ஞாயிறு, ஜனவரி 10, 2010

மசூரிகை ,விஸ்போட ரோகம் -ரோக நிதானம்

மசூரிகை

முதலில் சுரத்தோடு கடலைப்பிரமாணம் கொப்புளங்களுண் டாகி முத்துகள்போல எழும்பும். அப்போது வாயுலரல், சரீர உளைவு, கீல்களில், தளர்ச்சி, அரோசகம், உரோமச்சிலிர்ப்பு,தலை, கொப்புளங்கள் ஒன்பது நாள் இருக்கும். இதற்கு வைசூரி நோய்
அல்லது அம்மை நோயென்று பெயர். கொப்புள பேதங்களால் பெரியம்மை, சின்னம்மை, பனை யேரி, தட்டை பயறி, ராமக்கம் எனவும், வழங்குகிறார்கள். இது குழந்தைப் பருவ முதல் கிழ வயது வரையிலும் காணும். இந்த நோய் எலும்பைப் பற்றி பிறக்கும்.

இது ஒன்பது வகைப்படும். அவை தோடவிகற்பம், முதலிய
அககாரணங்களினால் வாத, பித்த, சிலேத்தும, வாத பித்த, பித்த சிலேத்தும, வாத சிலேத்தும, திரிதோஷ மைசூரிகள் என ஏழுவகையும், இரத்தமைசூரிகை என ஒர்வகையும், அடிபடிதல் முதலிய புறக்காரணங்களினால் ஏற்படும் ஆகந்துக மசூரிகை என ஒர் வகையும் ஆகும்.

இவற்றுள் முதலிற்கூறிய வாதாதி தோஷங்களினால் ஏற்படும் எழு வகை மசூரிகைகள் பொதுவாக மசூரிகை நோய்குரிய கொப்பு ளம் முதலிய குணங்களுடன் அந்தந்த தோஷத்தின் இயற்குணங்களையும் பெற்றிருக்கும்.

இரத்த நிறமான கொப்புளங்கள் உண்டாவதை இரத்த மசூ
ரிகை யென்றும், முதலில் ஓர் இடத்தில் அல்லது ஓர் உறுப்பில் தோன்றிப் பின்னர் உடல் முழுவதும் வியாபிப்பதை ஆகந்துக மசூரிகை எனவும் வழங்கப்படும்.

சில நூல்களில் கொப்புளங்களின் அளவு அல்லது உருவத்
தைக் கொண்டு இந்த மசூரிகை ரோகத்தை எட்டு விதங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அவைகளாவன :- மசூரிகை, சரசபிகை, அசகை, கோத்திரவம், கங்கு, விஸ்போடகம், அபாகி, விசர்பை என்பவைகளாம்.

1. மசூரிகை :- தேகத்தில் கடலையைப்போல் சிறுத்தும், சிவந் தும், அடுக்கடுகாக கொப்புளங்கள் எழும்பும். இதனால் வீக்கம், தினவு உண்டாகும்.

2. சரசபிகை :- கடுகை போல நிறமும், உருவமும், உள்ள
கொப்புளங்கள் எழும்பும். இதனால் உடம்பில் எரிச்சல் , நோய் ரத்த மூத்திரம் உண்டாகும். இது கஷ்ட சாத்தியம்.

3. அசகை :- பருத்தும், தடித்தும் இரணத்தைத் தருவதாய்
அநேக கொப்புளங்கள் எழும்பும். இதனால் கில்களிலும், முகத்திலும் வீக்கம், தாகம், பிசுபிசுப்பான சகல சீதங்களும் உண்டாகும்.

4. கோத்திரவம் :- சர்வாங்கத்தில் வரகு போல் கொப்புளங்கள் எழும்பும். இதனால் உபத்திரவங்கள் உண்டாகும்.

5. கங்கு :- சரீரம் முழுவதும் சாமை என்னும் கொப்புளங்கள் எழும்பும்.

6. விஸ்போடகம் :- பாதமுதல் சிரசுபரியநந்தம் நெருப்புக்
கொப்புளத்தைப் போலவே பெரிது பெரிதாக கொப்புளங்கள் எழும்பும். இது அசாத்தியம்.

7. அபாகி :- தேகத்தில் தூர தூரமாக உலர்ந்தது போலும்
சுருங்கினது போல் கொப்புளங்கள் எழும்பும். இவைகள் நெடு நாளாக இறங்காமல் உபத்திரவத்தை தரும். இது அசாத்தியம்.

8. விசர்பை :- மயிலிறகின் கண்ணைப்போல் பல நிறமாக
கொப்புளங்கள் எழும்பும். இதனால் சரீரம் ஊறல், வீக்கம், சுரம் தாகம் என்னும் குணங்கள் உண்டாகும்.

சகல மசூரிகை ரோகங்களிலும் முத்துகள் என்கிற கொப்புளன்கள் சீக்கிரத்தில் பிறந்து மறைந்தாலும் முதல் முதல் சிறு கடலைப்பருப்பைப் போல் தோன்றி கண்டம் வரையிலுமிராமல் பவழ குண்டுகளைப்போல் பருத்து குழிகள் விழுந்தாலும் மச்சங்களைப்போல் சுருகி கறுத்தாலும் அசாத்தியமாம்.

விஷ்போட நோய்

பித்தாதிக்கத்தினால் ரத்தம் கொதிப்புற்று சுரம் எரிச்சல்,
உதடுரல், சரீர வளைவு என்னும் குணங்களுடன் சர்வாங்கமும் மறையும்படி, சிறிதும் பெறிதுமாக தேகம்முழுதும் அநேக கொப்பு ளங்கள் எழும்பும். (விஷ்போடம் என்பது அதிக கொப்புளம்) இது
சீத பித்தம் ஆமபித்தம், ஆமலபித்தம், கஷீத்திரம் என நான்கு வகை யாம்.

சித்தபித்தவிஷ்போடம் :- அகன்று பரவுவதாயும் வளையாகர மாயும், ரத்தநிறத்தோடுங்கூடிய புடைகள் தேகமுழுதிலும், எழும்பும் அவைகளில் சதா நமைச்சல் உண்டாகும்.

ஆமபித்தவிஷ்போடம் :- தேகம் கருத்து பலவிதமான
புடைகள் எழும்புதல், மூர்ச்சை, வியர்வை, தாகம், கோழை, வாந்தி தலைவலி,வயிறு, சுரம், வயிறுமார்பு,கண்டம், இவைகளில் எரிச்சல் ரசதாது வற்றுதல் என்னுங் குணங்களுடையது.

ஆமலபித்தவிஷ்போடம் :- தேகத்தில் வளையாகரமான
புடைகள், பலவித ரூபநிறங்களை பெற்ற கொப்புளங்கள் அவை களில் மாறாதினவும் புளிப்பும் காரமுமான வாந்தி, மார்பில் எரிச்சல், மார்பு அதிரல், தேகம் பாரிப்புடன் சுடுகை, அரோசகம், மூர்ச்சை, சோர்வு பிதற்றல், பிரமை, இரைப்பு, இளைப்பு, துக்கம், கண்ணில் இருட்கம்மல் என்னும் குணங்களை யுடையது.

க்ஷ£த்திர விஸ்போடம் :- சர்வாங்கத்திலும் எரிச்சலோடு
வியர்க்குருப்போல சிறிது சிறிதாக அநேக கொப்புளங்கள் எழும்பி ஆதியில் சுரமும் அந்தத்தில் பேதியும் உண்டாகும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக