ஞாயிறு, ஜனவரி 10, 2010

அதிசாரம் -ரோக நிதானம்


நோயால் இளைத்த மிருகமாமிசம், கெட்டுலர்ந்த மாமிசம்,
நன்றாக வேகாத பதார்த்தங்கள், புண்ணாக்கு முதலிய மந்த
வஸ்துக்கள், கள்ளு சாராயங் குடித்தல், காரவஸ்து, வயிற்றில் கிருமி நிறைவு, அபானவாயு, தும்மல், மலம், மூத்திரம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், நித்திரை, கண்ணீர், சுக்கிலம், சுவாசம், வாந்தி, இளைப்பு என்னும் பதிநாலு வேகத்தை யடக்குதல், இவை கானல்வாய்வு அதிகரித்து சப்ததாதுக்களையும், உதராக்கினியையும்,
கெடுத்து மலப்பையிற் சேர்த்டுக்கொண்டு கெட்டியாயிருக்கிற மலத்தை சலமாகக்கறைத்து அபான வாயலின் வழியாய் ஒழுகப் பண்ணும். இது மார்பு, குதம், வயிறு இவ்விடங்களில் நோதல், உடம்பு இளைத்தல், அசீரணம் என்னுங் குணங்களுடையது.

1. வாதாதிசாரம் :- இரைச்சலையும் நோயையும் உண்டாக்கி பேதியாகி நுறையோடு துண்டுதுண்டாக மலம்விழுதல், பசையற்று ஆசனம் காய்ந்ததுப்போல் தோற்றல், கத்தியால் அறுபட்டது போல் நோய், கொஞ்சஞ் சீதம்சுற்றிக் கொண்டதாய் மலம்நழுதல் வயிற்றில் பொருமலுடன் நோய், சூலை, அடிவயிற்றில் பிடுங்கல்,
சிலவேளை மஞ்சளாயும், கருப்பாயும், வெளுப்பாயும் துர்க்கந்தத் துடன் பேதியாகுதல், புளியேப்பம், வாந்தி என்னுங் குணங்களுடையது.

2. பித்தாதிசாரம் :- மலமானது பல நிறத்துடன் துர்க்கந்தத்
துடன் வயிற்றிலும் ஆசனத்திலும் நோயையுண்டாக்கி அசீரணத்துடன் இளகி பேதியாகுதல், தாகம், மூர்ச்சை, வியர்வை, எரிச்சல், என்னுங் குணங்களை யுண்டாக்கும்.

3. சிலேத்துமாதிசாரம் :- மலமானது தடித்ததாகவும், எண்ணை கலந்ததாகவும், நூல்போல் கொடிகொடியாகவும், அதிக வெண்மை யாகவும், மினுமினுப்பாகவும், அசீரணப்பட்டதாகவும், பொறுத்து பொறுத்து வருவதாகவும், துர்க்கந்தமாகவும், ஆசனத்தில் மிகுந்த
பளுவையுண்டாக்கி பேதியாகுதல், அதிக நித்திரை, சோம்பல், அன்னத்துவேஷம், ஆசனத்திலும் அடிவயிற்றிலும் மேல்வயிற்றிலும்
கனத்தல், கபாதிக்கம், தும்மல், நீரடைத்தல் என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ அதிசாரம் :- வாதாதி மூன்று தோஷங்களில் உண்டாகிற உபத்திரவங்கள் உண்டாகுதல், சன்னிபாத சுரலக்ஷணம் அடைந்திருக்கும்.

5. பயாதிசாரம் :- சலஞ்சலமாக பேதியுண்டாகும். திரிதோஷ குணங்களைப் பெற்றிருக்கும். இது பயத்தினால் ஏற்படுவதாம்.

6. துக்காதிசாரம் :- தூக்கத்தினால் உண்டாகும் பேதிக்கு
துக்காதிசாரம் என்று பெயர். இதுவும் மேற்கூறிய குணங்களைப் பெற்றிருக்கும்.

7. மந்தாதிசாரம் :- செரியாமல் பேதியாவது மந்தாதிசாரம். இந்நோய் மந்தத்துடன் துர்க்கந்தத்துடன் பேதியாதல், வயிற்றில் நோய் வாயில் நீருறல் என்னுங் குணங்களுடையது. இதனை அசீரண பேதி என்றுங் கூறுவர்

8. ரத்தாதி சாரம் :- ரத்தத்துடன் கலந்து பேதியாவதால்
ரத்தாதி சாரம் எனப்படும். இது தாகம் வயிற்று நோய், ஆசனம் வெளிப்படுதல், சரீர எரிச்சல் என்னுங் குணங்களுடையது. 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக