ரோக நிதானம் (நோய் வர காரணம் )-தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோக நிதானம் (நோய் வர காரணம் )-தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 16, 2021

நோய் நாடி நோய் முதல்நாடி | ஆயுர்வேதத்தின் நோயறியும் அடிப்படை | Basic of ...



முக்குற்றத்தின் அடைப்படை .. ரகசியம் .. இந்த ரகசியம் அறிந்து ..திரிதோஷ மாறுபாட்டை உணர்ந்து உடல் நோயை அறியுங்கள் .. திரிதோஷ கோட்பாட்டை உணர்ந்து ஆரோக்கியம் பேணுங்கள் .. வாத தோஷத்தின் மாறுபாடு என்ன செய்யும் .. வாத தோஷம் மாற காரணம் என்ன ? பித்த தோஷத்தின் மாறுபாடு என்ன செய்யும் .. பித்த தோஷம் மாற காரணம் என்ன ? கப / சிலேத்தும தோஷத்தின் மாறுபாடு என்ன செய்யும் .. கப தோஷம் மாற காரணம் என்ன ? இதை அறிந்ததால் திரிதோஷத்தின் நிலை உணரலாம் நோய்க்கான காரணம்.. #முக்குற்றம் #திரிதோடகோட்பாடு #வாதம் #பித்தம் #கபம் #roganidanam #knowurdieasase #ayurvediccause #Noinadi #knowthecause #vathatamil #pittahtamil #kaphatamil #basicsofayurveda #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜனவரி 10, 2010

மல வாதம், தசனேற்பவம்,கக்கிருமல் -ரோக நிதானம்


மல வாதம்
லபந்தம், வயிறு முற்றிலும் நோய், கையும், காலும், நாவும்  தடித்தல்,புருவத்திற்கரப்பான் படரல், பாலுண்ணாமை என்னும் குணங்க ளை உண்டாக்கும்.

  
இது மலத்தில் வாய்வு சேர்வதால் பிறக்கும்



தசனோற்பவம்(பல்முளைத்தல்)

சிசுக்களுக்கு பல் முளைக்கும்போது மிகுந்த பேதியும், சரீர இளைப்பும், அற்ப சுரமும், மயக்கமும், தாகமும், உண்டாகும்.


இதற்கு தடங்கப்பட்டிருக்கின்ற பல்லின் சிரசுகள் சீகிரத்தில் வெளிப்படும்படி நெல்லின் முனையைக் கொண்டு அவ்விடத்திலுள்ள பல்லீறுகளில் கொஞ்சம் கீறிவிடலாம்.
 

கக்குவான் என்னும் கக்கிருமல்


இது பாலின் தோஷத்தினாலும், ஜலதோஷத்தினாலும் வாயு அதிகரித்து மார்பிலிருக்கின்ற சிலேஷ்மத்தை இளக்குந்தரு ணத்தில் பிறக்கும். அப்போது மிக்க ஒலியுடன் பிரபலமான இருமல், அதில் ரத்தம் விழல், திணரலாண மூச்சு, விழி பிதுங்குவது போலிருத்தல், ஆயாசம், வியர்வை, அருந்திய பாலும் அன்னமும் கக்குதல், மலமூத்திரம் நழுகுதலென்னும் குணங்களுண்டாகும்.


இது 90 நாள் வரையிலும் பேய் பிடித்து ஆட்டுவது போல சிசுக்களை ஆட்டுவிக்கும்.
 


Post Comment

கிரந்தி & கரப்பான் - ரோக நிதானம்


கிரந்தி

சிசுக்களுக்கு கிரந்தி ரோகமானது இருவகைப்படும்.
 
1. செங்கிரந்தி :- முழங்கால், முழங்கைவரைக்குமாவது தேகமுழுவதுமாவது சிவந்த நிறமான வீக்கமும், அவ்வீக்கம் ஒடியோடிக்கட்டுதல் வாய்கடித்தல் மலமூத்திரபந்தம், பூனை குரலோசையை யொத்து விம்மிவிம்மி அழுதல், பிரேதம் போல் கிடக்குதல் என்னும் குணங்களுண்டாகும்.

2. கருங்கிரந்தி :- தேகம் முழுவதுமாவது முழங்கால், முழங்கைவரைக்குமாவது நீலம்போற் கறுத்தல், வெளிறல், முலையுண்ணாமை அல்லது வலது முலையுண்ணாமை, நாவறளல், உடலிலாவது, தோளிலாவது சுடுகை, விழித்து விழித்து பார்ப்பது, குணம் மாறுவது, அலறுவது, இருமல், குறற்கம்மல், வயிற்றில் வேதனை என்னும் குணங்களுண்டாகும்.
 

கரப்பான்

சர்வாங்கத்திலும் பரபரப்பான ஊரல், பல நிறத்துடன் சாரைப்பாம்பின் தோலையொத்த சொறி, அதில் சிவந்த நீர் கசிவது, கண்டத்தில் விஷக்கடி ரோகம் போல வெடித்து நீர் கசிவது, விகாரரூபம் இளைப்பு என்னும் குணங்களுண்டாகும். அன்றியும் கறுத்தாற் கருங்கரப்பான், சிவத்தற் செங்கரப்பான், வரிவரியாக இருக்கில் வரிகரப்பான். சொறி எழும்மினாற் சொறிக்கரப்பான், தினவு உண்டானால் ஆனந்தக்கரப்பான், தலையிற்காணில் மண்டைக்கரப்பான் என கரப்பான் நோயை பலவகையாகவும் சில நூல்களிற் கூறப்பட்டுள்ளது.

Post Comment

கணம் & மாந்தம் நிதானமும் சிகிட்சைகளும்


கணம் 

இது மாதா பிதாக்களின் நாதவிந்துகளில் அடங்கிய வாதாதி தோஷங்களினின்று உற்பத்தியாகிக் கருப்பாசயத்துச் சிசுவைப்பற்றி அச்சிசுவினது சப்ததாதுக்களும் வன்மையை யடையுங்காலத்தில் விருத்தியடைவதால் கணரோகம் எனப் பெயர் பெற்றது.

இந்நோயில் தேகவாட்டம் வாய்நாற்றம், தலைசுற்றல், உட்சுரம், வெளிச்சுரம், வயிற்றின்மேல் சுடுகை, மயக்கம், வறண்ட மலம் என்னும் குணங்கள் ஏற்படும். இது 12-வயது வரையிலும் டரும். கணம் எண்வகைப்படும். அவையாவன :-

குலிகணம், முக்குகணம், ஆமகணம், தேரைக்கணம், மகா கணம், கழிகணம், சுழிகணம், றள்கணம் என்பதாம்.

1. சூலிகணம் :- மேல்மூச்சு, இருமல், நெஞ்சு, நாவு, நாபி புண்போலிருத்தல், பாலுண்ணாமை, முகநாற்றம் என்னும் குணங்க ளுண்டாகும்.

2. முக்குணம் :- வயிற்றுக்கடுப்பு, நாவில் வெடிப்புடன் வெந்ததுபோலிருத்தல், சுரம், தலைவலி, எரிச்சல், ஆசனம் வெளிப்பட்டு முக்கலுடன் ரத்தமும் சீதமும் ஒழுகுதல், தேக வாட்டத்திலும் கறுத்த நிறம், முடிச்சோறுதல், தாகம் என்னும் குணங்களுண்டாகும். இதுவே மூலகணமாம்.

3. ஆமக்ணம் :- நெஞ்சில் துடித்தல், சிறுநீர் மஞ்சலாக இறங்குதல், தேகத்தில் புகை கப்பினது போல் மாறு நிறம், ஒருவேளை சர்வாங்கத்திலும் வெதும்பல், இருமல், வயிற்றிறைச்சல் புகைந்து புகைந்து மேல் மூச்சு என்னும் குணங்களுண்டாகும்.

4. தேரைக்கணம் :
- வாதநாடி மற்ற நாடிகளில் பின்னிக்கொண்டு நடத்தல், புளிப்பு, துவர்ப்பு, வஸ்த்துக்களில் வெறுப்பு அன்னத்துவேஷம் திரிதோஷாதிக்கம், நாபியில் புண்போலிருத்தல்
உட்காய்ச்சல், தேகவாட்டம், எரிகுன்மம், பித்தவெட்டை தாது நஷ்டம் என்னும்   ங்களுண்டாகும்.

5. மகாகணம் :- முகம் புறங்கால், புறங்கை இவைகளில் மினுமினுப்பு, நகமும் விழியும் வெளிறல், மயக்கம், மிகு வெப்பம், உதடு புண்போல் சிவந்திருத்தல், என்னும் குணங்களுண்டாகும்.

6. கழிகணம் :- சீதஞ்சீதமாயும் மலமாயும், பலைபோல சலஞ்சலமாயும், பேதியாதல் உள்ளங்கை, உள்ளங்கால்களில் சிலசமயம் காங்கை என்னும் குணங்களுண்டாகும்.

7. சுழிகணம் :- கண்சோருதல், மார்புநோய், வயிறு ஈறல், நெஞ்சு நரம்பு இவைகள் வெந்ததுபோலிருத்தல், பாலுண்ணாமை  அலறுதல், மேல்மூச்சு, இருமல் கைகால்களில் சீதளம் வயிற்றுப் பொருமலுடன் வலி, சுரம் நாக்குவறளல் என்னும் குணங்களுண்டாகும்.

8. வறள் கணம் :- மேனி வறளல், நெஞ்சு துடித்தல், புகை இருமல், மாறுநிறம், விட்டுக்கூடு வயிற்றில் இரைச்சல் என்னும்  குணங்களுண்டாகும்.


மாந்தம்

வெல்லம், தேங்காய், மாங்காய், சுண்டற்கரி, வழுக்கைக்கீரை வாளைமீன், வரால்மீன், கெட்டுலர்ந்த பள்ளை ஆட்டின் இறைச்சி, புளிப்புவேர், பாகற்காய், முதிற்ந்த வாழைக்காய், கிழங்குவகை மந்தவஸ்து, எருமைப்பால், தினசையோகம், சரகு ஊறிய சலம், சலதோஷம், பசி, துயரம், என்பவைகளை அதுசரிக்கும் ஸ்திரிகளின் முலைப்பாலை குடிக்கும் சிசுக்களுக்கு மந்தரோகம் உண்டாகும்.

இந்நோயில் பசியில்லாமை, சீதங்கலந்த நானாவித நிறத்துடன் பால்போலவும் தெளிந்த சலம்போலவும் துர்க்கந்தமாகவும், பேதி யாதல், சுரம், மயக்கம், கையும், காலும் சில்லிடல், கண்களில் வெப்பம் சிலசமயம் குளிர்ச்சி, உடர்சோர்வு, முகத்தில் பல நிறத்துடன் பளபளப்பு, முதலிய குணங்கள் உண்டாகும். இது செரியாமாந்தம், பீர்மாந்தம், சுரமாந்தம், விஷமாந்தம், கழிமாந்தம், ஊது மாந்தம், நீர்மாந்தம், தலைமாந்தம் என 8 வகைப்படும்.

1. செரியாமாந்தம் :- வயிறு உப்பலோடு மாவைக் கரைத்தது போல் கண்டலும், கரைதலுமான பேதி, விக்கல், சுரம், தலைவலி அரைக்கண் மூடியபார்வை, துர்ப்பலம், துயரம், சோர்வு, என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பீர்மாந்தம் :- 
வயிறு பொருமலுடன் பால் நிறமான பேதி புகைந்திருமல், பால் உண்ணாமை, வாந்தி, கண்களில் குழிவிழுதல் தாகம், அதிகவெப்பம், மார்பு நோய், தலைநடுக்கல், வயிற்றுவலி சீறிச்சீறி அழுதல், பெருமூச்சு என்னும் குணங்களை உண்டாக்கும்.

3. சுரமாந்தம் :- சுரம், அற்ப்பமாக பாலுண்ணுதல், அடிக்கடி அழுகை, பொடீருமல்,  லசலக்கட்டு, மயக்கம், என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. விஷமாந்தம் :- அரைக்குகீழ் சீதளம், வயிற்றிரைச்சல் பயந்த பார்வை, தாய்கையில் தங்காமை, சோர்வு, மயக்கம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

5. கழிமாந்தம் :- நானாவிதகழிச்சல், வாந்தி, மயக்கம், சுவாசம், வாயுங்குறலும் சில்லிட்டது போல் தோன்றுவதுமன்றி,  வயிறு, கை, கால் இவைகளில் சீதளத்துடன் வியர்வை என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. ஊது மாந்தம் :- கால்,கை, வீக்கம், சோர்வு, சுரம், அன்ன பானாதிகள் இறங்காமை, நாவில் புண்போலிருத்தல், மிகுந்தசுவாசம் எழும்புதல் என்னும் குணங்களுண்டாகும்.

7. நீர்மாந்தம் :- சர்வாங்க வியர்வை, சீதளம், குளிர், முகத் தின் பளபளப்பு, தேகத்திலாவது, கைகால்களிலாவது தினவுடன் வீக்கம், தலைநோய், முக்கலுடன் நீர் இறங்குதல், இறைந்துறைந்து வயிறுகழிதல், வாய்நீரூறல், ஒக்காளம், மெலிந்தவார்த்தை, உறக்கம், நகைப்பு என்னும் குணங்களை உண்டாக்கும்.

8. தலைமாந்தம் :-
 தலையிலும் கழுத்திலும் ஊதல், கைகால் களில் குளிர்ச்சி, சர்வாங்கநோய் சிலசமயம் குலையில் வலி, அதனால் துள்ளித்துள்ளிவிழுதல் குளிர்ச்சுரம், முகத்தில் வியர்வை, புருவ   வேதனை, பலவிதமானபேதி, வயிற்றுப் பொருமலுடன் வலி, ஏப்பம், நாசியில் புண்போல் நோயுடன் நீர்வடிதல் மார்புவலி  பற்கிட்டலுடன் நெற நெறவென்றகடித்தல் , கைகால்களில் இசிவு, எழுந்திருக்ககூடாமை, அன்னபானதிகளில் வெறுப்பு அசதி, கொட்டாவி, இளைப்பு, வயிற்றுப் என்னும் குணங்களுண்டாகும்.

மேலும் சில நூல்களில் உள்ளில் வேப்பம் இருந்தால் கணாமாந்தம், கண்சோருகினால் சொருகுமாந்தம்,உச்சியில் குழி விழுந்தால் குழிமாந்தம், கைகாலை இழுத்தால் இழுப்புமாந்தம் வயிறுப்பினால் உப்புமாந்தம், விலாவை தூக்கினால் அள்ளுமாந்தம்
விக்கல் இருந்தால் விக்கல் மாந்தம், வாதபித்த சேஸ்டைகள் அதிகரித்தா லவைகளின் பெயர் கொண்ட மாந்தம், சந்நிபாத குறிகளிருந்தால் சன்னிமாந்தம் என மாந்த நோயை 21 வகையாக வகுத்து கூறப்பட்டுள்ளது.

 


Post Comment

பால ரோக நிதானமும் சிகிட்சைகளும்

பாலரோக நிதானமும் சிகிச்சையும்

பாலர்கட்கு நோய் உண்டாவதற்கு காரணம் :- பொது வாக பாலர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது தாய்ப் பாலைமட்டு மருந்துங் குழந்தைகள், தாய்ப்பாலையும் அன்னத்தையு மருந்துங் குழந்தைகள், அன்னத்தைமட்டு மருந்துங் குழந்தைகள் என்பதாம். இவற்றுள் முலைப்பாலும் அன்னமும் தோஷமற்றிருந்தால் சிசுக்களுக்கு நோய் வராது. ஆகவே உணவாதி பேதம் தகாத நடத்தை முதலிய காரணங்களினால் தோஷமுற்று நோய் வாய்ப்பட்ட மாதர்கள் கருப்பமுள்ள மாதர்கள் முதலியவர்களின் முலைப்பாலை அருந்துவதால் பாலர்கட்கு அநேக வியாதிகள் ஏற்படுகின்றது. முக்கியமாக கருப்பஸ்திரீகளின் பாலை அருந்தும் குழந்தை கட்கு கருப்பஸ்திரீயின் வயிற்றைபோலவே வயிறு பெறுத்து பல வித நோய்களை உண்டாக்கும்.

க்ஷ£ராலஜக ரோகம் :- இது தோஷமுள்ள தாய்ப்பாலை அருந்து வதால் குழந்தைகட்கு ஏற்படும் நோயாம். இதனால் சிசுக்களுக்கு மலமானது துர்க்கந்தத்துடன் அசீரணப்பட்டு நீராகவும், குழம்பாகவும் சிறிது கட்டுப்பட்டது போலவும் சிதறி சிதறி நானாவிதமாக பேதியாகும். மூத்திரமானது மஞ்சள் வெண்மை நிறத்துடன் குழம்பாக இறங்கும். மற்றும் சுரம், அரோசகம், வாந்தி, தாகம், கொட்டாவி, வயிற்றுப்புசம். வயிற்றிரைச்சல், நாசி, வாய் முதலியன துர்க்கந்தமுடன் காணல் முதலியன ஏற்படும்.

வாததோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு வாயு அதிகரித்து வாதரோகங்கள் உண்டாவதுடன், மலமூத்திர சிக்கல், சுரம், இளைப்பு, முதலியவைகளும் காணும்.

பித்ததோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு பேதி, தாகம், காமாலை, சரீர உஷ்ணம், பித்தாதிக்கம், சுரம் முதலியன உண்டாகும்.

கபதோஷமுள்ள மாதரின் முலைப்பாலை அருந்தும் குழந்தை கட்கு கபம் அதிகரித்து கபநோய்கள், வாந்தி, சொள்ளுவடிதல்,சீதளம், வீக்கம், கண்கள் வெளுத்து ஊதலாயிருத்தல் முதலியன உண்டாகும்.

மற்றும் பாலுண்ணுங் குழந்தைகட்கு பாலின் தோஷமானது ஆமாசயத்தைப்பற்றி பத்துவகை நோய்களை உண்டாக்குமென அறியக்கிடக்கின்றது. அவையாவன :-


1.வாதகுண்டலாக்கட்டி :- இதில் கறுத்த நிறத்துடன் கட்டிகள் எழும்பி அதிக குத்தலும் தேகத்தில் சுரமும் உண்டாகும். இதற்கு வாதசெவ்வாப்பு கட்டி என்று பெயர்.

2.பித்தகுண்டலாக்கட்டி :- இதில் மஞ்சள் நிறத்துடன் கட்டி கள் நீங்காத எரிச்சலை கொடுத்து சீக்கிரத்தில் பழுத்துடைந்து அவற்றினின்று சுத்தரத்தம் மாத்திரம் வடியும். இதுவே பித்தசெவ்வாப்பு கட்டி என்று பெயர்.

3.சிலேஷ்மக் குண்டலாக்கட்டி :- இதில் கட்டிகள் கனத்து வெளுத்து நமைச்சலுடன் அசைவற்று புடைகள் உள்ளதாய் வெகுகோரமாய் எழும்பும். இது சிலேஷ்மச்செவ்வாப்பு கட்டியாம். இது கஷ்டசாத்தியம்.

4. தாலுகண்டகரோகம் :- கபதோஷம் அதிகரித்து தாடைகளிலிருக்கும் மாமிசத்தைப்பற்றி அவ்விடத்திலும் தலையிலும் குழி விழும்படிக்குச் செய்து சிசுக்களுக்கு முலைப்பாலில் அசங்கியம் பிரயாசத்தின்மேல் பாலுண்ணல், தாகம், வாயில் நமைச்சல், கண்ணோய், கழுத்து விகுந்தல், வாந்தி, பச்சை நிறத்துடன் பேதி
என்னும் குணங்கள் உண்டாகும்.

5. நிசூளிகாவிரணரோகம் :- இது பித்தத்தினால் நமைச்சலுடன் பிறந்து உடம்பெங்கும் சிறு சிறு கொப்புளங்கள் எழும்பி அடங்கும். மறுபடியும் இரவிலாவது பகலிலாவது முன்பு உண்டானது போல் மிக நெருக்கமாக பாவும். இது சரீர முற்றிலும் வியர்க்குருக் கொப்புளங்களினால் சட்டைபோட்டது போல் மறைப்பதால் நிசூளிகாவிரணமெனப் பெயர் பெற்றது.

6. பாலசோஷரோகம் :- குளிர்ந்தநீர், கபதோஷப்பால் முதலியவைகளை குடித்து பகலில் நித்திரை செய்து பிறகு முலைப்பாலைக்குடிக்கின்ற சிசுக்கழுக்கு இந்நோய் உண்டாகும். இதனால் உடல் இளைத்தல் முகத்திலும் கண்ணீலும் காந்தி நீங்குதல்,பீனிசம், இருமல் என்னும் குணங்கள் உண்டாகும். இதற்கு உள்ளுறுக்கி
உடலுறுக்கி என்றும் பெயர்.

7. துந்தரோகம் :- இது குழந்தைகட்கு வாயுவினால் ஏற்பட்ட அசீரணம், வயிற்றுப்புசம், நாபியில் வலி, நாவில் மாவு படிந்திருத்தல் முதலிய குணங்கள் பெற்றிருக்கும். இதனை துத்தி நோய் என்வும்கூறுவர்.

8. குதக்கூடரோகம் :
- இது பாலர்கட்கு புளித்த மலம் சேருவதினாலும், அதிசாரரோகத்தினாலும், பிறந்த குதஸ்தானத்தில் சிவந்த நிற விரணமும், உள்ளீல் அதிக நமைச்சலும் மிக உபத்திரவமும் உண்டாகும்.

9. விஷமசிராரோகம் :- இது அசீரணத்தினால் சிசுக்களுக்கு ரத்தநரம்புகளில் எந்நேரமும் காங்கையும் அதிக நமைச்சலும் உண்டாகி மிகுந்த உபதிரவத்தைச் செய்யும்.

10. முகதூஷிகரோகம் :- இது கபவாத விருத்தியினால் பிறந்து சிசுக்களுக்கு வாயில் இலவமுட்களைப்போன்ற முட்களை யுண்டாக்கும். இதற்கு நாய்முள் என்று பெயர்.


இனி பாலர்கட்கு காணும் இதர நோய்களைக் கூறப்படும்.

குழந்தைகளின் நோய்களைக் கண்டறியும் உபாயம் :- வைத்தியன் சிசுக்களுக்கு ரோகங்கள் இருக்கிறதும் இல்லாததும் சிசு அழுகிற குறலைக்கண்டு கவனிக்கவேண்டியது. குழந்தை எந்த இடத்தை பல தடவை தொடுகின்றதோ, எந்த இடத்தை தொட்ட மாத்திரத்தில் வீறிட்டு அழுகிறதோ அந்த இடத்தில் குழந்தைக்கு நோய் உண்டென்றும், கண்கள் பலதடவை மூடிக்கொண்டால் சிரசில் நோய் உண்டென்றும், மலமூத்திரபந்தம், கக்கல், ஸ்தனத்தை கடித்தல், குடலில் கூச்சல், வயிறுப்பல் முதுகைவளைத்தல், பலதட வை பக்கங்கள் எடுத்துப்போடுதல் இந்த லக்ஷணங்களில் வயிற்றில் நோய் உண்டென்றும், பயப்படும்படி பலதடவை திசைகள் பார்ப்பதினால் அடிவயிறு குய்யம் இவைகளில் நோய் உண்டென்றும் அறியவேண்டியது.

பிள்ளைகளின் பத்திய கிரமம் :- சிசுவுக்கு நோய் உண்டானால் தாயானவள் சகல அபத்திய பதார்த்தங்களை விடவேண்டியது.சாதம் சாப்பிடும் சிசுவுக்கும், முலைப்பாலும் அன்னமும் சாப்பிடும் சிசுவுக்கும் அபத்திய அன்னம் ஊட்டக்கூடாது. ஆனால் முலைப்பாலை மாத்திரம் நிவர்த்திக்ககூடாது. லங்கணம் செய்யவேண்டுமானால் தாயார் அல்லது பால்கொடுப்பவளை லங்கணம் செய்விக்க வேண்டியது. இப்படிசெய்வது சிசுவுக்கு லங்கணமென்று அறிய வேண்டியது.

சிசுகளுக்கு அவுடத கிரமம் :- காய்ச்சல் முதலிய நோய் களுக்கு பெரியவர்களுக்கு எந்த அவுடதங்கள் கொடுக்கும்படியாக வைத்திய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளைத் தான் சிசுகளுக்கும் உபயோகப்படுத்தவேண்டியது. ஆனால் வியர்வை பிடித்தல், தலைக்குப்பத்துபோடல், விரேசனம் முதலியது செய்யக்கூடாது. அதிக கஷ்டசாத்திய ரோகங்களில் விரேசனவமனங்கள் மாத்திரம் உபயோகிக்கவேண்டியது.

பிள்ளைகளுக்கு மாத்திரை பிரமாணம் :- குழந்தைகள் பிறந்த வுடன் வாயுவிளங்கபிரமாணம் கொடுக்கவேண்டியது. இந்த  பிரமாணமாக பிரதிமாதத்திலும் கொஞ்சங் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியது.

குகூணக பால ரோக நிதானம் :- குழந்தைக்கு பாலரோ ஷத்தினால் குகூணகமென்கிற ரோகம் உண்டாகும். அப்போது கண்களில் நமைச்சல் நீர்வடிதல் கண்கள், தலை, மூக்கு இவைகளை தேய்த்துக்கொள்ளுதல், கண்கள் திறக்கக்கூடாமை, சூரியகாந்தியை பார்க்கக்கூடாமை என்னும் குணங்களுண்டாகும்.

குகூணக பால ரோக சிகிச்சை :
- கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல், லோத்திரச்சக்கை, வெள்ளைச்சாரணை, இஞ்சி, சிறிய முள்ளங்கத்திரி, பெரிய முள்ளங்கத்திரி, இவைகளை அரைத்து வேகவைத்து கொஞ்சம் வெப்பமாக தேகத்திற்கு லேபனஞ்செய் தால் அது சிலேத்துமத்தை தணிக்கச்செய்து குகூணக ரோகத்தை நிவர்த்திசெய்யும்,

பாரிகர்ப்பிகநிதானம் :- கர்ப்பிணியாய் யிருக்கும் தாயாரின் தன்னியத்தை குழந்தை பானஞ்செய்வதால் இருமல், அக்கினிமாந்தம், நமைச்சல், வாந்தி, காசம், அருசி, பிரமை, இவைகளுண்டாகி பிள்ளையின் வயிறும் சூணாவயிறாகும். இதற்கு பாரிகர்ப்பம் என்றுபெயர். இதை நிவர்த்தி செய்ய அக்கினி தீபன மருந்துகள்  கொடுக்கவேண்டியது.

தாலுபாகநிதானம்:- குழந்தைகளுக்கு சிலேஷ்ம பிரகோபத்தினால் தாடையிலுள்ள மாமிசத்தில் தாலுகண்டக மென்கிற ரோகம் உண்டாகும். அப்போது தாடைகளில் பள்ளங்கூட விழும். அதனால் தாடையில் சிறிய கட்டிகள் பால் குடியாமை, இவைகளுண்டாகி கண்கள் கழுத்து, முகம் இவைகளில் உண்டாகும் நோயினால்
கழுத்து நிற்காமல் போவதுடன் குடித்த பாலும் கக்கும். இதற்கு தாலுபாக ரோகம் என்று பெயர்.

தாலுபாக சிகிச்சை :
- கடுக்காய், வசம்பு, கோஷ்டம், இவைகளை கல்கம் செய்து அதில் தேன் முலைப்பாலும் விட்டு கலக்கி பானஞ்செய்வித்தால் தாலுகண்டரோகம் நிவர்த்தியாகும்.

விசர்ப்பரோக நிதானம்:- சிறிய குழந்தைகளுக்கு திரிதோஷத்தினால் தலை அல்லது அடிவயிறு இவைகளில் சிறிய தாமரை கொழுந்தைப்போல் விசர்ப்பமென்கிற ரோகமுண்டாகி முடிச்சுகளிலும் ஹிருதயஸ்தானத்திலும் அடிவயிற்றிலும் குதபிரதேசத்திலும் சிரமமாக பிரவேசிக்கும். இதனால் சுசு மரணமடையும். இது மகா பத்மகரோகமென்று அறிய வேண்டியது.

உல்பகரோகம் :- பிரசவித்த மருமாதருதுகாலத்திலேயே புருஷ்னைச்சேர்ந்து மறு கர்ப்பத்தைகொண்ட வாலிந்தி என்ற ஸ்திரீகளுக்கு கர்ப்பசாயத்தில் பிண்டோற்பத்திற்குகாரணமானகருப்பசலனத்தினால் கண்டகமென்கிற சிலேஷ்மம் இருக்கின்றபையானது விருத்தியடையும்போது அன்னரசமானது சிசு போஷ கங்களான நாடிமார்க்கங்களில் விருத்தியடையும் இதனால் முன்பு பிறந்திருக்கிற சிசுவானது மயக்கத்துடன் கைகளை முஷ்டிபந்தமாக மூடிக்கொள்ளும். அன்றியும் மார்புநோய், கால் கைகளை சொறதல், இருமல், இரைப்பு, வாந்தி, சுரம் முதலிய குணங்களுடன் நாளுக்கு நாள் இளைக்கும். இது தாயினது கர்ப்பகாலத்தில் முலை மார்க்க சலத்தால் ஏற்பட்டு சிசுவை மூடுதலால் உல்பகரோகம் எனப் பெயர் பெற்றது. இதற்கு வேறு முலைப்பால் ஊட்டுவது தவிர, அப்பிரசவம் ஆகும்வரையில் சிசுவை பாதுகாக்கவேண்டும்.

பால விசர்ப்பிரோகம் :- பாலர்களுக்கு கொப்புளமாவது கீழ் வயிற்றிலும், தலையிலும் வியாபிக்கில் மரணத்தைக்கொடுக்கும். திரிதோஷத்தினால் உண்டான விசர்ப்பி கொப்புளங்கள் செந்தாமரை இதழை யொத்திருப்பதால் இதற்கு மகாபதும விசர்ப்பி என்று பெயர். இது முதல் முதல் நரம்பின் வழியாக நெற்றியில் கனத்து மார்பிலிறங்கும். பின்பு மார்ப்பிலிருந்து குதஸ்தானத்திலிறங்கும்.
இப்படியே அதோ முகமாக இந்த ரோகம் இறங்கி இறங்கிச் சுற்று வதால் அசாத்தியமாம்.

மிருத்திகாபஷண ரோகம் :- தினந்தினமும் மண்ணைத்திண்ணுகின்ற சிசுகளுக்கு தேகம் வெளிறலுடன் வீக்கம், இருமல், இரைப்பு, பேதி, வயிற்றிற்கிருமி சேருதல், வாந்தி, மூர்ச்சை, மந்தாக்கினி, முலைப்பாலில் விருப்பமின்மை, சரீரநோய், பிரமை முதலிய குணங்கள் உண்டாகும்.

பாரிகர்க்கிக ரோகம் :- கருப்ப ஸ்திரீகளின் பாலை குடிக்கும் சிசுகளுக்கு இருமல், மந்தாக்கினி, அரோசகம், வாந்தி, சோம்பல், இளைத்தல், பிரமை என்னுங் குணங்கள் உண்டாகி வயிறும் பெருகும். இன்னும் சர்வாங்கத்திலும் உபத்திரவத்தைச் செய்யும்.
 

Post Comment

ஸ்தன ரோகம் - நோய் நிதானம் & சிகிட்சைகள்

ஸ்தன ரோகம் 

பாலுடன் சேர்ந்தும் அல்லது பாலுடன் சேராமலும், ஸ்திரீ யின் ஸ்தனத்தில் வாதாதிதோஷங்கள் பிரகோபித்து மாமிசரசத்தை சேர்த்து வாதபித்த சிலேத்திம ஆகந்துக சந்நிபாதாத்துமகரோகங்களை உண்டாக்கும். அவைகளின் லக்ஷணங்கள் ரத்தவித்தி ரதி தவிர மற்ற வெளிவித்திரதிகலில் சொல்லிய லக்ஷணங்களையே ஒத்திருக்கு மென்றறியவும்.

ஸ்தன ரோக சிகிச்சை :- ஆற்றுதும்மட்டிவேரை அரைத்து லேபனஞ்செய்தாலும், காட்டுபருத்தி, கசப்புசுரைவேர் இவைகளை கோதுமை கஞ்சிகத்தில் அரைத்து லேபனம் செய்தாலும், ஸ்தனங்களில் உண்டான பீடைகள் நீங்கும்.

ஸ்தன்னியவாதரோக சிகிச்சை :- வாத வியாதியினால் ஸ்தனங்கள் துஷ்டமானால் தசமூலகியாழம் மூன்று நாள் குடித்தாலும் அல்லது வாதஹரமான கிருதத்தை குடித்தாலும் அல்லது இலகுவான விரேசனம் அருந்தினாலும் வாதஸ்தனரோகம் நிவர்த்தியாகும்.

ஸ்தனங்களில் உண்டாகும் வீக்கங்களுக்கு சிகிச்சை :- வாத பித்த சிலேத்துமாதிகளினால் ஸ்திரீக்கு ஸ்தனங்களில் வீக்கமுண்டாகி அது பழுக்காமல் எரிவந்தத்துடன் இரணத்தையுண்டாக்கினால் வித்திர தியில் சொல்லிய நானாவித சிகிச்சைகள் செய்ய வேண்டியது.

ஸ்தனங்கள் கெட்டியாவதற்கு சிகிச்சை :- அருநெல்லி, கற்கத்தில் எளெண்ணெய் விட்டு தைவபக்குவமாக காய்ச்சி அதில் பருத்தியை நனைத்து ஸ்தனங்கள் மீது வைத்து கட்டினால் அது கெட்டிபடும்.

சிற்றாமுட்டியை ஜலத்துடன் அரைத்து ஸ்தனங்களுக்கு லேபனஞ்செய்து தேய்த்தால் புஷ்டியாகி கடினமாகும்.

தாமரைக்காயை பாலில் அரைத்து சர்க்கரை கலந்து ஒரு மாதகாலம் சாப்பிட்டு வந்தால் ஸ்தனங்கள் கெட்டிபடும்.

வாதாதிகளினால் துஷிதமான முலைப்பாலின் லக்ஷணம் :- 
முலைப்பால் துவர்ப்பாயும் ஜலத்திலிட்டால் மிதந்து கொண்டிருக் கும் படியானதாயும் இருந்தால் வாததோஷமென்றும், காரமாயும் உப்பாயும், புளிப்பாயும் அதன் மீது மஞ்சள் சாயல் உண்டானால் அது பித்த தோஷமென்றும், பளுவாயும் பிசினியைப்போல் பிசுபிசுப்பாயும், ஜலத்தில் போட்டால் அது முழுகினால் அது கப தோஷ மென்றும், மேற்கூறிய லக்ஷணங்களும் தென்பட்டால் அது  சந்நிபாத ரோகமென்றும் அறியவேண்டியது.
சாப்பிட்டாலும் அல்லது அசோக புஷ்பங்களை அரைத்து ஸ்தனங்களுக்கும் சிசுவின் பற்கள் உதடு இவைகளுக்கு லேபனஞ் செய்தால் இலக்ஷண வாந்தியாகி ஸ்தனதோஷத்தினால் உண்டாகிய வியாதிகளும் நிவர்த்தியாகும்.

தொந்ததோஷமுலைப்பாலுக்கு சிகிச்சை :- இரண்டு தோஷங்களினால் முலைப்பால் கஷ்டமானால் மேற்கூறிய சிகிச்சைகளையே தொந்தித்துச் செய்யவேண்டியது.

திரிதோஷமுலைப்பாலுக்கு சிகிச்சை :-திரிதோஷங்களினால் முலைப்பால் கஷ்டமாகி அப்பாலை சிசு குடித்தால் ஜலத்தைப்போல ஆமத்துடன் கலந்து அநேக வர்ணத்துடன் கொஞ்சம் கெட்டியாயும் அதாவது குழம்பு போலும் வயிறு நொந்து நொந்து மலம் போகும். இதற்கு முற்கூறிய சிகிச்சைகளையே செய்ய வேண்டும்.

சகலஸ்தனதோஷங்களுக்கும் சிகிச்சை :- பெரும்கடம்பை, சீமைநிலவேம்பு, தேவதாரு, சுக்கு, வெட்பாலைவிரை, நன்னாரிவேர், கிரந்திதகரம், கடுகுரோகணி இவைகளை முறைப்படி கியாழம்
வைத்து குடித்தால் சகலஸ்தனதோஷங்களும் நிவர்த்தியாகும்.

முலைபாலைப்பெருக்கசிகிச்சை :- நிலப்பூசணிவேரைப்பால் விட்டரைத்து பாலில் கலந்து அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டல் பால் விருத்தியாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கை பால் விட்டரைத்து குடித்தாலும் அல்லது கொஞ்சம் உஷ்ணமான பாலில் திப்பிலி சூரணத்தைப் போட்டு குடித்தாலும் பால் விருத்தியாகும்.

காட்டுபருத்திவேர், கரும்புவேர் இவைகளை காஞ்சிகத்தில் அரைத்து குடித்தாலும் அல்லது நிலப்பூசனி சூரணத்தை கள்ளில் அரைத்து சாப்பிட்டாலும் முலைப்பால் விருத்தியாகும்.

காட்டுபருத்திவேர், கரும்புவேர் அல்லது பற்பாடகம், நிலப்பூசனிவேர் இவைகளை கல்விட்டு அரைத்து குடித்தால் பால்விருத்தி யாகும்.

கோதுமை மாவுடன் அக்ரோட்டுபருப்பு அல்லது இலைசேர்த்து அடைசுட்டு சாப்பிட பால் பெருகும்.

ஆமணக்கு இலையை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஸ்தனங்களின் மேல் வைத்துக்கட்ட பால் சுறப்புண்டாகும்.

Post Comment

சோம ரோகம் -ஸ்வேத ப்ரதரம்- நோய் நிதானம் & சிகிட்சைகள்

சோம ரோகம் (வெள்ளை)

அதிக சையோகம், சோகம், பிரமை, அதிசாரம், விஷதோஷம் இவைகளினால் மாதர்களின் தேகமுழுதும் வியாபித்த நீரானது மிகவுங் கெட்டு யோனித் துவாரத்தில் சேர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும். இதற்கு சோமரோகம் என்று பெயர்.

சோமரோக லக்ஷணம் :- சோமரோகம் உண்டாகில் ஸ்திரீயானவள் அதன் உபதிரவத்தை சகிக்கமுடியாமல், தலைவலி,முகம் தாடை வாடல், கொட்டாவி, மூர்ச்சை, பிரலாபம், சருமம் வறண்டு உஷ்ணமாயிருத்தல், சாப்பாட்டில் அதிருப்தி, இந்த லக்ஷணங்கள் உடையவளா யிருப்பாள். சரீரத்தில் வியாப்பித்திருக்கும் சலம் சரீரத்தை தாரணை செய்வதினால் சோமரோகமென்று சொல்லப்பட்டது. இந்த நீர் அதிபுணர்ச்சிகளினால் விஷமத்தைப்பெற்று க்ஷயிப்பதினால் சோமரோகமென்று பெயர்.

இப்படி தேகமுழுதும் வியாபித்து சோமக்குறியை யடைந்தரத்தமானது க்ஷ£ணித்ததினால் தேகமானது ஜடம் போலாகும். அந்த சோமரோகம் குத்தலுடன் மூத்திரத்தோடு கலந்து பலதடவை ஒழுகிக்கொண்டிருக்கும். இந்த சோமரோகம் சிலநாள் கழிந்தபிற்கு கஞ்சிபோல் ஆகி அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்
டிருந்தால் அதை மிகவும் துர்லபமான மூத்திராதிசாரமென்று சொல்லுவார்கள்.

மேற்கூறிய மூத்திராதிசாரம் விஸ்தாரமாயும், சீதளமாயும், வாசனையற்றும், உபத்திரவமில்லாமலும், வெண்மைநிறமுடையதாய் மிகவும் ஒழுகிக்கொண்டு மாதர்களுக்கு அதிதுர்பலத்தை உண்டாக்கும்.

பரிகாரம் :- மேற்கூறிய சோமரோகம் வேதனையுடன் அடிக்கடி மூத்திரத்துடன் கலந்து ஒழுகிக்கொண்டிருந்தால் ஏலக்காய்,இலவங்கப்பத்திரி இவ்விரண்டையும் சூரணித்து கள்ளுடன் கலந்து கொடுத்தால் சோமரோகம் நிவர்த்தியாகும்.

நிலப்பனங்கிழங்கு, கர்ஜீரம், யஷ்டிமதுகம் நிலப்பூசினி இவை களை சமனெடை சூரணித்து, அத்துடன் தேன், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மூத்திராதிசாரம் குணமாகும்.

தகரம்வேர், அரிசிகழுநீரில் அறைத்து கல்கம்செய்து காலையில் குடித்து வந்தால் ஜலபிரதரம் குணமாகும்.

கதளீக்கந்த கிருதம் :- வாழைக்கிழங்கு ரசம் 256-பலம் முதிர்ந்த வாழைப்பூ இதழ்கள் 100-பலம் போட்டு அடுப்பேற்றி நாலில் ஒருபாகமாகச் சுண்டக்காய்ச்சிய கியாழம், நெய் 1-படி
பால் 1-படி இவைகளை ஒன்றுசேர்த்து தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, ஏலக்காய், இலவங்கம், விலாம்பழம், ஜடாமாஞ்சி,வாழைக்கிழங்கு, சந்தனம், ஆல், மா, இத்தி, அரசு, அத்தி இவை களின் பட்டைகள் தாமரைக்கிழங்கு இவைகளை வகைக்கு 1/4பலம்வீதம் கற்கமாகச் செய்துக் கூட்டிக் கலந்து அடுப்பேற்றி கிருத பக்குவமாக காய்ச்சி, ஆறியபிறகு வடித்து பிரதிதினம் காலையில்1/4பலம் விகிதம் சாப்பிட்டுவந்தால் மாதர்களுக்குண்டாகும் சோம ரோகம் நீங்கும். மேலும் எரிச்சல், மூத்திரக்கிருச்சிரம், நீர் அடை
ப்பு, வெள்ளை, வெட்டை, பெரும்பாடு, பிரமேகங்கள் மூத்திராதி சாரம் முதலியன நீங்கும்.
 

Post Comment

பெரும்பாடு -நோய் நிதானம் & சிகிட்சைகள்

பெரும்பாடு

அதிக உஸ்ண வீரியப் பொருள்கள் அதிதிண்டி அசீரணம், கருப்ப அழற்சி, அதிசையோகம், மலை முதலியவை ஏறுதல், அதிக நடைஅதிதுக்கம், தடி முதலியவைகளால் அடிபடல், பகல் நித்திரை என்பவைகளினால் இந்த விரத ரோகமென்னும் பெரும்பாடு நோய் ஏற்படும்.

இது வாத பெரும்பாடு, பித்த பெரும்பாடு, சிலேஷ்ம பெரும்பாடு, சந்நிபாத பெரும்பாடு என நான்கு வகைப்படும்.

பெரும்பாட்டின் இலக்கணம் :- ஸ்திரீகட்கு மாதாந்த ருது காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாகவும், நிறம் மாறியும் காணுதல், நீடித்து இருத்தல், வயிற்றில் அற்பவலி, துர்பலம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும். மேலும்இந்நோய் அதிகரிக்கின், துர்ப்பலம், சங்கடம், மூர்ச்சை, தாகம், தாபம், மதம், பிரலாபம், தேகம் வெளிரல், நமைச்சல், வாந்தி என்னும் இக்குணங்கள் உண்டாவதுடன் சில வாத ரோகங்களும் சனிக்கும்.

1. வாதப்பெரும்பாடு :- இதில் வெளியாகும் உதிரமானது அற்பமாயும் சிவப்பாயும் இருத்தல், நுரையுண்டாகுதல், வாதரோகஉபதிரவம், புலால் கழுவிய சலத்தைப்போல் கொஞ்சங் கொஞ்ச சமாக வெளியாகுதல் என்னுங் குணங்கள் உண்டாகும்.

பரிகாரம் :- இதற்கு சவ்வர்ச்சலவணம், சீரகம், அதிமதுரம், கரும் அல்லிப்பூ இவைகளை தயிர்விட்டு அரைத்து கற்கமாகச் செய்து தேன்விட்டுக் கொடுக்கவும்.

சுக்கு, அதிமதுரம், இவைகளை சம எடையாகச் சூரணித்து அதில் நல்லெண்ணை, சர்க்கரை இவைகளை சம எடையாகக் கலந்துயாவையும் ஒன்றாகும்படிக் கலந்து கொடுத்துவரலாம்.

ஏலக்காய், தனியா திரா¨க்ஷ, வெட்டிவேர், கடுகுரோகிணி, சந்தனம், கருப்புப்பு, நன்னாரிவேர், லோத்திரப்பட்டை, இவைகளை சம எடையாக அரைத்து தயிர்விட்டு கலக்கிக்கொடுக்கலாம்.

2. பித்தப் பெரும்பாடு :- 
இதில் மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறங்களாகவும் அதி உஷ்ணமாகவும் பித்த வேதனையுடன் அதிவேகமாக இரத்தம் வெளியாகுதல், என்னுங் குணங்களுண்டாகும்.

பரிகாரம் :- ஆடாதோடாயிலை ரசமாவது, சீந்தில் கொடிரசமாவது, தண்ணீர் விட்டான் கிழங்கு ரசமாவது, தேனுடன் கலந்துகொடுத்தால் பித்தத்தினால் உண்டான பெரும்பாடு நிவர்த்தியாகும்.

அதிமதுரம், கால்பலம் எடுத்து கழுநீரால் அரைத்து கற்கம் செய்து அத்துடன் சர்க்கரை 1-பலம் போட்டு சாப்பிடலாம்.

3. சிலேஷ்ம பெரும்பாடு :- 
ஆமத்தைப்போலும், சீதத் தைப்போலும், கொஞ்சம் வெண்ணிறமாகியும், சாதம் வடித்த நீர் போல் உதிரம் வெளியானால் அது சிலேஷ்ம பெரும்பாடென்று அறியவேண்டியது.

பரிகாரம் :- இதற்கு கரும் அத்திப்பழ ரசத்தை குடித்தல் அல்லது காகிஜெங்காரசத்தில் லோத்திரபட்டைச் சூரணம், தேன் இவைகள் கலந்துகொடித்தல் நன்று.

4. திரிதோஷ பெரும்பாடு :- தேன், நெய், அரிதாளம் இவை களின் நிறத்தைப் பெற்றதும், கொழுப்பைபோல் காந்தியுடைய தாயும், துர்கந்தமாகியும், இரத்தம் வெளியானால் அதை திரி தோஷ பெரும்பாடு என்று சொல்லுவார்கள்.

பரிகாரம் :- தருப்பைவேரை அரிசி கழுநீரால் அரைத்து கற்கம் செய்து மூன்றுநாள் கொடுக்கவும்.

கருப்பு அத்திப்பழ ரசத்தில் தேன்கலந்து 7-நாள் கொடுக்கவும். பத்தியம்-பசும்பால், சர்க்கரை, அன்னம் மற்றது கூடாது.

கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய், சுக்கு, மரமஞ்சள் இவைகளைக் கியாழம்வைத்து அதில் லோத்திரப்பட்டைச் சூரணம், தேன் கலந்து சாப்பிடலாம்.

ஆடாதோடையிலை சாறாவது, சீந்தில்கொடி ரசமாவது, முள் முருக்கன்வேர் ரசமாவது பானஞ் செய்தால் வெள்ளை, பெரும்பாடு முதலியன குணமாகும்.

திரிபலை, தேவதாறு, வசம்பு, ஆடாதோடை, நெற்பொறி, அருகன்வேர், சிற்றாமுட்டி இவைகளை கியாழம் வைத்து தேன் கலந்து குடித்தால் மாதர்களுக்குண்டாகும் சகல பெரும்பாடு நோயும் சாந்தியாகும்.

அசோக விருஷத்தின் பட்டையை பாலில் போட்டு கொஞ்சம் ஜலம் விட்டு பால் மீறும்படியாக கியாழம் காய்ச்சி ஆறியபிறகுஅதை குடித்துவர கொடுங்கோரமான ரத்த பெரும்பாடு நீங்கும்.

Post Comment

யோனி ரோகங்கள் -ரோக நிதானம்

யோனிரோகம்

சரீரத்திற்கு பொருந்தாத உணவு, மேடு பள்ள ஸ்தானத்தில் படுத்தல், வெகு புருஷ சஞ்சாரம், மாதாந்தர ருது தோஷம், ஆண் குறி தோஷம், அனலாதி வெப்பம், தகாதநடத்தை, தேவாதோர யோகம் ஆகிய இச்செய்கைகளை உடைய ஸ்திரீகளுக்கு இந்த ரோகம் பிறக்கும். இதனால் அவ்விடத்தில் கிருமிகள் நெளிவதுபோல சருமம்
சுறசுறத்தல் நானாவித நிறத்துடன் நுறையுடன் இரத்தம் வடிதல், தாகம், சுரம், தினவு, வேதனை, சகிக்கக்கூடாத திரவம், சிவந்த நிறத்து டன் அல்குல் சுட்கித்தல், எரிச்சல், வாய்கசகசப்பு, பேதி, கவுட்டியிலும் பிட்டத்திலும் குத்தல், இரண்டு ஸ்தனமும் ஒட்டி உலர்தல் அல்குல் வீக்கம் முதலிய குணங்கள் உண்டாகும். இது 21 வகைப்படும்.
அவையாவன :-

1. வாதயோனி :- இது வாயுவானது அல்குலில் நிலைத்த காலத்தில் பிறக்கும். இதனால் அவ்விடத்தில் கிருமி நெளிவது போலைருத்தல், சருமம் சுறசுறத்தல் அம்மார்கத்தில் கருத்தும்,
சிவந்தும், நுரைத்தும் சுடுக்கையுடன் கொஞ்சம் இரத்தம் வடிதல் இரண்டு கவுட்டியிலும் நோதல் அடிவயிறு கனத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பித்தயோனி :- இது பித்த தோஷமானது அல்குல்லில் பரவுங்காலத்தில் பிறக்கும். இதனால் அவ்வழியால் மஞ்சள் கருப்பு
நிறத்துடன் சுடுகையாய்ப் பிணநாற்றங் கமழ்கின்ற உதிரம் வடிதல் தாகம், சுரம், சரீரத்தில் அக்கினிச்சுவாலை வீசுதல், துர்க்கந்தம்
பிறக்குதல் என்னுங் குணங்களுண்டாகும்.

3. சிலேஷ்ம யோனி :
- இது சிலேஷ்மமானது அல்குலில் தங்குங் காலத்தில் பிறந்து அவ்விடத்தில் சீதளம், தினவு, வேதனையன்றி
வெளுத்த ரத்தம் ஒழுகுதல் என்னுங் குணங்களுண்டாகும்.

4. உதாவர்த்த யோனி :- அல்குல் ஸ்தானத்தில்மிகுந்த உபத்திரவத்தையும் அம்மார்க்கத்தில் நுறைத்த ரத்த ஒழுகையும்

உண்டாக்கும்.

5. உப்புலுத யோனி :- அல்குல் ஸ்தானத்தை வெண்மையாக்கி அச்சருமத்தை நையப்பண்ணும். இதனால் அவ்விடம் சுட்
கித்துப் பஞ்சடித்த களம்போல திறந்திருக்கும்.]

6. ரத்த யோனி :- இது நிதம்பஸ்தானத்தில் சகிக்ககூடாத உபதிரவத்தையும், மிகுந்த ரத்த ஒழுக்கையும் உண்டாக்கும்.

7. சாதக்கினி யோனி :- இது அல்குல்வாயில் வெடியெழும்பிய பீரங்கிவாயின் சுடுகையைபோல் சுடுகையை உண்டாக்குவதுமின்றி
அவ்விடத்து உதிரத்தையும் கொதிப்பிக்கும். இதனால் வயிற்றில் ஏழுமாதத்திற்கு உட்பட்ட சிசுவாயிருந்தாலும் மரித்து விழும்.

8. அந்தர்முகி யோனி :- எந்த ஸ்திரீயாவது வயிறுநிரம்ப உடனேமேடுபள்ள ஸ்தானத்தில் படுத்து, கடினசையோகத்துக்கு இடங் கொடுக்குங்காலத்தில் பிறக்கும். அம்மாதுக்கு வாயு பிறபித்து அர்ந்தர்முகமாக எழும்பி யோனிஸ்தானத்தில் உபத்திரவகளும், அதை விரிக்ககூடாமையும் பூ ஒதுங்குவதால் அங்
குல்கள் எலும்பு மாமிசாதிகளில் வேதனையும் அடிவயிற்றிற் சூலையை உண்டாக்கும்.

9. சுட்க யோனி :- இது மாதாந்தர ருதுகாலத்தில் புணர்ச்சியுடன் விரும்பிய மாதர்களுக்கு பிறக்கும். எப்படியெனில் சுபாவம் விழுகின்ற ரத்தமாந்து சையோகத்தில் உள்ளுக்குள்ளே
பட்டு மலமூத்திரசிக்கலை நாள்தோறும் பிறபித்து கொண்டே யிறுந்து அதன்பின் கடி தடத்தில் மெலிவையும் உபத்திர த்தையும் உண்டாகும்படி செய்யும்.

10. வாமினி யோனி :- இது வாயுவைக்கொண்டு பிரசவித்த நாளிலாவது ஏழுநாளிலாவது கருப்பாசயத்தில் இருக்கின்ற உபதிரவத்தை ஒழுக செய்யும். இதனால் உபதிரவ மிருது வாகும்.

11. சுட்க யோனி :- இது வாதபித்தகபங்களினால் யோனி உண்டாகும் உதிரமானது உலரப்படுங்காலத்தில் பிறக்கும். இதனால் அந்த இடத்தில் சிவந்தநிறமும் சுட்கமும் எரிச்சலும் உண்டாகும்.

12. பரிப்புலுத யோனி :- இது சையோக காலத்தில் தும்மலை யும், ஏப்பத்தையும் அடக்குவதால் பிறக்கும். இதனால் யோனி
ஸ்தானம் உப்பல், அதைத்தொடக ்கூடாதவேதனை, கறுப்பும் மஞ்சளுங் கலந்த நிறமாக ரத்தம் ஒழுகுதல், நோயோடு கனப்பு, ஒரு வேளை பேதி, அரோசகம், கவுட்டியிலும் புட்டத்திலும் குத்தல், சுரம் என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

13. மகாயோனி :- வாயுவானது யோனி ஸ்தானத்திலும், வயிற்றிலும், கருப்பஸ்தானத்திலும், சஞ்சரித்துப் பூரிக்கும்போது பிறக்கும். இதனால் அல்குலானது நாளுக்குநாள் துர்மாமிசத்தி னால் மென்மேலும் வளர்ந்து விசாலமாகப் பருப்பதுமன்றி சில
வேளை மிகுந்த நோயைத்தரும்.

14. ஷண்டயோனி :- இது கருப்பகாலப்புணர்ச்சியால் பிறக்
கும். எப்படியெனில் புருஷனுடைய விந்துவின் சுடுகையினால் அல்குல் ஸ்தானம் வெந்த மாமிசம்போலாகுவது மன்றி சிலநாட்
சென்று இரண்டு ஸ்தனமும் ஒட்டி உலர்ந்துவிடும். பின்பு இந்த ஸ்திரீயானவள் புருஷனைச் சொப்பனத்திலும் விரும்பாள்.

15. அதிசாண யோனி :- இது பருத்த ஆண்குறியுடைய புருஷ சையோக மிகுதியினால் பிறக்கும். இதனால் அல்குலில் வீக்கமும்
கன உபத்திரவமும் உண்டாகும்.

16. சூசிமுகயோனி :
- இது வாதாதிக்கவஸ்த்துகளை மிதமின்றி
நித்தியமும் புசித்து உடனுடனே புணருவதால், வாயு கருப்பாசய ஸ்தானத்தில் நிலைக்கப்படுங்காலத்தில் பிறக்கும். எப்படியெனில் அவ்வாயுவினால் மாமிசம் தூலித்து அல்குலின் துவாரத்தை ஊசி
நுழையும் துவாரம்போலாக்கி சையோகத்திற்கு இடம் இல்லாமல் செய்துவிடும். ஒருவேளை வலுவில் யத்தனித்தால் அதிக உபாதி
யும் ரத்தப் பிரவாகமும் உண்டாகும்.

17. பராக்சாணயோனி :- இது ருதுவாகா கன்னியர்கள் புருஷ னைப்புணருவதால் கருப்பாசய ஸ்தானத்தில் சேருகின்ற இளம் உதிர
மானது கெடுதியை யடையுங்காலத்தில் பிறக்கும். அப்போது அல்குல்ஸ்தானம் அவ்வுதிரத்தால் கலங்கி நிறமாறுவதுமன்றி நடுமுதுகில் குத்தலும், கவுட்டி தொடை என்னும் இடங்களில் நோயும் உண்டாக்கும். இதனால் பலரோக சம்பவம் நீடித்து வரித்தும்.

18. கண்டுலயோனி :- இது மிகுந்த சையோகத்தினால் அல்குல் ஸ்தானத்திலிருக்கின்ற உதிரக் கெடுதியை யடைந்து அதில் கிருமி கள் சனிக்கும்போது பிறக்கும். இதனால் அங்கு அதிக நமைச்சலும்
அந்த நமைச்சலினால் எப்போதும் சையோகத்தில் மிகுந்த விருப்பமும் அதனால் இதவும் உண்டாகும்.

19. கர்னிகாயோனி :- இது அகால சையோகத்தால் வாயு அதிகரித்து ரத்தத்தை கெடுக்கும் போது பிறக்கும். இதனால் அல்
குலின் துவாரத்தில் வாயுவினால் திரண்ட உதிரமானது துர்மா மிசநிறத்தை யொத்து தாமரைக்காயைப்போலும், விழுது விட்டது
போலும் தொங்கும். இதனைச் சிலர் தசை அண்டம் என்பர்.

20. விப்புலதயோனி :- இது அதிமோகங்கொண்டு நினைத்த
போதெல்லாம் பலவகைப் பந்தத்துடன் புருஷனைப் புணர்வது மன்றி அப்புருஷனை இடைவிடாது தன் பார்வக்குள் வைத்திருக்
கும் காரணத்தால் பிறக்கும். இதானால் அல்குல் ஸ்தான முற்றுங்கலங்குவதும் அதில் மாறாது மத சலம் வடிதலும் தேகம் நாளுக்கு நாள் துர்ப்பலம் படுவதுமாக இருக்கும்.

21. சந்நிபாத யோனி :- இது அல்குல் ஸ்தானத்திலும் கருப்ப  ஸ்தானத்திலும் திரிதோஷத்தையும் சஞ்சரிக்கச்செய்து, அவ்விடங்களில் அநேக ரோகங்களையும் மகாவிரணங்களையும் பிறப்பிக்கும்.
இந்த ரோகத்தை அனுபவிக்கின்ற மாதர்கட்கு ரத்தச்சிராவம், மூலம் ரத்தகுன்மம், அதிதூலம் என்னும் நான்கு ரோகங்களும் ஒருமித்தாவது
தனித்தாவது உண்டாகாதிருக்கில் திடகாத்திரமும் நல்ல கருப்பமும்
உண்டாகும்.

யோனிரோகங்கள் (வேறு மதாந்திரம்) 

யோனி ரோகமானது வாதம், பித்தம், சிலேஷ்மம், சந்நிபாதம் எனநான்கு வகைப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐந்து பிரிவுகளை பெற்றிருக்கும்.அவையாவன :-
உதாவர்த்தம், விப்லுதை, பரிப்புலுதை, வாதலை என இவ்வைந்தும் வாததோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள். லோஹிதஷயம், பிரஸ்ரம்சினி, வாமினி, புத்திரக்கினி, பித்தலை எனஇவ்வைந்தும் பித்ததோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள்.

அல்பானந்தம், கர்ணினி, அதிசரணை , அதியானந்தம், சிலேஷ்ம மலம் என இவ்வைந்தும் சிலேத்தும தோஷத்தாற் பிறந்த யோனி ரோகங்கள்.

ஷண்டினி, அண்டினீ, மஹதி, ருசிவகத்திரை, திரிதோஷஜை என இவ்வைந்துஞ் சந்நி பாதமென்ற திரிதோஷக்கூட்டத்தாற் பிறந்த யோனி ரோகங்கள். இவ்விதமாக மாதர்கட்கு 20 வகைப்பட்ட வெளிநோய்கள் உண்டாகுமென அறியக்கிடக்கின்றது.

வாதயோனி ரோகங்கள் :- வாத தோஷத்தினால் பிறந்த ஐந்துவித யோனி ரோகங்களின் லக்ஷணங்களாவன :-

1. உதாவர்த்த யோனி :- இதில் சோணிதமானது நுரையுடனும் கஷ்டமாயும் வெளிப்படும்.

2. வந்தியை யோனி :- இதில் சோணிதமானது மிகவும் கெடுதியாய் வெளிப்படும்.

3. விப்புலுதை யோனி :- இதில் சோணிதமானது சதா வேதனை யுடையதாய் வெளியாகும்.

4. பரிப்புலுதை யோனி :- இதில் சோணிதமானது, அதிகரித்த புணர்ச்சியினால் மிகவும் சுருக்கென்று குத்தலுடையதாய் வெளியாகும்.

5. வாதல யோனி :- இதில் சோணிதமானது கடோரமாயும், இருக்கியும், குத்தல், பாதை இவைகள் உடையதாயும் வெளியாகும்.

மேற்கூறிய ஐந்து யோனி நோய்களிலும் வாத தோஷத்தின் குறி குணங்களும் உண்டாகும்.

Post Comment

விஷ பேதம் -சர்ப்ப விஷ வேகங்கள்

விஷபேதம்

இப்பூமியின்கண் விஷமானது கிருத்திரமவிஷம், அகிருத்திரம
விஷம் என இருவகையாம்.

கிருத்திரம விஷம் :- நாபி முதலிய தாவரவிஷங்களையாவது, பாம்பு முதலிய ஜெந்துக்களின் விஷங்களையாவது, மற்றொரு வஸ்துவில் கலந்து கொடுக்கில் கிருத்திரம விஷமாம். இதற்கு இடுமருந்து யென்றும் பெயர்.

ஸ்திரீகள் புருஷசர்களையும், புருஷர்கள் ஸ்திரீகளையும் தொழி லாளிகள் தங்கள் யசமானனையும் வசப்படுத்தும் பொருட்டு அன்னம் முதலிய தின்பண்டங்களிலாவது நீர்முதலிய பானங்களிலாவது தாம்பூலாதிகளிலாவது சேர்த்துக் கொடுக்கப்படுகின்ற பற்பல செந்துகளின் கபாலபஸ்பம், அற்பவீரியவிஷம், மலமூத்திர அவுஷதம், பச்சிலை மூலிகைகள் என்னும் இவைகளாம்.

இடுமருந்தின் இலக்கணம் :- முற்கூறிய மருந்தை அன்ன பானாதிகளில் ஒருவர் கொடுக்க அதை இன்னதென்று தெரியாமல் புசித்தவர்க்கு முகம் வெளிறல், சரீரமிளைத்தல் மந்தாக்கினி, இருமல், இரைப்பு, வாதாதிக்கம், மகோதரம், குண்டிக்காயாகியயகுர்த்த பிலிகத்தில் நோய், துர்ப்பலம், ஈனத்தொனி, மனோதுக்கம், வயிறுப்
பல், நித்திரையில்லாமை, அசீரணம், நாசியமுங்கல், கண்குழிவிழுதல், தன் உடம்பு தனக்குத்தானே பலநிறமாகத்தோற்றல் என்னும் குணங்களுண்டாவதன்றியும், நரி, பூனை, கீறிப்பிள்ளை, பாம்பு, குரங்கு, நீரில்லா குளம், எரிந்து கருகிய மரம் என்னும் இவைகளை காணுகின்ற கனவும், உண்டாகும். இக்குணங்கள் ஆரம்பிக்கும் போதே சிகிச்சை செய்யவேண்டியது.

விஷான்ன லக்ஷணம் :- விஷங்கலந்த அன்னத்தை உற்றுப்பார்க்கில், சோர்வு, மூர்ச்சை, வாய்நீர்சுரக்குதல் முதலிய துர்குணம் உண்டாவதன்றியும், அந்த அன்னத்தில் வாசனையும் உருவமும் வேறு விகாரமாகிச் சுபாவநிறம் இறங்கி ஒவ்வொரு அன்னம் பிளவுள்ளதாகவும், சில அன்னம் ஒன்றொடொன்றுசேர்ந்து மண்டை உண்டையாகவும் பார்வைக்கு நிலவைப்போல் தள தளப்பாகவும் புசித்தால் பழய தின்  சனையைத்தருவதாகவும் வெகு நேரஞ்சென்று சீரணிப்பதகவும் இருக்கும்.

விஷவியஞ்சன லஷணம் :- விஷங்கலந்த கறிப்பதார்த்தங்களை உற்றுப்பார்த்தல், உலர்ந்தது போலவும் கறுத்த கஷாய வன்னமாயும் சுபாவ ருசிநீங்கி வேறு விகார ருசி உள்ளதாகவும் இருக்கும். அக்கரிகளின் மீது அற்ப நுரையும், சீமந்த ரேகையும் நீர்க்குமிழிபோல் சிறிய குமிழியும் எழும்பும்.

விஷம் வைப்பவனுக்கு உண்டாகின்ற லஷணம் :- விஷம் வைக்கின்ற காதகனுக்கு வாயுலரல், சுற்றும் முற்றும் பார்க்குதல் வியர்வையோடு நடுக்கல், தேகம்மரத்தல், பயம், நடக்கும்போது கால் தத்தளித்தல் கொட்டாவி என்னும் இக்குணங்கள்யுண்டாகும்.

விஷான்ன பரீஷை 
:- விஷங் கலந்த அன்னத்தை அக்கினியி லிட்டால் சுவாலை எழும்புதலுடன் மயில் கண்டத்தில் நிறைத்தை  யொத்த புகையும் அதில் துர்க்கந்த வாசனையும் உண்டாகும்.

விஷான்னசீரணலஷணம் :- விஷம் கலந்த அன்னம் வயிற்றில் சீரணித்தால் நமைச்சல், தேகம், எரிச்சல் அக்கினியிலும் புகையிலும் சிக்கியது போல் வருத்தம், சுரம் இளைப்பு கொப்புளம் எஅழும்புதல் என்னும் இக்குணங்கள்யுண்டாகும்.

ஆசிய கதகரான்ன லஷணம் :- விஷம் கலந்த அன்னத்தை வாயில் போட்டுமிழ்ந்தவர்க்கு, உடனே வாயில் சொள்ளுவடிதல் உதட்டிலும், நாவிலும் திமிர், விருவிருப்பு தந்தங்களில் நோய்
முதலியது உண்டாகும்.

ஆமாசயகத கரான்னலஷணம் :- விஷம் கலந்த அன்னத்தை புசித்து அவ்விஷமாவது ஆமாசயஸ்தானத்தில் ஊறினால் தேகத்தில் புடைகள் எழும்புதல், வியர்வை, மூர்ச்சை, வயிறுப்பல், மதம், பிரமை உரோமச்சிலிர்ப்பு, வாந்தி, தாகம், கண்ணோய், மார்பு நோய் என்னும் குணங்களையுண்டாகும்.

பக்குவாதசயகதகரான்னலஷணம் :-விஷ அன்னம் வாதஸ்தானத்தில் ஊறினால் பற்பல வாந்தி, அதிமூத்திரம், அதிசாரம்,சோம்பல் சர்ரிரம் இளைத்தல், வயிறு வெளிறல், துர்ப்பலம் என்னும் குணங்கள்யுண்டாகும்.

அகிருத்திரம விஷ லஷணம் :- அகிருத்திரம விஷம் என்பது தாவரவிஷம், சங்கம விஷம், என மூவகைப்படும். அவற்றுள் தாவரவிஷத்தைப்பற்றி முதலில் கூறுவோம்.

தாவரவிஷ பேதம் :- விருக்ஷம், பூண்டு, செடி, கொடி, புல் ஆகிய இவற்றின் கிழங்கு வேர், பட்டை, பால், பிசின், இலை, புஷ்பம், காய், கனி முதலியவைகளிலும் பாஷாணம் முதலிய தாதுக் களிலும் இருக்கிறவிஷம் தாவரவிஷமாம்.

விஷக் கிழங்குகள் :- அலரி, சங்கோசகம், கலப்பைகிழங்கு, தைலகம், கர்க்கடகம், குசபுஷ்பம், கேதுபுஷ்பம், ரோமஹரிஷம் முதலிய கிழங்குகளுக்கு கந்தவிஷம் என்றுபெயர். இவைகளைத்தின்றால் மரணம் சம்பரிக்கும். ஒருவேளை தப்பினால் தேகத்தில் சுரம், விக்கல், தாள்பிடிப்பு, பல் கூசுதல், இரைப்பு, இருமல், மூர்ச்சை, அரோசக, தொண்டை அடைப்பு என்னுங் குணங்க ளுண்டாகும்.

விஷவேரின் பேதம் :- பராமரம், குஞ்சனம், ஹாரிகம், சந்தி ரகம், மருதோன்றி, தர்க்கரகம், பெருங்காயமரமூலம் ஆக இவைகளுக்கு மூலவிஷம் என்று பெயர். இவைகளினால் சோருதல், பிதற்றல், புரளல், பிரமை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷப்பாலின் பேதம் :- வெள்ளைலொத்தி, புஷ்கரம், நாபி, சேராங்கொட்டை, எட்டி, சரஷ்ப முதலிய பால்களுக்கு க்ஷ£ர விஷமெனப் பெயர். இவைகளினால் நுரைத்த வாந்தியும், நாவு தடித்து கனத்தலும், மலபந்தமும் உண்டாகும்.

விஷப்பிசின் பேதம் :- மருவு, நாராசகம், தொடரிப்பட்டை, ஆயில்ப்பட்டை, பிசின் முதலியவைகளின் பிசினிகளுக்கு தொக்கார நிரியாச விஷமென்று பெயர். இவைகளினால் அரோசகம், கோழை, வாந்தி, நாவுதடித்தல், வாயில் துர்க்கந்தம் வயிறுப்பலுடன் வேதனை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷ இலையின் பேதம் :- பதரம், கரம்பம், எட்டி இலை, பெருமர இலை முதலிய இலைகளுக்கு பத்திரவிஷமென்று பெயர். இவை தின்பதினால் கொட்டாவியும், புரளலும், பிரமையும் உண்டாகும்.

விஷபுஷ்பத்தின் பேதம் :- மஹாகரம்பகம், புங்கின்பூ, தொட்டாற்சுருங்கிபூ, காட்டுமிளகு புஷ்பம் முதல்யவைகளுக்கு விஷபுஷ்பமென பெயர். இவைகளினால் வயிறுப்புதல், வாந்தி, சோருதல், மூர்ச்சை என்னுங் குணங்களுண்டாகும்.

விஷக்கனியின் பேதம் :- கோரை, கர்ப்பூரவழுதலைப்பழம், விஷசெருந்தி, நாயுருவி, மலைவன்னிமரம், வைராடகம், சணாப்கம்,ஷாலகம் முதலிய கனிகளுக்கு பலவிஷம் எனப் பெயர். இவைகளினால் அன்னதுவேஷம், தாகம், இரண்டு பீசங்களில் வீக்கம்முதலிய குணங்கள் உண்டாகும்.

விஷதாதுவின் பேதம் :- தேநாமம், பஸ்மம், திலகம், ரத்தம், முதலிய தாதுகளுக்கு தாதுவிஷம் எனப் பெயராம். இவைகளினால் இரண்டு தாடைகளின் உட்புறத்தில் அனல் வீசுதலும், மூர்ச்சையும் மார்பு நோயும் உண்டாகும்.

1. காலவிஷ நிதானம் :- மேற்கூறியகந்த மூலாதி விஷங்களை வாத காலத்தினின்றால் வாதத்¨தானுசரித்த நோய்களும் பித்த காலத்தில் தின்றால் பித்தாதிக்க நோய்களும் கபாலத்தில் தின்றால் கபாதிக்கம் நோய்களும், வாதகாலத்தில் தின்றால் மார்பு நோய் நரம்பு விருத்தல் எலும்புகளின் கீல்களிலும் நோய் நடுக்கல், புரளல் தேகங்கறுக்கல் உரோமச்சிலிர்ப்பு வாயில் புளிப்பு என்னும் குணங்களும் பித்தகாலத்தில் தின்பதால் சரீரவீக்கம் மாமிச வரளல் மார்பு எரிதல், வாயில் காரம் அக்கினிபோல் சுவாசம் வருதல் அறிவு நீங்குதல் என்னும் குணங்களும் சிலேஷ்மகாலத்தில் தின்பதால் சரீரம் பார்த்து சில்லிடல் வாயில் இனிப்பும் கொப்பும் நூரையும்
வீழல், அரோசகம் என்னும் குணங்களை யுண்டாகும்.

ஸ்தானபேத விஷ நிதானம் :- மேற்கூறிய விஷங்கள் தேகத்தில் சிலேஷ்ம ஸ்தானத்தைப் பற்றினால் சாத்தியம். பித்த ஸ்தானத்தைப் பற்றினால் கஷ்ட சாத்தியம். வாதஸ்தனத்தைப் பற்றினால் அசாத்தியம்.

தாவர விஷத்தின் சப்தவேக நிதானம் :- 

1. நாவில் கருப்புடன் மரத்தல், வாந்தி, பிரமை, ஆயாசம்.

2. நடுக்கல் வியர்வை, தாகம், தொண்டைக்குள் வேதனை, மார்பு நோய், தாடை உலறல்.

3. கண்களின் கருமை நிறம், மஞ்சள் நிறம் தோற்றல் வயிற்றிலும் குதத்திலும், நோய் இரைச்சல், பொருமல், விக்கல்.

4. தலைநோய், வாயில் நுரைதள்ளல் மாறு முகம் தோற்றல்.

5. சகல கீல்களில் உபத்திரவம்.

6. தோள், இடுப்பு, முதுகு இவ்விடங்களில் நோயுண்டாகி ஞாபகம் நீங்குதல்.

7. விஷம் சுக்கில தாதுவைப்பற்றி ஏறுதல் முதலியனவாம்.

இந்த எழில் ஐந்து வேகம் வரைக்கும் சாத்தியம். மற்ற இரண்டும் அசாத்தியம்.

சங்கமவிஷபேதம் :- அர்ப்பசாதி விஷங்களுக்கும்  சீடகம் தேன், சிலந்தி, காய் கரி முதலியவற்றால் வருகிற  விஷங்களுக்கும் சங்கமவிஷம் எனப்பெயராம்.

சர்ப்பசாதி பேதம் :- சர்ப்பம் என்பது திவ்வியசாதி சர்ப்பம் பௌம சாதி சர்ப்பம் என இருவகைப்படும். இவற்றுள் திவ்விய சாதி சர்ப்பத்தை முதலில் சொல்லுவோம்.
 

திவ்வியசாதி சர்ப்பபேதம் :- அண்டகோடிகளுக்குள் இராநின்ற சர்ப்பங்களில் தலைமையும் உத்தமசாதியும் கடவுட் பாம்புமா கிச் சிறப்புற்று அஷ்டதிக்குகளில் வாசஞ்செய்வதே திவ்விய சாதி சர்ப்பமாம். அது வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளி கன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன் என எண்வகைப்படும்.

பெளமசர்ப்ப ஜாதிபேதம் :- இவை பூமியில் வசிக்கும் சர்ப்பங்களாகும். இவை எண்பத்திரண்டு வகைப்படும். பௌமசர்ப்ப சாதி தருவீகரம் இருபத்தாறு விதங்கள், மண்டலி முப்பத்தாறு விதம், ராஜமந்தம் பதின்மூன்று விதம், நிர்விஷம் நாலுவிதம், வைகரஞ்சம் மூன்றுவிதம் ஆக எண்பத்திரண்டு பேதங்கள் உடையது.

ஆண் சர்ப்பம் :- இது அகலமுள்ள படத்தையும், அதிகதிடத்தையும், அதிக சீறலையும் பெற்றிருக்கும். இவ்விஷம் தலைக்கேறினால் மேல் நோக்கிய பார்வை, வலதுக்கால் பூமியில் பாயா திருத்தல், ஊர்த்துவகாயத்தில் மிகுந்த பலயீனம் என்னும் குணங்கள் உண்டாகும்.

பெண் சர்ப்பம் :- இது குறுகிய படத்தையும், அற்ப சீறலை யும் பெற்றிருக்கும். இவ் விஷத்தினால் கீழ்ப்பார்வையும், இடது கால் பூமியில் பாயாதிருத்தலும், அதோகாயத்தில் பலயீனமும் உண்டாகும்.

அலிச் சர்ப்பம் :- இது மிருதுவுடன் நீண்ட உருவத்தையும், வெளுத்த படத்தையும், மந்த நடையையும், குறைந்த தொனியை யும், அற்ப கோபத்தையும் உடையதா யிருக்கும். இவ் விஷத்தினால் ஈனத்தொனி, பேதி, நடுக்கல், பயம், சுரம், சரீரம் காற்றில் பறப்பதுபோல் இருத்தல் என்னும் குணங்கள் உண்டாகும்.

மலட்டுச் சர்ப்பம் :- இது சீக்கிரத்தில் அனந்தம் வேதனையை பிறப்பித்தாலும் முக்கியமாய் வியர்வையைமிகவும் ஒழுகப்பண்ணும்.

பால்ய சர்ப்பம் :- இது இடது கண்ணை கோவைப்பழம்போல் சிவக்க செய்யும். இதில் பெண் சர்ப்பம் விஷம் கொஞ்சம் பேதிக்கும்.

சர்ப்பம் :- இது வலபாகத்தில் கடிக்கும். இவ்விஷ சர்ப்பம் அப்பக்கத்து கண் ரத்தம்போல் சிவக்கும். பெண் சர்ப்பம் இடபக்கத்தில் கடிக்கும். இவ் விஷத்தினால் தடிப்பு தடிப்பாகி சில ரோகங்கள் பிறக்கும்.

விருத்த சர்ப்பம் :- இது கடிவாயில் வீக்கம், அற்பநோய் பிதற்றல் இவைகளைத் தரும்.

கருப்பச் சர்ப்பம் :- இது சிரசு, உதடு, வயிறு தொடை ஆகிய இடங்களில் நோதல், நா கறுத்தல், உள்நாக்கு வளருதல் என்னுமிக் குணங்ளை உண்டாக்கும்.

குதிகாசர்ப்ப விஷம் :- இது முட்டையிட்ட சர்ப்பம். இதன் விஷத்தால் வயிறு உளைதல் வாயில் ரத்தம் கவ்வுதல் மார்பில் அடைப்பு, கண்ணில் நோயுடன் சிவத்தல்,சர்வாங்கமும்,குத்தல் என்னும் குணங்களையுண்டாகும்.

வழிச்சர்ப்பம் :- இது எப்போதும் கடிப்பதற்கே வழி கட்டிக்கொண்டிருக்கும். இது கடித்தால் சீக்கிரம் ரணக்குறிகள் உண்டாகும்.

சங்கை விஷம் :- சர்ப்பத்தை சடுதியில் கண்டு வாய்க்குளறி நடுக்கி, மூர்ச்சித்து விழுந்தாலும், பழுதை என கையால் தொட்டு பின்பு பாம்பு எனக்கண்டு திகில் அடைந்தாலும் தனது பக்கத்தில் சர்ப்பம் குதிக்கக்கண்டு மேலில் ஒருவன் போட பாம்பென்று இதனால் பொறிகலங்கி நாவரளல், மூர்ச்சை சரீரம் நரங்கி துவைத்தது போலிருத்தல் இளைப்பு, சுரம், பேதி, தாகம், வாந்தி, சோருதல் என்னும் குணங்களையுண்டாகும்.

மித்தைவிஷம் :- எந்த சர்ப்பமாவது ஒருவனை வாயால் கவ்வி பிடித்த நிலையில் பக்கத்தில் நின்ற ஒருவன் அது பாம்பல்ல பாம்பல்ல என்று உறுதியாகச் சொல்லுவானாகில் விஷம் ஏறாது,

மகாவிஷ சர்ப்பம் :- மயானம், சாவடி, பாழும்வீடு, பாழுந்தோட்டம், கோயில் நாற்சக்தி கூடிய இடம், வேப்பமரம், மரப்பொந்து கான்யாறு, திரிசூலம் மச்சரேகை ஆகிய இந்த குறிகளை யுடைய சர்ப்பங்களுக்கும், சிவந்த நேத்திரமும், சிவந்த மூக்குமுள்ள சர்ப்பங்களும் மகாவிஷ சர்ப்பங்களாம். இறப்பதற்கு ஒரு கெடுவும் இல்லை. ஆனால் அவ்வுஷதமி இவைகள் ஒரேகாலத்தில் கேரிட்டு அவர்களுக்கு மாறுவதுமாவது அகத்தில் யாதேனுமாவது உண்டாகும். எளிதில் இறங்காமையால். மகாவிஷ சர்ப்பம்எனப்
பெயர் பெற்றவையாம்.

அற்ப்ப விஷ சர்ப்ப நிதானம் :- பசி, தாகம், வியாதி அக்கினி காற்று, தோலுரிதல், விஷங்கக்குதல் ஆகிய இவைகளையும் அடிப்பட்ட சர்ப்பங்களுக்கும், சலம் நிறைந்த தடாகம், முள்ளுப்பாதை, மந்திரவாதிகள் இருக்கின்ற ஊர் பரதேசம் இவ்விடங்களிலுள்ள சர்ப்பங்களுக்கும், வலிவு குறைய சர்ப்பங்க்ளுக்கும் அற்ப்பவிஷம். இது எளிதில் நீங்கும்.

விஷக்கடி நிதானம் :- கடிவாயைப்பற்றி விஷம் ஏறினால் அவ்விடத்தில் நோயும், தினவும், வீக்கமும் எரிச்சலும் உண்டாகும். இக் குணங்களில் ஒன்றேனும் இல்லாதிருக்கில் விஷம் ஏறவில்லையென்றே நிதானிக்கவும்.

விஷபரீ¨க்ஷ நிதானம் :- சர்ப்பம் கடித்தவுடன் கசப்பு வஸ் துக்களைத் தின்றால் அச்சுவை மாறுபடுதல், விரல்களில் நகங்களில் கிள்ளினாலும் தலைமயிரைப்பற்றி இழுத்தாலும் நோய் தெரியாமை, காதை மூடில் தொனி இல்லாதிருத்தல், சோமசூரிய அக்கினியும் விளக்கும் நேத்திரத்திற்கு தோற்றாமை என்னும் குணங்களிருந்தால் விஷந்தலைகேறிய தென்றே நிதானித்து சிகிச்சை செய்யவும்.

பல்லின்விஷ நிதானம் :- விஷப்பை படாமல் பல்லுமாத்திரம் தேகத்தில் படுமாகில் கோட்டுவாய்ச் சலம்போல் வாயினின்றும் சலம்வடியும். விஷமே ஏறினால் நொப்பும் நுறையும் விழும், இவ்விஷமானது கொஞ்சம் வியாபித்தாலும் அது சப்த தாதுமுற்றி லும் விரைவில் பரவும். இதனால் ஞாபகமறதியும் இரைப்பும், சரீரத்தில் கருவளையலை ஒத்த நிலமும் உண்டாகும்.

விஷப்பல் அழுந்தும் நிதானம் :- சர்ப்பங் கடித்து ஒரு பல் அழுந்தினால் விஷம் இல்லை. மற்ற மூன்று பற்களும் அழுந்தினால் விஷம் உண்டு. அவற்றுள் இரண்டு பல் அழுந்தினால் அவ்விஷம் மந்திரத்தினால் சாத்தியமாம். நான்கு பல்லும் அழுந்தினால் அசாத்தியமாம். அன்றியும் ஒரு தந்தமாவது அழுந்தி அவ்விடத்தில் திருகியதுப்போல் சக்கிராகாரமாகத் தோற்றப்பட்டு அதினின்றும் ரத்தம் வடிந்தாலும் அந்த இடம் ஆமை ஓட்டைப்போல் தடித்து வீங்கினாலும் அசாத்தியம்.

விஷபல்லின் லக்ஷணம் :- சர்ப்பங்களுக்கு, காளி காளராத்திரி எமன் எமதூதன் என நான்கு பற்கள் முளைத்திருக்கும். இவற்றுள் முதலாவது காளி என்னும் பல்பட்டால் அவ்விடத்தில்புள்ளடிப்போலகாயமுண்டாகி அதினின்றும் பனிநீர்போல் சலம் வடியும் போது விஷமானது தோலைப்பற்றி ஏறும். இதனை கால் அறிந்து தியானத்தால் உபசரிக்க விஷந்திரும்பும், அதனுடன் காளராத்திரி என்னும் பல்லும் பட்டால் அவ்விடத்தில் முக்கோணம் போல் காயம் உண்டாகி அதினின்றும் மஞ்சள்நிறமான சலம் வடியும். அப்போது விஷமானது மாமிசத்தைப்பற்றியதென்று அறியவும். இதனை அரைக்கடி என்று அறிந்து மணிமந்திரத்தால் உபசரிக்க விஷந்திரும்பும். அவ்விரண்டுடன் எமன் என்னும் பற்பட்டால் அங்கு தொட்டிப்போல் காயம் உண்டாகி அதினின்றுஞ் செந்நீர் வடியும் அப்போது விஷமானது எலும்பைபற்றியதென்றும் இதனை முக்கால் கடி என்றும் அறிந்து மூலிகை, நசயம், கலிக்கம், ஆக்கிராணம் முதலியவைகள் உபசரிக்க விஷந்திரும்பும். அம்மூன்றுடன் எமது தன் என்னும் பல்லும் பட்டால் அவ்விடத்தில் வில்லைப்போலும், பிறையைப்போலும் காயம் உண்டாகி அதினின்று கழுநீரைப்போன்ற சலம் வடியும். அப்போது விஷமானது மூளையைப் பற்றி ஏறும், இதனை முழுக்கடி என்று மணிமந்திர அவுஷதங்களாலும், தெய்வ வலியாலும் உபசரிக்க விஷந்திரும்பும்.

கடிநிதானம் :- சில சர்ப்பங்களுக்கு தாடைக்குள் முள்ளை போல் ஒவ்வொரு கோரைப்பற்களிருக்கும் அது பட்டு விஷம்ஏறினாலும் உடனே அபாயமாம். சர்ப்பங்கடித்து பல் அழுகிய இடத்தில் முகர்ந்தால் தாளை
பலர் மணம் வீசினால் நல்லபாம்பு, பாதிரிப்பூ மணம் வீசினால் மழலைப்பாம்பு, புளியன்பு மணம் வீசினால் வீரியம்பாம்பு, மல்லிகைப்பூமணம் வீசினால் மண்டலிபாம்பு, மிளகு சுக்கு இவைகளின் மணம் வீசினால் சிறிய பாம்பு என நிதானிக்கவும். இம்மணங்கள் ஒன்றும்வீசாமல் சர்ப்பத்திற்கு பகையான மணம் வீசினால் சர்ப்பக்கடி அல்லவென்றும் அறிந்து கீடக சிகிச்சைகளை உடனே செய்யவேண்டியது. எந்த சர்ப்பமாவது, புருவ மையம் பஞ்சேத்திரியம் தலை, நெற்றி, தாடை, உதடு, தாழ்வாய் கட்டை, நெஞ்சு தோள் உள்ளங்கை, அக்குள் ஸ்தனம் மார்பு, அடிமார்பு, தொப்புள், வயிறு ஆண்குறி உள்ளங்கால் கீல் என்னும் இவ்விடங்களில் கடிக்கில் தப்பாமல்
மரணஞ்சம்பவிக்கும்.

பாழுங்கோயில், பாழும் வீடு, பாழூர், ஆலமரம், அரசமரம் புன்னைமரம், முருங்கை மரம், சந்தை கூடும் இடத்து மரம் புதர், நந்தவனம், காணல் படுக்கை, பிறம்புதர், மயானம், ஏறிக்வாரம்ஐயனார் கோவில் நாற்சந்திவீதி, முச்சந்தி வீதி என்னும் இவ்விடங்களில் இருக்கின்ற எந்த சாதி சற்பமும் சந்தி வேளையில் கடிக்குமாயின் அவ்விஷம் அசாத்தியம்.

எந்த சர்ப்பமாவது அனந்தம் பேர் கூடுகிற பொது வருஷம் மயானம் என்னும் இவ்விடங்களில் பருவம், அமாவாசை, பஞ்சமி பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய இந்த நதிகளில், சூர்யோதயகாலம் மாலைமயங்கும் காலம்,அயர்ந்து நித்திரை செய்கின்ற காலம் பாதிராத்திரிகாலம ஆகிய இக்காலங்களில் கடிக்கில் மரணமேயாம்.

சர்ப்பமானது பரணி கார்த்திகை, ஆயிலியம், விசாகம், பூரம், புரட்டாதி சதயம் ஆகிய இந்த நக்ஷந்திரங்களோடு பருவகாலத்திலும் நிருதிமூலையிலும், சந்தியான காலத்திலும் கடிக்கில் அசாத்தியமாம். அன்றியும், மகம், திருவோணம், மூலம், சித்திரை ஆகிய நக்ஷத்திரங்களிலும் ஜன்மநாள் அநுஜன்மநாள், திரிஜன்ம நாள், இதுகள் சேர்ந்த அவிட்டநக்ஷத்திரத்திலும், நவமியிலும்
கடிக்கில் அசாத்தியம்.

அசாத்திய விஷக்குறி :- ஏறினவிஷம் மந்திர தியான அவுஷதங்களில் திரும்பாதிருக்கையில் நகம், உதடு, உள்ளங்கை, கரியைப்போல் கறுக்குமாயின் அசாத்தியம். மேலும் எந்த சர்ப்பவிஷத்தினாலாவது தலையில் இருக்கின்ற ரோமம், உதிரல், மூர்ச்சை, மேற்சுவா சம், விக்கல், இருமல், வாந்தி, மார்புகனத்தல், நடுக்கல், விகார வேதனை, முடிசோருதல், கண்சிவக்குதல், தொண்டை அடைப்பு,நாவல்பழம்போல் பற்கறுத்தல், ஆமையோட்டைப்போல் முதுகு உயருதல் நவத்துவாரத்திலும் ரத்தம் ஒழுகுதல் என்னும் க்குணங்களுண்டாயின் அசாத்தியமாம். அன்றியும் கடிக்கப்பட்ட இடத்தில் வீக்கமுண்டாகி ரத்தங்கம்மல், நாசிமெலிந்து சிறுத்து
அழுந்தி சில்லிடுதல், முதுகும், ஆண்குறியும், முகமும் சில்லிட்டு கறுத்து தோணுதலுடன் உரோமமும் சில்லிடுதல், கீல்கள் தளரல்,காலும் கையும் கறுக்குதல், வாயில் நுரை விழுதல், தேகம் நோயோடு நறுக்கிந் துவைத்ததுப்போல் இருத்தல், மலம் நழுகல் என்னும் குணங்கள் உண்டாகும்.

சாமானிய விஷக்குறி :- சர்ப்பம் கடியுண்டவனுக்கு மலமூத்திரம்நழுகுதல், மார்பில் கனத்தலுடன் குத்தல், உரோமச்சிலிர்ப்பு,வாந்தி, தாகம், நாசியால் பேசுதல், கீல்களில் நோய், கண்சிவத்தல் அல்லது கறுத்தல் என்னும் இக்குணங்கள் உண்டானாலும், சந்திரசூரிய நக்ஷத்திர கிரகங்கள் கண்ணுக்குத் தோன்றவிட்டாலும், கண்ணாடி நெய் தைலாதிகளில் முகந்தெரியாவிட்டாலும் அசாத்தியம். ஆனால் இப்போது சொல்லிய குணங்கள் எல்லாம் சகல சர்ப்ப விஷத்திற்கும் பொதுவாயிருக்கும். எந்த சர்ப்பமாவது கடித்தவுடன் படத்தைவிரித்து ஆடினாலும்
தரையிற்புரண்டாலும், கடித்த இடத்தில் ஆடிப்பின்பு அசைவற்றுக்கிடந்தாகும், கடியுண்டவனுக்கு விஷம் மீளாதென் றறியவும்.

கருநாகம் :
- இதை கிருஷ்ணசர்ப்பம் என்பார்கள். இது அவுஷதாதிகளால் இறங்கினாலும் இரண்டு காதுகளை செவிடாக்கும்.

சிறுநாகம் :- இது தருப்பை அகலமுள்ள படத்தையும், ஈர்க்கை யொத்த பருத்த உடலையும்பெற்று தாழமலர்க்குள் வாசமாயிருக்கும். இதனை பூ நாகன், புல்நாகன் என்பார்கள். இதன் விஷம் மிகவும் கொடியது.

விரியன் :- இது பெருவிரியன், ரத்தவிரியன், செவ்விரியன், நீர்விரியன், பொறிவிரியன், புல்விரியன் என ஆறுவகையாம்.பெருவிரியன்விஷத்தால் மயக்கம், தயக்கம், உறக்கம் வெப்பம், கடித்தவாயில் ரத்தமும் வீக்கமும் எரிச்சலும் உண்டாகும்.

ரத்தவிரியன் விஷமானது வயிற்றில் வியாபித்தால் வயிறு வலியை உண்டாக்கிக் கொல்லும் கடித்தவாயில் ரத்தமும், மேலில் தடிப்பும் பிறக்கும்.

இது தவிர நான்கு வித வீரியன் விஷத்தினால் கடிவாயில் மாமிசமிகுதியும், தடிப்பும், தேக எரிச்சலும், வலியும், சோர்வும் நித்திரை மயக்கம் உண்டாகுமென்றரிக.

வழலைச்சர்ப்பம் :- இது கடித்த இடத்தில் ரத்தமும் அனற்றலும் உண்டாகும்.

கருவழலைச்சர்ப்பம் :- இது சரீரத்தில் காங்கையுடன் அதிக வியர்வை, உள்ளங்கால், உள்ளங்கை சிவப்பும் கோழையால் மார்பில் அடைப்பு, முதலிய அநேக வேதனையும் உண்டாகும்.

மூர்க்கண் :- இது கடித்த இடத்திலும் முதுகிலும் வேதனை பிறப்பது தவிர அவ்விஷத்தினால் வாயும் கழுத்தும் முறிக்கிகொள்ளல், குறல் நெறிதல், தேகம் பற்றல், தலைசுழலல், என்னும் குணங்களையுண்டாகும்.

மயக்குச்சர்ப்பம் :- கண்ணில்விஷத்தையுடையது. இப்பார்வை சற்று நேரம் படியினும் உடனே அவர்களுக்கு மயக்கமும் கண்களில் சுழற்ச்சியும் உண்டாகும்.

முறுக்குச்சர்ப்பம் :- இது சரீரமெல்லாம் திருகுகள்ளியைப்போல் முறுக்கிக்கொள்ளுதலும், பதறலையும் உண்டாக்கும்.

சாரைப்பாம்பு :- இது நீண்ட உடலையும் வேக நடையையும் பெற்று மனிதரை வாலால் அடிப்பதும், பாதமுதற் மார்புவரைக்கும்சுற்றி இடுப்பை ஒடிப்பதும் செய்யும்.

புடையன் :
- இது நீண்ட உருவத்தையும் அழுக்கு நிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகள் மிக உண்டாக்கும்.

மண்ணுளிப்பாம்பு :- இது பாக்கு, ரத்தம் இவைகளின் நிறத்தைப்பெற்று நீண்ட பயற்றங்காய் பிரமாணமுள்ளதாக இருக்கும். செவியில் நுழையில் அபாயமாம். இவ்விஷத்தினால் பருவகாலந்தோறும் சிறு சிறு தடிப்பும் நமைச்சலும் உண்டாக்கும். இதனை சிறு பாம்பு கடி என்பர்.

காலியாங்குட்டி :- இது ஒரு சரண் இரண்டு சரண் நீளத்துடன் தேஜசு குறந்த்திருக்கும். இதற்கு கடிக்கத்தெரியாது. கடுக்கில் பெருஞ்சிகிச்சை செய்ய வேண்டும்.

கண்குத்திப் பாம்பு :- இது பச்சைநிறத்துடன் நீண்ட உருவத்தைப்பெற்று விரிக்ஷங்களில் வாசஞ்செய்யும். நேரிட்டவர் கண்களைக் குத்தும். இதுவே பச்சைப்பாம்பு.

வெண்ணாந்தைப் பாம்பு :- இது பருத்த செக்கு பனைமரம், தூண் முதலிய பிரமாணங்களையும், உடலெல்லாம் வழுவழுப்பையும் உள்ளதாய், வாலும் தலையும் ஒரே தடிமனாய் மேலில் வெளுத்த வரி களைப்பெற்று, கோழி, ஆடு, மாடு முதலியவைகளை விழுங்குவதாயிருக்கும். இதை மலைப்பாம்பு, தாசரிபாம்பு என்று வழங்குகிறார்
கள். சிலர் யானையையும் மனிதைகளையும் கூட விழுங்குமென்று சொல்லுகிறார்கள்.

சர்ப்பவிஷ வேகபேதம் :- சகல சர்ப்ப விஷத்திற்கும் வாயு வேகம், தேயுவேகம், வருணவேகம் என மூன்றுவித வேகங்களும் உட்பிறிவும் உண்டு.

வாயுவிஷ வேகநிதானம் :- வாயுவைப்பற்றி விஷம் ஏறும் போது எட்டுவித வேகம் உண்டாகும். 1-வது மூர்ச்சையும் மிகுந்த வியர்வையும் உண்டாதல், 2-வது சரீரம் வெதும்புதல், 3-வது கண் சொருகுதல், 4-வது
செவியை அடைக்குதல், 5-வது நெஞ்சில் கபங்கட்டுதல், 6-வது அறிவு மாறுதல், 7-வது மேல்மூச்சு அதிகமாய் வாங்குதல், 8-வது உயிர் நீங்குதல் என்பனவாம். இவ்வேகம் பிறக்குமுன் விஷமானது 50-மாத்திரை காலம் நின்று பிறகு தேகத்தில் வியாபித்துச் சிரசில் ஏறும்.

2. தேயுவிஷ வேகநிதானம் :- தேயு என்னும் பித்தத்தைப்பற்றி விஷம் ஏறும்போது பத்துவித வேகம் உண்டாகும். அவையாவன :-

1-முகங் கறுத்து கண் சிவக்குதல், 2-ரோமங்களின் முனைகள் பிளந்து சிறுநீர் கறுத்திரங்கி முகம் வெளுத்தல், 3-வேதனையுடன் சரீரம் நீண்டு சிந்தை மயங்கி வாய் குளறுதல், 4-சோபம் பிறந்து குடலில் எரிச்சல் கண்டு தேஜசுமாறி நாசியால் சலம் வடிகுதல், 5-தேகமும் கண்ணும் விடவிடத்து ஆடுதல், 6-வது அங்கம்
பதைத்து இளைத்து நாசியால் சலம்பெருகி மொழிமாறிப் பல்லை கடிக்குதல், 7-வதும் 8-வதும் கபங்கட்டி சுவாசம் எழும்பி மேல்பார்வை பார்க்குதல், 9-வது உயிர் அடங்கியிருக்குதல், 10-உடலை விட்டு ஆவி நீங்குதல் என்பனவாம். வேகங்கள் பிறக்குமுன் விஷமானது கடிவாயில் 150-மாத்திரை காலம் நின்று பின்பு ஏறும்.

3. வருணவிஷ வேகநிதானம் :
- வருணன் என்னும் சிலேஷ் மத்தைப்பற்றி விஷம் ஏறும்போது பத்துவித வேகம் உண்டாகும்.
அவையாவன :-

1. தேகஞ்சிவந்து ரோமம் சிலிர்க்குதல் 2. வாயுலர்ந்து தேகங்கறுத்து வெதும்புதல், 3. தேகத்தில் உட்புறத்தில் உளைதல் 4. கபம் அதிகரித்து மனம் தத்தளிக்குதல், 5, தலை நடுக்கலும் அறிவழிதலும் உண்டாதல், 6. கண்கள் மலரவிழித்து மேல் நோக்குதல், 7. அவையவம் முறைக்குதல். 8. சரீர வியாபாரம் அடங்குதல், 9. சுக்கிலம் நசிக்குதல். 10. உயிர் நீங்குதல் என்பனவாம். இவ்வேகம் பிறப்பதற்கு முன் விஷமானது கடிவாயில் 150 மாத்திரை காலம் நின்று பின்பு ஏறும். உயிர் நிலை விழிக்குறி :- விஷத்தினால் உயிர் அடங்கிய காலத்தில் கண்கள் மேல் நோக்கி நிலைக்கண் பட்டிருக்கில் உயிரானது ஊர்த்துவகாயமான மேல்புறத்தில் அடங்கியிருக்கும். கீழ்நோக்கி யிருக்கில் உயிர் கீழ்தங்கியிருக்கும். பக்கங்களில் நோக்கியிருக்கில் உயிர்பக்கங்களில் அடங்கியிருக்கும். விழித்தபடியே சம பார்வை யாக யுருக்கில் உடலை விட்டு உயிர் நீங்கினதென்றரிக.

உயிர் பரிஷை நிதானம் 
:- விஷத்தால் இறந்தவனது தேகத்தில் பிறம்புகொண்டு அடிக்கில் தடித்தாலும் அல்லது வெதும்பலோடு சிவந்தாலும் சவத்தை குளத்தில் போடில் அழுத்தினாலும், சுத்த சலத்தை மேலே சொறியில் குளிர் கண்டு ரோமஞ் சிலிர்த்தாலும் கைவிரல் கால் விரல்களில் நெட்டம் முறிந்தாலும் தலைமயிரைப்பற்றி இழுக்கில் சொற்ப வலிவுடன் அசைவு இருந்தாலும் குடோரி யிடில் அதன் வழியாக சிவந்த ரத்தம் ஒழுகினாலும், தாதுக்களில் ஒன்றாவது சொற்ப நடையாக நடந்தாலும், உயிர் அடங்கியிருக்கின்றதென்பதை நிதானித்து சிகிச்சைகளை செய்தல் வேண்டும். ஆகையால் விஷத்தால் உயிர் அடங்கிய சவத்தை 90 நாழிகை வரையிலும்
தகனம் செய்யப்படாதென்பது சிலர் ச்ம்மதி. சாதாரணமாக மேற்கூறிய காரணங்களால் உயிரானது கபாலத்தில் அடங்கி யிருப்பதால் தங்களால் கூடிய அளவில் மகாவிஷசிகிச்சைகள் செய்து ஒருவாரம் அல்லது 10 நாள் வரையிலும் பார்த்து பிறகு தகனமோ அல்லதுஅடைக்கலமோ செய்தல் நலமென்று அநேக முனிசிரேஷ்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சர்ப்பவர்க்கச் சத்ருவகை :- பாம்புகளுக்கு இருதலைமணியன், செந்நாய், மயில், கோழி, கருடன் எருதின் குழம்பு, மின்னல், இடி, கீரி, கரடி, பன்றி, செம்போத்து, முதலை, ஆந்தை கூகை, மான், புது வெள்ளம், புகைமூடிய அனல் முதலியவைகளும் மனிதரும் சத்துருக்களாம்.

விஷ விருத்தி லக்ஷணம் :- பாம்பின் கடியினால் அற்ப விஷம் ஏறியிருந்தாலும் அது பசி தாகம், துக்கம், பயம், கோபம், மிகுந்த நகைப்பு, அக்கினித் தொழிலில் இருக்குதல், சுடுகையான நிலத்தில் படுக்குதல், கீழ்காற்றில் திரிதல், இரட்டை அலரிப்பூவை முகருதல்,சரீரசுட்கம், பேதி அசீரணம், துர்ப்பலம் பித்தவாயு முதலிய ரோகத்தினால் மெலிதல், யானை, மேகம், எலி, மேளம் முதலிய தொனிகளை யுற்றுக் கேட்குதல் என்னும் இவைகளினால் மகா விஷமாகும்.

விஷத்திற்கு ஆகும் பத்தியம் :- விஷம் கடித்தவர்களுக்கு, பழகிய அரிசி, சாமையரிசி, தினையரிசி, பயறு, கறுப்பு பயறு, துவரை, சிறுகீரை, பாலைக்கீரை, இலந்தை கொழுந்து, புளியாரை, சிறுகத்திரிக்காய், மாதுளங்காய், நெல்லிக்காய், விலாம்பழம், நாவற்வழம், இந்துப்பு முதலிய வஸ்துக்களும், காரமில்லாத அன்ன
பானாதிகளும் ஆகும்.

விஷத்திற்கு ஆகாத பத்தியம் :- விஷம் தீண்டப்பெற்றவர்களுக்கு பகல்நித்திரை, சையோகம், கோபம், அதிக நடை, தீக்ஷண வெய்யில், ஸ்நானம் முதலிய செய்கைகளும், கள்ளு, எள்ளு, கொள்ளு, சைத்தியபண்டம், காரமாகிய அன்னபானாதிகள் ஆகிய இவைகள் ஆகாதென்றறிக.

ஆருட நிதானம் :- பாம்புகடி உண்டானவன் இடத்திலிருந்து வந்ததூதன் ஊர்த்துவமுக திருஷ்டியால் பார்த்துக்கொண்டு இன்னானை விஷந் தீண்டியதென்று சொல்லி அழைப்பானாகில் அவ்விஷம் மீளாதென்று அறியவும். தூதன் சொன்னசொல்லில் இருக்கும்அக்ஷரங்களை இரட்டித்து அத்தொகையை மூன்றுபேருக்கு கொடுக்கில் மிகுதியில்லாவிடில் அவ்விஷம் மீளாதென்றும் ஒன்று இரண்டுமிகுதியானால் மீளுமென்றும் அறியவும்.மற்றும் வைத்தியன் யாகஞ் செய்யுங்காலம், நித்திரை செய்யுங்காலம், எண்ணெய் இட்டுகொள்ளுங்காலம், மூலிகை முதலியவைகளை கத்தியால் நறுக்கின்றகாலம், மனசஞ்சலமாகயிருக்குங்காலம் ஆகிய யிக்காலத்தில் தூதன் வந்து சொல்வானே
யாகில் அவ்விஷம் மீளாதென்று அறியவும்.

Post Comment

அதி தூல ரோகம்,அதி சுட்க ரோகம்,உளமாந்தை ரோகம் -ரோக நிதானம்


ஆதிதூல ரோகம்

இந்நோயில் உடலில் இயற்கையாய் உள்ள மாமிச அணுக்கள் அதிகரித்து வளருங்காரணத்தினால், உடல் பருப்பதுடன், மார்பு வ்யிறு தொடை, பிருஷ்டம் இவைகள் ளவுக்கு மிஞ்சிபருத்து அசைவற்று கடினமாகவும் இருக்கும். இதனால் உடலை விருப்பப்படி இயக்க முடியாமை சந்தோஷக்குறைவு அறிவு மங்கல், நடந்தால் அவ்விடத்து சதைகளெல்லாம் குலுங்கல், ஆயாசம், இரைப்பு, கபாதிக்கம் அற்ப இருமல், மேல் சுவாசம் முதலிய துர்க்க குணங்கள் உண்டாகும். இது சுக்கில சோணித தோஷத்தை உண்டாக்கில் கருப்ப நாசத்தைச்
செய்யும்.

அதிசுட்கரோகம்

இந்நோயில் சமாக்கினியின் குறைவால் செழித்து வளர்ந்த
மாமிசங்களானவை சுட்கித்து உடலை இளைக்கச்செய்யும் நரம்புகளும் கீல்களும், கழுத்தும், வயறும், தொடைகளும் தாடைகளும், புயங்களும் உலர்ந்து மெலியும். அப்போது ஆயாசமும் துர்பலமும், தேவாங்கு என்னும் ஒருவித மிருகத்தை யொத்த  உருவமும் உண்டாகும்.

உளமாந்தை

க்ஷயரோகத்தின் பிரிவாகிய இந்த ரோகம் அக்கினிமாந்தம் உள்ளபோது போஜனம் செய்தல், இரவில் விழித்தல், பகலில் உறங்கல் புலாலையே மிகவும் புசித்தல், இது வாத உளமாந்தை, பித்தஉளமாந்தைசிலேஷ்மஉளமாந்தை, தொந்தஉளமாந்தை என நான்கு வகைப்படும்.

1. வாத உளமாந்தை :- இது நெஞ்சு அழுவெலும்பு பக்கம், இவை விம்மல், நினைவழிதல், தொனியோடு நொந்து இருமல் அற்ப சுரம், உள்ளில் கட்டிகள் உண்டாகி பழுத்து உடைந்து சீழ் முதலியது வாயால் விழுதல், கைகால் எரிவு என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. பித்தஉளமாந்தை :-
 இது மிகத்திரண்டு கீழ் வயிற்றில் கட்டிகளுடன் மிகப்பொருமி, புண்போல் நொந்து, சர்வாங்கமும்உளைச்சலோடு தலைவலி, இருமல் இளைப்பு, மிடறு விரணமாதல் மயக்கம், புரட்டல், வாயால் சீழ் விழுதல் என்னும் இக்குணங்கள  யுண்டாக்கும்.
 
3. சிலேஷ்ம உளமாந்தை :- இது உடல் உருகி தேகமெல்லாம் புண்போல் நோதல், வாயால் சீழ் விழுதல், மனக்கலக்கம், வாந்தி, மயக்கம், சிலேஷ்மாதிக்கம், நடுக்கல், பஞ்சுபோல் தேகம் வெளிறல்என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. தொந்த உளமாந்தை :- இது தலைவலி, சுரம், இருமல், கோழை, அசதி, மிகு உறக்கம், துர்வாசனையுடன் வாயால் சீழ்விழுதல், சர்வாங்கமும் தினவு, பசிமந்தம் என்னும் குணங்களை உண்டாக்கும்.

உளமாந்தைரோக சாத்தியா சாத்தியம் :- பித்த உளமாந்தை பலவித சிகிச்சைகளினால் சாத்தியம். வாத, சிலேஷ்ம உளமாந்தைகள் சிகிச்சைகளுக்கு வசப்படாவிட்டால் அசாத்தியம். தொந்தஉளமாந்தை அசாத்தியம்.

Post Comment

கருப்ப ரோகங்கள் & சிகிச்சைகள்

கருப்பரோகங்கள்

அழிகருப்பலக்ஷணம் :
- வயிற்றில் உருவம் ஏற்படாத இளங்கருவாய் இருக்கும்போது விலாகீழ்வயிறு மேல்வயிறு பிட்டம் ஆகிய இவ்விடங்களில் அதிக உக்கிரமான வேதனையும் மார்பு நோயும், முக
வெளுப்பும், நாபியின் கீழ் உபத்திரவமும், ஆபாசமும் வயிற்றில் வாளால் அறுப்பது போல் யிருத்தலும் உண்டானால் கருப்பங்கரைந்து விழுமென்றரியவும்.

கருப்பபேதம் :- கருப்பமானது உபவிஷ்டககருப்பம், நாகோ தரகருப்பம், லீனாக்கிய கருப்பம் என மூன்று வகைப்படும்.

1. உபவிஷ்டககருப்பலக்ஷணம் :- சில ஸ்திரீகலுக்கு கருப்பம் தரித்தும், மாதா மாதம் ருது காலத்தில் சோணிதம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்படி வெளிப்படுவதால் அச்சிசுவுக்கு கெடுதியிராது. ஆனால் சிசு திடகாத்திரமாய் யில்லாமல் மிகவும் இளைத்து மரப்பாவையை யொத்து தாயாருக்கும் தெரியாமல் வயிற்றுக்குள்
அசைவதாயிருக்கும். வயிறு பருக்கமாட்டாது. இதனை உபவிஷ்டம்
தங்கு பிண்டம் என்வுங் கூறுவர்.

2. நாகோதரகருப்பலக்ஷணம் :-
 துக்கம், உபவாசம், உஷ்ண திரவிய போஜனம், அல்குலில் மாறாமல் ரத்தம் வடிதல், வாதாதிக்கம் இவைகளில் கருப்பமானது விருத்திஅடையாமலிருப்பதுமன்றி
வயிற்றில் ஒவ்வொரு வேளை கொஞ்சம் அதிரலை யுண்டாக்கும். அந்தமாதருக்கு சில நாள் வயிறு பருத்தது போலிருந்தாலும் பின்பு வாடும். (நாகம் என்பது பாம்பு, உதரம் என்பது வயிறு).

3. லீனாக்கிய கருப்பலக்ஷணம் 
:- இது முற்கூறிய கருப்பத்தைப் போலவே யிருந்தாலும், அசைவு மாத்திரம் இல்லாமல் மூன்று வருஷத்திற்கு மேல் பிரயாசத்தோடு சிசு பிறக்கும். அல்லது
மறைந்தாலும் மறையும். இது வயிற்றிற்குள் அந்தரங்கமாக யிருக்கும் காரணத்தால் வீநாக்கிய கருப்பம் எனப் பேர்பெற்றது. இதனை மும்மாங்காய் எனவும் வழங்கி வருகிறார்கள்.

கருப்பகாலத்தில் ஆகாதவஸ்துக்களைப் புசித்தலினாலும், சிற்சில ரோகங்களினாலும் காரணம் இல்லாமல் ருதுவாவது, சூலை யாவது உதாவர்த்தவாயுவானது காணுவதுண்டு. இதற்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும். அப்படிக்கு செய்யாவிடில் கருப்பம் சிதைவதுடன் தாய்க்கும் அபாயம் நேரிடுமென்றும் அறிக.

கருப்பம் மரிக்கும் லக்ஷணம் :- கருப்ப ஸ்திரீகளுக்கு மல மூத்திரபந்தம், வளையல் ஒட்டைப்போல் தேகங்கறுத்தல், வாயில் அதிக துர்கந்தம் வீசுதல், கையும் காலும் மிகவும் கறுத்தல், தலை யிலும் முகத்திலும் வீக்கம், அடிக்கடி நெட்டுயிருப்பு என்னுங்குணங்களை யுண்டாக்கில் சிசு மரிக்குமென்றறிக. இதனைக் கருப்ப
வியாப்தி என்றுஞ் சொல்வர்.

அகமரித்த கருப்ப லக்ஷணம் :- தெய்வச்செயல் திரிதோஷ விகற்பம், அபத்தியம் ஆகிய இவைகளால் வயிற்றுக்குள் சிசு இறக்கும். இதனால் தொப்புளைச் சுற்றிலுமாவது வயிறு முற்றிலுமாவது தேக முற்றிலுமாவது சீதளம், வயிறு கெட்டியாக உப்புதல்,அதிசங்கடம், பிண்டம் அசையாதிருத்தல், மிகுந்த தாகம், ஸ்தனம்தளால், பிரயாசத்தின்மேல் சுவாசம் வருதல். இளைப்பு, எந்த வஸ்துவிலும் அருவருப்பு. துர்க்கந்தத்துடன் குழம்பாக மூத்திரம்இறங்குதல், கண்வட்டமிட்டுச்சுழலல், எந்தபக்கந் திரும்பினாலும் அந்த பக்கம் பிண்டம் கனமாகத்தோற்றல், பிரமை, மரத்தல், வெந்நீர் ஆவி பிடித்த கையை வயிற்றின்மேல் வைக்கில் அதிரல் இல்லாதிருத்தல் என்னுங் குணங்களுண்டாயின் சிசு மறித்ததென்றறியவும், அப்போது தாயாருக்குச் சேதமில்லாமல் அந்த சிசுவைக்கைப்பழக்கத்தினாலாவது ஆயுதப்பிரயோகத்தினாலாவது மருந்தினா
லாவது நஞ்சுக்கொடியுடன் சீக்கிரத்தில் வெளிப்படுத்துதல் வேண்டும்.

தருணப் பிரசவ லக்ஷணம் :
- வயிற்றில் கருப்பம் நிறைந்து இன்றைக்கோ நாளைக்கோ பிரசவம் என்றிருக்கும் காலத்தில் ஆயாசம், வயிறு தளரல், கண்கள் குழிவிழுதல், பலவித இளைப்பு, கீழ்வயிறு கனத்தல், அரோசகம், வாய்நீருதல், அடிக்கடி நீரிறங்கல்,தொடை வயிறு முதுகு இடுப்பு மார்புகீழ்வயிறு இரு கவுட்டி, அபா
னம் என்னும் இவ்விடங்களில் நோய், அல்குல் விரிதல், அதிரல்,வேதனை, ஒருவேளை ஊசியால் குத்துவதுப்போல் குத்தல், சலம் பெருகுதல், வயிற்றில் மிகுநோய் முதலிய குணங்கள் கண்டு சலோதயமும் உண்டாகும். இதுவே தருணப்பிரசவமாம்.

மல்கலாக்கிய சூலை லக்ஷணம் :- பிரசவித்தவுடனே ஸ்திரீகளுக்கு அழுக்கின் குற்றத்தால் மார்பிலாவது, சிரசிலாவது, கீழ் வயிற்றிலாவது சகிக்ககூடாத குத்தலும் நோயும் உண்டாகும். இதனை மண்குத்து நோய்யென்று கூறுவர்.

அசாத்தியக்கருப்பக்குறிகள் :- சிசு வெளிப்படாதிருத்தல், அல்குல் தடித்துக் கொண்டு கொஞ்சம் வெளியில் நோய்போலிருத்தல், மேல்சுவாசம் துர்க்கந்த ஏப்பம், தேகஞ்சில்லிடல் என்னும் குணங்களுண்டாகில் சிகிச்சை செய்வதில் பயனில்லை. வஸ்த்திஸ்தானக்கருப்பத்தினால் சிக்கிக்கொண்ட கருப்பத்தினால் தாயிறந்தும் வயிறு மாத்திரம் ஆவிக்கு அதிருமாகில் அவ்வயிற்றை உபாயகமாக கீறியுஞ்சிசுவை எடுத்துக் கொண்டு வளர்க்கவும்.

மூடவிஷ்டம்ப கருப்பங்களின் லக்ஷணம் :- மேடு பள்ள ஸ்தானபடுக்கை முதலிய குணங்களினாலும் அபாணவாயுவின் விருணத்தினாலும், பிரசவகாலத்தில் தாறுமாறாக புரண்ட விகற்பத்தினாலும் வயிற்றிலிருக்கும் சிசுவினது சிரசும் கையும், காலும் ஸ்தானம் தப்பி ஸ்தானத்தில் சிக்கிக்கொள்ளும். இதுவே மூடகருப்பம். யோனிஸ்தானத்தில் ஒரு காலும் குதஸ்தானத்தில் ஒருகாலும்மாட்டிக்கொண்டு ஸ்தம்பித்து பிரசவமுகம் காணாதிருக்கும். இதுவே விஷ்டம்ப கருப்பம். இதானால் அந்த ஸ்திரீக்கு இரண்டு மூன்று நாள் பிரசவ வேதனை காண்பதும் சிசுவை வெளிப்படாமல் இருக்க அவ்வேதனை நின்று போவதுமுண்டு. அந்தத்தருணத்தில்உயிர்த்திருக்கின்ற சிசுவை கைப்பழக்கத்தினாலும் அயுதங்களினாலும் உபாயமாக வெளிப்படுதல் வேண்டும். அதைவிட்டு மரித்ததென நினைத்து அச்சிசுவை சோதிப்பார்களாகில், அத்துடன்
தாய்க்கும் சேதமுண்டாகும். இக்கருப்பங்கள் உள்ளில் உபத்திரவம்
செய்வதும் ஸ்தம்பிப்பதுமாக இருக்கும்.

பிரசவித்த மூன்று விதமான ஸ்திரீகளுக்கு ஆமாசய ஸ்தானத்தில்ருட்சை காணுவதுண்டு.

எந்த ஸ்திரீகளுக்கு கர்ப்பமடைந்த மாதமுதல் ஏழுமாதம் வரையிலும், இளநீர் வழுக்கையின் தன்மையையொத்து வளருகின்றஇளங்கருவானது வாதாதிதோஷங்களினாலும் தகாத நடத்தைகளினாலும் ஒரு வேளை கரைந்தும் கரையாமலும் விழும். அப்படி விழவொட்டாமல் மாதந்தோறும் தகுந்த சிகிச்சைகள் செய்தல் வேண்டும்.

சில ஸ்திரீகளுக்கு கருப்பஸ்தானத்தில் வாதாதிக்கத்தால் கட்டுப்பட்ட ரத்தமானது காரசார உஸ்ணமுள்ள வஸ்த்துகளினால்கரைந்து விழுவதுமுண்டு. அதைசிலர் பிண்டமென நினைத்து பைசாசு அரைத்ததினால் கரைந்து விழுந்ததென வீண்தூறு செய்வார்கள்.
 

வஷ்டி ரோக லக்ஷணம் :- பிரவித்து சரீரமுழுதும் பச்சைப்புண்போலிருக்கின்ற ஸ்திரீகளுக்கு எந்நேரமும் உடம்பு அதிரும்படி யான மிகுபோகத்தினாலும், பதினான்கு வேகத்தையடக்கலினாலும்,கருப்பகால அபத்தியத்தினாலும், கருப்பஸ்தானத்தில் இருக்கிற வாயுவானது அதுகரித்து, இடுப்பு பிட்டம், திரிகஸ்தானம், கவுட்டி,யோனி, கீழ்வயிறு தொப்புள், முலைக்காம்புக்குக் கீழ்பாகம் ஆகிய இவ்விடங்களில் சகிக்கக்கூடாத பிரசவ நோயை பார்க்கிலும் அதிக நோயை உண்டாக்கும். இதை சிற்சிலர் ரத்தகுன்மகட்டி அஷ்டிலிகா வாதகட்டியென்றும் சொல்லுவார்கள். அது இவ்விரண்டும் அல்ல. சையோகத்தினால் உண்டான வாதகட்டி யென்று சொல்லவேண்டியது. ஏனெனில் இது பக்கங்களில் குத்தலையும் நோயையும் தபிக்கலையும் உண்டாக்கச் செய்வதுமன்றி, தான் அநுசரித்த பக்கத்தில் மிகுந்த வேதனையைக் கொடுத்து சமுத்திரதவளையைப்போல் கருப்பமுகத்தை அடைத்துக்கொள்ளும். முற்கூறிய கட்டிகளேயாயின், அவைகட்கு எளிதில் கரைந்துவிழுகின்ற தன்மை இராது. இதுவோவென்றால் மாதாந்த ருதுகாலத்தில் அதிகரித்த வாயுவின் வேகத்தால் அடிப்பட்டு அல்குல்வழியாகப்பட்டை கஷாயத்தைப்போலும், மாமிசங்கலந்த சலத்தைப்போலுங்
கரைந்து ஒழுகுவதுமன்றி தெளிந்தும், குழம்பியும், கறுத்தும், குறைந்தும், அதிகரித்தும் உதிரமாக பெருகும்.

கருப்ப சலனம் :- கருப்ப சலனம் என்பது கருப்பத்தின் அசைவைக் குறிக்கும். இது பெரும்பாலும் கருப்பையின் பலயீனம்முதலிய காரணங்களினால் ஏற்படும். சாதாரணமாக கருப்ப ஸ்திரீ கட்கு முதல் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரையில் இச்சலனம் ஏற்படலாம். முதல் மூன்று அல்லது ஆறுமாதங்கள் வரையில் இந்த கருப்பசலனத்திற்கு தகுந்த சிகிச்சை செய்யாவிடில் இதுகரு அழிவிற்கு ஏதுவாகுமாகையால் அப்போதைக்கப்போது தகுந்த சிகிச்சைகளைச் செய்துருவது நன்று.

முதல்மாத கருப்ப சலன சிகிச்சை :- முதல் மாதத்தில் கருப்ப சலனமுண்டானால் திராட்சை, அதிமதுரம், சந்தனம், ரத்தசந்தனம்இவைகளை அரைத்து பசும்பாலில் கலந்து குடித்தால் கருப்ப சலனம் நீங்கி கருப்பம் பலப்பட்டு நிலைத்திருக்கும்.

இரண்டாவது மாத சலன சிகிச்சை :- இரண்டாவது மாதம் கர்ப்பம் அசைந்தால் தாமரைத்தண்டு நாககேசரங்கள் இவைகளை சலத்தினால் அரைத்து பாலில் கலந்து கொடுத்துவர கருப்பம்நிலைக்கும்.

மூன்றாம் மாத சலன சிகிச்சை :- மூன்றாவது மாதத்தில் சலனமுண்டானால் நாககேசரங்கள் பாலில் அரைத்து பாலில் கலந்து குடித்தால் கர்ப்பம் நிலைத்திருக்கும். அல்லது தாமரைத்தண்டு, சந்தனம், வெட்டி வேர் தாமரைப்பூ, இவைகளை சலம் விட்டு அரைத்து பசும் பாலில்கலந்து குடித்தால் கர்ப்பசலனமுண்டாகாமல் நிலைத்துருக்
கும். கர்ப்பசூலையும் நீங்கும்.

நாலாவது மாத சலன சிகிச்சை :- நாலாவது மாதம் கருப்ப சலனத்தினால் தாகம், சூலை, தாபம், காய்ச்சல் இவைகள் உண்டானால் வாழைக்கிழங்கு, கரும் அல்லி, வெட்டி வேர், இவைகளை சம எடையாக பால் விட்டு அரைத்து குடித்தால் கர்ப்பம் நிலைக்கும்.சுரம் முதலியது நீங்கும்.

ஐந்தாவது மாத சலன சிகிச்சை :- ஐந்தாவது மாதம் ரத்தத்தில் கருப்ப சலனமும், சூலையும் உண்டானால் மாதுளம்கொழுந்து, சந்தணம் இவைகளை அரைத்து தயிரில் கலந்து தேன் விட்டு குடித்தால் கருப்பசலனம் சூலை இவைகள் நீங்கும்.

ஆறாவது மாத சலன சிகிச்சை :- ஆறாவது மாதம் கருப்ப சலன மாகில் காவிக்கல் பசுஞ்சாணிபற்பம், கறுப்புமணல் இவைகளை கியாழம் வைத்து ஆறிய பிறகு பால், சந்தணம், சர்க்கரை இவைகள் கலந்து குடித்தால் கருப்ப சலனம் நீங்கும்.

ஏழாவது மாத சலன சிகிச்சை :- ஏழாவது மாதத்தில் கருப்ப சலனம் உண்டாகில் வெட்டிவேர், ஆனை ரிஞ்சல், கோரைக்கிழங்கு, மண்சிருஷ்டி, நாககேசரங்கள், தாமரைக்கிழங்கு, இவைகளை கியாழம் வைத்து சர்க்கரை கலந்து குடித்தால் கருப்பம் நிலைப்பெரும்.

எட்டாவது மாத சலன சிகிச்சை :- எட்டாவது மாதத்தில் கருப்பசலனம் உண்டாகில் லோதிரப்பட்டை, திப்பிலி இவைகளை சூரணித்து தேன் விட்டு கலந்து கொடுக்க கருப்பம் நிலைப்பெரும்.

முதல் மாதம் முதல் கர்ப்ப சலனாதிகளில் மேல் கூறிய சிகிச்சைகள் செய்தால் ஒன்பதாவது மாதத்தில் சுசுமாக பிரசவமாகும். இந்த பிரகாரம் கர்ப்பபோஷைனையை செய்ய வேண்டியது.

கர்ப்ப பதனம்(கரு அழிவு) :- அடிபடுதல், பயம், மிகுபேதி உஷ்ணவீரிய உணவு முதலிய காரணங்களினாலும், கருப்பையின் பலயீனத்தினாலும் கடினமான வலை முதலியவைகளினாலும் கருவானத
சிதைந்து வெளியாகும். இதையே கருஅழிவு அல்லது கர்ப்பபதனம்என்பர். இது முதல் மாதத்திலிருந்து ஆறுமாதம் வரையில் ஏற்படும்.

முதல் மாதம் முதல் நாலு மாதம் வரையிலும் கரு அழிவு ஏற்படுமாகில் அது திரவரூபமாக இருப்பதால் அதனை கருப்பச் சிராவம் என்றும், ஐந்து ஆறாவது மாதங்களில் உண்டாகும் கரு அழிவின்  பிண்டப்பொருட்கள் காணப்படுவதால் அதனை கருப்ப பாதமென்றும் கூறப்படும்.

அச்சமயத்தி லெரிச்சல், அடிவயிறு, பிட்டம், இடுப்பு, இவை களில் சூலை, இரத்தப்போக்கு, வாய்வு, மூத்திரபந்தம் இவைகளை உண்டாயிருக்கும்.

பரிகாரம் :- அதிமதுரம், நன்னாரிவேர், தண்ணீர்விட்டான் கிழங்கு, தாமரைப்பூ, நிலப்பூசணி கிழங்கு, நெருஞ்சில், திராட்சை, கோரைக்கிழங்கு இவைகளை வகைக்குக் கால்பலம் வீதம் சூரணித்தோ அல்லது குடிநீரிட்டோ சர்க்கரையும் பாலும் சேர்த்து அருந்தி வர கருப்பகாலத்தில் ஏற்படும் சூலை முதலியன நீங்கி கருப்பம் நிலைக்கும்.

வெட்டிவேர், அதிவிடயம், கோரைக்கிழங்கு, இலவம்பட்டை,வெட்பாலைவிரை இவைகளை முறைப்படி கியாழமிட்டு கொடுக்ககருப்பிணிகட்கு காணும் கர்ப்பசலனம், பெரும்பாடு, கருப்பசூலை முதலியன குணமாகும்.

அந்தரத்தாமரை, காட்டாத்திப்பூ, கருஅல்லி, அதிமதுரம், லோத்திரப்பட்டை இவைகளைக் கியாழமிட்டு ஸ்திரீயை மாரளவு ஜலத்தில் உட்காரவைத்து மேற்படி கியாழத்தை அருந்தச் செய்யகெர்ப்ப பாதம் நிவர்த்தியாகும்.

மூடகர்ப்பம் :- கர்ப்பிணிகளுக்கு கருப்பாசயத்திலுள்ள சிசு வாதாதி தோஷத்தால் இயக்கமுற்று நேகவிதங்களாக யோனி துவாரத்தை அடைக்கும். இதுவே மூடகர்ப்ப மெனப்படும். இது முக்கியமாய் எட்டுவகைப்படும். அவையாவன :-

அவைகளிலொன்று தலையில் யோனிதுவாரத்தை தடுக்கும்.மற்றொன்று வயிற்றினால் யோனிதுவாரத்தை தடுக்கும். சரீரத்தள சேர்க்கையினால் உண்டான தோஷத்தை யுடையதாய் யோனிதுவாரத்தை தடுக்கும். மற்றொன்று ஒரு புஜத்தினால் அல்லது இருபுஜத்தினால் குறுக்கேநின்று யோனிதுவாரத்தை தடுக்கும். கீழ்முகமாக மற்றொன்று யோனிதுவாரத்தை தடுக்கும். மற்றொன்று இட வலது பாரிசங்களினால் குறுக்காக யோனிதுவாரத்தை தடுக்கும்.

கர்ப்பஸ்தானமான சிசு யோனியை தடுக்கும்விதங்கள் சங்கீலமென்றும், பிரதிகுலமென்றும், வரிகமென்றும், பீஜமென்றும், நான்கு விதங்களாக யிருக்கும். மேற்புறமாக கைகள் பாதங்கள் சிரசு இவைகளை ஆணியைப்போல் யோனிதுவாரத்தை தடுப்பது சங்கீலமென்றும், குதிரை முதலியவைகளின் குளம்புகளைப்போல்
தடுப்பது பிரதிகுலமென்றும், கதவு தாழ்ப்பாளைப்போல் தடுப்பது வரிக என்றும், இரண்டு புஜங்கள் தலை இவைகளினால் தடுப்பது பீஜமென்றும் பெயர்.
 

பரிகர்ப்ப லக்ஷணம் :- பிரசவ காலத்தில் கர்ப்பம் கோபுரத் துவாரத்தின் கதவு தாழ்ப்பாளைப்போல் பிண்டம் குறுக்காக திருப்பியிருந்தால் அதை பரிகர்ப்பமென்றும் சொல்லுவார்கள். இது அசாத்தியம்.

சுகப்பிரசவ சிகிச்சை :- கர்ப்பிணி பிரசவத்திற்கு காலதாமதம் ஆனால் யோனித்துவாரத்தில் கிரந்தி தகரத்தை தூபம் போட்டாலும் அல்லது பொடுதலை வேரையாவது அல்லது ஆற்று துமட்டி வேராவது நூலினால் கைகளுக்கும் கால்களுக்கும் ர¨க்ஷ பந்தனஞ்செய்தாலும் சுகமாக பிரசவமாகும்.

வேறு :- திப்பிலி, வசம்பு, இவைகளை ஜலத்தி லரைத்து அத்துடன் ஆமணக்கெண்ணெய் கலந்து கர்ப்பிணியின் நாபியில் தடவி னால் எந்த உபத்திரவத்தினால் தாமதம் உண்டானாலும் அவைகள் நீங்கிசுகபிரசவமாகும்.

வேறு :- கொடி மாதுளம் வேர், அதிமதூரம் இவைகளை சூரணித்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் சுகமாகபிரசவமாகும்.

கர்போத்தாரணை :- கர்பத்தில் சிசு மரணமடைந்திருந்தால் அப்பொழுது சஸ்திரசாஸ்திரங்களை அறிந்து வைத்தியன் தனது அஸ்தங்களுக்கு நெய்யை தடவிக்கொண்டு கர்பிணியின் யோனித்துவாரமாக சஸ்திரத்தை பிரவேசிக்கச் செய்து(கர்ப்பத்திலிருக்கும் சிசு உயிருடன் இருந்தால் சஸ்திரங்களால் சேதிக்கக்கூடாது, அப்படி
சேதித்தால் சிசு மரணமடைவதுமன்றி தாயாருக்கும் ஆபத்துண்டாகும்) வெகு ஜாக்கிரதையாய் எவருக்கும் ஆபத்துண்டாகாத வண்ணம் சிசுவை வெளிப்படுத்த முயலவேண்டும். ஒரு வேளை சிசு மரணமடைந்திருந்தால்
சஸ்திரத்தினால் சிசுவை சேதித்தெடுக்க வேண்டியது அப்படி செய்யாமல் கொஞ்சநேரம் சும்மாயிருந்தால் மரணமடைந்த சிசு தாயாரையும் கொன்றுவிடும்.

மரணமடைந்த சிசுவின் எந்தெந்த அங்கங்கள் யோனித்துவாரத்தை தடங்கல் செய்திருக்கின்றதோ அந்தந்த அங்கத்தைச் சேதித்து வெளிக்கு எடுத்து கர்ப்பிணியை காப்பாற்ற வேண்டியது.

ிரசவித்தவளுக்கு மாய்கை விழாமல் போனால் அதனால் ஆகும் உபத்திரவம் :- கர்பிணிபிரசவிக்குங்காலத்தில் வயிற்றிலிருந்து மாய்கை வெளியாகாமல் போனால் அது வயிற்றில் சூலை அக்கினிமாந்தம்இவைகளை உண்டாக்கும்.

மாய்கை வெளியாக :- பேய்ச்சுரை, கோரைக்கிழங்கு வெள்ளை கடுகு, சூரணித்து கடுகு எண்ணெய்யில் கலந்து யோனித்துவாரத்தில் தடவ வெளியாகும்.

வேறு :- பொடுதலைவேரை சலத்தில் சேர்த்து சூரணித்து செய்து கர்ப்பிணியின் பாதத்திற்கும் கைகளுக்கும் தடவினால்மாய்கை வெளியில் வரும்.

வேறு :- கைவிரல்களில் நகங்களை எடுத்து சேர்த்து கழுவித்தைலத்தை தடவிக்கொண்டு பிரசவித்த யொனியில்
மெள்ள நுழைப்பித்து அந்த மாய்கையை தேய்க்க வேண்டியது.

யோனிகாயத்திற்கு சிகிச்சை :- கடுக்காய் லோத்திரப்பட்டை இவைகளை நீர் விட்டரைத்து யோனிக்கு லேபனஞ்செய் தால் பிரசவ காலத்தில் உண்டான காயம் நீங்கும்.

யோனிசங்குதசிகிச்சை :- முருக்கன்விரை, அத்திப்பழம்இவைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து யோனிக்கு லேபனஞ்செய்தால் பிரசவ காலத்தில் உண்டான யோனி சுருங்கும்.

மக்கல்லநிதானம் :- மாது பிரசவித்தக்ஷணமே யோனியைசெவ்வையாக பிசைந்து அந்த யோனியில் வெளிக்காற்று பிரவேசிக் காமலிருக்கும்படி துணியால் இருக்கி கட்டி பாதுகாக்கவேண்டியது.
அப்படி செய்யாமற் போனால் யோனியில் வாயுவானது குபிதமாகிஒழுகும். ரத்தத்தை நிரோதித்து கர்பிணியின் ஹிருதயம், தலை அடிவயிறு இவைகளில் மக்கல்லமென்ற சூலையை உண்டாக்கும்.

மக்கல்ல சிகிச்சை :- மக்கல்லவாயு உண்டானால் யாவக்ஷ¡ரத்தை சூரணித்து வெந்நீரூடனாவது நெய்யுடனாவது பானஞ் செய்தாய் அது நிவர்த்தியாகும்.

வேறு :- திப்பிலி, மோடி, மிளகு, ஆனைத்திப்பிலி, சுக்கு, சித்திரமூலம், செவ்வியம், காட்டு மிளகு, இலவங்கப்பட்டை, ஒமம்,  கடுகு, சுட்டப்பெருங்காயம், கண்டுபாரங்கி, வெட்பாலை சுரை சீரகம், மலைவேப்பிலை, பெருங்குரும்பை, அதிவிடயம், கடுகு ரோகணி, வாய்விளங்கம் இவைகளை கியாழம் வைத்து உப்பு கலந்து சாப்பிட்டால், கபரோகம், வாதரோகம், குன்மம், சூலை, சுரம் மக்கல்லசூலை, இவைகளை நிவர்த்திப்பதுடன் அக்கினி தீபனம்சீரணம் இவைகளை உண்டு பண்ணும்.

வேறு :- சுக்கு, திப்பிலி, மிளகு, தால்கின்னி, இலவங்கப்பத்திரி, சிறு நாகப்பூ, ஏலக்காய், கொத்தமல்லி, இவைகளை சூரணித்து பழயவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் மக்கல்லசூலை நிவர்த்தியாகும்.

வேறு :- சுட்டப்பெருங்காயத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் மக்கல்லசூலை நிவர்த்தியாகும்.

கருப்பம் தரிக்க :- 
கர்ப்பமுண்டாகாத மாது, கொடி மாதுளம் விரை, ஆமணக்குவிரை இவைகளை அரைத்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் கர்ப்பத்தை யுண்டாவாள். கர்ப்பிணி எள் எண்ணை, பசும்பால், சர்க்கரை, தயிர், நெய், இவைகளை ஒரு பாண்டத்தில் ஒன்றாய்கலந்து கையினால் ஒன்றாக சேரும்படி செய்து அத்துடன் திப்பிலி சூரணம் போட்டு சாப்பிட்டால் புருஷப்பிரஜை யுண்டாகும். மாது ருது ஸ்தானம் செய்தநாளில் ஒருகொடி மாதுளம் பழத்தின் விரைகள் முழுதும் சம்பூர்ணமாக பாலால் அரைத்து குடித்தால் ஆண் சிசு பிறக்கும். ருது ஸ்தானம் செய்த நாளில் அமுக்கிறாக்கிழங்கை கியாழம் வைத்து அத்துடன் பால் கலந்து சாப்பிட்டால் கருதரிக்கும்.

கருப்பநிவாரணம் :- ருது காலத்தில் திப்பிலி வாய்விளங்கம் வெங்காரம் இவைகளை சமமாக சூரணித்து பாலில் கலந்து சாப்பிட்டால் என்றைக்கும் கருப்பம் தரிக்கமாட்டாள்.

வேறு :- ருது காலத்தில் சப்பாத்திப்பூவை நீச்ச சலத்தில் அரைத்து மூன்று நாள் குடித்தால் அல்லது ஒரு பிடி பழய வெல்லம் சாப்பிட்டாலும் கருப்பம் தரிக்காள்.

வேறு :- கருப்ப இச்சை இல்லாத மாது இந்துப்பூ துண்டுகளை எண்ணெய்யில் நனைத்து யோனிமத்தியில் வைத்துக்கொண்டு புருஷ சம்போகம் செய்தால் கரு தரிக்காது.

வேறு :
- ருது ஸ்தானம் செய்த முதல் மூன்று நாள் வரையிலும் சிருகீரை வேரை அரிசி, கழுநீரால் அரைத்து குடித்து வந்தால் மலடியாவாள்.

சூதிகாரோகம் :- தேகநோய், காய்ச்சல், நடுக்கல், தாகம், தேகம் பளுவாயிருத்தல், வீக்கம், சூலை, இவைகள் உண்டானால்இது சூதிகாரோகம் என்று அறிய வேண்டும்.

பிரசவித்த ஸ்திரீகளுக்கு செய்யக்கூடிய உபச்சாரங்கள் வேறு விதமாக செய்தல் விசனம், அசீரணபோசனம், இவைகளினால் வாயுவானது பிரகோபித்து ரத்த ஒழுக்கை தடுத்து ஹிருதயம், தலை அடிவயிறு, சூலை, அருசி, வியர்வை இவைகள் உண்டாகி அதனால், உடல் இளைத்தல், பலயீனம், பசிமந்தம் முதலியவைகளை உண்டாக்
கும். இது தான் குதிகாரோகம் என்று சொல்லப்படும்.

பரிகாரம் :-
 மேற்கூறிய குதிகாரோகத்தை சமனம் செய்ய சாமானிய வாதநாச சிகிச்சைகளைச் செய்ய வேண்டியது.

தசமூலத்தின் கியாழம், கொஞ்சம் சூடாய் இருக்கும் போதே பசு நெய்யில் கலந்து சாப்பிட்டால் குதிகாரோகம் நிவர்த்தியாகும்.

குதிகாரோகத்திற்கு நாகராதி லேகியம் :
- பசு நெய் 80 துலாம், பசும்பால் துலாம் 256, கற்கண்டு துலாம் 200, சுக்கு மிளகு, திப்பிலி, இலவங்கப்பட்டை, சீரகம், ஏலக்காய் இலவங்கப்பத்திரி, ஒமம், பெரியசோம்பு, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு இவைகள் வகைக்கு 4-துலாம் இவைகளை முறைப்படி லேகிய
பக்குவமாக கிளறி நெல்லிக்காய் அளவு தினம் இரு வேளையாக பிரசவித்த ஸ்திரீகட்கு கொடுத்து வர சூதிகாவாயு, மந்தம் முதலியன நீங்கி, நல்ல பசி தீபனமும் தேக புஸ்டியும் உண்டாகும்.

Post Comment