திங்கள், ஜனவரி 01, 2018

ஆங்கில புத்தாண்டில் உங்களால் மாறிக்கொள்ள - மாற்றிக்கொள்ள முடியுமா ?

ஆங்கில புத்தாண்டில் உங்களால் மாறிக்கொள்ள - மாற்றிக்கொள்ள  முடியுமா ?


டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure )., BAMS,M.Sc.,MBA
வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன மாயை உலகின் மேற்கத்திய கலாசாரத்தில் தொலைந்து போன நமது சுய அடையாளத்தை மீட்டெடுக்க உங்களால் சிறிது மாறிக்கொள்ள முடியுமா ?வெறும் Cut copy paste மூலம் நாமும் திடீர் எழுத்தாளார் ஆகிய நாம் ,Forward மெசேஜ் மூலம் நமது சிந்தனை ,காலம் இழந்து ,வதந்தி பரப்பி – குப்பை சிந்தனைகளை மாற்றிகொள்வோமா ?


மனிதாபிமானம் இழந்து விபத்தை வேடிக்கைபார்ப்பது மட்டுமல்லாது அதை வீடியோவில் பரப்பி நாம் திடீர் நிரூபர் ஆவதை மாற்றிகொள்வோமா ?


டிவி வெற்று விவாதங்களை பார்த்து , நாடக சீரியல்களில் நம்மை இழந்து ,அடிமையாகி –பொழுதை வீணாக்கி -எது உண்மையான மகிழ்ச்சி என்று இழந்த பொழுது திருப்பி வரவே வராது என்று அந்த முட்டாள் திரைக்கு முன் அடிமைத்தனத்தை மாற்றி கொள்வோமோ ?


கார்ப்பரேட் கைகளில் சிக்கி , தற்சார்பு பொருளாதாரம் மறந்து , விளம்பர மாயை ,விலை குறைவு  ,இலவசம் என்ற அபாய வெளிச்சத்தில் சிக்கிய பூச்சி மன நிலையை மாற்றிக் முயல்வோமா ?


உங்களது கைபேசி தேவையற்று விழுங்கிய உங்களது பொன்னான காலத்தின் அருமையை உணர்ந்து ஆண்ட்ராய்டின் அடிமை தனத்தை மாற்றிகொள்வோமா ?


பாரம்பரிய உணவை மாற்றிய துரித உணவையும் , கவர்ச்சி அட்டைபெட்டியில் விஷம் கலந்த உணவையும் , வெறும் செக்கு எண்ணெய் மட்டும் வாங்கி விட்டால் போதும் ,கலப்படங்கள் அறியாத ,ஆர்கானிக் என்கிற போர்வையில் வருகிற போலிகளை இனம் காண முடியா சோம்பேறி மன நிலையை      மாற்றி கொள்வோமோ ?


மூலிகை கதைகளை நம்பாமால் , சாமியார் வேடம் தரித்த தாடி வைத்தவன் சொல்வது தான் உண்மை என்று நம்பாமல் , வாட்சாப்பில் வரும் எந்த ஆதாரம் இல்லாமல் வருகிற போலி மருத்துவ குறிப்பை நம்பாமல் முறையாக மருத்துவம் படித்த ஆயுர்வேத சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவோம் என்று மன நிலையை மாற்றி கொள்வோமோ ?


சுதேசம் என்கிற போர்வையில் வருகிற பசுத்தோல் போர்த்திய புலிகளை இனம் கண்டறிவோம் ...உண்மையான சுதேசம் நம் அருகில் உள்ளதே என்று மனம் மாறுவோமா ?


ஆயுர்வேதம் என்பது சோப் , அழகு சாதனங்கள் இல்லை, ஆயுர்வேதம்  வாழ்க்கை முறை என்று உணர்ந்து மனம் மாறுவோமா ?


காடு அழித்து , வேடம் தரித்த ,காசு பார்க்கும் கார்பரேட் சாமியார்கள் நமக்கு சொல்லும் யோகாவை புறந்தள்ளுவோமா ? தன்னை உணரும் மெய் உணர்வே உண்மையான மன அமைதி என்று அறிந்து கொள்வோமா ?


உள்ளத்தில் நல்ல உள்ளம்... என்று சிகிச்சைக்கு வரும் நோயாளியின் அனுமதி இல்லாமல் அவர்களை நோய் வேதனையை படம் பிடித்து , தேவை இல்லாத டெஸ்ட் பீஸ்க்கு ஐந்தாயிரம் அழுது ,மாதம் ரூ 12000 க்கு மருந்து வாங்கி ஏமாந்து , இறை மருத்துவம் என்று மார்கெட்டிங்கில் மாட்டி கொள்ளும் மன நிலையை மாற்றி எல்லா அரசு மருத்துவ மனையிலும் தரமான ஆயுர்வேத சித்த யுனானி யோகா மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுக்க மன நிலையை மாற்றி கொள்வோமா ?

மருத்துவத்தில் அதிக அறிவு ஆபத்து என்று உணர்வோம் ..கூகிளை மருத்துவத்தில் துணை கொள்வது மடமை என்று உணர்ந்து மாறி கொள்வோமா ?


ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ..இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம் . 


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர்    90 4222 5333
சென்னை         90 4333 6444
திருநெல்வேலி    90 4222 5999
ராஜபாளையம்    90 4333 6888
தேனி            90 4727 7577
Post Comment

0 comments:

கருத்துரையிடுக