ஞாயிறு, ஜனவரி 10, 2010

மூத்திர ரோகம், அஷ்மரீ ரோகம், மேக நோய்,விதரதி ரோகம்,குடல் விருத்தி ரோகம்,அண்ட நோய்,குன்ம ரோகம் ,ஆனஹா நோய்,சூலை ,மகோதரம் ,ப்லீக ரோகம்,பண்டு ரோகம் காமாலை,சோபம் ,விசர்ப ரோகம் -ரோக நிதானம்


மூத்திர நோய்

மூத்திர நோயானது முக்கியமாக கிரிச்சரம், அஸ்மரீ என
இருவகைப்படும்.

கிரிச்சரம்

கிரிச்சரரோகம் என்பது வருத்ததுடன் கொஞ்சங் கொஞ்ச
மாக மூத்திரத்தை விழச்செய்வது. இதனைச் சொட்டு மூத்திர மெனவும் வழங்கப்படும். இது நான்கு வகைப்படும்.

வாதகிரிச்சரம் :- கீழ் வயிற்றிலும், தொடைக்கவுட்டிலும்
ஆண் குறியிலும் நோயை யுண்டாக்கி கொஞ்சங் கொஞ்சமாக நீரிறங்கச் செய்தல் என்னுங் குணங்களுடையது.

பித்தகிரிச்சரம் :- நீர்துவாரத்தில் நோயையும் எரிச்சலையும் உண்டாக்கி மஞ்சள் சிகப்பு நிறங்களாக நீரை இறங்கச்செய்தல் என்னுங் குணங்களுடையது.


சிலேத்தும கிரிச்சரம் :- அடிவயிற்றிலும், ஆண் குறியிலும் வீக்கத்தை யுண்டாக்கி பிசினைப்போல வழுவழுத்து கட்டுப்பட்டதான நீர் இறங்கல் என்னுங் குணங்களுடையது.

திரிதோஷ கிரிச்சரம் :- மேற்கூறிய மூன்றுவித தோஷங்
களின் குணத்தை ஏககாலத்தில் உடையது. இது அசாத்தியம்.

அஸ்மரீ

உள்புறமாக மூத்திரம் உலறுகிறதால் அஸ்மரீரோகம் உண்டாகும். கீழ்வயிற்றுப்பிசம், நாபியின் நாலு பக்கங்களிலும் நோய், நீரானது ஆட்டுமூத்திர வாசனையுடன் வருத்தத்துடன் இறங்கல், சுரம், அரோசகம் என்னுங் குணங்களுடையது. இதனை நீரடைப்பு
என்றுங் கூறுவர். இது நான்கு வகைப்படும்.

வாதாஸ்மரீ :- நீர் இறங்கும்போது வருத்தத்துடன் பற்கடித்தல், நடுக்கல், ஆண்குறியை கையால் தேய்த்தல், தொப்புளை பிசைதல், சதா அழுதல், சத்தத்துடன் மலம் நழுகல், மூத்திரம் துளி துளியாக கற்த்தநிறத்துடன் விழுதல் என்னுங் குணங்களுடையது.

பித்தாஸ்மரீ :- அடிவயிற்றில் இரைச்சல், வெப்பம், காங்கை யுடன் ஆண்குறியின் முனையானது சேராங்கொட்டை தோலைப்போ லிருத்தல், மஞ்சள் சிகப்பு வெண்மை நிறமான நீரிறங்கல் என்னுங் குணங்களுடையது.

சிலேத்துமாஸ்மரீ :- கீழ்வயிற்றில் அதிக நோய், கனத்தல், தேன் நிறமாகவும், வெண்மையாகவும் நீரிறங்கல் என்னுங் குணங்களுடையது.

சுக்கிலாஸ்மரீ :- பீஜத்தில் வீக்கம், கீழ்வயிற்றில் நோய்,
நீரானது வெகுநேரம் பொறுத்து இறங்கல் என்னுங் குணங்களுடையது. சுக்கிலாஸ்மரீ ரோகத்தில் உலரப்பட்டிருந்த விந்துவானது வாயுவினால் மணல், சிறுபயறு, கடலை, சுண்டக்காய், பேரீச்சங்காய்
பிரமாணங்களை யொத்த கல்லுகளாக திரட்டப்பட்டு நீரோடு
சேர்ந்து நாளத்தின் வழியாய் வெளியே தள்ளப்படும். வாய்வு சுபாவ வழியில் நடந்தால் நீருடன் கற்கள் விழுந்துக்கொண்டே யிருக்கும். வாய்வு தப்பி நடந்தால் பக்கநோய் உண்டாகி ஒரு துளி கூட நீரிறங்காமல் அதிக உபத்திரவங்களுண்டாகும். இதனை கல்ல¨டெப்பு ரோகம் அல்லது சர்க்கராஸ்மரீ ரோகமென்றுங் கூறுவர்.

மேக நோய்

மதுமேகம், மச்சாமேகம், வசாமேகம், அஸ்திமேகம் என நான் கும் வாதத்தினால் உண்டாகும். மஞ்சிஷ்டிமேகம், சாரமேகம், அரித் திராமேகம், நீலமேகம், ரத்தமேகம், காளமேகம், என்னும் இவ்வாறும் பித்தத்தினால் பிறக்கும். பீஷ்டமேகம், இட்சுமேகம், சாந்திர மேகம், சிகதாமேகம், லாலாமேகம், சீதமேகம், சனைர்மேகம், சுரா மேகம், சுக்கிலமேகம், சலமேகம் என்னும் பத்தும் கபத்தினால்
உண்டாகும். இவைகளில் தேனைப்போல் நிறத்தைப் பெற்று எறும் புகள் மொய்க்கிற மேக மூத்திரரோகங்களுக்கு தகுந்த சிகிச்சை உடனே செய்தல் வேண்டும். இது சரீரத்தில் வியர்வை, துர்கந்தம்,
தளர்ச்சி, கனத்தல், மார்பு, கண், நாவு, காது இவ்விடங்களில் எரிச்சல், தலைமயிரும், நகமும் விரைவில் வளரல், கன்னமும் நெஞ்சும் உலரல், தாகம், வாயினிப்பு, கைகால் எரிச்சல், ஆண்குறி சுருங்கல், சுக்கிலநாசம் என்னுங் குணங்களுடையது. இது இருபது வகைப்படும்.

1. வசாமேகம் :- மூத்திரமானது கொழுப்பை கலந்தது
போலும், சுத்த கொழுப்பு போலும், நிணவாசனையுடனும்,
வேளைக்கொரு குருணி அளவு இறங்கும். காய்ச்சினாலும் அவ்வாசனையே வீசும். இது நிறத்திலும், நாற்றத்திலும், வசம்பைப் போலிருப்பதால் வசாமேக மெனப்பட்டது.

2. மச்சாமேகம் :- மூத்திரமானது மாமிசநிறமாகவும், மோர் கலந்தது போலவும், அடிக்கடி இறங்குவதுடன் அது உறைந்த இடத்தில் பழம் பிழிந்ததுபோலவும், மோரை ஊற்றினதுபோலவும் நிறம் தோற்றப்படும். மச்சை என்பது-எலும்புக்குள் இருக்கும் முளை.

3. அத்திமேகம் :-
 மூத்திரமானது யானை மூத்திரத்தை
ஒத்துத் தடைபடாமலும், ஒரிவேளை தடைப்பட்டும் கலங்கியது மாக இறங்கும். அத்தி என்றால் யானை.

4. மதுமேகரோகம் :- மூத்திரமானது தடித்து ஈ, எறும்பு
மொய்ப்பதாய் தேனுக்குள்ள நிறம், வாசனை, ருசி, கனம் என்னும் இவைகளைப்பெற்று காய்ச்சினால் பாகாகுவதாய் பசுமை நிறமாயும், மஞ்சள் நிறமாயும், பீஜத்திலும், கோசத்திலும் கடுத்தலுடன் அடிக்கடி நீர் இறங்கும். அதை பிடித்துப்பார்த்தால் அடியில் வெண்மை பற்றும். இது தேகத்தில் சப்த தாதுக்களையும் உருக்கி மதுரத்தை
உண்டாக்கி வருவதால் மதுமேகம் என்று பேர்பெற்றது.

மேற்கூறிய நான்கும் வாயுவினால் உண்டானது.

1. சாரமேகம் :- மூத்திரமானது அதிக உப்பாக இறங்கும்.
கையால் தொட்டுப்பார்க்கில் உப்புக்குள்ள கசிவு இருப்பதுமன்றி இது உறைந்த இடங்களில் உவர்மண் சுண்ணாம்பு இவைகளின் நிறமாகத் தோன்றும். சாரம் என்பது உப்பு.

2. நீலமேகம் :- மூத்திரமானது நீலநிறமாக இறங்கும்.

3. காளமேகம் :- மூத்திரமானது கறுப்பாய் இறங்கும்.
காளம் என்பது கறுப்பு.

4. அரித்திராமேகம் :- மூத்திரமானது மஞ்சள் நிறமாயும், நீர் சுறுக்குடனும், காரமாயும் இறங்கும். அரித்திரா என்பது மஞ்சள்.

5. மஞ்சிட்டி மேகம் :- மூத்திரமானது மஞ்சிட்டியென்னும்
சாயவேர் நிறமாகவும், துர்க்கந்தமாயும் எப்போதும் ஒழுக்காகவும் இறங்கும்.

6. ரத்தமேகம் :- மூத்திரமானது சிகப்பு நிறத்தையும், உவர்ப் பையும், துர்க்கந்தத்தையும், பெற்று அதிகாங்கையுடன் இறங்கும். முயல் இரத்தத்தையொத்து இரண்டு படியளவு இறங்குதல், அதை காய்ச்சினால் புலால்வாசனை வீசுதல், கோசமும், பீஜமும் நடுங்குதல்
என்னுங் குணங்களுடையது.

மேற்கூறிய ஆறும் பித்தத்தினால் உண்டானது.

1.சலமேகம் :- மூத்திரமானது சுத்தசலம் போலத் தெளிந்தும் வெளுத்தும், மிக குளிர்ச்சியுடன் துர்க்கந்தமில்லாமல், மினு மினுத்து இறங்கும். கழிநீரைப் போல் சிக்கலுடன் இறங்குதல், காய்ச்சினால் சுண்ணாம்பு சங்கு இவைக¨ளை போல் வண்டல் படிதல், தேகத்தில் ஒருவித நாற்றம் வீசுதல், என்னுங் குணங்களுடையது.
இதனை சங்கு மேகம் என்றும் கூறுவர்.

2. லட்சு மேகம் :-
 மூத்திரமானது கரும்புச்சரைப்போலும்,
தென்னங்கள்ளைப்போலும், மிகவும் மதுரமாக விசேசித்து, நுறை களுடன் இறங்கும். இஷீ என்பது கருப்பு.

3. சாந்திர மேகம் :- மூத்திரமானது கட்டுப்பட்டு களங்களாயும் வழுவழுத்து குழம்பாகவும் இறங்கும். இது ஒரு நாள் முழுதும் வயிற்றில் தங்கி மறு நாள் இறங்குவதால் சாந்திர மேகம் எனப்
பெயர் பெற்றது.

4. சுராமேகம் :- மூத்திரமானது தென்னங்கள்ளைப்போலும், முன்பு தெளிவாகவும், பிறகு குழப்பமாகவும் நுறைத்தும், வெளுத்தும் வேளைக்கு நாழியளவு இறங்கும். காய்ச்சினால் கள்ளை போல் மணக்கும் மா போல்வண்டல் படிதல், மயக்கம் என்னுங்
குணங்களுடையது. சுரா- என்பதுகள்.


5. பிஷ்ட மேகம் :- மூத்திரமானது அரிசி மாவு கரைத்தது
போல், வெண்மையாக இறங்கும். அப்போது உரோமச்சிலிர்ப்பும் உண்டாகும். பிஷ்டம் என்பது அரிசியின் மாவு .

6. சுக்கிலமேகம் :- மூத்திரமானது சுக்கிலத்தைப் போல்
வெண்மையாகவும், அதில் சுக்கிலம் சிறு துண்டுகளாகவும் இறங்கும். மேலும் தாழாஞ்சாற்றைப்போல் இறங்கி பிறகு ஈரலைப்போல் தோயும். காய்ச்சினால் கட்டியாகும்

7. சிகதாமேகம் :- மூத்திரமானது வெள்ளைமணல் கலந்த
சலம் போல், ஒவ்வொரு முகூர்த்தத்திற்கு ஒருமுறை இறங்கும். சிகதா என்பது மணல்.

8. சீதமேகம் :- மூத்திரமானது குளிர்ச்சியுடன் மதுரமாக
வும், விசேஷமாகவும் இறங்கும். சீதம் என்பது குளிர்ச்சி.

9. சனைர்மேகம் :- மூத்திரமானது பொறுத்து பொறுத்து
கொஞ்சங் கொஞ்சமாக மிருதுவைப்பெற்று இறங்கும். சனை என்பது காலதாமதம்.

10. லாலாமேகம் :- மூத்திரமானது கோட்டுவாய் சலத்தைப் போலும், முனுமினுப்பாயும், நூலிழைப்போல் தாரைதாரையாகவும் இறங்கும். லாலா என்பது கோட்டுவாய்சலம்.

மேற்கூறிய மேகங்கள் சிலேத்துமத்தினானுண்டானது.

வாதமேகரோக இலக்கணம் :- நடுக்கல், மார்புநோய், மனசஞ்சலம், குத்தல், அரைநித்திரை, வாயுலரல், இருமல், இரைப்பு முதலிய குணங்களுண்டாகும். பல், நா, தொண்டை, உதடுகருத் தல், படுக்கை பொருந்தாமை, புரளல், நாடிகுடிலமாயும், குணபேத மாயும் நடக்குதல், ஒரு வித மணம் வீசல் என்னுங் குணங்களுடையது.

பித்தமேகரோக இலக்கணம் :- 
கீழ்வயிறு, ஆண்குறி இவை களில் வியர்வை, பீஜம்சுருங்குதல், சரீரத்தில் காங்கையுடன் எரிச்சல், அதிக தாகம், புளி ஏப்பம், மூர்ச்சை, பேதி, தேகவாட்டம், சரீரத்திலும், கோசத்திலும்புலால் நாற்றம் வீசுதல், கற்றாழைஜலம், தேன் இவைகளைப்போல் நீர் இறங்கல், பீஜத்திலும் கோசத்திலும்குத்தல்ம், ஈரலிலும் நாபியிலும் ஒருவிதமானநோய் விரணத்துடன் நாற்றம்,
சுரம் என்னுங் குணங்களுடையது.

சிலேஷ்ம மேகரோக இலக்கணம் :- மந்தாக்கினி, அரோசகம், வாந்தி, மயக்கத்துடன் சோம்பலான நித்திரை, இருமல், மூக்கடைப்பு, கோழை, உழலை முத்லியவைகளை உண்டாக்கும்.

மேகரோக தசாவஸ்தைகள் :-

1. கீழ்வயிற்றில் சங்கடம் தோற்றுதல், 2.நீர் இறங்கினால்
ஆயாசங் காணுதல், 3.வாயு பிரபலப்படுதல், 4.திரிதோஷங்
கோபித்தல், 5.சுக்கிலம் நசித்தல், 6.அதிக தாகமும் நீரில் மேகமும் உண்டாதல், 7.அரோசமும், தேகஜாட்டியமும் பிறக்குதல், 8.கட்டிகள் எழும்புதல், 9.பேதி அதிகரித்தல், 10.ஞாபகம் மாறி ஒயிர் நீங்குதல், இப் பத்து அவஸ்தைகளும் மேகநீருக்கு உப பலமாக யிருப்பாதால் இவைகளை காணுதற்கு முன்பாகவே சிகிச்சை
செய்தல் வேண்டும்.

வேறு :-1. சரீரம் கனத்தல், 2.தேஜசுகுறைந்துமழங்குதல்,
3.நாக்குஈரம் அற்று வறளல், 4.தேக எரிச்சல், 5.மூத்திரம் அதிக மாதல், 6.படுக்கை பொருந்தாமையுடன் மூர்ச்சையுண்டாக்குதல், 7.சுவாசம் அதிகரித்தல், 8.விரணம் பிறத்தல், 9.கிருமிச்சேருதல், 10.க்ஷயங்கண்டு உயிர்நீங்குதல்.


மேகரோக அசாத்தியகுறிகள் :- எந்த மேக நோயிலும்
தகுந்த பரிகாரஞ் செய்தும் தணியாத தேக எரிச்சல், அளவிடக் கூடாத மூத்திரம், எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும், அடங்காத தாகம், மென்மேலும் நாக்கு வரளல், அரோசகம், சுரம், நூட்பமான இடங்களில் கட்டிகள் எழும்புதல், மிகுந்த பேதி என்னுங் குணங்களுண்டாகில் அசாத்தியமாம்.

மேகக்கட்டிகள்

மேற்கூறிய மேகங்களுக்கு தகுந்த சிகிச்சைகள் செயாவிடில் அடியில் கூறும் கட்டிகள் உண்டாகும். இதற்கு மேகக்கட்டிகள்  என்று பெயர். இது 10 வகைப்படும். அவை யாவன :-

1.சராவிகை-மடங்கு கட்டி, 2. கச்சம்மிகை - ஆமையோட்டுக் கட்டி, 3. ஜாவினி வலைகண் கட்டி, 4. விநதை அதோமுக கட்டி, 5. அலசை பேய்சுரைக்காய் கட்டி, 6. மசூரிகை கடலை கட்டி, 7. சரஷபிகை கடுகு கட்டி, 8. புத்திரிணி புத்திராகி கட்டி, 9. பிதா ரிகி சிலம்பூசினிக்கிழங்கு கட்டி, 10. வித்திராதி வித்துருதி கட்டி.

1.சராவிகை-மடங்கு கட்டி :- கீல்களிலும் மாமிச
ஸ்தானங்களிலும் உண்டாகி, கறுத்து அடியகன்று, முனையுயர்ந்து நடுவில் பள்ளம் விழுந்து, வியர்வையுடன் நோயுள்ளதாய் மடங்கு கவிழ்ந்தது போலவே இருக்கும்.

2. கச்சம்மிகை ஆமையோடு :- குழிகள் விழுந்தும், மினு
மினுத்தும், நோயைத்தருவதும், ஒருவேளை தராததுமாய்
அநேகவிதை சிகிச்சைகளுக்கு வசப்படாமல் ஆமையோட்டை மூடினது போல் இருக்கும்.

3. ஜாவினி வலைகண் கட்டி :- தடிப்பாக எழும்பி
மரத்தின் வேர்களை போல் வெகு நரம்புகள் குழப்பட்டிருப்பதும் குழப்பமான ஜலத்தை சொரிவதும்,நாளுக்கு நாள் மறைந்து
விடுவதும், வலையைப்போல் கண்கள் விடுவதும், சில வேளை உபத்திரவத்தை செய்வதும், சில வேளை செய்யாததுமாய் இருக்கும்.

4. விநதை அதோமுக கட்டி :- வயிற்றிலேனும், இடுப்பிலேனும் கறுப்பு நிறமான கட்டி, அதிக உபத்திரவத்தையும், வியர்வையையும் தருவதாயிருக்கும். இது ரோகியை கொஞ்சமேனும் ஒட்டாமல் குனியப்
பண்ணுகின்ற காரணத்தால் அதோமுக கட்டி எனப்பெயர் பெற்றது.

5. அலசை பேய்சுரைக்காய் கட்டி :- முதல் முதல்
எவ்விடத்தில் உண்டாகின்றதோ அவ்விடத்து சருமத்தில் மேல் நெருப்பால் சுட்டது போல் எரிச்சல் உண்டாக்கி எழும்பி பின்பு கறுப்பு, சிகப்பு நிறங்களையுடைய கொப்புளங்களாக சரீரமெங்கும் வியாபித்து பார்வைக்கு பேய்ச்சுரைப்பிஞ்சியைப்போ லிருக்கும். இதனால் அதிகபேதி, தாகம், சோர்வு, சுரம், மிகுந்த நோயு
டன் வேதனை என்னுங் குணங்களுடையது.

6. மசூரிகை என்கிற கடலைக் கட்டி :- 
சிறுகடலைப் பிரமாணத்தையும் அதன் ரூபத்தையும்பெற்று சரீர முழுவதுங் கொப்புளங் கொப்புளமாக எழும்பி உபத்திரவத்தைத் தரும்.

7. சரஷபிகை என்கிற கடுகுக் கட்டி :- தேகமுழுதும்
நெருக்கமாக கடுகு பிரமாணத்தையொத்து சீக்கிரத்தி லுண்டாகி உடனே யுடைந்து அதிக உபத்திரவத்தைத் தரும்.

8. புத்திரினி என்கிற புத்திராதிக் கட்டி :- விஸ்தரித்து வரிசை வரிசையாக ஏற்பட்டு பருத்தும் சிறுத்தும் ஒன்றை யொன்றைச் சுற்றி அநேக கொப்புளங்கள் சூழ்வதாகப்பிறந்து அதில் எரிச்சலை யும் மிக சங்கடத்தையுந் தரும். இது ஒன்றன்பின் ஒன்று பிறந்து
கூட்டமாக இருப்பதால் புத்திராதிக்கட்டி என பெயர்பெற்றது.

9. பிதாரிகை என்கிற நிலப்பூசினிக்கிழங்கு கட்டி :- நிலப் பூசினிக்கிழங்கைப்போல் வட்டமாக தடித்து அநேகவிதமான உபத் திரவங்களை உண்டாக்கும்.

10. வித்திர என்கிற வித்ருதி கட்டி :- இந்த கட்டியைக்
குறித்து வித்ருதி கட்டியின்கீழ் கூறியிருப்பதைக் காண்க.

சாத்தியாசாத்திய மேகக் கட்டிகள் :- மேற்கூறிய கட்டிகளில்
முதல் மூன்றும் ரத்ததாது முதல் மாமிசதாது வரையிலும் ஒட்டி பிறப்பதால் சாத்தியம். புத்திராதிக்கட்டி, நிலப்பூசினிக்கிழங்கு கட்டி, மேதோதாதுவைப்பற்றி பிறப்பதால் கஷ்டசாத்தியம், மற்ற கட்டிகள் பித்தத்தால் பிறந்து மேதோதாதுவை ஒட்டியும் ஒட்டாம் லும் இருப்பதால் கஷ்டத்திலும் கஷ்டசாத்தியம். ஆயினும் மேக நீரால் மெலிந்த ரோகிக்கு மார்பு, அடிமுதுகு, முலை, தோள், குதம் சுரசு, குய்யம், கீழ், கால், கைவிரல்கள், அக்குள், புருவமத்தி, கழுத்து, இருதயம், நடுத்தொப்புள், உதடு, அண்டம், முழங்கால், கண்டச்சதை, தொடைச்சதை என்னும் இடங்களில் எவ்விதகட்டிகள் பிறந்தாலும் அசாத்தியமென்றே நிதானிக்கவும்.

வித்திரதிக் கட்டி

இந்தக் கட்டியானது தோல், ரத்தம், மாமிசம், மேதை, எலும்பு, சன்ன நரம்பு, கெட்டிநரம்பு என்னும் இடங்களில் கொஞ்சங் கொஞ்சமாக உருவாகிப் பின்பு தடித்து எழுப்புகின்ற வீக்கத்தை பழைய ரூபமாகக்கொண்டு குத்தலையுண்டாக்கும். இது வெளியிலா வது உட்புறமாவது கிளம்பி அதிக வேதனையுடன் வட்டமாகவும், நீண்டும் கட்டியாய்காணும். இது உண்டான இடத்தில் இருந்தால் வித்திரதி என்றும், நரம்புகளின் வழியாக ஒடிஒடி திரிந்தால் ஒடுவித்திரதி என்றும் பெயர். இந்த வித்திரதிகட்டி வாதம், பித்தம், சிலேத்துமம், திரிதோஷம், இரத்தம், கஷதம் என 6 விதப்படும்.
இந்த வித்திரதிகட்டி நாபி, வஸ்தி, பீலிகம், யகிருகி, குலோமம், இருதயம், வம்ஷணம், முஷ்கம், அபாணம் என்னும் பத்து விடங் களில் முக்கியமாய் உண்டாகும். அப்போது அந்தந்த இடங்களின் பெயர் கொண்டு வழங்கப்படும். இது தவிர ஸ்தனவித்திரதி என்றும் ஒன்று உண்டு.

1.வாதவித்திரதிகட்டி :- கருத்து, சிவந்து அதிக நோயுடன்
தாமதமாக விரித்தியடைந்து பழுத்து உடையும். இரைப்பு இருமல் வியர்வை, பிரமை, வயிற்றுப் பொருமல், புரளல், சரீரத்தில் கொஞ்சம் வீக்கம் முதலிய குணங்களுடையது.

2.பித்தவித்திரதிகட்டி :- சிவந்து வெளுத்த தாம்பிர நிறத்
துடனும், எரிச்சலுடனும், விரைவில் விரித்தியடைந்து உடையும். தாகம், சோர்வு, அதிசுரம், உள்ளெரிச்சல், என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்மவித்திரதிகட்டி :- வெளுத்து, அசைவற்று, தினவு வியர்வை, குளிர்ச்சியுடன் விரித்தியடைந்து பழுத்து உடையும். அசையக்கூடாமை, அருசி, கொட்டாவி, தேகம், பாரித்தல் என்னும் குணங்க ளுடையது.

4. திரிதோஷவித்திரதிகட்டி :- மேற்கூறிய மூன்று தோஷங்களின் குணங்கள் உண்டாகி மிகவும் உபத்திரவத்தை கொடுக்கும்.

5.ரத்தவித்திரதிகட்டி :- கருத்தும், வெளுத்தும், சிறு சிறு
கொப்புளங்களுடன் உண்டாகும். அப்போது அதிதாகமும்
பித்தவித்திரதிகட்டிகளும் உண்டாகும். இது புருஷர்களுக்கு
வெளிப்புறத்திலும், மாதர்களுக்கு உட்புறத்திலும் உண்டாகும்.

6. கஷித்திரவித்திரதிகட்டி :- சுத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டு காயம் உள்ளவனுக்கு அபத்தியத்தால் நரம்புகள் கெட்டு கட்டி உண்டாகும். இது உபத்திரவத்தை கொடுக்கும்.

குடல் விருத்தி ரோகம்


வாயுவானது அதோமுக மார்கமாக அண்டங்களுக்குள் சஞ்
சரித்து அவ்விடத்தில் வீக்கத்தையும், சூலையையும் உண்டுபண்ணி பின்பு நாபியின் நரம்பு வழியாக சென்று ஆண்குறியில் அது சரித்து அதின் நரம்புகளுக்கும், அண்டத்தின் நரம்புகளுக்கும், உபத்திரவத்தை உண்டாக்கி குடல் விருத்தி ரோகத்தை உண்டாக்கும். இந்த ரோகமானது வாத குடல் விருத்தி, ரத்த குடல் விருத்தி, பித்த குடல் விருத்தி சிலேஷ்ம குடல் விருத்தி, மேதோ குடல் விருத்தி, மூத்திர குடல் விருத்தி, குடல் அண்ட விருத்தி, என எழு வகைப்படும்.

அண்ட நோய்

அண்ட நோயானது குடல் அண்டம், குமுறல் அண்டம், நீர்
அண்டம், தசை அண்டம், என நான்கு விதப்படும். நீர் அண்டத்தில் ரத்த அண்டம் என ஓர் பிரிவும், தசை அண்டத்தில் வாதாதிகளால் மூன்று பிரிவுகளும் உண்டு. இவைகளை விரைவாதம், பீசவாதம், அண்டவாதம் என்றுஞ் சொல்லுவார்கள்.

1. குடல் அண்டம் :- வீக்கமில்லாமல் பருத்து ஒவ்வொரு
வேளை மிகுந்த உபத்திரவத்தை கொடுக்கும்.

2. குமுறல் அண்டம் :- கைதுருத்தியைபோல் பருப்ப
தும், மேலேரினும் கீழிறங்கினும் சும்மாவிருக்கினும் இடைவிடாது இறைவதும், சிலவேலை யில்லாததுமாக இருக்கும். நடக்கும்போது அவ்விடத்தில் பிகுத்தலும், கொஞ்சம் உஷ்ணத்தினால் வேதனையும் உண்டாகும். இதனை ஏறண்டம், இறங்கண்டம் எனவுஞ் சொல்லு
வார்கள்.

3. நீர் அண்டம் :- துர்நீரினால் பருத்து கெட்டிப்பட்டு சில
வேளை சுரத்தையும் வேதனையும் உண்டாக்கும்.

4. தசை அண்டம் :- ஒரு அண்டத்திலாவது இரண்டு அண்
டத்திலாவது தசையானது விருத்தியாகி மிகவும் உபத்திரவத்தை உண்டாக்கும். இது மிகவும் பெரியதாய் வளரும்.

குன்ம நோய்

அதிக ஏப்பம், மலபந்தம், வயிறு நிறைந்ததைப்போலிருத்தல்
துர்பலம், குடலிரைச்சல், வயிற்றில் கூச்சலோடு உப்பிசம், வயிறு நோதல், அசீரணம் என்னும் இக்குணங்களைப் பெற்றிருக்கும். குன்மரோகமானது, வாதம், பித்தம், சிலேஷ்மம், வாதபித்தம், வாதசிலேஷ்மம், பித்தசிலேங்மம், திரிதோஷம், ரத்தகுன்மம் என
எட்டு வகைப்படும். ரத்தகுன்மரோகம் மாதர்கட்கு உண்டாகும்.

1. வாதகுன்மம் :- கழுத்து சிரசு நரம்புகளில் நோதல், சுரம், குடலில் இரைச்சல், வயிற்றில் ஊசியால் குத்துதல்போல் குத்தல், மலபந்தம், மூச்சுத்திணறல், சொல்லக்கூடாத மயக்கம், வயிற்றில் அதிக வலி, என்னுங் குணங்களுடையது.

2. பித்தகுன்மம் :- தாகம், புளி ஏப்பம், மூர்ச்சை, பல நிற
மான பேதி, வியர்வை, சரீர எரிச்சல், தேகம் மஞ்சள் நிறம
வயிற்தை பிசைந்தால் பச்சைப்புண்போல் நோதல், வாந்தி, மயக்கம், கோழை, கைகால் ஒச்சல், சிவந்த மூத்திரம், மந்தம், முக்கலுடன் மலம்சாரம், சுவாசம் என்னுங் குணங்களுடையது.

3.சிலேஷ்ம குன்மம் :- அசையக்கூடாமை, குளிர்சுரம்
அரோசகம், நாசியில் சலம் வடிதல், சோம்பல், மார்பு துடித்தல், இருமல் தேகவெழுப்பு, பசிமந்தம் என்னும் குணங்களுடையது.

4. வாத பித்தகுன்மம் :-
 வாத பித்த குன்மங்களின் குணங்கள் கலந்து காணப்படும்.

5. வாத சிலேத்தும குன்மம் :- வாத சிலேத்தும குன்மங்களின்  குணங்கள் கலந்து காணப்படும்.

6. பித்த சிலேத்தும குன்மம் :-
 பித்த சிலேத்தும குன்மங்களின் குணங்கள் கலந்து காணப்படும்.

7. திரிதோஷகுன்மம் :- வாதபித்த சிலேத்தும குன்மங்களின் குணங்களை கொண்டு அதிக வலியும், மிகு தாகமும் உண்டாகும். அன்றியும் வயிறுப்பல், பேதி, வாய் துவர்த்தல் என்னும் குணங்களுமுண்டாம். இது அசாத்தியம்.

8. ரத்த குன்மம் :- இது ரத்தவாதம், ரத்தபித்தம் என்னும்
இரு வகைப்படும். இதில் ரத்தவாத ரோகமானது பெண்களுக்கு ருது காலத்திலும், முதற்பிரசவகாலத்திலும், அல்குல் ஸ்தானத்தில் மேக முதலிய ரோகங்கள் காணும் சமயத்தில் உண்டாகும் அப்போது  மார்பு அதிரல், மசக்கை, ஸ்தானத்தில் கொஞ்சம் பால், ஆயாசம்
முதலிய குணங்களுமுண்டாகும். வயிற்றில் கர்ப்பத்தை போல கெட்டரத்தம் கட்டிக்கொண்டு இருக்கும். ரத்தபித்த குன்மத்தில் உக்கிரமான வலி, அல்குலில் மேககசிவு, ரத்தமும்மிருக்குமிடத்தில் குத்தல், என்னும் குணங்களுடையது. இதையை மாதாந்திர குண்மம்
சூதக வாய்வு, தூரச்சூலை எனவும் கூறுவர்.

மேற்கூறிய 8 வித குன்மங்கள் தவிர வலிகுன்மம்
எரிகுன்மம், சக்திகுன்மம், சூலைகுன்மம் என வேறு விதங்கள் உண்டு. அவையாவன :-

சூலைகுன்மம் :- உண்டபதார்த்தங்கள் செரியாமை அன்
னஞ் செல்லாமை, துருத்தியைப்போல் வயிறுப்பல்,அவயவங்கள் கடுக்குதல், சரீரம் உலரல், நடை குறைதல், ஓய்ச்சல், வியர்வை வற்றில் பந்து உருளல் போல் கட்டி உருளல். என்னும் குணங்களுடையது.

எரிகுன்மம் :- அடிவற்றில் எரிச்சல், குடல் புரட்டல்,
வாய் நீறுரல், தலை சுழலல், வயிற்று வலி, வயிறுப்பல், இரைச்சல், புளியோப்பம், ரோமதுவாரங்களில் வியர்வை, பேதி, சரீரம்  இளைத்தல், இருமல்,அன்னஞ் செல்லாமை என்னும் குணங்க ளுடையது.

3. வாந்திகுன்மம் :- வாந்தி, அரோசகம், ஈரலுக்குள் எரிதல், ஏக்கம், தயக்கம், மயக்கம், வயிறுப்பல், அற்பவலி, பலவீனம், மலபந்தம், மந்தாக்கினி, நடைகுறைதல், சிறுநரம்புகள் உப்பல், தேகத் தில் திமிர் என்னுங் குணங்களுடையது.

4. வலிகுன்மம் :- வயிற்றில் முள்ளை சொருகுதல்போலிருத் தல், உப்பிசம், குடைச்சல் நோய், சரீரம் உலர்ந்துகருத்தல், அற்ப உண்டி, விலாசொருகல், முதுகுதண்டில்வலி, இடுப்புநோய், சரீர மெங்கும் கடுத்தல், அதிக சுரம், பொய்ப்பசி என்னுங் குணங்க
ளுடையது.

ஆநாக நோய்

குதஸ்தானத்தின் அபானவாயுவும், இருதயஸ்தானத்தின்
உதான வாயுவும், தங்கள் தொழில்களைவிட்டு இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வயிற்றை பிகுத்தலுடன் இழுத்துக்கொள்ளும். அப்போது வயிற்றில் இரைச்சல், மலசிக்கல், சுரம், சுவாசம் முதலிய உபத்திர வங்களுண்டாகும் இது வயிற்றை இழுத்துப்பிடிப்பதால் ஆநாக ரோகமென பெயர்பெற்றது.

ஆநாகரோக பேதங்கள் :- ஆநாகரோக விகர்ப்பத்தால் அஷ்டிலாரோகமும், பிரத்தியஷ்டிலாரோகமும், துனிரோகமும், பிரதி துனிரோகமும் பிறக்கும். இன்னும் ஜலகூர்மரோகமென்பது ஒன்று உண்டு.

அஷ்டிலாரோகம் :- வயிற்றுக்குள் திரட்சியுள்ளதாகவும் கெட்டிப்பட்டதாகவும் ஒரு வீக்கம் உண்டாகும். அது பந்துபோல் எழும்புவதும் தோற்றப்படுவதுமா யிருக்கும்.

பிரத்தியஷ்டிலா ரோகம் :- ஆநாகரோக குணத்துடன் ஊர்த்துவமுகமாகவே எழும்புகின்ற கட்டியானது குறுக்காகவளர்ந்து இருபக்க விலாக்களிலும் குறுக்கே ஒடிஒடி பாய்ந்துக்கொண்டேயிருக்கும்.

துனி ரோகம் :- வயிறுகுத்தல், வீக்கம் முதலிய குணங்களைக் கொண்டு பக்குவாசய ஸ்தானத்தில் ந்ன்று ஆசனம் அல்குல் என்னும் ஸ்தானங்களின் சமீபம்வரையிலும் அதிக உபத்திரவத்தை உண்
டாக்கிக்கொண்டு அதோமுகமாக கீழ் இறங்கிக் கொண்டே
யிருக்கும்.

பிரதிதுனி ரோகம் :- மேற்கூறியதுபோல் ஆசனஸ்தானத்திலிருந்து பக்குவாசயஸ்தானம் வரையிலும் உபத்திரவத்தை உண்டாக்கிக்கொண்டு ஊர்த்துவமுகமாக மேல் நோக்கிக்கொண்டே
யிருக்கும்.

ஜலகூர்ம ரோகம் :- ஆமைப்போல் கட்டியாகி நோயில்லாமலும், சிகிச்சைக்கு இடங்கொடாமலும், வலது அல்லது இடது பக்கத்திலாகிலும், அசைந்தும் அசையாமலுமாவிருக்கும். இதனால் தொடைகளுக்குள் துர்ப்பலமும், சரீரம் வெளுப்பும் உண்டாகும். இது நீரோடு கூடி யிருப்பதால், நீராமை என்றும்
ஊருவதால், வல்லைக்கட்டி என்றும் சொல்வார்கள்.

சூலைநோய்

இது வாதசூலை, பித்தசூலை, சிலேஷ்மசூலை, திரிதோஷசூலை, சர்க்காரசூலை, ஆமைசூலை, குன்மசூலை, என எழு விதப்படும். சூலத்தால் குத்துவது போல் நோயைத் தருவதால் சூலை நோய்
என்று பெயர் பெற்றது.

1. வாதசூலை :- இடுப்பு, தொடை, முதுகு, ஆசனம், ஆண்
குறி, அல்குல், கீழ் வயிறு, இதுகளில் பிகுத்தலுடன் வேதனை, கை கால் குடைச்சல், தடித்தல், திமிர், தாகம், அதிரல், கண், முழங்கால் விலா இவைகளில் கனத்தல், சிறு நீர் கடுத்து சிவந்து வீழல், பழபழப்பு என்னும் குணங்களுடையது.

2. பித்தசூலை :- தேக காங்கை, சுரம், வியர்வை, குத்தல்
மூர்ச்சை, சரீர வாட்டத்துடன் வேதனை, கை கால் உளைப்பு,பார்வை மந்தம், நாடி மெலிந்து நடத்தல், நிறம்மாறல், மயக்கம், துர்ப்பலம் என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்மசூலை :- சரீரம் மறத்தல், மூர்ச்சை, எந்த வஸ்துவிலும் அசங்கிதம், குத்தல், தொண்டையில் வேதனையுடன் கபாதிக்கம் அடிவயிற்றில் வலி, வியர்வை, நகக்கண்களில் ரத்தமில்லாமை தேகம் வெளுத்து புண் போல் எரிதல் வாயில் நீறுரல் என்னும் குணங்க
ளுடையது.

4. திரிதோஷசூலை :- இதில் முற்கூறிய வாதபித்த சிலேத்
துமச் சூலைகளின் குணங்கள் யாவும் கலந்து காணப்படும்.

5. ஆமைசூலை :- மார்பு, விலாப்பக்கம், வயிறு இதுகளில்
ஈட்டியால் குடைவது போல் குத்தல் என்னும் குணங்களுடையது. இது சீதக்கட்டு விருத்தியினால் உண்டானதால், இதனால் ஆமைசூலை எனப்பட்டது.

6. சர்க்காரசூலை :- இடுப்பு, முதுகு, விலாப்பக்கம், அடித்
தொப்புள், குதஸ்தானம், கீழ் வயிறு இவ்விடங்களில் குத்தல். மூத்திரம் ரத்தத்துடன் கூடி நீர்த்துவாரத்தில் சுருக் சுருக்கென வேதனையுடன் துளித் துளியாக இறங்கல், இடுப்பு, முதுகு, விலாப்பக்கம், அடித் தொப்புள், குதஸ்தானம், கீழ் வயிறு இவ்விடங்களில் மாமிசம் வளர்தல், சலத்துவாரத்தில் மணல் அடைத்துக் கொள்ளல், மனக்கலக்கம், என்னும் குணங்களுடையது.

7. குன்மசூலை :- மலபந்தம், வாந்தி, வியர்வை, தாகம்,
ஏப்பம், மூர்ச்சை, வயிறு பொருமல், இரைச்சல், குத்தல், வாய் நீருறல், மாமிச தாதுவெதும்பல், சரீரமுலரல், அரோசகம் என்னுங் குணங்களுடையது.

8. மேகசூலை :- கைகால் கடுப்புடன் குடைச்சல், வியர்வை, மலபந்தம், சிவந்தமூத்திரம், சீதளம், எரிச்சல், சுரம், மந்தம், பிரமை, மயக்கம் என்னுங் குணங்களுடையது. இதுதவிர, உலர்த்
துச்சூலை நிதம்பச்சூலை, கறைச்சூலை, சுரச்சூலை, பக்கச்சூலை, கருப்பச் சூலை முறிச்சூலை என்பவைகளும் உண்டெனக் கூறப்படுகிறது.

மகோதரம்

இதை உதரரோகம், பெருவயிறு, துந்திரோகம் என்றுஞ்
சொல்லுவார்கள். கன்னமும் கீழ்வாய்தாளின் அடியும் உதடும் வற்றி சுருங்குதல், கைகால் வயிறு இவ்விடங்களில் வீக்கம், நடை, பலம், பசி இவைகள் குறைதல், சரீரம் உலரல், வயிறுமாத்திரம்
பெரியதாகுதல் என்னுங் குணங்களுடையது.

1. வாதோதரம் :- வயிறானது பருத்தும், சிலவேளை வாடி
யும், சிலவேளை நொந்தும் நோகாமலும், மேலில் கறுத்த சின்ன நரம்புகளால் சுற்றப்பட்டும், உள்ளில் ஆச்சரியமான சத்தமும், வயிறு, விலா இடுப்பு, முதுகீல்களில் நோதல், வறட்டிருமல், கீழ் வயிறு கனத்தல், மலபந்தம், சருமமானது கருத்தாவது சிவந்தாவது தோற்றங் என்னுங் குணங்களுடையது.

2. பித்தோதரம் :- வயிரானது பருத்து புகைநிறத்தையும்,
பச்சிலைரச நிறத்தையும் பெற்று மேலில் சுடுகையும், வியர்வையும், கடினத்துவமும், அழுத்தினால் உபத்திரவம், நரம்புகள் சிவந்து அல்லது மஞ்சள் நிறத்துடன் சுற்றப்பட்டும், அருந்தும் போஜனம் சீக்கிரம் ஜீரணித்தல், சுரம், மூர்ச்சை, தாகம், பேதி, பிரமை என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்மோதரம் :- வயிரானது கனத்து பருத்து கடினத்துடன் அழுத்தமாய் அசைவற்று வெளுத்து மினுமினுத்து குளிர்ச்சியை அடைந்திருக்குதல், தேகத்தில் கனத்தல், நித்திரை அல்லது உறங்கிவிழுதல், கிடந்த இடத்திலேயே கிடப்பதற்கு நினைப்பு, வீக்கம், சருமமும் பஞ்சேந்திரியங்களும் வெளிறல், அரோசகம், இரு
மல், இரைப்பு என்னுங் குணங்களுடையது.

திரிதோஷோதரம் :- திரிதோஷ ரோகங்களுக்குரிய குணங்களைப் பெற்று பார்ப்பதற்கு பயங்கரரூபமாயும், வீக்கம், மூர்ச்சை, சுரம் முதலிய துர்க்குணங்களும், விரைவில் ஜீரணசக்தியும், வெளுத்த கண்ணீரும், கால்கை இளைத்தல், வயிற்றில் மாத்திரம் வீக்கம்,
தலை சுழலல், தயக்கம் என்னுங் குணங்களுடையது.
 


5.பீலிகோதரம் :- அதிகதிண்டி, யானை முதலிய வாகனங்
ளிலேறி வேகத்துடன் நடத்தல், தகாத காரியங்களை செய்தல் குடல் குலுங்கும்படி அதிக சையோகஞ்செய்தல், அதிபாரம் எடுத்தல், நெடுந்தூரம் ஓடுதல் என்னும் செய்கைகளினாலும், தேகம் இளைத்தலினாலும், பீலிகம் தனது இடத்தை விட்டு நழுக, அதிலிருந்து வருகின்ற
ரத்தம் அப்பீலிகத்தை அனுசரித்து அன்னரசாதிகளால் விருத்தியடைந்து ஆமை முதுகை போல் கடினத்தையும், உயர்வையும் பெற்று நாளுக்கு நாள் அப்பக்கத்தில் நிறைந்து பருக்கும். வயிறானது பருத்து சிவந்த நிறத்துடன் மஞ்சள் கருப்பு புடைகள் உள்ளதாகி கெட்டிப்பட்டு இருக்கும். தேகம் வெளிறல், தாகம், இருமல், வயிருப்பல்
சுரம், மூர்ச்சை, வாந்தி, உள்ளெரிச்சல், மேலெரிச்சல் சோர்வு முதலிய குணங்களுண்டாகும். இது அசாத்தியம்.

6. யகுர்தோதரம் :- மேற்கூறிய காரணங்களினால் இருத
யத்திற்க்கு வலப்பக்கத்திலிருக்கிற கருத்த மாமிச கண்டமான யகுர்தி தனது ஸ்தானத்தைவிட்டு நழுகி வயிறு பருக்கும்.அப்போது இரைப்பு இருமல் முதலிய குணங்களுண்டாகும்.

7. பந்தோதரம் :- உணவாதி பேதங்களினால் மல பந்தம் உண்டாகி மூலரோகம், உதாவர்த்தரோகம், ஆநாகரோகம், குடலி லொட்டிக்கொள்ளும் அன்னம் இவைகளினால் அதிகரித்து மலத்தை வெளிப்படுத்தாமல் வயிற்றுக்குள் பந்தித்து கீழ் வயிற்றுக்கும் அடிவயிற்றுக்கும் குதஸ்தானத்தை உண்டாக்குதல், கீழ் வயிறானது
பருத்து வாயுவை வெளியிடாமல் நிறைத்துக்கொண்டு அசைவற்றிருப்பதும் மேலில் நரம்புகளும் புடைகளும் கருத்தாவது சிவந்தாவது மோதிர வளையம்போல் சுற்றி கொண்டிருப்பது மாக பருத்திருக்கும் அபானன், தொடை, மார்பு, சிரசு, தும்மல், தாகம், எரிச்சல், சுரம்,
இரைப்பு, மலபந்தம், அரோசகம், வாந்தி என்னுங் குணங்களுண்டாகும்.

8. க்ஷதோதரம் :- கூர்மையான சன்ன எலும்பு, பாணத்தின்
முளை, ஊசி, உவாமுள்ளு, முள்ளு, வால்நெல்லு முதலியவைகள் கிடந்த போசனத்தினாலும், அதிதிண்டியினாலும், குடலுக்குள்துவா
ரம் உண்டாகும். அல்லது அவ்விடங்கள் நைந்திருக்கும். அப்பொழுது உண்ணுகின்ற உணவு அம்மார்க்கங்களினின்று செரித்தும் செரியாமலும் அஜீரணரசம் குடலுக்கு வெளிப்புறத்தில்கசியும். அது
குடலுக்கு உள்ளும் வெளிப்புறமும் இருக்கின்றமையால் அது மலத்துடன் கூட பிரேத நாற்றத்துடன் சிவந்தாவது மஞ்சள் நிறமாயாவது ஆசனவழியாய் கழியும். மற்ற ரசம் உள்புறமாகவேயிருந்து வயிற்றை மிகவும் பருக்கப்பண்ணும். கீழ்வயிறு பருத்து தண்ணீர்
பானையை ஒத்திருக்கும். மேல் சுவாசம், தாகம், பிரமை என்னுங் குணங்களுண்டு. இதையே சித்திர ரோகமென்று சொல்வார்கள்.

9. சலோதரம் : - நெய்யையாவது, எண்ணெய்யையாவது மிதமில் லாமல் குடித்து உடனே சீதள ஜலத்தை குடிப்பதனால் தாகம் உண்டாகி மென்மேலும், சலபானம் பண்ணுவதினால் சமாக்னி மந்தப்பட்டு வயிற்றிலிருக்கும் சல நரம்புகளின் துவாரங்களை யடைந்து முன்பு குடித்த சலத்தையே விருத்தியாக்குவதால் வயி
ரானது பருத்து மினு மினுத்து தண்ணீர் பானையை யொத்து அசைவற்று தட்டினால் சத்தம் உண்டாவதாய் மேலில் பலநிற நரம்பு களால் சுற்றப்பட்டு சரீரம் நருக்கித் துவைத்தது போலிருத்தல் ஆசனத்தில் வியர்வை போல் சலங்கழிதல் நோதல் நடுக்கல் தாகம், அரோசகம், இருமல், இரைப்பு, என்னும் குணங்களுடையது.

10. சலஸ்தம் போதரம் :- மேற்கூறிய உதரரோகங்களுக்கு சிகிச்சைகள் செய்யாவிடில், திரிதோஷங்கள், அதனது இடத்தை
விட்டு பீலிகஸ்தானத்தைச்சேர்த்து, கீல்களுக்கும், நரம்புகளுக்கும் வெப்பத்தை கொடுத்து அவ்விடத்து சிலேஷ்ம பசையை வியர்வை சலம்போல் பெருக்கிக்கொண்டு, வயிற்றுப் புறைக்குள் நிறைத்து
வயிற்றைப் பருக்கச்செய்யும், வயிறானது கனத்து, வட்டமாயும், சத்தமில்லாமலும், மெலிற்புடைகளும், நரம்புகளும் இல்லாமல்நாபி முதல் முதுகுபரியந்தம் ஏற்றமும், இறக்கமும், உண்டாகும்.மரண
கால உபத்திரவங்களைப் பெற்றிருக்கும்.

பீலிக நோய்

மேடுபள்ளம் வாய்க்கல் முதலியவைகளை தாண்டல்,
அவுஷதத்தினால் மிகு பேதியான காலத்தில், அதிக நடை, பூர்த்தியாய் பூசித்து தாக பானமுஞ்செய்து வேகமாக ஓடுதல் ஆகிய இச்செய் கைகளில், உபத்திரவம் ஒன்றுமில்லாமல், இருதயத்திற்கு இருபக்கத்தில்
இருக்கும் பீலிகமென்னும், மாமிசத்துண்டு குலுங்கி தனது ஸ்தானத்தை விட்டு சரிந்து வயிற்றில் பலவித உபத்திரவத்தை செய்த கட்டி போல் தோற்றப்படும், இது வாதபீலிகம், பித்தபீலிகம், சிலேஷ்ம பீலிகம், திரிதோஷ பீலிகம் என நான்கு வகையாகும். இவை
களில் வாதபீலிகம், அசாத்தியம் மற்ற பீலிகம், சாத்தியமென்றறிக.

பாண்டு

பாண்டுரோகமானது அரோசகம், சரீரம், சுற சுறத்தல், மார்பு
அதிரல், மஞ்சள் நிறமான மூத்திரம், வியர்வை, மந்தாக்கினி, தேகம் இளைத்தல், ஆயாசம் என்னும் குணங்களை முற்குறியாற்பெற்றிருக்கும், பாண்டு நோயானது வாதபாண்டு. பித்தபாண்டு, சிலேஷ்ம பாண்டு,
திரிதோஷபாண்டு, மண்பாண்டு என ஐந்து வகையாகும்.


1. வாதபாண்டு :- நரம்பு, நகம், மலம், மூத்திரம், கண்
இவைகள் கருத்தும், சிவந்தும் தோற்றுதல், நடுக்கல், உடம்பு உருக்கி துவைத்தது போல் இருப்பதுடன், நோதல், வயிறுப்பல், தேக வீக்கம், முகக்களை நீக்கல், மலந்தீய்தல், பக்கவிலாவிலும், சிரசிலும் நோய், குடல் புரட்டலுடன் அடிவயிற்றை வலித்தல் பசியும், தாகமும் நீங்குதல் என்னும் குணங்களுடையது.

2.பித்தபாண்டு :- நரம்பு, மலம், மூத்திரம், மஞ்சள் நிறமா
யும், பச்சிலை நிறமாயும், இருத்தல் கண்களில் இருட்கம்மல், தாகம், வியர்வை, சீதள வஸ்த்துகளின் இச்சை, வாயில் துர்கர்த்ததுடன், காரமாக இருத்தல், மலபந்தம், புளி ஏப்பம், சரீரம் மஞ்ச ளித்தல், அல்லது வெளுத்தல், வாயில் முள்ளுப்போலிருத்தல்,
நெஞ்சுவலி, சுவாசபந்தம், சிறு கிறுப்பு என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்ம பாண்டு :- நரம்பு முதலியவைகள் வெளுத்தல், சோம்பல், வாயில் உவர்ப்புச்சுவை, உரோமச்சிலிர்ப்பு, கண்டத்தில் கமரல், இருமல், வாந்தி, அதிக தும்மல், கோழை, மயக்கம், இடுப்பு
அசதி, இந்திரிய நஷ்டம், உடற் சோர்வு, எரிச்சல் என்னும் குணங்களுடையது.

4. திரிதோஷபாண்டு :- மேற்கூறிய திரிதோஷங்களில்
உண்டான உபத்திரவங்களை எல்லாம் ஏக காலத்தில் உண்டாகும். இரைப்பு, மார்புவலி, தயக்கம், தேகம் ஊறல், அசதி என்னும் குணங்களுடையது.

5. மண்பாண்டு :- மண் சாம்பல் முதலியவைகளை நாள்தோறும் அருந்துவதினால் சரீரத்திலுள்ள அன்ன ரசநரம்புகள் உலர்ந்து ரச தாது நசிந்து, அதன் காரணமாய் ரத்த தாதுவும் நசிந்து இந் நோய் உண்டாகிறது. இதில் நாபி பாதம்,முகம், அல்குல், ஆண்குறி என்னும் இடங்களில் வீக்கமும், துண்டு துண்டாக கிருமி சேர்ந்தமலம்
ரத்தங்கலந்த கோழைவாந்தியும் உண்டாகும்.

மேற்கூறிய ஐவகை பாண்டு ரோகங்கள்க்கு சரியான சிகிச்சைகள் செய்யாவிடில் விஷபாண்டு ரோகம் உண்டாகும்.

விஷபாண்டு :- அரோசகம், காங்கை, தாகம், இருமல், வாந்தி விக்கல், அதிகசுவாசம், வயிறிரைச்சல், அதிசாரம், மார்பு கனத்தல், மிகுசுரம், தேகம் வெளுத்து அல்லது மஞ்சளித்து ஊதல், பஞ்சேந் திரியத்தன்மை குன்றல் என்னுங் குணங்களுடையது. இது கடின சாத்தியம்.

பாண்டுநோயில் சாத்தியா சாத்தியம் :- பாண்டுரோகிகட்கு
வீக்கம், சோம்பல், தாகம், அரோசகம், வாந்தி, விக்கல், இருமல் பேதியென்னுங் குண்ங்களுண்டாகி எந்த வஸ்துவை பார்த்தாலும் மஞ்சள் நிறமாக தோற்றுதல், கண்களிலும், நகங்களிலும், மஞ்சள் நிறமும் உண்டாகில் அசாத்தியம். இக்குறிகள் ஒன்றும் இல்லாம
லிருந்தால் சுகசாத்தியம்.

காமாலை

பாண்டு நோயில் பித்தாதி உணவுகளை அருந்தி, பித்தம் அதிகரித்து ரத்த மாமிச தாதுக்களை தாக்கி, பித்தாதிக்க குணங்களை யுண்டாக்கி இந்நோயைப் பிறப்பிக்கும். இது ஊதுகாமாலை, வாத காமாலை, வரட்காமாலை, பித்தகாமாலை, சிலேஷ்மகாமாலை, வாத சிலேஷ்மகாமாலை, சிலேஷ்மபித்தகாமாலை, தொந்தகாமாலை, மஞ்சட்காமாலை, அழகுகாமாலை, செங்கமலக் காமாலை, கும்பகாமாலை,
குன்ம காமாலை என பதின்மூன்று விதங்களாம்.

1. ஊதுகாமாலை :- சரீரம் வீக்கத்துடன் கனத்தல், திமிர்,
எரிச்சல், உள்ளங்கை, கால், கண், சரீரம் இவைகளில் வெளுப்பு, கை கால் ஒச்சல், நடுக்கல், இளைப்பு, மலபந்தம், முகத்தில் மஞசள் நிறம், காது மந்தம், சிரோபாரம், தலைசுழலல், தயக்கம், மஞ்சள் மூத்திரம் என்னுங் குணங்களுடையது.

2. வறட் காமாலை :- கால் கை வற்றல், அசதி, மூத்திரமா
னது சுடுகையுடன் கற்த்தாவது சிவந்தாவது இறங்கல், சரீரத்தில் குத்தல், அருசி, பார்வைமந்தம் என்னுங் குணங்களுடையது.

3. வாத காமாலை :- வயிறு பொருமல், வீக்கம், மலபந்தம், புறங்காலும் முகமும் அசைத்தல், சோம்பல், கண்பருத்தல், தூக்கம், என்னுங் குணங்களுடையது.

4. பித்த காமாலை :- மயக்கம், தயக்கம், நித்திரைபங்கம், சரீர சுட்கம், படுக்கையாக கிடத்தல், அசீரணம், அதிகசுவாசம், சோறு சோறாக பேதி, வயிறிரைச்சல், அசதி என்னுங் குணங்களுடையது.

5. சிலேஷ்ம காமாலை :- தலையிலும் முகத்திலும் வியர்வை சுவாசம் இருமல், தேகநடுக்கல், மார்புகனத்தல், நடை தளரல், கண் சிவக்குதல் என்னுங் குணங்களுடையது.

6. வாதசிலேஷ்ம காமாலை :-
 வாத, சிலேஷ்ம காமாலை
களின் குணங்களை ஏககாலத்தில் உடையது.

7. சிலேஷ்மபித்த காமாலை :- சிலேஷ்ம, பித்த காமாலை களின் குணங்களை ஏககாலத்தில் உடையது.

8. பித்தவாத காமாலை :- வாத, பித்த காமாலை
களின் குணங்களை ஏககாலத்தில் உடையது.

9. மஞ்சட் காமாலை :- முகம், கால், கை, உண்ணாக்கு,
மூத்திரம் முதலியவைகளில் மஞ்சள் நிறம், முகத்தில் மினுமினுப்பு, சரீர முழுதும் ஊதல், அன்னத்துவேஷம், அழுகை, சுவாசித்தல், மஞ்சள் நாற்றம் வீசுதல், தாதுநஷ்டம், மலபந்தம், என்னுங்
குணங்களுடையது.


10. அழகு காமாலை :- சரீரவாட்டமில்லாமல் வெப்பத்துடன் மினுமினுத்தல், கைகால் அசதி, புருவம், கண், மூத்திரம் இவை களில் மஞ்சள் நிறம், ஆண்குறியில் எரிச்சல் அசீரண்ம், வயிற்றுப் பிசம் என்னுங் குணங்களுடையது.

11. செங்கமலக் காமாலை :- தாமதகுணம், தேகம் தளர்த்தல், சோம்பல், மூத்திரம் சிவந்தாவது மஞ்சள் நிறத்துடனாவது அருகி அருகி இறங்கல், உடலும் நகமும் வெளிறலுடன் சுட்கித்தல், சுரம், உண்ணாக்கு, நாவு, உமிழ்நீர் இவைகளில் மஞ்சள் நிறம் என்னுங்
குணங்களுடையது.

12. கும்ப காமாலை :- தேகம் கண்டுகண்டாக வீங்குதல், அடிக்கடி களை, தேகமும், சிறுநீரும் மஞ்சள்நிறம், மாலைகாலத்தில் வியர்வை, கண்சிவத்தல், சரீரச்சோர்வு என்னுங் குணங்களுடையது.

13. குன்ம காமாலை :- அன்ன ஜீரணகாலத்தில் அடிவயிறு
வலித்தல், வாந்தி, கண்களில் மஞ்சள்நிறம், மஞ்சள் நிறத்துடன் குழம்பியமூத்திரம், வாய்வெளிரல், மனதிற்கு ஒன்றுந்தோன்றாமை, இருமல், இளைப்பு என்னுங் குணங்களுடையது.

14. காமாலை நோயில் சாத்தியாசாத்தியம் :-பித்தகாமாலை, மஞ்சட்காமாலை, சிலேஷ்மகாமாலை, ஊதுகாமாலை, வறட்காமாலை, வாத சிலேஷ்மகாமாலை, பித்தசிலேங்மகாமாலை என்னும் இவ்வேழும்
சாத்தியம். மற்ற ஆறும் அசாத்தியம்.

சோபை

சந்நிபா தம்முதலிய சுரங்களின் விஷங்கள் தேகத்தில் ஊறுதல், சிறையிலிருத்தல், அடிபடுதல், நெடுந்தூரம் நடத்தல், மலைவாசம், நீர் கரைவாசம், சாம்பல்மண் இவைகளை திண்ணுதல், ரத்தம் முறிதல்
என்னும் இச்செய்கைகளினால் சோபை உண்டாகும். இந்த வீக்கம் நீளநீளமாகவும், முடிச்சுமுடிச்சாகவும், பருமனாகவும், சர்வாங்கத் திலும் ஒரே காலத்தில் வியாபித்தால் நிசசோபை யென்றும் இது
முதலில் ஒரு அவயவத்தில் உண்டாகி பின்பு மற்ற அவயவங்களில் பரவுமாகில் ஆகந்துக சோபையென்றும் பெயர்.

இது வாதசோபை, பித்தசோபை, சிலேஷ்மசோபை, வாத
பித்தம், வாதசிலேஷ்மம், பித்தசிலேஷ்மம், திரிதோஷசோபை, அபிகாதசோபை, விஷ்சோபை என ஒன்பது வகைப்படும்.

வாதாதி திரிதோஷங்களின் பிரகோபத்தினால் அந்த்ந்த
குணங்களை அடைந்திருக்கும்.

ஆயுதங்கள் முதலிய காயங்களினால் உண்டாகும் சோபைக்கு அபிகாத சோபை என்றும் விஷமருந்துகள், அபக்குவ ரச பாஷாண மருந்து முதலியவைகளை அருந்துவதினால் உண்டாகும் சோபைக்கு விஷசோபை என்றும் பெயர்.

உபத்திரவமில்லாமல் வீக்கமாத்திரம் கண்டால் சுகசாத்தியம்.

சரீரமுழுவதும் பூசினாற்போல் வியாபித்த வீக்கமானது நெடு நாளாகியும் போகாமல் அதிக நோயைத் தருவதாயிருந்தாலும், புருஷர்களுக்கு முதலில் பாதத்தில் கண்டு பின்னர் உபத்திரவத்துடன் மேலேறினாலும், மாதர்களுக்கு முதலில் முகத்தில் கண்டு பின்னர்
அதோமுகமாக கீழிறங்கினாலும், புருஷர்களுக்காவது மாதருக்கா வது வயிறு, குதம், அல்குல், ஆண்குறி என்னும் இடங்களில் வீக்கங் கண்டு அக்காலத்தில் வாந்தி, சுரம், சுவாசம், பேதி, குதம் வெளிப் பட்டு அதில் புழுவூருதல்போல் இருத்தல் என்னுங் குணங்களுண்
டானலும், வீக்கங்கண்டு வடிந்தவுடன் பேதியுஞ் சுரமுங் கண்டு இவை நீங்கிய பின்பு வீக்கம் ஏறினாலும் அசாத்தியம். துர்பல காலத் தில் முகம் கைகால் என்னும் இடங்களில் வீக்கம் ஏறினாலும் அல்லது
தேகம் சுட்கித்து முன்சொன்ன அவயங்களில் வீக்கம் ஏறினாலும் ஒரு மாதத்திற்குள் மரணத்தை யுண்டாக்கும்.

விசர்ப்பி ரோகம்

சோபை ரோக குணங்களுடன் பலநிற கொப்புளங்களையும்
சுரரோக குணங்களையும் அடைந்து தேகத்தில் உட்புறம் வெளிப்புறங்களில் ஒவ்வொரு காலத்திலாவது அல்லது ஏககாலத்திலாவது இருபுறத்திலும் பிறக்கும். இது புருவம், உச்சி, கண்டம், மார்பு, மார்புக்க்ங்கீழ், உந்தி, உதடு, பீஜம், முழங்கால், கனுக்கால், இடுப்பு, காலின்பெருவிரல், சுண்டுவிரல், தோள் என்கிற பதினான்கு மர்ம
ஸ்தானங்களைப்பற்றி சீக்கிரத்தில் பரவுதலால் விசர்பிரோகம் என பெயர்பெற்றது. விசர்வியானது தோஷபேதங்களினால் 7-விதமும், க்ஷதவிசர்பி என ஒன்றும் உண்டு. இவைகள் வயிற்றில் ஈரமில்லாத காலத்தில் மட்டுப்படும்.

1. வாதவிசர்பி :- உடம்பெங்கும் ஏககாலத்தில் தளதளப்பான வீக்கம், அவ்வீக்கத்தின்மேல் கருத்த கொப்புளங்கள் எழும்புதல், மிகுநோய், சரீரம் அடித்து துவைத்ததுப்போலிருத்தல், ஆயாசம்,
இரைப்பு, தாகம், வாதசுரத்துக்குள்ள குறிகள் என்னுங் குணங்க ளுடையது.

2. பித்தவிசர்பி :- சரீர முழுதும் விரைவில் வீங்குதல், அவ்வீக்கத்தின்மேல் மஞ்சள் அல்லது சிவந்தநிற கொப்புளங்கள், மிகுதுயரம், பித்தசுரகுணம் என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்மவிசர்பி :- தேகமுழுதும் மினு மினுப்பான வீக்கம், அவ்வீக்கத்தின்மேல் வெளுத்த கொப்புளங்கள், தினவு, சிலேஷ்மசுர குணம் என்னுங் குணங்களுடையது.

4. வாதபித்தவிசர்பி :- சோபை, சுரம், பேதி, தாகம், மூர்ச்சை, வாந்தி, பிரமை, எலும்பு நொறுங்கினதுபோல் நோதல், அக்கினி மந்தம், அரோசகம், அபத்திய வஸ்துக்களிலிச்சை, சரீரத்திலெரிச் சல், இவ்வெரிச்ச லுண்டாகும் இடங்கருத்தல், எரிச்சலில்லாத விடம் நீலநிறம் அல்லது ரத்தநிறம், நெருப்பு கொப்புளங்கள்போல
சர்வாங்கத்திலும் கொப்புளங்கள் எழும்புதல், நித்திரை கெடுதல், சிலவேளை மேல்சுவாசம், விக்கல், புரளல் முதலியன காணும். நெருப்பு கொப்புளங்கள்போல் எரிச்சல் தருதலால் இதனை அக்கினி விசர்பி என்றுஞ் சொல்லப்படும். இது மனதையும் சரீரத்தயும்
பற்றியதால் ரோகிக்கு சிலேசமும், அறிவு குறைதலும் அநித்திரையுந் தரும்.

5. வாதசிலேஷ்ம விசர்பி :- ரத்ததாது விருத்தியடைந்தவனது சருமம், நரம்பு, சன்ன நரம்பு, மாமிசமென்னும் இவைகளில் தங்கிய இரத்தமானது தடிக்கச்செய்து அதை நீண்டவடிவும், வட்டவடிவும்
பருத்தவடிவும், சிறுத்த கொப்புள வடிவும், புடைபோல் தடித்த வடிவுமாகத் திரட்டிவிடும். பின்பு அவைகள் ரத்த நிறத்துடன் மேலெங்கும் மலையைப்போல் வரிசைவரிசையாக அநேக உபத்திர வங்களைத் த்ருப்படியான கிரந்திகளாக எழும்பும், அப்போது சரு
மம் சிவத்தல், சுரம், இரைப்பு, இருமல், பேதி, சரீரநோய், வாய் உலரல், விக்கல், வாந்தி, உள்ளெரிச்சல், சோருதல், மாறுநிறம், மூர்ச்சை, அக்கினிமந்தம் முதலிய குணங்களுண்டாகும் கிரந்திகளை உண்டாக்குதலா லிதனை கிரந்திவிசர்பி என்றுஞ் சொல்லப்படும்.

6. பித்தசிலேஷ்மவிசர்பி :- மரத்தல், சுரம், நித்திரை, சோம் பல், திமிர், முறுக்கல், பிதற்றல், அரோசகம், பிரமை, மூர்ச்சை, சீதபேதி, தேகமூதல், வீக்கத்தால் சரீரத்தின்மேல் கறுத்தும் மினு மினுத்தும் வெளுத்தும் அழுக்குநிறமான அநேக கட்டிகளுண்டா கும். அவைகள் அதிக பிரயாசையாய் பழுத்து உடையும், மாமிசத்தை சேறுபோலழுகச்செய்து சன்ன நரம்பையும், ரத்த நரம்பை யும் நையப்பண்ணி மேலே பிரேதநாற்றத்துடன் சேற்று நிறம்
கொடுத்திற்கும். இதனை பங்கவிசர்பி என்றுஞ் சொல்வார்கள். நுணாக்காய் கிரந்தி என்றுஞ் சொல்வார்கள்.

7. திரிதோஷ விசர்பி :- மேற்கூறிய திரிதோஷங்களின்
குணங்கள் ஏககாலத்தில் உண்டாகி விரைவில் சப்ததாதுக்களிலும் பரவும். இதற்கு சர்வவிசர்பி என்றும் பெயர்.

8. க்ஷத விசர்பி :- ஆயுத முதலியவற்றால் காயம்பட்டு அக்காயங் களை சரியான சிகிச்சை செய்யாவிடின் உதிரங்கெட்டு தேகமுழுதும் கொள்ளுப்பிரமாணம் கருநீறஞ் செந்நிறம் உள்ள கொப்புளங்கள் உண்டாகும். இதனால் தேகத்தில், வீக்கம், சுரம், நோய், தாகம்
முதலியன உண்டாகும்.


9. சாத்தியாசாத்திய விசர்பிகள் :- திரிதோஷவிசர்பிகள் சாத்தி யம். தொந்தங்கள் அசாத்தியம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக