சனி, செப்டம்பர் 25, 2010

போலி வைத்தியர்கள் ..கொடுக்கும் விளம்பங்களை தடை செய்ய என்ன வேண்டும் ?

நண்பர்களே ..அறியாமை அழிவைத்தரும்..

ஆயுர்வேதம் என்றால் சோப் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் ..
காலை ..முதல் மாலை வரை எத்தனை பொய் விளம்பரங்கள் ..
  1. முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில் முடி முளைக்கும் ?
  2. உடல் எடை குறைய அன்னாசிப் பழ மாத்திரை ..திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் ?
  3.  சர்வ ரோக நிவாரணி ..ஆலோ வீர ..சோற்று கற்றாழை..
  4. ஆண்மை குறைவுக்கு ..அடுக்கடுக்கான பொய்கள் 
  5. லாட்ஜ் வைத்தியர்கள் கொடுக்கும் பொய் பேச்சுக்கள் ..
பக்கங்கள் பத்தாது ..

இதனை ஒழிக்க என்னத்தான் வழி..

நண்பர்களே ..உங்களது கருத்துரை ..ஆலோசனை வரவேற்க்கபடுகிறது ..


நண்பர்கள் இடும் பின்னூட்டம் இங்கே மீண்டும் போஸ்டிலே இணைக்கப்படும் ..
அதற்கான பதிலும் உடன் இணைக்கப்படும் ....


1.நண்பர் வானவன் யோகி கூறுகிறார் ..அவரது தளம் ..http://iraiyogi.blogspot.com/http://iraiyogi8.blogspot.com/
\\முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில் முடி முளைக்கும்\\
என்ற வாசகத்துடன் அதன் அழகிய புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் எனக்கும் மின்னஞ்சலில் வந்தது.

ஆறுவாரங்களில் சிகப்பழகு தரும் வெண்ணைகள் என்றெல்லாம் விளம்பரம் செய்யும் வெண்ணைகளை என்ன செய்ய? எனது பதில் -மக்கள் தான் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் நம்புகிறார்கள் -அரசு தான் எதாவது செய்யவேண்டும் 

அப்படி ஆறு வாரங்களில் சிகப்பழகு தருமென்றால் டன் கணக்கில் வாங்கி பூசி மைக்கேல் ஜாக்சன் சிகப்பாக மாறியிருக்க முடியாதா?..எனது பதில் -நல்ல கேள்வி இதற்கு யாரிடமாவது பதில் உண்டா ?..முடியாது என்று மக்களுக்கும் தெரியும் ஆனால் பேராசை ..விளம்பரயுக்தியுடன் தோற்று போகிறது அரசு தான் எதாவது செய்யவேண்டும் அல்லது அந்த விளம்பரங்களை எதிர்த்து யாராவது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுக்க வேண்டும் ..


அதேவேளை அன்னாசிப் பழ மாத்திரை,ஆலோ வீர ..சோற்று கற்றாழை.. போன்றவைக்கு மயங்குகிறார்கள் என்றால் அது நமது முன்னோர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை...
நல்லவேளை இன்னும் பார்க்காத noni என்ற வார்த்தையில் தேடிப் பாருங்கள்.-எனது பதில் -முன்னோர்களால் மூட பழக்கதிர்க்குமல்லவா மக்கள் அடிமையாகி விட்டனர் ..நோனி ..ஆம்வே ..எத்தனை செயின் வியாபரம் -மக்களை காசு கிடைக்கும் என்பற்காக கிழவியை கல்யாணம் செய்தால் நாளையே பத்து குழந்தை பெறுவாள் என்றலாவா சூப்பர் பொய் சொல்கிறார்கள் ..அடுத்தவனை கெடுத்து அல்லவா தான் வாழ நினைக்கிறார்கள் ..

அடுத்து, படித்து பட்டம் பெற்ற சித்தர்,முனிவர் எனப் போட்டுக்கொள்ளும் டாக்டர் முதல் பட்டம் பெறாத அனுபவ வைத்தியர்கள் வரை ஆண்மைக் குறைவை அது நிவர்த்திக்கும்,..இது நிவர்த்திக்கும் என்று தாதுவிருத்தியை மட்டுமே வைத்துக் காசு பார்ப்பதும்,அதை மட்டுமே பதிவுகள் இட்டு பிரதானமாக்கி விளம்பரப்படுத்துவதோ,செய்கின்றதும் சரியா? தவறா? அல்லது மக்க்ளிடம் சப்த தாதுக்கள் என்பது நம் முழு உடம்பையும் பலப்படுத்தத் தேவையான சத்து.அதற்குத்தான் தாது பலம் தர மகான்கள் குறித்துள்ளனர் எனச் சொல்லாது பெண்ணை தூங்காமல் புணர தூங்கவிடாமல் புணர என்றெல்லாம் சொல்லி வலையில் விழவைப்பது சரியா? தவறா? 

தவறு எனில் மன்னிக்கவும்... தங்கள் பதிவுகளில் தீர்க்கமுடியாத நோய்களைப் பற்றி எழுதியது அதிகமா? தாதுவிருத்தி பற்றியது அதிகமா? 

எனது பதில் -தவறு ..மகா தவறு ..நீங்கள் சொல்வது போல் படித்த வைத்தியரும் ,படிக்காத போலி வைத்தியரும் சொல்வது எல்லாம் தவறான பிரசாரங்கள் ..நீங்கள் சொல்வது போல் ..மக்க்ளிடம் சப்த தாதுக்கள் என்பது நம் முழு உடம்பையும் பலப்படுத்தத் தேவையான சத்து.அதற்குத்தான் தாது பலம் தர மகான்கள் குறித்துள்ளனர் எனச் சொல்லாது..தவறு ..பெரிய தவறு ..ஆனால் நிச்சயமாக நான் அதனை சொல்வதில்லை...

உங்களுக்கு ஒரு தகவல் -நான் இந்த வலை தளம் ஆரம்பித்து -இலவச ஆலோசனை மக்களுக்கு வழங்கி வருகிறேன் ..
எனக்கு இன்று வரை வந்த மொத்த மெயில் -தொண்ணூறு சதம் --ஆண்மை சம்பதமானது ..பதினாலு வயது முதல் எழுபது வயது வரை எல்லாரும் செக்ஸ் சம்பதமான கேள்விகளை கேட்கிறார்கள் ..அவர்களிடம் அறியாமை இருக்கிறது --பல மோசமான ஆபாச தளங்களை பார்த்து எனக்கும் இப்படி இல்லை ..அப்படி இல்லை ..என்ன செய்ய ..மருந்து உண்டா (இது வரை 383 -மெயில்கள் வந்து அதற்கு பொறுமையாக விளக்கம் அளித்து -என்னசெய்ய என்று யோசிக்கும் போது தான் -மக்களுக்கு ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று -அறியாமை போக்க வேண்டும் என்று தான் எழுதினேன் ..உண்மை சொன்னேன் ..யாரும் பின்னூட்டம் எழுதாத பக்கங்கள் அவைகள் ..

எனக்கு வருத்தம் இல்லை நண்பரே ..நான் அதிகம் எழுதியது மூலிகைகளை பற்றிதான் கிட்டத்தட்ட நானூறு பதிவுகள் ..மக்கள் விளக்கம் பெற வேண்டும் அறியாமை விலக வேண்டும் என்று தான் கடைசியாக வாஜீகர்ண பதிவு ..
கடைசியாக... போலி வைத்தியர்கள் யார்? எற்கனவே இந்நாட்டின் மருத்துவத்தைக் கையாண்ட அனுபவ வைத்தியர்களா?அல்லது அவர்கள் வைத்திருந்த ஏடுகளை வாங்கி பாடத்திட்டமாகப் புத்தகம் போட்டு படித்து பட்டம் பெற்று வெளியில் வந்து நானே உண்மையான வைத்தியன்,அவர்கள் எல்லாம் போலி எனும் போது, சரகர்,வாக்படரும்,தன்வந்திரியும்,சுஸ்ருதரும்,படித்து பட்டம் பெற்ற அரசு அங்கீகாரம் உள்ள வைத்தியர் பட்டத்தையோ பெறாத போது அவர்களின் வைத்தியம் பார்க்கும் படித்த பட்டதாரிகள் உண்மையானவர்கள் எனின் எத்தனை பேர் சரியாக உலோகங்களை நீற்றத் தெரிந்தவர்.
இன்று கடைகளில் கிடைப்பதெல்லாம் மகான்கள் சொன்ன ரீதியில் நீற்றாமல் உலோகச் சத்துடன் மனிதர்களைக் கொல்லும் மருந்துகள் தான் வெளியிடப்பட்டு வருகிறது என்று நிரூபணம் செய்யத்
தெரியாத படித்த அறிவாளிகளால் மக்கள் நோய் முற்றி அவதியுறும் காட்சி நெஞ்சைப் பிழிகிறது.எனது பதில் --நீங்கள் சொல்வது உண்மை -படித்து பட்டம் பெற்றவர்கள் நல்ல வைத்தியர்கள் என்பதில்லை ..படிக்காத மேதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ..அனுபவ வைத்தியர்கள் உங்களை போன்று ..அனால் நேற்று வரை வாத்தியார் ..நாலு மருந்து தெரிந்தாள அவர் வைத்தியர் (வா என்ற எழுத்து-வை என்ற எழுத்தானது )..
போலி என்பதன் அடையாளம் -புத்தகம் இருந்தும் படிக்காதவர் ..கலப்படம் செய்பவர் ,இல்லாததை இருப்பதாக சொல்பவர் ..மனசாட்சியே இல்லாது -மனித வியாதி பலஹீனத்தை காசாக்குபவர் ..பட்டம் பெற்றவர் எல்லாம் வைத்தியரும் இல்லை ..படிக்காத அனுபவ வைத்தியர் எல்லாம் போலி வைத்தியரும் இல்லை ..

நீங்கள் சொல்வது போல் //இன்று கடைகளில் கிடைப்பதெல்லாம் மகான்கள் சொன்ன ரீதியில் நீற்றாமல் உலோகச் சத்துடன் மனிதர்களைக் கொல்லும் மருந்துகள் தான் வெளியிடப்பட்டு வருகிறது என்று நிரூபணம் செய்யத்
தெரியாத படித்த அறிவாளிகளால் மக்கள் நோய் முற்றி அவதியுறும் காட்சி நெஞ்சைப் பிழிகிறது.// உண்மை ..

சரி மக்கள் மேல் கருணை கொண்டு அம்மருந்து ஏன் அனுபவத்தர்கள் சொல்லாத காரணம் அது முதலாளிகள் வசம் செல்லும்.உதாரணம் பாரம்பரியக் காணிகள் வசமிருந்த ஆரோக்யப்பச்சை எனப் பெயரிடப் பட்ட மூலிகை இன்று மருந்தாக ஒரு தனியார் வெளியீட்டில்....மலையாளிகள் கண்டு மலையாளிகள் வாழ்க...ஏனெனில் அரசு அது எவ்வளவு லாபம் வரினும் செய்யாமல் தனியார் என்ற பெயரில் அரசியல் வியாதிகள் குளிர காய... சித்தனின் கோமணம்..இனி அவன் அம்மணம்....எனது பதில் ..ஆமாம் தனியாரால் மூலிகைகள் கொள்ளை லாபம் அடைந்து சித்தன்  அம்மணமாக இருக்கிறான் ..தன் அடையாளம் -சுய மானத்தோடு 

பட்டம் பெற்ற உண்மை மருத்துவர் இந்திய மருத்துவரும் நவீன மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தில் ஆணை பெற்றது இந்திய மருத்துவம் போலி என்பதாலா? போலியான படிப்பு என்பதாலா?சித்தர்,முனிவர்களின் பரிபாஷைகளின் உண்மை கண்டு கொள்ள முடியாதபடி போனதாலா?அல்லது மக்களிடம் பணம் பிடுங்க உதவாது என்பதாலா?
எனது பதில் -இந்திய மருத்துவம் படித்தவன் ஆங்கில மருந்து கொடுப்பது கேவலம் ..தன்னம்பிக்கை அற்ற கோழை களின் நிலை ..கேவலத்தில் கேவலம் ..
ஆனால் போலியானது இல்லை இந்திய மருத்துவ படிப்பு -நாங்கள் ஆங்கில மருத்துவ அடிப்படை பாடங்கள் படித்து மேலும் எங்களது இந்திய மருத்துவத்தையும் படிக்கிறோம் ..ஆனால் படிக்கும் காலத்தில் அதிக அனுபவ அறிவு இந்திய மருத்துவத்தில் கிடைப்பதில்லை எனபதும் உண்மை ..

ஐந்தரை வருடம் படித்தும் நேர்மையாக இந்திய மருத்துவ பிராக்டீஸ் செய்தால எந்த நோயாளி தேடி வருகிறார்கள் ? போலியில் மக்கள் விழுகிறார்கள் ..
எனக்கு தெரியும் ஐந்தரை வருடம் படித்தும்..மாதம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வழி இல்லாத மருத்துவர்கள் ..என்ன செய்ய?..
நீங்கள் சொல்வது போல் புலி பசித்தாலும் புல்லை திண்ணக்கூடாது..


அதே வேளை போலி எனச்சொல்லும் ஒருவன் மூட்டை தூக்கிப் பிழைத்தாவது மகான்கள் சொல்லிய சாஸ்திரத்தையும்,அவர்களின் மருத்துவ முறைகளையும் ஒண்ணேகால் ரூபாய் காணிக்கையில்
மக்களிடம் கொண்டு சென்று அழியாமல் பாதுகாக்கும் மனநிலையில் உள்ளபோது....எனது பதில் -போலி என்றில்லை -யாராவது மகான்கள் யாராவது இருந்தால் காட்டுங்கள் ..

எங்கள் பட்டமே உண்மையானது இனி நாஸாவில் ராக்கெட் விடுவதிலிருந்து,மனித மரபணுக்களை ஆராயும் நிறுவனம் முதல் உலக மருந்துக் கம்பெனிகள் வரை எங்களையும் நியமிக்க நீதிமன்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் எனப் போராடும் பட்டம் பெற்ற உண்மையான இந்திய மருத்துவர்களால் வளர்ச்சிபெற்று மறுமலர்ச்சி பெறும் நிலைக்குச் செல்லப் போகும் இந்தநாட்டின் மருத்துவ முறைக்கு சரகர் தன்வந்திரி போன்ற பட்டம் பெறாதவர்கள் தான் தந்தை என்பதால் ஏற்படும் இழுக்கை எப்போது களைய முடியும் எனற பரிதவிப்பில்........எனது பதில் -நானும் அதே தவிப்பில் 

தாங்கள்..இனியவர்....பண்பாளர்..எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்...
எனினும் இது போன்று பின்னூட்டமிட்டது தவறெனின் மன்னிக்கவேண்டுகிறேன்..
எனது பதில் மன்னிக்க கூடிய வகையில் நீங்கள் ஏதும் சொல்லவில்லை ..உண்மை சொன்னீர்கள் ..நன்றி ..
2.நண்பர் ஜெகதீஷ் சொல்கிறார் 

..சேலம் சித்த வைத்தியர் சொல்வது உண்மை தான். அவர் இதுக்கு விதிவிலக்கு

Post Comment

8 comments:

கருத்துரையிடுக