ஞாயிறு, ஜனவரி 10, 2010

குஷ்ட ரோகம்,ஸ்வித்ரா ரோகம் கிருமி ரோகம் -ரோக நிதானம்

குஷ்டரோகம்

குஷ்டரோகமானது சரீரம் பளபளப்பு, மாறுநிறம் கடினத்
துடன் தடித்த சருமம், அச்சருமத்தில் தொட்டவிடத்தில் தினவு வியர்வை, எரிச்சல், உரோமச்சிலிர்ப்பு, கொஞ்சம் காயம் பட்டிடி னும் பெரிய விரணமாதல், அதில் கறுத்த உதிரம் வடிதல், அதிநித் திரை, மிகுவிரணம், குழிவிரணம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும்.இதற்குக் குறைநோய், தொழுநோய், பெரும்வியாதி என வேறு பெயர்களுமுண்டு.

வாதாதி தோஷத்தொந்தபேதத்தினால் குஷ்டநோயானதுபதினெட்டு வகைப்படும். அதாவது, வாதத்தால் கபாலகுஷ்டமும், பித்தத்தால் அவதும்பரகுஷ்டமும், சிலேஷ்மத்தால் ருசியஜிம்மிககுஷ்டமும், சிலேஷ்மபித்தத்தால் சருமகுஷ்டமும், ஏககுஷ்டமும், கிடிப குஷ்டமும், சித்மகுஷ்டமும், அலசகுஷ்டமும், சிலேஷ்ம வாதத்தால்
வியாதிகாகுஷ்டமும், திரிதோஷத்தால் தத்துருகுஷ்டமும், புண்ட ரீக குஷ்டமும், சதாருகுஷ்டமும், விஸ்போடகுஷ்டமும், பாமா குஷ்டமும், சர்மதளகுஷ்டமும், காசசகுஷ்டமும், பிறக்கும். இவற்
றுள் அவதும்பரம், மண்டலம், ருசியஜிம்மிகம், புண்டரீகம், கபாலம், காகசம் என்னும் ஆறு குஷ்டங்களை மகாகுஷ்டங்களென்று கூறப்பட்டுள்ளது.

1. கபால குஷ்டம் :- கபாலத்தைப்போல் வெளுத்த கொப்பு
ளங்களும் விரணங்களும் உண்டாகி பின்னர் குழிவிழுந்து சினைத்தண்ணீர் ஒழுகுவதுமாக இருக்கும்.

2. அவதும்பர குஷ்டம் :- அத்திப்பழத்தையொத்த கொப்பு
ளங்களையும் விரணங்களையும்முடையது. விரணத்தில் இரத்தம் வடிதலும், புழுக்கல் ஊருவதும், தினவும், உடல் உளைவும், மயக்கமும உண்டாகும்.

3. மண்டல குஷ்டம் :- இதில் கொப்புளங்கள் பலவித நிறத்
தையுடைய தாயும்மினுமினுத்தும் நாள்பட உடைந்து ஒன்ய்ச்சேர்ந்து மண்டலாகாரமான விரணத்தை யுண்டாகும். அவைகளில் புழுக்களும் சீழும் ஒழுகிக் கொண்டிருக்கும். ரணத்தை சுற்றிலும் மஞ்சள் நிறமான சருமம் உண்டாகும். சிரசிலும் சர்வாங்கத்திலும்
ரணங்கள் தடித்து கறுத்தல் அதில் ரத்தம் வடிதல் என்னுங்
குணங்களுண்டாகும்.

4. விசர்ச்சிகா குஷ்டம் :- இதில் கொப்புளங்கள் கறுப்பு நிறமாயும் பின்பு உடைந்து விரணமாகி அவைகளில் சினைநீர் ஒழுகுதல், அதிக ஊரல், எண்ணையை தடவினதுபோ லிருத்தல், வெளிறல், எரிச்சல், வேதனை, சிவந்த தடிப்பு என்னும் குணங்களுடையது.

5. ருசிய ஜிம்மிக குஷ்டம் :- கொப்புளங்கள் முள்ளைப்போல் மெல்லியதாய் நீண்டும் பிசுபிசுத்தும் சுறசுறத்தும் உள்ளில் கறுத்தும் முனையில் சிவந்தும் நெருக்கமாக எழும்பி விரணங்களாகி அவைகளில் புழுக்களும் எரிச்சலும் உண்டாகும்.

6. சர்ம குஷ்டம் :- தோலானது மஞ்சள் நிறமாயும் சிவந்த
நிறமாயும் மீன்களின் சிதளையொத்து சுறசுறத்து தடித்து கிள்ளினால் உபத்திரவமில்லாமல் காயம்பட்டால் தெறியாமலும் இருக்கும். சருமம் தடித்தல், அதில் சீழ்வடிதல் சொறி யுண்டாதல், எரிச்சல், துண்டு துண்டான தடிப்பு என்னும் குணங்களுடையது. இதனை
மேகப்படை திமிர்படை யென்றுங் கூறுவர்.

7. ஏகசர்ம குஷ்டம் :- சரீரத்து தோல்முழுதும் யானையின் துதிக்கைபோல் தடித்து பார்வைக்கு விகாரமாயிருக்கும். தேகமுழுதும் தோல் உரிந்து சிவத்தல், வறவறப்பு, சொறி, தினவு, திமிர், கால் விரல்கள் கனத்தல் சர்வாங்கத்தில் வீக்கம் என்னும்
குணங்களுடையது. இதனை சடை குஷ்டம், யானை குஷ்டம் எனவுங் கூற்வர்.

8. கிடிப குஷ்டம் :- கொப்புளங்கள் சுடுகையுடன் எழும்பி
விரணமாகி அவைகளில் அதிக நமைச்சல், சொறிந்த இடத்தில் காய்ப்பேறினதுபோல் இருத்தல், தடித்தல், சர்வாங்கமும் கனத்தல், யானைதோலைப்போலிருத்தல், அடிக்கடி நீரிறங்கல், தேகத்தில் சினைநீர் வடிதல், துர்நாற்றம் என்னும் குணங்களுடையது.

9. சித்மா குஷ்டம் :- இதில் மிகவும் புடைகள், பெரும்பான் மையும் ஊர்த்துவ தேகமான நாபிக்குமேல் வெளுத்த சிகப்பு நிறத்துடன் உண்டாகி அவைகளின் மேல் மினுமினுப்பும் சொறிந்தால் சருமத்தூள் விழுவதும், அவ்விடங்களில் வழுவ்ழுப்பதும், சரீரமுழுதும் திமிருடன் தடித்தல், மஞ்சள் நிறம், அதில் ரத்தம் கசிதல்,
சகிக வொண்ணாத திமிர், மறதி என்னும் குணங்களுடையது.

10. அலச குஷ்டம் :- இதில் ரத்தநிறமான சிறு கூழாங்கற்
களைப்போல் கொப்புளங்கள் விஸ்தாரமாக யுண்டாகி உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக நமைச்சல் உண்டாகும்.

வியாதிககுஷ்டம் :- கால்களிலும் கைகளிலும் சிவந்த
கடினமான கொப்புளங்களாகி விரண்ங்களாகும். தேகத்தில்
வெடித்தலுடன் சகிக்ககூடாத அருவருப்பு, கை, கால், கண்
கண்டம் இவைகளில் வெடிப்புடன் வீக்கம் சர்ப்பத்தையொத்த தேககாந்தி என்னும் குணங்களுடையது.

தத்ருககுஷ்டம் :
- முதலில் மண்டலாகரமான கொப்
புளங்களெழும்பி பிறகு கலங்கி கறுப்பு அகத்திப்பூ நிறங்களைப் போல் விரணங்களாகும். தேகத்தில் சிவந்த தடிப்பு வெளிதல் ஊறலுடன் திமிர் என்னும் குணங்களுடையது.

சாதாருககுஷ்டம் :- சிவந்தும் கருத்தும் அடியகன்றும்
அனேக கொப்புளங்களுண்டாகி சர்வாங்கத்திலும் விரணங்களாகி அவைகளில் எரிச்சலும், வலியும், கிருமியும், அதிகரித்தல், நாசி கண் காது கன்னம் இவைகளில் தடிப்பு என்னும் குணங்களுடையது.

புண்டரீககுஷ்டம் :- கொப்புளங்கள் மிக உயர்ந்து முனை
யில் ரத்த நிறம், நடுவில் வெண்மை உள்ள நிறம் ஏற்ப்பட்டு பின்னர் தாமரைப்பூ நிறத்¨தெயொத்து விரணங்களாகி நோய் , எரிச்சல் நமைச்சல், குழப்பமான சினைநீர்வடிதல், தத்தந்செரிதல் என்னும் குணங்களுடையது.

விஷ்போடகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்தும் வெளுத்தும் விஸ்த்தரித்து எழும்பி விரணங்களாகி அதில் தினவு எரிச்சல் உண்டாதல், சருமம்மிருதுவாகயிருத்தல், விஷஎரிச்சலையொத்த எரிச்சல், வெளிதல் என்னும் குணங்களுடையது.

பாமாகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்தும் கருத்தும் பருத்தும் நெருக்கமாக இரண்டு முனையிலும் முழங்காலிலும் தொண்டையிலும் எழும்பி விரணங்களாகி அவைகளில் நோயும் வறவறப்பும் மிகு தினவும்
சினைத்தண்ணீர் கசியும் சருமம் விரித்தலுடன் வீக்கம் கால் கை குறைதல் என்னும் குணங்களுடையது.

சர்மதலகுஷ்டம் :- கொப்புளங்கள் பிறக்கும் இடங்களில்
சிவந்தும் அதிக தினவு தொடக்கூடாத நோய் உண்டாகி கொப்புளங்கள் எழும்பி விரணங்களாகும். குத்தல் எரிச்சல் உண்டாகும். தேகத்தில் கீற்று கீற்றக வெடித்தல் வேதனை தொடக்கூடாமை அதில் ரத்தம் வடிதல் வயிற்றுவலி என்னும் குணங்களுடையது.

காகசகுஷ்டம் :- கொப்புளங்கள் சிவந்த நிறத்துடன் உண்டாகி பிறகு கறுகி கிறாம்பு மொக்கின் உருவத்தை பெற்று உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக எரிச்சல் நோய் முதலிய குணங்களும் உண்டாகும்.

மேற்கூறிய பதினெட்டு குஷ்டங்களை தவிற கர்ணகுஷ்டம், கிருஷ்ணகுஷ்டம், அபரிசகுஷ்டம் எனவேறு மூன்று குஷ்டரோகங்கள் உண்டென்றும் சில வைத்திய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

கர்ணகுஷ்டம் :- சர்மத்தில் பச்சைவன்னத்துடன் பொரி
பொரியாக வெடித்தல், தேகம் பாரித்து திமிருடன் காக்கட்டான் பூநிறமாக தோற்றுதல், தடிப்பு வீக்க என்னும் குணங்களுண்டாம்.

கிருஷ்ண குஷ்டம் :- சர்வாங்கம் கறுத்தல், சர்மத்தில் திமி ருடன் நாற்றம் வீசுதல், நோதல், சப்ததாதுக்களும் உஷ்ணமா யிருத்தல், அரையிலும் புறங்களிலும் கொஞ்சமாயும் சிரசில் அதிக மாகவும் விரணங்காணுதல், புத்தி சஞ்சலமுறுதல் என்னும் குணங்களுண்டாகும்.

அபரிச குஷ்டம் :- சர்வாங்கத்திலும் கறுத்த ரத்தம் வடிதல், நோய், தொடக் கூடாமை, வீக்கம், வெடிப்பு என்னுங் குணங்களை உடையது.

வெண்குஷ்டம்


இந்நோயைக் குஷ்டமெனக் கூறினும், இது குஷ்ட வகைகளினின்று வேறுபட்ட தென்பதையும் குஷ்டத்தைப்போல அவ்வளவு கொடுமையான வியாதி அல்லவென்றும் உணரவேண்டும். இந்நோயால் திட்டு திட்டாக வெண்மை நிறமான படைகள் உண்டாகி
பிறகு தேகம் முழுதும் பரவி உடலை விகாரப்படுத்துதல் முதலிய குணங்களை யுடையது. இது வாத வெண் குஷ்டம், பித்த வெண் குஷ்டம், சிலேத்ம வெண் குஷ்டம் என மூன்று வகைப்படும்.

வாதவெண் குஷ்டம் :- இது கறகறத்து சிவந்து கொஞ்சம் கருமைச் சாயலுடன் வெளுத்திருக்கும். வெளுக்காத இடங்களில் அழுக்கு நிறமுண்டாகும்.

பித்த வெண் குஷ்டம் :- இது செந்தாமரைப் பூவிதழ்போல்
சிவந்த வெளுப்பாக பரவுவதும் அவ்விடத்தில் எரிவதும் உரோமங்கள் உதிருவதுமாக யிருக்கும்.

சிலேஷ்ம வெண் குஷ்டம் :- இது தும்பை மலரைப்போல வெண்மையாக வெளுத்து கொஞ்சம் தடித்து பரவும். இது பரவு மிடங்களில் நமைச்சல் உண்டாகும். இக்குஷ்டம் ரத்ததாது மாமிச தாது மேதோதாதுவையும் பற்றும்போது கண்ணுக்கு அசங்கிய மான நிறமும் தேகத்தில் வெடிப்பும் வீக்கமும் உண்டாகும்.

வெண்குஷ்டத்தில் சாத்தியா சாத்தியம் :- உரோமங்களை வெளுக்கப்பண்ணாமலும் கையால் தடவில் மேடுபள்ளம் இல்லாமலும் சடை பின்னல் போலும் அக்கினியால் சுட்டாரிய வடிப்போலும் வெளுக்காம லிருக்கிற வெண் குஷ்டம் சாத்தியம். மேற்
வகைப்படும். ககேரூகம், மகேரூகம், சவுரசம், சுலூணம், வேலிகம் என்பவையாம். இவைகள் பெருங் கூட்டங்களாகி மெத்த பருத்தும், சக்கரவடிவாயும், உரோமத்தைப்போல் மெல்லியதாயும் கறுப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும், கறுப்பு வெள்ளை கலந்த நிறத்தையும் பெற்று மலப்பையில் சஞ்சரிக்கும் இதனால் பேதி, சூலை,
மலச்சிக்கல், உடம்பு இளைத்தல், தேகத்தில் சுறுசுறுப்புடன்
வெண்மைநிறம், உரோமசிலிர்ப்பு, அக்கினி மந்தம், குத்தல், நமைச்சல், எரிவு என்னும் குணங்களுண்டாகும். ஒரு வேளை அக்கிருமிகள் ஆமாசய ஸ்தானத்தைப்பற்றி எதிர்த்து ஏறும்போது வாயில் நீர்சுரப்பு, துர்க்காந்தம் இரைப்பு என்னும் குணங்களுண்டாகும்.

இவற்றுள் இறுதியில் கூறப்பட்ட சிலேத்தும மலக்கிருமி,
இரத்த மலக்கிருமி, அக மலக்கிருமி ஆகிய மூன்று வகைகளும் மதுரமான பொருட்கள், மாவுபண்டங்கள் முதலியவற்றை அதிகமாக அருந்துதல் முதலிய காரணங்களினால் ஏற்படுவதாகக்கூறப்பட்டுள்ளது. இவைகளை அந்தர் மலக்கிருமி யென்றும் வழங்கப்படும்.

.

கிருமிநோய்

இது கிருமிகளால் ஏற்படும் ஒர் நோய். இந்தக்கிருமிகள்
இருபது வகைப்படும். இந்தக்கிருமிகள் உண்டாகும் இடங்களை பொறுத்து இந்நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

புறமலக்கிருமி :- சரீரத்தின் மேல்புறத்தில் சேருகின்ற அழுக்கினால் வீட்சர யுகா என்கிற இரு வித பூச்சிகள் உண்டாகும். இவைகளில் யுகா என்னும் பூச்சிஉரோம ஸ்த்தானத்தில் எள்ளுபோல் உருவமும் கறுத்த நிறமும் மிகுந்த கால்களும் முடையதாய்ப் பிறந்து சஞ்சரிக்கும்.
இது கடிப்பதினால் சிறு சிறு மச்சங்களும் வியர்குரு போல் அணு கொப்புளங்களும் உண்டாகும். வீட்சா என்னும் பூச்சி அழுக்கு வஸ்திரங்களில் வெள்ளை எள்ளுரூப வண்ணங்களுடையதாய்ப்பிறந்து சஞ்சரிக்கும். இது கடிப்பதினால் சிறு சிறு தடிப்புகளும் தினவு உண்டாகும். இதுவே பாக்கிய மலக்கிருமியாம்.

சிலேத்துமமலக்கிருமி :- இது சிலேத்துமத்தால் ஆயாச
ஸ்தானத்தில் பிறந்து உள்ளில் சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஏழு வகைப்படும். பெரும்பூநாகக்கிருமி, நீர்ப்பாம்புகிருமி, கொல்முனை கிருமி, சன்னநீளக்கிருமி, அணுக்கிருமி, வெண்கிருமி, செங்கிருமி
என்பவைகளாம். இவைகள் கால்கள் இல்லாமல் வட்டமாக சுற்றிய தூலைப்போலும் பார்வைக்குத் தோணாமல் அணுப்போலவும் தருப்பைப்பூ வாசனைப் பெற்று குடலில் சுற்றிக்கொண்டு மார்பு மட்டும்
ஏறி அதிக உபத்திரவங்களை உண்டாக்கும். அப்போது மார்புஅதிரல் வாய் நீறுரல், அசீரணம், அரோசகம், வாந்தி, மூர்ச்சை, சுரம் என்னும் குணங்களுண்டாகும். இது கபத்தால் பிறக்கும் .

இரத்தமலக்கிருமி :- இது உதிரம் ஓடுகின்ற நரம்பு
ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது
ஆறு வகைப்படும். அணுக்கிருமி, வட்டக்கிருமி, காலிலாக்கிருமி, மிகு சூட்சமக்கிருமி, தோற்றாங்கிருமி, செங்கிருமி என்பவைகளாம். இவைகள் பெருங்கூட்டங்களாகி தாதுக்களிலும் பரவி உரோமங்களை உதிரப்பண்ணுவதுடன் கிருமி
பேதங்களுக்குத் தாயாயு மிருக்கும். இவைகளால் குஷ்டங்களைப்போலவே தேகத்தில் மாநிறமுண்டாகும்.

அகமலக்கிருமி :- இது அதிக மலச்சேர்க்கையினாலும், பச்சை தானிய இலைக்கறி, கருணை சேமை முதலிய கிழங்குகள் புசிப்பதனாலும் பக்குவாய ஸ்தானத்தில் பிறந்து சஞ்சரிக்கின்ற கிருமிகள். இது ஐந்து

உள்ளங்காலில் நின்ற சீதளத்தினால் இந்நோய் பிறந்து அதிகரித்து கால்களில் உரோமங்கள் சிலிர்த்தல், மரத்தல், கனத்தல், நடுக் கல், குத்தல், அசைதலில் நீட்டலில் முடக்கலில் நோய் தெரியாமை மந்தநடை என்னுங் குணங்களுடையது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக