொள்ளும். அப்போது உட்புறத்தில் சத்தம் எழும்புவதுடன் குத்தல், மலமூத்திரபந்தம், பிரமை,
வியர்வை, நிலைக்கண்படல், கொட்டாவி, பற்கடித்தல் விலா யெலும்புகளில் நோய், முதுகையும் சிரசையும் இழுத்துப் பிடித்ததுப் போலிருத்தல் என்னும் குணங்களுண்டாகும். இது தனுர் வாதம்போல் வளைத்து கொஞ்சநேரம் பொறுத்து விடும். (அந்தரம
என்பது உள்.)

41. சந்நியாச வாதரோகம் :- இது தேகத்தில் சீதளசேர்க்
கையினால் உண்டாகி சகல கீல்களிலும் சர்வாங்கத்திலும் பரவி, கீல்கள் அசையக் கூடாமை, தேகம் அசைவற்று யிருத்தல், சர்வாங்க நோய், நடுக்கல் முதலியன உண்டாகும்.


42. அபிநியாச வாதரோகம் :- இது சிலேஷ்மபித்தவஸ்து
புராதன அகாலபோஜனம் பதினாலுவேகத்தை யடக்கல் அதிசுரம் இவைகளினால் பிறந்து பிராணன் அபானன் என்ற வாயுக்களை இருதயத்தில் நிறுத்தி மனோவாக்கு காயங்களின் செய்கைகளை ஒழிப்பது மன்றி ஆரம்பத்திலாவது அந்நியத்திலாவது காது அடியில்
வீக்கத்தையு முண்டாக்கும்.

43. ஆட்டிய வாதரோகம் :- 
அதிக இனிப்புவஸ்து, எண்ணெய் வஸ்து, மச்சம், மாமிசம், தயிர், பால் இவைகளை மிகவும் புசித்து எக்காலத்திலும் நடையின்றி பகல் நித்திரை செய்வதினால் பிறந்து சப்ததாதுக்களில் இருக்கின்ற வாதமார்க்கங்களையும் சிலேத்தும
மார்க்கங்களையும் அடைத்து சிலேத்துமத்தோடு கூடிக்கொண்டு உபத்திரவத்தைச்செய்யும். அப்போது தேகத்தில் மரத்தல், கனத்தல், நோய், உறக்கம், இளைத்தல், விரல் அழுந்தும்படியான வீக்கம், மலமூத்திரசிக்கல், புரளல், பிரமை, தாழ்வாய்நோய் என்னும் இக்
குணங்களை யுண்டாக்கும். தேகத்தில் வியர்வை, யுண்டாகில் அசாத்தியம். இன்றேல் சாத்தியம். (ஆட்டியம் என்பது கூடல்.)

44. விஸ்வபித் வாதரோகம் :-
 தண்டாயுதத்தை சுழற்றல், கல் முதலியவைகளை விசையாக வீசல், வில்வளைத்தல், முதலிய கடினச் செய்கைகளினால் உண்டாகி உள்ளங்கையிலும் விரல்களிலுமிருக்கும்
வாதசிலேஷ்ம நரம்புகளை யனுசரித்து கைகால் அசைத்தல், முடக்கல், நீட்டல் இவைகள் கூடாமை, தேகத்தில் மரத்தல் முதலியன உண்டாகும். (விஸ்வம் என்பது சமஸ்தம், பித் என்பது பேதித்தல்)

45. சுவாலித வாதரோகம் :- வாதவஸ்து சீதளசலபானம்,
சேற்றுநீர், உபவாசம், காந்திய அன்னம், மிகுசையோகம், கடும் வெய்யல், சதா வேலை இவைகளினால் உண்டாகி சடராக்கினியால் அதிகரித்து வயிறுமுற்றிலும் எரிச்சலை யதிகரிக்கும். இதனால் சரீர எரிச்சல், மேலில் அறியக்கூடாத காங்கை, வாயுலரல், விட்டு விட்டுக் குத்தல், பித்தாதிக்கம் என்னுங் குணங்களுண்டாகும்.
இது அசாத்தியம். (சுவாலிதம் என்பது மிகுந்த எரிச்சலை யுண்டாக்குதல்.)

46. அவபாகுக வாதரோகம் :-
 சிலேஷ்மவஸ்து, மந்தவஸ்து, மதுரவஸ்து இவைகளைப் புசித்தல், சஞ்சாரமின்மை, பனிக்காற்றுள்ள இடத்தில் சதா ஸ்திரீபோகஞ் செய்தல் முதலியவைகளால்
உண்டாகி தோள்களிலிருக்கும் ரத்தநரம்பை அநுசரித்து அவைகளை மெலியச்செய்து கைகளில் மரத்தல் குத்தல் என்னுங் குணங்களை உண்டாக்கும்.

47. அநாயாசக வாதரோகம் :- வேகமான ஒட்டம், பதினாலு வேகத்தை யடக்குதல், சீதளவஸ்து, குறை உணவு இவைகளினால் உண்டாகி சகல தாதுக்களிலும் வியாபிக்கும். அப்போது தேகத்தில் வேதனை, மரத்தல், குத்தல், கனத்தல், நானவித வருத்தம் என்னும் குணங்களுண்டாகும். (அநா என்பது பிராணன், ஆயாசகம்
என்பது வருத்தம்.)

48. அவுஷ்மாபக வாதரோகம் :- இது மிகுசீத அல்லது உஷ்ண்த் தன்மையான பொருட்கள், உவர்ப்புப் பொருட்கள், மலபந்தப் பொருட்கள், கிழங்குகள், அகால அபக்குவ உணவுகள் முதலியவைகளை அருந்துவதினாலும், கோபம் துக்கம் ஆகியவைகளினாலும், சடராக்கினி மிகுதியினாலும் உண்டாகி, சரீரத்தின் நடுவிற்றங்கி, சிரசி
லும் கபாலத்திலும் சஞ்சரித்து நடுநெற்றியிலும் மார்பிலும் எரிச்சல், தலையிலும் முதுகிலும் நோய், நடுக்கல், வாந்தி, வியர்வை, பிரமை, ஒருவேளை கண்டத்திலும் நெற்றியிலும் புருவத்திலும் விடாவேதனை என்னுங் குணங்களுண்டாகும்.

49. ஊர்த்துவாமிச்சர வாதரோகம் :- மேற்கூறிய அவபாகுக வாதத்தை யுண்டாக்கிய வஸ்துக்களினாலும் பிறந்து தோளிலிருக்கின்ற சப்த தாதுக்களையும் அனுசரித்து பாம்பைப்போல திரியும். அப்போது தோள் மரத்தல், வலி, கனத்தல், துர்ப்பலம் என்னும்
குணங்களுண்டாகும். (ஊர்த்துவம் என்பது மேலே. அம்மிசம் என்பது தோள். சரம் என்பது ஒடுவது.)

50. ஆயாசாவர்த்த வாதரோகம் :- பிரமாணந் தப்பி புசிக்
கும் பித்த கப வஸ்துக்களினாலும் பலவித அன்னத்தினாலும் உண்டாகி சப்த தாதுவிலும் அனுசரித்து ஆயாசத்தை பிறபித்து சர்வாங்க நோய், குத்தல், பிரமை, இளைப்பு என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

51. அர்த்தித வாதரோகம் :- சைத்திய வஸ்துக்களை புசித்தல், வெகுநேரம் உரத்துபேசல், தலையிற்பாரம் எடுத்தல், மிகவும் நகைத்தல், பயப்படல், கழுத்தைச் சாய்த்து தும்மல், வளையாவில்லை வளைத்தல், பாக்கு முதலிய கடின வஸ்துக்களை கடித்தல், ஆகியவைகளினா
லுண்டாகி பாதி முகத்திற் சஞ்சரிக்கும். அப்போது நெற்றி, நாசி, செவி, புருவம், சிரசு ஆகிய இடங்களில் நோய், தலை நடுக்கலுடன் வேதனை, கம்மலுடன் குளறியவார்த்தை, பேச்சு வறண்டுவருவது, நா மரத்தலுடன் உள்ளே சுருங்குவது, ஒருகண் மூடுவது, ஒருகண் விழிப்பது, காதுகேளாமை, வாசனையறியாமை, அறிவு நீங்குவது
நித்திரை அதிகரிப்பது, முதுகுதணடு எலும்பு பாதி உடம்பு நோய், உமிழ்நீரானது விசையுடன் ஒழுங்காக விழாது சமீபத்தி லொருக்களித்து விழுவது, பயம் என்னும் குணங்களை யுண்டாக்கி பாதமுகத்தை விகாரப்படித்தும். சிகிச்சைகளினால் மூன்று மாதத்திற்குள் சாத்தியம். ஒரு வருஷமாயின் அசாத்தியம்.

52. அனுஷ்தம்ப வாதரோகம் :- சிலேத்தும மந்த பதார்த்தம  கிழங்குகள், கீரைக்கட்டை முதலிய வேர்கள், சீதனஜலம், சீதள காற்று பகல்நித்திரை இவைகளில் பிறந்து இரு கால்களும் மரத்து இருகினது போல் நாவு உள்ளே சுருங்குவது, முகத்தில் தொழிலடங்குவது சீதளமதிகரிப்பின் சிலேத்தும குணம் மேலிடுவது என்னும் குணங்களுண்டாகும். (அனு என்பது தாடை).

53. உக்கிராக்கிரகவாதரோகம் :- தயிர், பால், இலைகறி
துவரை, கிழங்கு, மச்சமாமிசம், அகால உணவு, பதினாலு வேகத்தையடக்கல், மிகுசையோகம் இவைகளினாலுண்டாகிசிரசு கண்டம், மார்பு, கீழ்வயிறு, திரிகஸ்தானம், மர்மஸ்தானம் மரத்தல், எரிச்சல்
தலையிலும், மர்மஸ்தானங்களில் எரிச்சல், குடைச்சல்,
மற்றைடங்களில்லற்பநோய் என்னும் குணங்களுண்டாகும்.இது முன் சொன்ன குணங்களில்பித்தசிலேத்துமங்களில் தொந்தப்பட்டு
அதன் தன் குணங்களை பிறப்பித்து சகிக்கக்கூடாத எரிச்சலை உண்டாக்கிக் கொண்டு நெடுநாள் நீங்காதிருக்குமாயின் அசாத்தியமாம்.

54. விஸ்மாரியகவாதரோகம் 
:-சீத, உஷ்ண பித்த இலவ
ணத்தன்மைகளை யுடைய பொருட்கள் மிகுதியாக அருந்துதல் முதலியவைகளினாலுண்டாகி சரீரத்தின் மத்திய கண்டத்தை அனுசரித்து அதிக மறதி, மார்பிலும், சிறசிலும் எரிச்சலுடன் நோய் நெற்றி காது, சிரசு, முதுகு, விலா இவ்விடங்களில் மரத்தல் கனத்தல், வியர்வை, இளைத்தல், தாகம், தலைசுழல், மறதிஅறிவு
மயங்கலெனும் குணங்களுண்டாகும். இது பசி என்றும்
இன்னவித உபத்திரவமென்றும் தெரியவொட்டாக மறதி யை உண்டாக்கலால் விஸ்மாரியகவாதரோகம் எனப் பெயர் பெற்றது.

55. களாவர்த்தனவாதரோகம் :- அன்னபானாதிகளை புசி
காலத்தில் தாள் விரியும்படியாக வாயை மிகவும் திறத்தலினால் சீதளவஸ்துவினாலும், அஜீரண உணவினாலும் பிறந்து கழுத்து நரம்புகளை அனுசரித்து கழுத்து நோய், கனத்தல், மரத்தல், பிகுத்துக்
கொள்ளல், சகிக்கக்கூடாத வேதனை என்னும் குணங்களுண்டாகும்.

56. பிரமோன் மந்தவாதரோகம் :- 
குதிரை முதலிய வாகனங்களிலேருவதனாலும், காங்கையாலும், பித்தவஸ்துகளாலும், சரீரத்தை உலர்த்துகின்ற பதார்த்தங்களினாலும், பிறந்த பித்தத்துடன்
கூடி உடலுக்கு எரிச்சலையும், நேத்திரத்திற்கு மயக்கத்தையும் நடைக்கு மந்தத்தையும் உண்டாக்கும்.

57. அதிதாபகவாதரோகம் :- இது வாதாதி தோஷங்களை
விருத்திச்செய்யும் பொருட்கள், சீதளப் பொருட்கள், மந்த, அசீரணப்பொருட்கள், மாமிச கிழங்கு வகைகள் முதலியவைகளினால் ஏற்பட்டு சர்வாங்கத்தையும் அனுசரித்து தலை சுழலல், கடைக்கண் துடித்தல், கொட்டாவி, மிகுநித்திரை, இன்னவித வேதனையென்று
சொல்லக்கூடாமை, ஆயாசம், தலைமரத்தல், கையுதால், விரல்முடங்குதல், இரைச்சலில்லாத பேதி அல்லது அதிக பேதி, மூத்திரம் பெருகுதல், வாந்தி, வயிறுப்பல், ஞாபகமறதி என்னுங் குணங்க ளுடையது. இதில் சொல்லிய துர்க்குணங்கள் யாவுங் கண்டாலும்,
அல்லது சிலது கண்டாலும், கண்ட மூன்றாம்நாளில் மரணம். அந்நாள் தப்பில் சாத்தியமாகும்.

58. ஆசியா§க்ஷபவாதரோகம் :- சிலேத்தும மந்த பதார்த்
தம், கிழங்கு வகைகள், கீரைவேர், இலைக்கறி, கனிவகை, பித்த வஸ்து, எண்ணை வஸ்து, தயிர், மச்சமாமிசம் இவைகளினால் பிறந்து காது, நாசி, தாடை இவைகளில் அனுசரித்து வாயின் நடுவிலும், அதற்கு கீழிலும் மேலிலும் சஞ்சரித்துக்கொண்டு இருக்கும். அப்போது நாக்கு தம்பித்தல், தழுதழுத்தவார்த்தை, பல்லைக் கடித்
தல், சிரசு முகம், பாதம் இவைகளில் துடித்தல், பிரமை, கழுத்தில் நோயுடன் பிகுத்துக்கொள்ளுதல், ரத்தங் கக்கல், பார்வை சிதறல், மறதி, தேகம் மரத்தல், நாசியில் நோய், பீனசம் என்னுங் குணங்களுண்டாகும். இது அதிகரித்து சர்வாங்கத்தில் நடிக்கலை உண்டாக்கில் அசாத்தியம். (ஆசியம் என்பது வாய்.)

59. தொனிவிச்சின்னவாத ரோகம் :- சிலேத்தும வஸ்து,
மந்தவஸ்து, வாதவஸ்து, சீதவீரிய வஸ்து, அஜீரண உணவு, பிண்ணாக்கு, பயம், பட்டினி இவைகளினால் பிறந்து அடிநாவை அனுசரித்து கண்டத்திலிருக்கும் சிலேத்துமத்தில் கூடிக்கொண்டு கண்டத்தொனியை துண்டிக்கும்படிச் செய்யும். இது அதிகரித்தால் நாவை
அசைக்கமுடியாமை என்னுங் குணங்களை உண்டாக்கும். (தொனி என்பது சத்தம், விச்சின்னம் என்பது துண்டித்தல்.)

60. திர்க்குபிராந்தி வாதரோகம் :- உலர்ந்த பதார்த்தம்,
லவணகார வஸ்து, மந்த பதார்த்தம், மச்சங்கள், சிலேத்தும பித்த வஸ்து, பிண்ணாக்கு ஆகிய இவைகளினால் பிறந்து விழிகளின் மூலத்தில் அனுசரித்து அவ்விடத்திலிருக்கின்ற சிலேத்துமத்தில் கூடிச்கொண்டு கண்களில் நீர்க்கம்மல், கலங்கல், நோய், பிரமை, எரிச்சல் விழிக்கும்போது மயக்கம் என்னும் குணங்களுடையது. இதனை
கண் மயக்குவாதம் என்றுங் கூறுவர். (திர்க்கு என்பது கண், பிராந்தி என்பது மயக்கம்.)

61. தொநோபகாத வாதரோகம் :- மலபந்தவஸ்து, மந்தவஸ்து, சீதவிரியவஸ்து, எண்ணைவஸ்து, மிகுபட்டினி, வேகநடை, மிகுந்த வார்த்தை, துக்கம் ஆகிய இவைகளினால் உண்டாகி பாதிவாயிலும், நாசி மூலத்திலும் அனுசரித்து அவ்விடத்து சிலேத்துமத்தில்
கூடிக்கொண்டு தொனியைக்கொடுக்கும், அப்போது கிச்சுக்குரல் கம்மியவார்த்தை ,மூச்சுத்திணறல் முதலிய குணங்களுண்டாகும்.

62. திர்குஸ்தம்ப வாதரோகம் :- அதிஉணவு, அகால
உணவு, பகல்நித்திரை, மந்தசீதளவஸ்து, மாப்பண்டம் கிழங்கு வகை, மச்சமாமிசம், வெகுநடை ஆகிய இவைகளில் பிறந்துவிழிகளின் மூலத்தில் சேர்ந்து கொண்டு நெற்றியிலும்,முகத்திலும் மரத்தலுண்டாகி பின்பு, கண்ணிலும், புருவத்திலும் இமையிலும்
கனத்தல், மரத்தல் அக்கண்விழியை கையால் தடவி
பார்க்க ஒட்டாங்குச்சி போல் தோற்றல், நீர்கம்மல் என்னும்
குணங்களுண்டாகும்.

63. விவுர்தாசியவாதரோகம் 
:- சிலேத்துமவஸ்து சீதவீரிய வஸ்து, அதிஉணவு, பகல்நித்திரை, வெகுநடை ஆகிய இவைகளில் பிறந்து வாயின் நரம்புகளை அனுசரித்து நிற்கும். அப்போது வாயானது மூடாமல் திறந்தபடியேயிருந்தால் வாயில்நீர்வடிதல், உடல் உளைவு, முதலிய குணங்கள் உண்டாகும். (விவுர்தம் என்பது திறத்தல்).

64. சம்விருதாசிய வாதரோகம் :- மச்சமாமிசம், மந்தப்
பொருட்கள், அகால உணவு, தயிர், மிகுலவணம், அநித்திரை
வெகுநடை ஆகிய இவைகளில் பிறந்து விவுர்தாசியவாதம் போல் நரம்புகளை அனுசரித்து கபத்தில் கூடிமூடிய வாயைத் திறக்கக்முடி யாமை, அவ்வாயில் மரத்தலும், தடித்தலு, வலியுமுண்டாகும். (சம் என்பது மிகுதி விருதம் என்பது மூடல்)

65. புருவாடோபக வாதரோகம் :
- சிலேத்துமவஸ்து, மலபந்தவஸ்து, மந்தவஸ்து, அகால உணவு, கிழங்குவகை, தலையிற் சீதளந்தாங்கல் மிகசீதளடத்தில் சஞ்செரிதல் ,பகல் நித்திரை, ஆகிய இவைகளினால் உண்டாகி நெற்றி, கண், புருவம், இமை இவைகளை அனுசரித்து
புருவங்களை அடிக்கடி துடிக்கச்செய்தல் சில சமயம் கண்களில் நீர் வடிதல், நெற்றியில் நோய் முதலிய குணங்களுண்டாகும்.
(ஆடோபகம் என்பது துடித்தல்).

66. பாதிரிய வாதரோகம் :- மச்சமாமிசத்தையும், மந்த
வஸ்துவையும் பிராணந்தப்பி ம்புசித்தலினால் பிறந்து காதின் உள்ளிலும், அடியிலுமிருக்கின்ற சிலேத்துமத்தோடு கூடி வாதநரம்புகளை அனுசரித்து சத்தமார்கத்தையடைந்து எருங்கூச்சலிட்டாலும்
கேளாமை சலம் வடிதல் என்னும் குணங்களுண்டாகும்.
(பாதிரியம் என்பது கடினத்துக்கும் செவுட்டுக்கும் பேர்).

67. கர்னசூலை வாதரோகம் :- அதிக சீதளதாடாகத்தில்
மூழ்கி தலையை உலர்த்தாமல் ஈரத்தாங்கச்செய்தல். குளிர் காற்றில் திரிதல் உடனே சிலேத்துமஸ்துக்களைப் புசித்தல் ஆகிய இவைகளினால் பிறந்து காதுகளில் சேர்ந்துக்கொள்ளும். அப்போது செவிகளின் மூலத்தில் குத்தலுடன் நோய், சிரசு, பிடரி, நெற்றி, நெறி,
கண், புருவம், நாசி, தந்தங்களின்வேர், தாடை, கண்டம் ஆகிய இவ்விடங்களில் வாளால் அறுப்பதுபோலிருத்தல், தேககனதி, குடைச்சல் என்னுங் குணங்களுண்டாகும். (கர்னம் என்பது
காது.)

68. அவபேதக வாதரோகம் :- இனிப்புப் பொருள்கள், மிகு
உணவு உலர்ந்த பதார்த்தம் பகல் நித்திரை ஆகிய இவைகளினால் உண்டாகி சிலேத்துமத்தினால் தடைப்பட்டு கண், புருவம், நெற்றி முதலியவிடங்களில் பரவி முப்பது நாழிமுதல் மூன்றுநாள் வரை
யில் இரவும் பகலும் நெற்றி பிளந்துபோடுவதுபோல் சகிக்கக் கூடாத வேதனை முதலிய குணங்கள் உண்டாகும். (அவபேதகம் என்பது பிளக்குதல்)

69. ஊர்த்துவமுக வாதரோகம் :- சீதளப்பொருட்கள், மல
பந்தப்பொருட்கள், பகல் நித்திரை, சதாபடுக்கை அல்லது உட்கார்ந்திருக்குதல், மலசலம் அடக்கல் இவைகளினால் பிறந்து மேல்வயிற்றையும் மார்பையும்பற்றி அபான சமான வாயுக்களுடன்கூடி அதிகரித்து மிகு வேகத்துடன் மேல் எழும்பி எலும்புகளெல்லாம் நொறுங்கியதுபோல் வேதனை, குடல், விலா, கண், முகம் இவைகளில் அதிகநோய், வயிற்றில் உப்பிசம், கனத்தல், மரத்தல், தாள்
வாய்பிடிப்பு, நடுக்கல், அறிவின்மை, பிரலாபம், வாயில் நுற
நுறையாக விழுதல் என்னுங் குணங்களுண்டாகும்.

70. அதோமுக வாதரோகம் :
- அசீரணம், மலபந்தம், உடல்
குலுங்குஞ் செய்கைகள், பதினாலு வேகத்தையடக்கி மிதந் தப்பிவிடுதல் இவைகளினால் பிறந்து நாபியிலிருக்கும் சமானனுடனும் குதத்தி லிருக்கும் அபானனுடனுங்கூடி பின்பு பித்தத்தை அநுசரித்து எரிச்சலைப் பிரதான குணமாக வைத்துக்கொண்டு மார்பிலும், வயிற்றி
லும், கீழ்வயிற்றிலும், கவுட்டியிலும், கீழாக இறங்கி இறங்கி வேதனையைச் செய்யும். அப்போது ஒரிபக்கத்து பீசத்திலாவது இரண்டிலாவது கணத்தலும், நோயும், வீக்கமும், நமைச்சலும் உண்டாகும். ஆண்குறியின் துவாரம் அடைப்பட்டு சிக்கிலம் தடைப்படும். மூத்
திரம் பிரயாசையுடன் துளித்துளியாக இறங்கும். இவ்வாய்வு குத ஸ்தானத்தில் இறங்கலால் ஆசனத்தில் சுருக்கமும் மலபந்தமும் உண்டாகும். இந்த ரோகம் மாதர்கட்குக் காணுங்கால் முற்கூறிய விதமாகவே அல்குலில் சேர்ந்துக்கொண்டு அத்துவாரங்களை சுறுக்கி
மலசலத்தை பந்தித்து மிகு வேதனையைச் செய்யும். இதிற்கூறிய துர்க்குணங்கள் வரவர அதிகமாகில் அசாத்தியம்.

71. ஆசியக்குவாத வாதரோகம் :- முற்கூறிய ஆசியாவாதங்களை பிறப்பித்த வஸ்துகளினால் பிறந்து வாயில் சேர்ந்துக்கொண்டு வாயில் ஒரு வஸ்துவையும் போடக்கூடாமல் இரணம் போலிருப்பது மன்றி நாவில் மேடும் பள்ளமுமாக விருத்தல், மார்பு நோய் கண்டத்தில் குறுகுறு வென்ற சத்தம் என்னும் குணங்களுண்டாகும்.

72. சிதிலாவர்த்த வாதரோகம் :- சீதளவஸ்து, மந்தவஸ்து, வழுவழுத்தவஸ்து, மலபந்தவஸ்து, உலர்ந்தபதார்த்தம், வெகுநடை கனௌளைப்பு ஆகிய இவைகளில் பிறந்து கில்கள், வாதநரம்புகள்
மற்றநரம்புகள் இவைகளில் சேர்ந்து,ஆயாசம், கணிரைப்பு,
கண்நிலைத்தல் முதலியன உண்டாகும். துர்ப்பலம், ஞாபக மறதி மூர்ச்சை, அம்மூர்ச்சையால் அடிக்கடி மயங்கிவிழுதல், விழுந்தாலும், உடனே தெளிதல், கீல்களிலெல்லாம் தளரல், என்னும் குணங்களுண்டாகும். (சிதிலம் என்பது தளரல் ).

73. சர்வாங்கவாதரோகம் :- அதிசீதளவஸ்து, மலபந்தவஸ்து, மந்தஉஷ்ண வஸ்து, விரோத உண்டி, அகால உண்டி, அநித்திரை, பகல் நித்திரை, மலசலத்தை அடக்கிவிடுதல், அதிநடை, வழிநடத்தல் நித்திய சையோகஞ்செய்தல், இலங்கணம் ஆகிய இவைகளில்
உண்டாகி சர்வாங்கத்திலும் பரவி மேலில் வேதனை செய்து உள்ளில் கீல்களில் தளரப்பண்ணி, எலும்புகளில் அலையடிப்பது போல் அடித்துக்கொண்டே இருக்கும். இதனால் வாந்தி, வயிற்று இரைப்பு, ஆயாசம் சரீரநோய், அசதியாக கிடத்தல் என்னும் குணங்களுண்டாகும்.
இது தேகமுற்றிலும் பரவியதால் சர்வாங்கவாத நோய் எனப் பெயர் பெற்றது. இது ஒரு வருஷத்திற்கு மேல் அசாத்தியமாம்.

74. சிரச்சாலிய வாதரோகம் :- ஊசிய அன்னம், மந்தவஸ்து, மதுரவஸ்து, சிலேத்துமவஸ்து, ஆகிய இவைகளில் பிறந்து சிரசை அனுசரித்து தலைநடுக்கல், நெறி, செவியின் மூலம், கண் இவைகளில் நோய் உண்டாகும். இதற்கு சிறக்கம்பாவதம் தலைநடுக்குவாதம் என்று பெயர். (சிரசு என்பது தலை சால்வியம்
என்பது அசைதல்).

75. கராஷபக வாதரோகம் :-
 அதி வாத வஸ்துகளை புசித்
தலினால் உண்டாகி சர்வாங்கத்திலும் பரவி பின்பு கைகளை  அனுசரித்து கைகளுக்கு சுழற்றல் உண்டாவதுடன் அசைட்த்தலும் நீட்ட மடக்க கூடாமலும் இருக்கும். இதற்கு அஸ்தகம்பவாதம் என்றும் பெயர்.

(கரம் என்பது கை).

76. அங்கசலன வாதரோகம் :- வாயுப் பொருட்களை அதிகமாகப்புசித்தலாலும் சர்வாங்கத்திலும் பிறந்து வாதநரம்பு துவாரங்களிலும் கபநரம்பு துவாரங்களிலும் பின்னர் உடம்பெங்கும் பரவி ஊர்த்துவாங்கத்திலாவது அதோவாங்கத்திலாவது நடுக்கலை உண்டாக்கும். இவ்வாய்வுக்கு ஒரு அங்கத்திலிருக்கில் சாத்தியம். இரண்
டிலுமிருக்கில் அசாத்தியம். (அங்கம் என்பது தேகம். சலனம் என்பது அசைதல்.)

77. அந்நியேத்துகவாத ரோகம் :- மிக உவர்ப்பு வஸ்து, காங்கைவஸ்து, உஷ்ணபதார்த்தம், சிலேஷ்ம சீதளபதார்த்தம், இலைக்கறி, ஆகிய இவைகளினாலுணடாகி தோள் முதுகு, கழுத்து சிரசு விலா இவ்விடங்களில் வேகமாகப்பரவி பித்தத்துடன் கூடி ஒருநாள்
விட்டு மறுநாளில் மிகுவேதனையை செய்வதாயிருக்கும். இதனால் அவ்விடத்தில் மரத்தல், கனத்தல், வலி, தாகம், வாயில் அனல்வீசு தல் போலிருத்தல், பிரமை, சுரம், மூர்ச்சை என்னுங் குணங்களுண்டாகும். இது நாளுக்குநாள் அசாத்தியமாம்.

78. தொனிகத்கத வாதரோகம் :- அதிசீதள பதார்த்தம்,
மந்த மதுரபதார்த்தம், சிலேஷ்ம வஸ்து, எண்ணெய் வஸ்து, கந்தமூலவருக்கம் எள்ளு பிண்ணாக்கு ஆகிய இவைகளை விசேஷமாக புசிப்பதினால் பிறந்து தோநோபகாத வாதத்தைபோல் நாசியிலும்
காது மூலத்திலும் பரவி சிலேஷ்மத்துடன் கூடி அதிகரிக்கும். அப்போது நாசியால் பேசுவதுபோல் பேச்சுண்டாகும். (கத்கதம் என்பது அடக்குதல்.)

79. கம்பீரவாத ரோகம் :- வாயுவை யுண்டாக்கும் வஸ்துக் களினால் பிறந்து முதல் முதல் ஊர்த்துவாங்கத்திலாவதி அதோங்கத்திலாவது சர்வாங்கத்திலாவது இருக்கின்ற ரசதாதுவைப்பற்றி
ஒவ்வொரு தாதுக்களாக தாண்டிக்கொண்டே உள்ளில் ஆழ்ந்து அஸ்திதாதுவுக்கு உள்ளிருக்கும் மச்சதாது வரையில் அநுசரித்து சர்வாங்க வேதனை, மரத்தல், கைகால் முடக்குதல், வாந்தி மூர்ச்சை என்னும் இக்குணங்களுண்டாகும். இது தோலை மாத்திரம் பற்றி
யிருந்தால் உத்தான வாதமென்று பெயர். இது சகல வாதரோகங்களைப் பார்க்கிலும் கொடியது. (கம்பீரமென்பதுஆழம். உத்தானம் என்பது ஆழமல்லாமை.)

80.பரிஸ்போட வாதரோகம் :- வாதவீரியம், பித்த வீரியம், என்னும் பதார்த்தங்களை மிதமின்றி நாள்தோறும் புசிப்பதனால் பிறந்து பித்தத்துடன் கூடி சரீர முற்றிலும் பரவி, பரவிய மறு நாளில் கொப்புளங்களை யுண்டாக்கும். இதனால் பாதாதி சேகம் வரையிலும் சிறிதாகவும் நெறுக்கமாகவும் மிகு கொப்புளங்கள் உண்டாகும். (பரிஸ்போடம் என்பது மிகுந்த கொப்புளம்.)

இங்கு கூறப்பட்ட இந்த எண்பதுவித வாதங்களுடன் மூத்திர
உதிரவாதம், வச்சிரரூப வாதம், அசுவ வாதம், பேய்வாதம் என்ற நான்கு வகைகளையுஞ் சேர்த்து வாத நோயை எண்பத்தி நான்கு வகை யெனவுங் கூறுவர்.

இந்த வர்கத்தில் சொல்லிய வாதரோகங்கள் 84-ல் பாத
ஹரீஷவாதம், பாதகண்ட வாதம், களாயகஞ்சவாதம், சம்பூக சீரிஷ வாதம், கிருத்திரசி வாதம், ஊருஸ்தம்பவாதம், அபதந்திரவாதம், பஷகாதவாதம்,தண்டகவாதம், ஆஷேபகவாதம், பாகியாயாவாதம், அந்தராயாமவாதம், விஸ்வபித்வாதம், அலகுபவவாதம், அர்த்தித வாதம், சர்வாங்கவாதம் என்கிற இருபத்தினாறு வாதரோகங்கள் அவுஷத சிகிச்சைகளுக்குவசப்படாததாலும் அப்படி வசப்பட்டாலும்
ஏதாவது ஒரு உருப்பை நாசப்படுத்துவதாலும் மகாவாத ரோகங்கள் என்று சொல்லப்படுகின்றது.மற்ற 68 வாத ரோகங்கள் அவுஷத  சிகிச்சைகளுக்குவசப்படுதலால் சாமானிய வாத ரோகங்கள் எனச் சொல்லப்படுகின்றன.

மேற்கூறிய மகாவாத ரோகங்கள் பதினாறுடன் அனுசிரசம்ஸ வாதரோகம், ஜிக்குவாஸ்தம்பவாதரோகம், விரணாயாம வாதரோகம், சிராக்கிரக வாதரோகம், கஞ்சவாதரோகம், கல்லிவாதரோகம், பங்கு வாதரோகம், பாததாகவாதரோகம், என்ற எட்டு வகையும்
சேர்த்து மகாவாத ரோகங்கள் 24 எனவும் கூற்வ்ர்.

எந்த வாதரோகத்திலும் அதிக நடுக்கல், வீக்கம், சகிக்கக்
கூடாத நோய், சருமம் முற்றிலும் திமிர், சரீரங் சுட்கித்து குன்றுதல் என்னுங் குணங்களிலுருந்தால் அசாத்தியம்.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக