வியாழன், ஜனவரி 21, 2016

நிலவேம்பு குடிநீர் 180 கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்  துவங்கிய இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கடந்த சில மாதங்களாக  மக்களுக்கு வழங்கப்பட்டு பயனுற வைத்த ஏக இறைவனுக்கே நன்றிகள் கோடி ..

எந்த அமைப்புகள் கேட்டாலும் இல்லை  என்று சொல்லாமல் அரைகிலோ முதல் ஐந்து கிலோ வரை இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் வழங்கப்பட்டது ..

சென்னை வெள்ள நிவாரணத்தில் பல அமைப்புகளுக்கும் ,தனி மனிதர்களுக்கும் ,இலவசமாய் கேட்ட அனைத்து மக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் சூர்ணம் -எண்பது கிலோவுக்கு மேல் இலவசமாக அனுப்பப்பட்டு மக்கள் பயன் பெற்றனர் ..

மேலும் நமது மருத்துவ மனைகளில் தினமும் இலவசமாக நிலவேம்பு குடிநீர் போட்டு கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது ..

கணக்கு பார்போம் என்று பார்த்ததில் கடந்த சில மாதங்களாக நிலவேம்பு குடிநீர்  180  கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தோம். இந்த வாய்ப்பை வழங்கிய ஏக இறைவனுக்கே  எல்லாப் புகழும் புகழ்ச்சியும் .

குறிப்பு - யார் இனியும் காய்ச்சல் தங்கள் பகுதியில் பரவுகிறது என்று கேட்டாலும் -நூறு நபர்களுக்கு மேல் நிலவேம்பு குடிநீரை காய்ச்சி கொடுக்க முடியும் என்று நம்மை அணுகினால் இனியும் இயன்ற அளவு இலவசமாய் நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை அனுப்பி தர தயாராக உள்ளேன் என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன் .Post Comment

0 comments:

கருத்துரையிடுக