புதன், செப்டம்பர் 01, 2010

மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..



மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..

செய்முறை ..
  1. பூனைகாலி விதை ,உளுந்து ,பேறீச்சம்காய்,தண்ணீர்விட்டான் கிழங்கு ,ஸ்ருங்காடக (தாமரை )கிழங்கு ,சிறு திராக்ஷை -தனி தனியாக இரண்டு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் )-எடுத்துகொள்ளவேண்டும் 
  2. பதினாறு மடங்கு தண்ணீர் +பதினாறு மடங்கு பால் எடுத்து கொள்ளவேண்டும் -
  3. மேலே கூறப்பட்டுள்ள பொருளோடு காய்ச்சவேண்டும் -பாலின் அளவுக்கு சுருங்க வைக்க வேண்டும் -சுண்ட காய்ச்ச வேண்டும் 
  4. எடுத்து துணியில் வடிகட்டி கொள்ளவேண்டும் 
  5. இதனுடன் சர்க்கரை +மூங்கிலுப்பு +நெய் =தனி தனியாக ஆறு பலம் (ஆறு மடங்கு ) சேர்க்க வேண்டும் 
பயன்படுத்தும் முறை -
  1. தேனுடன் கலந்து மேல் கூறிய உணவை பருகவேண்டும் 
  2. பின் அருபாடாங்குர்வை அரிசி சோற்றை உண்ணவேண்டும் 
பயன் 
  • கோலூன்றும் முதியவரும் வலிமை பெற்று -குழந்தைகளை பெறுவார் ..
  • நல்ல மனமும் .உறுதியான உடலும் ,மன மகிழ்ச்சியும் பெறுவர்..
  • ஆண்மை பெருகும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகித்ஸா ஸ்தானம் -அத்தியாம் இரண்டு பாதம் இரண்டு -பாடல் -

Post Comment

2 comments:

வானவன் யோகி சொன்னது…

சித்தர் மருத்துவத்தில் ஒரு பலம் 35 கிராம் என்பது திண்ணம்.(ஒருவேளை ஆயுர்வேத அளவுகள் வேறோ?)
\\அருபாடாங்குர்வை அரிசி\\ எங்கு கிடைக்கும்.

ஏனெனில் நமது பாரம்பரிய,புராதன விதைகளை இழந்து விட்டோம்.

\\தேனுடன் கலந்து மேற்கூறிய உணவை உண்ணவேண்டும்\\

மேற்கூறிய மருந்தா? அல்லது வேறு உணவைச் சொல்லாமல் விட்டுவிட்டீரா?

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகி

ஒரு பலம் என்பது ஆயுர்வேதத்தில் நாற்பதெட்டு கிராம் என்பது திண்ணம் (ஒரு கர்ஷம் பன்னிரண்டு கிராம் ,நான்கு கர்ஷம் =ஒரு பலம் )சித்தாவில் நீங்கள் சொல்வது முப்பதைந்து கிராம் என்று சொல்வார்கள் ....


அருபாதாங் குறுவை அரிசி -இப்போது கிடைப்பது அரிது ....இருந்தாலும் இயற்க்கை முறையில் விளைவிக்கப்பட்ட -எந்த கலப்பினமும் இல்லாத சிவப்பு சம்பா அரிசியை -கைகுத்தல் அரிசி யை கூட அதற்க்கு பகரமாக எடுத்துகொள்ளலாம் ...

மேற்கூறிய உணவு என்பது -மேலே சொன்ன மருந்து தான்..வேறில்லை ..

உங்களது கருத்துக்கள் வரவேற்க படுகிறது ..

கருத்துரையிடுக