புதன், செப்டம்பர் 22, 2010

வயாகிராவை விட ஆயுர்வேத மருந்து வேகமாக வேலை செய்யுமா ?


ஆண்மை வளர்க்கும் உணவுகளின் -உடம்பில் சென்று -விந்துவாக,ஆற்றலாக மாற தேவையான காலம் என்ன ?....

pharmocodynamics of ayurvedic aphrodisac


இதற்க்கு பதில் சொல்வதற்கு முன் சில தத்துவங்களை நாம் புரிதல் வேண்டும் 

 உணவுக்கும் -மருந்திற்கும் வித்தியாயம் உண்டு ..

உணவு ,மருந்து எது என்றாலும் அதனில் சுவை - ,கடைசி சுவை -விபாகம் ,குணம் ,வீர்யம் -பிரபாவம் என்னும் தனித்தன்மை போன்ற விஷயங்கள் உள்ளது .
உணவு பொதுவாக அதனுடைய சுவையின் மூலம் வேலை செய்யும் 
மருந்து அதனுடைய வீர்யத்தின் மூலம் வேலை செய்யும் 

இங்கே புரிதலுக்காக ..சில விஷயங்கள் 
தாதுக்களின் பரிணாமம் பற்றிய கொள்கைகள் ..(விந்து தாது எப்படி உணவிலிருந்து உருவாக்கலாம் என்பது )
  1. பால் தயிர் -பரிமாற்றம் என்னும் கொள்கை -பாலிலிருந்து -தயிர் -மோர் -வெண்ணை -நெய் போன்று படிபடியாக பரிமாற்றம் ஏற்படுவது போல் எழு தாதுக்களில் ரசம் என்னும் ஆகாரத்திலிருந்து கிடைக்கபெறும் சக்தி -ரக்தமாக -மாம்சிமாக -மேதோ -அஸ்தி-மஜ்ஜை -கடைசி தாது சுக்ரம் என்னும் விந்துவாக மாற ஏழுநாட்கள் ஆகும் ..
  2. பறவைகள் இரை பொறுக்குதல் போல -தேர்ந்தெடுத்து எடுத்து கொள்ளும் கொள்கை -எந்த தாதுக்களில் பலம் குறைவாக உள்ளதோ ,எந்த தாதுக்கள் சக்தி தேவை படுகிறதோ அது அந்த தாது-ரசம் போன்ற அடிப்படை தாதுக்களில் இருந்தோ நேரடியாக பெற்று கொள்ளும் 
  3. வரப்புகளில் தண்ணீர் பாய்தல் போன்று -தேவை இல்லாதது ஒதுங்கி கொள்ளும் கொள்கை -எந்த தாது தேவையான சக்திlயை பெற்றுள்ளதோ அது மற்ற தாதுக்களுக்கு எளிதாக வழி விடும் ..உதாரணதிற்கு மாம்ச தாதுவில் சக்தி அதிகம் இருந்தால் அது அடுத்துள்ள தாதுக்களை வலுபெற வழி செய்யும் .
  4. ஒரே காலத்தில் தாதுக்கள் சத்துக்களை எடுத்து கொள்ளும் என்ற கொள்கை .
  5. சக்கரத்தின் சுழற்சி போல் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது என்ற கொள்கை ..
ஆசார்யர் சுஸ்ருதரின் கூற்றுப்படி ..விந்து உருவாவது ..

  • 3015 -கலா =ஐந்து நாட்கள் s
  • உண்ட உணவு கடைசி தாது விந்துவாக மாற =அஸ்டா தஷ சஹ்ஸ்ராணி =3105(kalaa) Х  6 = 5 days X 6= 30 days..எனவே முப்பது நாட்கள் ஆகும் 
  • இது தொடர்ந்து நடை பெற்றுகொண்டே இருக்கும் ஆதலால் முப்பது நாட்களுக்கு முன் சாப்பிட்ட உணவு இன்று விந்துவாக மாறி இருக்கும் ..இன்று நாம் சாப்பிட்ட உணவு முப்பது நாள் கழித்து விந்துவை வலுப்பெற செய்யும் ..
மருந்துகளை பொறுத்த வரையில் பல ஔஷதங்கள் -வீர்யத்தின் அடிப்படியில் வேலை செய்வதால் ..மருந்தை பொருத்து மாறும் ..
உதாரணதிற்கு பேதியாகும் மருந்து -சில நிமிடங்களில் வேலை செய்வது போல் -ஆண்மை பெருக்கும் வாஜீகரன மருந்துகள் சில நிமிடங்கள்(அஹிபேனம் போன்ற  மருந்துகள்  ) முதல் முப்பது நாள் (பாதாம் ,உளுந்து போன்ற உணவுகள் )வரை வேலை செய்யும் ..

விரைவில் வேகமாக வேலை செய்யும் வாஜீகர்ண -ஆண்மை வளர்க்கும் மருந்துகள் ..

Post Comment

3 comments:

கருத்துரையிடுக