ஞாயிறு, ஜனவரி 14, 2018

நானும் தமிழன் தான் ..

தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..

டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBAநானும் தமிழன் தான் ..வருடத்தில் ஒரு நாள் வேட்டி தினம் கொண்டாட பாக்கெட் வேட்டி கட்டிய ..காதி கிராப்டை மறந்த நானும் ...தமிழன் தான்


யூ டியூபில் குக்கரில் பொங்கல் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளும் நானும் ...தமிழன் தான்


ஏறு தழுவ தெரியாத ..ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பெப்ஸி, கோகோ கோலா குடிக்கிற – அப்பன் காசில் KTM  பைக்  ரேஸ் மாவீரன் நானும் தமிழன் தான்


அண்டை வீட்டாரின் பெயர் கூட தெரியாத ,பெற்றோரை முதியோர் இல்லத்திலும் ,கட்டிய பெரியவீட்டில் அகதியான நாகரிக அனாதையாக்கின பெற்றோருடன்  ஸ்கைப்பில் மட்டுமே பேசி பாசம் கொள்ளும் நானும் தமிழன் தான்


உண்பது விஷம் என்று தெரிந்தும் ..பாக்கெட்டில் Expiriy Date மட்டும் பார்க்கிற நானும் தமிழன் தான்


உலகமயமாதலில் என கோவணம் கூட உருவப்பட்டு இருப்பதை கூட உணர்ந்து கொள்ளாது TV யில் எனது சினிமா தலைவன் அரசியலுக்கு வந்து எல்லாம் மாற்றி தருவான் என்று ஆசை கொள்ளும் நானும் தமிழன் தான்


ஏட்டு சுரைக்காய் கல்விக்கு இளமையை அடுக்கு வைத்த இலக்கு அறியா நானும் தமிழன் தான்


மைக்ரோ ஓவனும் ,ப்ரிட்ஜும் ஆரோக்யத்தின் அஸ்திவாரம்  என்று ஹோட்டலில் பகட்டு என்று பெருமை பேசும் நானும் தமிழன் தான் 


தமிழை மூன்றாம் பாடமாக கூட எடுக்க தயங்கும் நீட் பள்ளிகளில் ,தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அடிமை பள்ளிகளில்  எம் பிள்ளைகளை படிக்க பெருமை பேசும் நானும் தமிழன் தான்


மலம் கழிக்க கூட Western toilet மட்டுமே உபயோகிக்க தெரிந்த நாங்களும் தமிழன் தான்


சமூக வலை தள போராளியாய் மட்டும் ,மீடியா சொல்வதெல்லாம் உண்மை என்று செல்போனில் வாட்ஸ் ஆப் ,பேஸ் புக் ,ட்விட்டர்  என்று பொழுதை வீணாக்கும் நாங்களும் தமிழர் தான் ,


அணை கட்ட போராடாத , குளிர் பதன கிடங்குகளை கட்ட போராடாத – மதம் என்னும் போர்வையில் பிரித்தாளும் சூழ்ச்சியில் குளிர் காய விரும்பும் விட்டில் பூச்சிகளான நாமும் தமிழன் தான் .


விவசாயம் உயிர் மூச்சு , விவசாயம் தொழில்களில் முதன்மை என்று வெட்டி பேச்சு பேசி . .டை கட்டிய முழு நேர கார்பரேட் அடிமைகளாய் மாறிப்போனதே தெரியாத நாங்களும் தமிழன் தான்
.

ஹைபிரிட் முளைக்காத உயிரில்லா விதைகள்,ரசாயனம் கலந்து மலடாகி போன நிலத்தில் சிஸேரியன் போன்று ட்ராக்டர் கொண்டு சிதைத்த  நிலங்கள்...வெள்ளைதான் வேண்டும் என்று டபுள் பாலிஷ் அரிசி உண்ணுகிற நாமும் தமிழன் தான்


ஆர்கானிக் உணவு, நஞ்ஜில்லா உணவு, இயற்கை உணவு, டாக்டர் சிவராமன் சொல்கிறார், அல் ஷிபா கியூர் ஷ்யூர் சொல்கிறார் என்று வெறும் ஏட்டுசுரக்காய் கதையோடு ஒரு சிறிதும் வாழ்வியலை, உணவை மாற்றாத நாங்களும் தமிழன் தான்


எது உண்மை ,எது போலி  என்று இனம் பிரித்து அறிய முடியாத  அளவுக்கு மூலிகை கதைகள் பார்வேர்ட் செய்யும் திடீர் எழுத்தாளர் நாங்களும் தமிழர் தான்


தாடி வைத்து ,சாமியார் வேடம் தரித்து , காலையில்  TV யில் ஆதாரமே இல்லாமல்  விடும் கட்டு கதைகளை உண்மை என நம்பும் நாங்களும் தமிழர் தான்


நோயாளி வரும் போதே அவர்கள் அனுமதி இல்லாமல் படம் பிடித்து ,அதை தொலை காட்சியில் விளம்பர படுத்தி  நல்ல மார்கெட் டெக்னிக் தெரிந்த போலி வர்ம ஆசான்களின் பல ஆயிரம் .லட்ச கணக்கில்  பணத்தை இழந்து ஏமாந்து , உண்மையான மருத்துவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளாத நாங்களும்  தமிழர் தான்


உள்ளே சாப்பிட கெமிக்கல் மருந்துகள் ,வெளியே பூச இயற்கை மருந்துகள் என்று ஆயுர்வேதம் என்றால் அழகு சாதன பொருட்கள்  என்று தவறாய் அறிந்த –தாய் மருத்துவம் ,தமிழர் மருத்துவமாம் சித்த  மருத்துவம்   எந்த அளவுக்கு வேலை செய்யும் என்று தெரியாத நாங்களும் தமிழர்கள் தான்   


மாற்றத்தால் ஆனது இந்த உலகு ..என்றுமே மாறாதது தமிழர் பாரம்பரியம் .
தமிழர் என்று சொல்லடா ..தலை நிமிர்ந்து நில்லடா என்று கர்வம் கொண்டு சுய அடையாளம் என்றும் இழக்காமல் ,

பாரம்பரியம் மாறாமல்,மரபை கட்டிகாத்து,சுதேசி பொருட்களை பயன்படுத்தி.சித்த,ஆயுர்வேத மருத்துவம் கொண்டு நோய் நீங்கி வாழ்வாங்கு வாழ மீண்டும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


மரு. அ. முகமது சலீம் ( புனை பெயர் க்யூர்  ஷ்யூர்)., BAMS., M.Sc(உளவியல்)., M.Sc(யோகா)., M.Sc(வர்மம்)., MBA

Dr.ஐ.ஜவாஹிரா சலீம் .,BHMS., PG Dip Panchakarma ., PG Dip Acu

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர்    90 4222 5333
சென்னை         90 4333 6444
திருநெல்வேலி    90 4222 5999
ராஜபாளையம்    90 4333 6888
தேனி            90 4727 7577Post Comment

0 comments:

கருத்துரையிடுக