செவ்வாய், பிப்ரவரி 14, 2012

எங்கேயடி கற்றாய் எனை கொல்லும் வர்மக்கலை

காதலர் தினத்தில் என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13  ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..
 

Post Comment

1 comments:

கருத்துரையிடுக