ஞாயிறு, ஜனவரி 10, 2010

கிரஹணி ,அலசகம்,அஜீரணம் -ரோக நிதானம்

கிரகணி

அதிசார ரோகத்தைப் போலவே ஜீரணா ஜிரண காலங்களிலும் சுபாவமலமாகவும், சீதங்கலந்தமலமாகவும், செரித்ததாகவும், செரி
யாததாகவும், காரணமில்லாமல் கட்டுப்பட்டதாகவும், நானாவிதமாகவும் அடிக்கடி விஷேச மலமாகவும், பேதியாகும். இதை கிராணி அல்லது
கிரகணி என்றும் கூறுவர். மலமாக பேதியாகில் மலக் கழிச்சலென்றும் சீதமாகப் பேதியாகில் சீதக்கழிச்சலென்றும், சலமாக பேதியாகில் சலக்
கழிச்சலென்றும், தொண்டையில் புகை கிளம்பியது போல் இருந்தால் மயக்கம்,மூர்ச்சை, தலை நோய், கை கால் வீக்கம், மலபந்தம், என்னுங் குணங்களுங் காணும். கிரகணி ரோகம், வாதகிரகணி, பித்தகிரகணி,
சிலேத்தும கிரகணி, திரிதொஷ கிரகணி, குன்மகிரகணி, உஷ்ணவாயு கிரகணி,வாயுகிரகணி, மூலவாயுகிரகணி, கருப்ப கிரகணி, ஒட்டு  கிரகணி, சங்கர கிரகணி, என எழு வகை கிரகணிகள் காணப்படுகிறது.
அவையாவன :- 

1. உஷ்ணவாயுகிரகணி :- வயிற்றில் கனத்தலுடன் சத்தம், இரைச்சல், கை, கால் அசதி, தேகங் கருகி மெலிதல், என்னுங் குணங்களுடையது.

2. அந்தர வாயுகிரகணி :- புசித்தவுடன் பேதியாதல்,
இரைச்சல், அசதி, தாகம், தளர்ச்சி, இசிவு, சரீர வெப்பம்,
விக்கல் என்னுங் குணங்களுடையது.

3. மூலவாயுகிரகணி :- இரைச்சலுடன் வயிற்றைப் பிதட்
டல், அடிவயிறு பொருமல், மலம் வரளல், மந்தம், அடிக்கடி
குத்தல், சரீரம் தளரல், குதத்திலும், கண்ணிலும், மூளையிலும் காணல் என்னும் குணங்களுடையது


4. குன்ம கிரகணி :- வயிற்றில்குத்தல், அதிக உறக்கம், வியர்வை, தலைநடுக்கல், தேகஎரிச்சல், உழலை, வயிறு பொருமி இரைந்து பேதியாதல், ஒரு பக்கத்தில் இரைச்சல் என்னுங் குணங்களுடையது.

5. கருப்பக்கிரகணி :- பேதி, கடுப்பு, கைகால் வற்றல், ஒச்சல், கண்ணில் மஞ்சள் நிறம், பலவித கழிச்சல், அதிக தாகம், சாப்பிட்டால் வாந்தியாதல், என்னுங் குணங்களுடையது.

6. ஒட்டுக் கிரகணி :- படுக்கையே இதவாகத் தோற்றல்,
இளைப்பு, வயிற்றில் அடிக நோய், மார்பிலும் விலாவிலும் முதுகிலும் வலித்தல், மலமாந்து ஒரே தடவையில் இறங்காமல் துட்டிடை துட்டிடையாக இறங்கல், தொப்புள் வளையம்போல் கருங்கல் என்னுங் குணங்களுடையது.

7. சங்கர கிரகணி :- வயிறு பொருமல், செரியாத கழிச்சல்,
அபானத்தில் சுடுகையுடன் எந்நேரமும் நனைதல், சிறுவியர்வை, உக்கிரமானசுரம், மனக்கெடுதி, நெஞ்சிற் கபாதிக்கம், இரு கண்களும் சரிதல் என்னுங் குணங்களுடையது.

கிரகணியில் சாத்தியா சாத்தியம் :- வாதகிரகணி, பித்தகிரகணி, உஷ்ணவாயுகிரகணி, அந்தரவாயுகிரகணி, மூலவாயு கிரகணி, கருப்பகிரகணி, ஒட்டுகிரகணி இவைகள் சாத்தியம். மற்றவைகள் அசாத்தியம்.

அலசரோகம் (மந்தம்)

இது மூன்று வகைப்படும். அவையாவன :-

1. ஆமாலசகரோக லக்ஷணம் :- பிரமாணம் தம்பி மென்
மேலும் புசிக்கும் மனிதனுக்கு புசித்த அன்னமானது வாந்தியாகாமலும், பேதியாகாமலும், ஜீரணிக்காமலும் ஆமமாகிய சிலேஷ்மத்தில் பிசறிக்கொண்டு மிகுவேதனையை யுண்டாக்கும்.

2. தண்டாலசகரோக லக்ஷணம் :- திரிதோஷமானது மிகவும் அதிகரித்து ஜீரணியாமலிருக்கும் அன்னத்தைக்கொண்டு நரம்புகளுக்கு பிகுவேற்றி நரம்புகளை குறுக்காக பற்றி தந்திகளை சுற்றி
இறுக்குவதுப்போல் இறுக்கி சரீரத்தை தண்டத்தைப் போலவே நீக்கிவிடும். இது அதிசீக்கிரத்தில் கொல்லும்.

3. விஷாலசகரோக லக்ஷணம் :- அபக்குவமான அன்னத்தை புசிப்பதால் அஜீரணப்பட்டு மந்தமேற்படும். இதில் விஷகுணங்களைப்போல் மகா கோரங்களுண்டாகி முடிவில் மாரணத்தை யுண்டாக்கும்.

விஷீசி நோய்

வயிற்றில் இரைச்சல், மடைதிறந்ததுபோல் சுத்தசலமானபேதி, தொண்டைவறளல், அதிகதாகம், பிசிபிசிப்பான வியர்வை, நடுக்கல், கண்குழிவிழுதல், சரீரநிறமாறல், ஈனத்தொனி என்னுங் குணங்க ளுடையது. விஷீசி என்றால் பேதி. இது மூன்றுவிதப்படும்.
அவையாவன :-

1. வாதவிஷீசி :- வயிற்றுபொருமல், பேதி, பிரமை, நடுக்
கல், தேகம் மறத்தல், ஊசியினால் குத்துவதுப்போல் குத்தல், வயிற்றிரைச்சல், தேகங்கறுத்தல், விழித்திருந்தபடியே இருத்தல், குடல் குமுறலுடன் புரட்டல் என்னுங் குணங்களுடையது.

2. பித்தவிஷீசி :- சுரம், பேதி, வயிற்றிரைச்சல், தாகம்,
கால்கைமரத்தல், சோம்பல், மூர்ச்சை, விக்கல், பிதற்றல், வாந்தி, மயக்கம், பிரலாபம் என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்மவிஷீசி :- வாந்தி, சலம் சவமாக பேதி, தேகங்
கனத்தல், தாள்பிடிப்பு, உமிநீர் உமிழ்தல், கையில் நாடிகள் விரைவில் அடங்குதல், வலிப்பு, நடைகெடல், புரளல், மேல் நோக்கிய பார்வை என்னுங் குணங்களுடையது.

அசீரண நோய்

இந்நோயானது முக்கியமாக உண்ணப்படும் உணவின் அளவு, பக்குவம், காலம் முதலிய வேறுபட்டால் ஏற்படும். இது மூன்று வகைப்படும். அவையாவன :-

1. வாதா சீரணம் :- மலபந்தம், வாந்தி, பிரமை, முகத்திலும் மார்பிலும் துர்கந்தம் வீசுதல், தாகம், பீடை என்னுங் குணங்க ளுடையது.

2. பித்தா சீரணம் :- பேதி, வயிற்றில்நோய், அடிக்கடி வாந்தி யாதல், கால்கைகளில் அயர்வு என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்மா சீரணம் :- வாந்தி, பிரமை, முகத்தில் வியர்
வை, சீதளம், தேகம் மரம்போலிருத்தல் என்னுங் குணங்க
ளுடையது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக