ஞாயிறு, ஜனவரி 10, 2010

மூல ரோகம் -ரோக நிதானம்

ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப்போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளைப் பெற்றிருக்கும் காரணத்தினால் மூல ரோகமென பெயர்பெற்றது. இந்த ரோகம் தாய் தந்தையர் வழி யாகவும், காங்கை வஸ்துக்கள் கடின வஸ்துக்கள் பித்தவாதப்
பொருட்கள் முதலியவைகளாலும் உண்டாகும். இந்த ரோகம் அக்கினி மந்தம், மலபந்தம், அடித்தொடை சதையிலும், கணுக்கால் கண்டைச் சதையிலும், அதிக நோய், ஆயாசம், உடம்பிளைத்தல், கண் அதப்பு, பேதி அல்லது மலக்கட்டு, ஆசனத்தில் நோய்,
அபானவாயு பரிதல், ஏப்பம், சிலவேளை புளியேப்பம், நீரிறங்கள், சொற்ப மலம் நழுவல், எந்த காரியத்திலும் புத்தி செல்லாமை, சிரசு, முதுகு, மார்பு என்னும் இடங்களில் குத்தல், சோம்பல், கோபம் என்னுங் குணங்களுடையது.

1. வாதமூலம் :- முளைகள் உலர்ந்தும், வாடியும், சிவந்தும், கறுத்தும், மேடுபள்ளமாகவும், கடினமாகவும், நெருங்கியும், கூர்மை யாகவும் இருக்கும்.

2. பித்தமூலம் :- முளைகள் சிவந்த நிறமாகவும், மஞ்சள் நிற மாகவும், காந்தியாகவும், வெண்மையாகவும், கறுத்து மெல்லியதாக வும் கொஞ்சம் ரத்தத்துடன் துற்கந்தமாகவும், கொஞ்சம் மிருதுவாகவும், அசையப்படுவாதகவுமிருக்கும். அம்முளைகள் மாமிசகண்
டம், அட்டைமுகம் இவைகளை யொத்திருக்கும். தாகம், சீரணம், சுரம், வியர்வை, உதடுலரல், மூர்ச்சை, அரோசகம் என்னுங் குணங்களுடையது.

3. சிலேஷ்ம மூலம் :- முளைகள் பெருத்து ஆழ்ந்தவேறுள்ள தாகவும், மினுமினுப்பாகவும், வட்டமாகவும், கனத்தாகவும், எண்ணைக்கசியாகவும், நீங்காத வழுவழுப்புள்ளதாகவும், அற்பநோய்,
நமைச்சல், சொறி, அம்முளைகள் மூங்கில் முளை, பலாப்பிஞ்சு, எலும்பு, திராட்சைபழம் இவைகளை யொத்திருக்கும் இந்த ரோகிக்கு இரண்டு கவுட்டியிலும் உப்பல், குதஸ்த்தானத்திலும் அடிவற்றிலும், தொப்புளிலும், அறுப்பது போல் நோய், இருமல் இரைப்பு, தலை நோய், குளிர்சுரம், விந்து நஷ்டம், பீனிசம், சோர்வு
ஒழுக்கு மூத்திரம், அஜீரணம், வாந்தி முதலிய குணங்கள் ஏற் படும்.

4. தொந்தமூலம் :- முளைகளும், வாதபித்த சிலேத்தும
மூலகுணங்களின் தொந்தமும் காணும்.

5.திரிதோஷமூலம் :- மேற்கூறிய .திரிதோஷமூலங்கள்
யாவையும் பெற்றிருக்கும்.

6.ரத்தமூலம் :- இரத்தம் கசிவதால் ரத்தமூலம் ஏற்படும்.

இது தவிர வாதபித்த, வாதசிலேத்தும, பித்தசிலேத்தும
மூலங்கள் திரிதோஷ தொந்தத்தால் உண்டாகியிருக்கின்றன.

மேலும் முளைகள் இருக்கும் இடத்தை அனுசரித்து பலவகரான பெயர்களால் வழங்குகின்றனர். அவைகளாவன :-

மூலரோகமுளைகள் உள்ளிருந்தால் உள்மூலம் என்று பெயர்.

முளைகள் வெளிப்பட்டிருந்தால் வெளிமூலம் என்று பெயர்.

முளைகளோடு சீழ் வடிந்தால் சீழ்மூலம் என்று பெயர்.

முளைகளோடு ரத்தம் கசிந்தால் ரத்தமூலம் என்று பெயர்.

முளைகளோடு சலம் கசிந்தால் சலமூலம் என்று பெயர்.

முளைகள் ஆணிபோல் கடினமாக இருந்தால் ஆணிமூலம் என்று பெயர்.

முளைகள் கிரந்தியுடனிருந்தால் கிரந்திமூலம் என்று பெயர்.

மூலநோயின் சாத்தியாசாத்தியங்கள் :- குதஸ்த்தானத்திற்
குள், அடிவளையம், நடுவளையம், மேல்வளையம், என மூன்று வளையங்கள் இருக்கின்றன. அடிவளையத்தில் திரிதோஷங்களால் உண்டானால் அசாத்தியம். நடுவளையத்தில் மேல்தொந்ததோஷங்களால்
முளைகள் உண்டாகில் சாத்தியமாவது போலாகி வருடந்தோறும் கண்டு மறைவதாய்யிருக்கும். மேல்வளையத்தில் ஒவ்வொரு தோஷத்தினால்
உண்டான முளைகளும் அதிசீக்கிரத்தில் சாத்தியமாகும்.

அசாத்திய மூலரோகம் :- எந்த மூல நோயிலும் கை, கால்
நாபி, ஆசனம், பீஜம், முகம் என்னும் இடங்களில் வீக்கம் உண்டானால் மரணம் வாய்க்கும் என்று அறியவும்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக