ஞாயிறு, ஜனவரி 10, 2010

மூர்ச்சை -ரோக நிதானம்

மூர்ச்சை ரோகமானது ஐவகைப்படும். அவை யாவன :-

1. வாதமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தால் கறுப்பு நிறம்,
சிவப்பு வர்ணம், நீலவர்ணம் போல் தோற்றி மூர்சை உடனே தெளியும், இதனால் மார்பு நோய், நடுக்கல், பிரமை முதலிய குணங்களுண்டாகி தேகம் இளைக்கும். அப்போது சரீரம் கறுத்து அல்லது சிவந்து இருக்கும்.

2. பித்தமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தால் மஞ்சள் நிறம், சிவப்பு வர்ணமாயும் தோற்றப்பட்டு, மூர்ச்சை யானது உடனே தெளியும், இதனால் தேக எரிச்சல், காங்கை, வியர்வை, துண்டு துண்டாகமலம் நழுதல், தேகம் மஞ்சள்அல்லது கறுப்பு வர்ணம், இரண்டு கண்களும்
கலங்கி மஞ்சள் அல்லது சிவப்பு வர்ணம், என்னும் குணங்களுடையது.

3. சிலேஷ்மமூர்ச்சை :- ஆகாயத்தைப் பார்த்தல் மேகம்
கம்மினாற்போல், தோற்றப்பட்டு மூர்ச்சை உண்டாகி நெடு நேரம் பொறுத்து தெளியும். இதனால் மார்பதிரல், வாயில் ஜலம் வடிதல் அவயவங்களெல்லாம் அசையக்கூடாமையாக நனைந்து தடித்தல்.  மத்தைப் போத்திக்கொண்டதுபோல் சரீரம் கனத்திருக்குதல்
என்னுங் குணங்களுடையது.

4. திரிதோஷ மூர்ச்சை :- மேற்கூறிய வாதாதிமூர்ச்சாரோக குணங்களை எல்லாமுடையதும், கோரசேட்டையுண்டாகி அபஸ்மார ரோகத்தைப்போல் உணர்ச்சி யிழந்து மூர்ச்சை யுண்டாகும்.

5. சந்நியாசி மூர்ச்சை :- திரிதோஷங்கள் பிராணஸ்தானங் களில் அதிகரித்து சந்நிபாதமாகி மனம் வாக்கு காயம் என்கிற திரிகரணங்களின் செய்கைகளை அடக்கிவிட்டு தானும் அடங்கி சந்நியாசி ரோகத்தை உண்டாக்கும். அப்போது இந்த ரோகி வெட்டி
முறித்த மரத்தைப்போல் விழுவான். உயிரிருந்தாலும் உயிரில்லாததுபோல் சவத்தைப்போல் கிடந்து இறந்துவிடுவான்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக