வாஜீ கரணம்(ஆண்மை பெருக்கும் சிகிச்சைகள் ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாஜீ கரணம்(ஆண்மை பெருக்கும் சிகிச்சைகள் ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 29, 2016

விந்து முந்துதலில் இருந்து எளிதாக விடுபட எளிய பயிற்சி

நடக்கவே பயப்படும் வாலிபர்கள் ..

எப்போது நாற்காலி கிடைக்கும் என்று சிறிது நேரம் கூட நிற்க முடியாத இளைஞர்கள் ..

இரு சக்கர வாகனத்தை கர்ணனின் கவசம் போன்று பிறக்கும் போதே ஒட்டி பிறந்தது போல் கால் இருப்பதையே மறந்த ஆண்கள் ..

இவை தான் முக்கிய காரணம் ..



எப்படி விந்து முந்துதலில் இருந்து குணமடைவது ?

அதற்கு இந்த கெகல் என்னும் பயிற்சி நன்கு பலன் அளிக்கிறது ...

கெகல் பயிற்சி ...



ஆண் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.

செய்முறை :

1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.

2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.

3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.

4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.

5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.

6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.


மூல பந்தம் என்னும் யோகாவின் ஒரு பயிற்சியும் விந்து முந்துதலுக்கு மிக நல்ல பலன் அளிக்கிறது ..

மூல பந்தம்



மூலபந்தம் - ஜலந்திர பந்தத்தில் இருந்து கொண்டு மூலத் தசைகளை உள் நோக்கி இழுப்பதே மூல பந்தம். இதைப் பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகள் அடித்தள மூளை வரை சென்று நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு , சீராக இயங்கச் செய்திடும். ஜலந்திர பந்தம், எண்முக முத்திரை, மூலபந்தம் மூன்றும் ஒரு சேர செய்யும் போது உள்ளே சென்ற காற்றானது எந்த வழியாகவும் செல்ல முடியாமல் மூலாதாரத்திற்கு மேல் உள்ள நடு நாடியின் மூடியிருக்கும் வாசலில் போய் மோதும்..

சரியான இப்பயிற்சிகள் மிக நல்ல பலனை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லவே இல்லை ..

பின் குறிப்பு -கெகல் பயிற்சி செய்யும் போது வாயில் சில மூலிகை எண்ணைகளை அடக்கி செய்தால் வெகு விரைவாக விந்து முந்துதலுகுக்கு நல்ல பலன் தரும் .ஜீவந்த்யாதி க்ருதம்,கபிகச்சு தைலம் ..இன்னும் சில மருத்துவ எண்ணைகள் நல்ல பலன் தரும் 

இந்த பயிற்சிகளை தக்க தகுதி வாய்ந்த மருத்துவர் மூலம் கற்று ,அதனுடன் வாயுக்களை ஒழுங்கு செய்யும் மருந்துகளை சரியாக எடுத்து கொள்வதன் மூலம் விந்து முந்துதலை மிக விரைவாக நிரந்தரமாக குணமாக்கலாம் ..

விந்து முந்துதல்  குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .

என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற  90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற  90 4333 6888  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் 

Post Comment

ஆண்மைக் குறைவுக்கு மருந்து என்ற அதி பயங்கர ஏமாற்று வேலை


விந்து முந்துதல் மருந்து மாத்திரைகளினால் தீருமா ?

திரும்பிய பக்கமெல்லாம் ஆண்மை குறைவு விளம்பரங்கள் ..

இரவு டிவி யை ஆன் செய்தால் -ஆண்மையை குறைவா என்ற பேட்டிகள் ...

ஆன்லைனில் ஏகப்பட்ட ஆண்மை அதிகரிக்கும் மருந்துகளின் விளம்பரங்கள் ..

எனது curesure4u@gmail.com வரும் கேள்விகளில் எண்பது சதவீதம் ஆண்மை பற்றிய கேள்விகள் ..

எனது இலவச மருத்துவ தொலைபேசியில் வரும் அழைப்பில் 80 % ஆண்மை குறைவு பற்றிய சந்தேகங்கள் ...

என்ன செய்தால் மக்களின் சந்தேகம் தீரும் ?

மருந்து மாத்திரைகளினால் விந்து முந்துதல் சரியாகி விடுமா ?



இரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய் என்று வாழ்வியல் நோயினால் பாதிக்கபட்டு வயாகரா சாப்பிட்டால் பக்கவாதம் வருமோ -பக்க விளைவு வருமோ என்று பயந்தவர்களுக்கெல்லாம் மூலிகை மருந்து பாதுகாப்பானது என்று ஆயுர்வேதம் சித்த மருத்துவம் பார்க்கலாம் என்று திடீர் வைத்தியம் பார்பவர்களே மிக அதிகம் ...

அஸ்வகந்தா சாப்பிட்டால் குதிரை பலம் வரும் என்று தவறாக புரிந்து கொண்டு உலகளவில் செக்ஸ் வளர்க்கும் மூலிகைகளை பயன்பாட்டை அதிகரிக்கும் வணிகப்பார்வை -அதி பயங்கரமானது..

ஆயுர்வேதம் சொல்கிற வாஜீகரண சிகிச்சைகளை பேணாமல் ,சித்த மருத்துவம் சொல்கிற நோய் அணுகா விதியை பேணாமல் -வெறும் சமையல் மந்திரம் மட்டும் ஆண்மை அதிகரிக்கும் -விந்து முந்துதலுக்கு தீர்வை தர இயலுமா என்ன ?


எத்தனை மூலிகை கட்டு கதைகள் இந்த வலை தளங்களிலே ..வெறும் cut copy paste என்ற மந்திரத்தை கற்றுள்ள இங்குள்ள பல எழுத்தாளர்கள் எது வந்தாலும் உடனடியாக Forward செய்து விடுவார்கள் ..எது உண்மை ,எந்த மூலிகை எந்த விதத்தில் எப்படி எடுக்க வேண்டும் என்றே தெரியாமல் பாட்டி வைத்தியம் செய்யும் சில கூகிள் வைத்தியர்கள் ..

ஐந்தரை வருடம் ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து ,கிட்டதட்ட இருபது வருடங்கள் பிரைவேட் ப்ராக்டீஸ் என்னும் நிலையில் உள்ள என்னை போல் உள்ள அப்பாவிகளுக்கு மனிதம் கலந்த மருத்துவம் தெரியுமே தவிர ஏமாற்ற ,பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாது ..இதை விட்டுட்டு சப்ஜெக்டுக்கு வருவோம் ..

ஓரிதழ் தாமரை ,நிலபனங் கிழங்கு ,பூமி சர்க்கரை கிழங்கு ,பூனை காலி விதை ,ஜாதிக்காய் ,வெள்ளை முசலி என்னும் நிலப்பனையில் ஒரு வகை ,சாலமிசிரி ,நெருஞ்சில் முள் ,அஸ்வகந்தா ,நீர்முள்ளி விதை ,முருங்கை விதை இதை போன்ற மிக சிறந்த மூலிகைகள் ஆண்மையை அதிகரிக்கும் என்பதில் எள் அளவுக்கும் சந்தேகமே இல்லை..சில மூலிகைகள் வாத நோயாளிக்கு சிறந்தது ,சில மூலிகைகள் கப நோயாளிக்கு சிறந்தது ,பல மருந்துகள் முக்குற்றங்கள் சம படுத்தும் ..ஆனால்...இன்னும் பல பல ஆண்மை அதிகரிக்கும் மூலிகைகள் உங்களுக்கு வேலை செய்யும் என்பதற்கு என்ன ஆதாரம் ?..ஆயுர்வேதம் சொல்கிறது ஒவ்வொரு மனிதனும் தனி தன்மை வாய்ந்தவன் .ஒரு ப்ரக்ருதி (தேக வாக்கின் தன்மை ) நோயாளிக்கும் இன்னொரு பிரகிருதி நோயாளிக்கும் ஒரே நோய்க்கு மருந்து வெவ்வேறு ,சிகிச்சை அளிக்கும் முறையே வேறு வேறு ..இதை கூட நாம் கணக்கில் எடுத்து கொள்ளலாம் ..


ஆயுர்வேத ,சித்த ,யுனானி சாஸ்திர மருந்துகள் அனைத்தும் நன்றாக வேலை செய்யும் –இதை எப்போதும் மறுப்பதற்கே இல்லை ..ஆனால் இங்கே கம்பெனி பேட்டன்ட்  என்று ஆயுர்வேத ,சித்த மருந்துகள் என்ற பெயரிலே  மிக சிறந்த மூலிகைகளோடு ஆங்கில மருந்தை  Tadalfil ,sildenafil கலந்து கொடுத்து ஏமாற்றுகிறார்கள் 

ஏமாற்றி காசு பார்க்கும் சில தரம் பெரிய மருந்து கம்பெனிகளின் தரத்தை இங்கே பார்க்கலாம் ..

இந்த தளத்தை சென்று பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 


மேலும் பிரபலமாக விளம்பரம் செய்து வந்த முசலி பவர் எக்ஸ்ட்ரா என்னும் மருந்தை கேரளாவில் தடை செய்தார்கள் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..மேலும் இந்த விவரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 




திரும்பிய பக்கம் எல்லாம் மூலிகை மருத்துவம் என்று ஆங்கில மருந்தான  Tadalfil ,sildenafil போன்ற பக்க விளைவுகள் அதிகம் உள்ள மருந்துகளை கலந்து மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் ..

இதை விட மோசம் ஒன்று உள்ளது ..இது உணவு பொருள் என்று FSSAI என்று லைசன்சை வாங்கி கொண்டு இது ஆண்மைக்கு உதவும் ,விந்து முந்துதலுக்கு உதவும் என்று பொய் சொல்லி கேப்ஸ்யூல்களை ஆங்கில மருந்து Tadalfil ,sildenafil கலந்து மூலிகை -உணவு என்று நா கூசாமால் டிவிகளில் பொய் விளம்பரங்கள் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள் ..என்ன செய்வது ..

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் ..

பொய் ,போலிகள் ,போலி வைத்தியர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.லாட்ஜ் வைத்தியர்கள் ஊர் ஊராக சுற்றி மனிதனின் பலஹீனத்தை பயன்படுத்தி இந்த நிலை இல்லாத அற்ப வாழ்வுக்கு ஏமாற்றி தலை முறை தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறார்கள் ..அவர்கள் திருந்த போவதும் இல்லை ..ஆயுர்வேதம் ,சித்த மருத்துவம் என்று உண்மையான பாரம்பரிய மருத்துவத்தை கெடுத்து கொண்டு அலைகிறார்கள் .என்ன சொல்வது ?சிலர் curesure என்ற புனை பெயரில் எழுதிற www.ayurvedamaruthuvam.blogspot.com என்ற தளத்தையே காப்பி அடித்து தாங்கள் எழுதியது போல் நல்லவர்களாக காட்டி கொள்வார்கள் .


இதற்க்கு தீர்வு 
எந்த மருந்து யாருக்கு தேவை என்று தெரிய வேண்டும் 

எல்லா ஆண்மை குறைவுக்கும் ஒரே மருந்து இருக்கவே முடியாது ..
அதுவும் எல்லோருக்கும் ஒரே மருந்து வேலை செய்யும் என்று சொல்வதற்கு இல்லை  

நோய்க்கான தக்க காரணம் அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும் ..

விளம்பரங்களில் வருகிற மருந்தை பெரும்பாலும் நம்ப கூடாது ..

விந்து முந்துதல் போன்ற குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .

காசுக்கு அசைபடாத உண்மையான  பாரம்பரிய மருத்துவர்களை என்றுமே குறை சொல்லவில்லை ..மருத்துவ பின் புலமே இல்லாத திடீர் என்று பாரம்பரிய மருத்துவர்கள் என்ற போலி மருத்துவர்கள் மட்டும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் காலமாக ஒரே இடத்தில வைத்தியம் செய்கிற உண்மையில் மருத்துவ பின் புலம்  பாரம்பரியம இருக்கிற மருத்வர்களிடமும் சிகிச்சை பெறலாம். மருத்துவ படிப்புள்ளவர்களும் மருந்து கம்பெனி சொல்வதை உண்மை என்று கேட்டு தவறான மருந்தை எழுதவும் வாய்ப்புள்ளது எனபதை மறுப்பதற்கு இல்லை




என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற  90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற  90 4333 6888  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் .

முடிந்த வரை கட்டுரைகளை படித்தாலே தெளிவு கிடைக்கும் என்கிற அளவில் ஏக இறைவன் நாடினால் தொடர்ந்து எழுத முயல்கிறேன் .



Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

விந்து முந்துதல் -தகவல்கள் ..நிவாரணங்கள்



விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தகவல்கள்  தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.







வாஜீகர்ண சிகிச்சை மூலம் விந்து முந்துதலுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கலாம் ..

வாஜீகர்ண சிகிச்சை பற்றி படிக்க இங்கே கிளிக்  செய்யவும் ..

ஆயுர்வேத வாஜீகர்ண சிகிச்சை பெற -ஆலோசனை பெற முன் பதிவுக்கு  www.healz.in  தொடர்பு கொள்ளவும் 

Post Comment

திங்கள், செப்டம்பர் 13, 2010

விந்துவை குறையவிடாது -மக்கட் செல்வம் தரும் -உணவுகள்

எருமை மாமிச ரசம் 



செய்முறை -
  • முளைக்க வைத்த தோல் நீக்கிய உயர்ந்த உளுத்தம் பருப்பு ,பூனைகாலி விதை -இவை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலையும் நெய்யையும் ஊற்றி 
  • இந்த சாறில் கொத்தமல்லி (தனியா ),சீரகம் ,சுக்கு ,மாதுளை முத்துக்கள் ,தயிர்,நெய் இவற்றையும் சேர்க்க வேண்டும் 
  • இதனில் எருமையின் மாமிச ரசத்தோடு கலக்கி உண்டு ,மாம்ச ரசத்தையும் பருகவேண்டும் 
பயன் -
  • குறைவில்லாத விந்து வளர்ச்சி ஏற்படும் 
மீன் மாம்ச மருத்துவம் 

  • அப்போது பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது சபரி என்னும் மீன் -இவற்றின் மாம்சத்தை நெய்யில் வறுத்து உண்டால் பெண்களுடன் புணர்ந்தாலும் விந்து குறைவு ஏற்படாது 
  • ரோஹிதம் என்னும் மீனை நெய்யில் வறுத்து மாதுளை முத்துக்களின் சாறு ,நெல்லிக்காய்ச்சாறு -இவற்றுடன் வெள்ளாட்டு மாம்ச ரசத்தில் வேக வைத்து பருகினாலும் விந்து குறையாது ,மகபேற்றினை தோற்றுவிக்கும் ஆற்றல் உடையது ..
ஆதாரம் .
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் -நான்கு -பாடல் 15-18

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..



ஆண்மை அளிக்கும் அப்பம் 

செய்முறை 
  1. மருத்துவர் அன்னம் ,கோழி ,குருவி ,சிசுமாரம் என்னும் மீன் இவற்றின் முட்டைகளை சேகரிக்க வேண்டும் 
  2. இவைகளை பசுவின் நெய்,குலிங்கம் என்னும் பட்சியின் கொழுப்பு இதனை சேர்த்து அதில் அருபாதாங் குறுவை அரிசி ,கோதுமை,பசுவின் பாலையும் கலந்து அப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் 
  3. இந்த அப்பங்களை பசுவின் நெய்யில் வேக வைக்க வேண்டும்
பயன் -
  • இந்த அப்பங்களை உண்பதால் ஆண்குறி தளர்ச்சி அடையாது -நிறைவான விந்துவுடன் கூடி இருக்கும் 
  • தனக்கு விருப்பம் உள்ளவரை குதிரையை போன்று பெண்களுடன் புணரலாம்t 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் 10-13
ஆண்மை அளிக்கும் அடை 
  • முதலை முட்டை ,கோழி முட்டை இவற்றை அறுபதாங் குறுவை அரிசி மாவோடு கலந்து பால் நெய் விட்டு பிசைந்து அடைகளாக தட்டி கொதிக்கும் நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் 
  • இதை சாப்பிட்டால் -
  • குதிரை போன்று பலம் பெற்று பெண்ணை புணரலாம் 
  • யானையை போன்று விந்துவை பெருக்கலாம்..
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -28-29

குறிப்பு -
  • இந்திய சட்ட முறைக்கு கட்டுப்பட்ட முறையில் -அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பயன்படுத்துவது நல்லது ..இல்லை எனில் குற்றமாகும் . 

Post Comment

புதன், செப்டம்பர் 08, 2010

வாஜீ கரண பிண்ட ரசம்

இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது 



செய்முறை -
  • உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும் 
  • இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும் 
  • பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
  • இது தான் பிண்ட ரசம் .
  • இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
பயன் 
  • விந்துவை வளர்க்கும் 
  • இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
  • உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
  • புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41

Post Comment

திங்கள், செப்டம்பர் 06, 2010

செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...


பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும் ..நல்ல ஆஹாரமே சப்த தாதுக்களின் ஆதாரம் ..கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது ..ஆயுர்வேதம் சொல்கிறது ..இன்று சாப்பிட்ட ஆகாரம் விந்துவாக மாற முப்பது நாட்கள் ஆகிறது ..எனவே சரி விகித உணவே தாதுக்களின் பலம் ..

கீழே உள்ள உணவுகள் -சைவ உணவுகள் -இந்த சைவ உணவுகளில் ஆண்மை பெருகும்,செக்ஸ் உணர்வு பெருகும் .. ..எளிதாக வீட்டிலேயே செய்து விட முடியும் ...கீழே உள்ள உணவுகளை செய்து பாருங்கள் ..பலன் பெறுங்கள் ..





ஆண்மை அளிக்கும் நெய் 

செய்முறை -
  1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை ,பேரீச்சை ,அதிமதுரம் ,திராஷை ,அரிசி திப்பிலி ,சுக்கு ,ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும் 
  2. அதிலே -பதினாறு பலம் பால் ,அறுபத்தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய்ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் 
  3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும் 
உபயோகிக்கும் முறை 
  • உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன்படுத்த வேண்டும் 
பயன் 
  • ஆண்மை வளர்க்கும் 
  • வலிமை ,நிறம் -இவற்றை கொடுக்கும் 
  • நல்ல குரலை தோற்றுவிக்கும் 
  • உடலை கொழுக்க வைக்கும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -21-23 
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பானகம் 

செய்முறை -
  1. அதிக புளிப்பில்லாத ,குறை இல்லாத ,ஆடையோடு கூடிய தயிரை எடுத்துகொள்ளவேண்டும் 
  2. அதில் சர்க்கரை ,தேன் ,சிறிதளவு மிளகு ,மூங்கிலுப்பு ,சிற்றேல அரிசி -போன்றவற்றை போதிய அளவு சேர்க்க வேண்டும் 
  3. இவற்றை மென்மையான ஆடையில் வடிகட்டி புதிய மண் பாண்டத்தில் சேர்த்து வைக்க வேண்டும் .
பயன்படுத்தும் முறை 
  • நெய்யோடு சேர்ந்த அறுபதாங் குறுவை அரிசி சோற்றை பயன்படுட்ட வேண்டும் -பின் இந்த பானகத்தை தக்க அளவு குடிக்க வேண்டும் 
பயன் 
  • நிறம்,குரல் ,வலிமை ,விந்து-வளர்ச்சி பெரும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
-----------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்மை அளிக்கும் பால் சோறு 
  • பால் சர்க்கரை தேன் இவற்றோடு கூடிய அறுபதாங் குறுவை அரிசி சோற்றை உண்பவன் -காளையை போன்ற ஆண்மை உடையவன் ஆகிறான் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் ஐவகை பால் 
  1. ஜீவநீய கன கூட்டுப்பொருள் (ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,மகா மேதா ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து ,கீரைபாலை ,அதிமதுரம் )
  2. விந்துவை வளர்க்கும் கூட்டு பொருள் ,(ஜீவகம் ,ரிஷபகம் ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து,மேதா,தண்ணீர்விட்டான் கிழங்கு ,சடாமஞ்சில் ,கர்கடஸ்ருங்கி )
  3. வலிமை அளிக்கும் கூட்டு பொருள் (காட்டு வெள்ளரி ,பூனைகாலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,காட்டு உளுந்து ,பால் முதுக்கன் கிழங்கு ,அமுக்கிரான் கிழங்கு ,ஓரிலை ,கடுகு ரோகினி ,சிற்றாமுட்டி ,பேராமுட்டி )
  4. பால் வளர்க்கும் கூட்டு பொருள் ,(விலாமிச்சை வேர்,சம்பா தானியம் ,அறுபதாம் குறுவை ,நீண்ட கனுவுள்ள கரும்பு ,தர்ப்பை,நாணல் ,குருவி கரும்பு வேர் ,கரும்புல்,செங்கரும்பு ,காவட்டம்புல் )
  5. உடலை வளர்க்கும் கூட்டு பொருள் (பால் முதுக்கன் கிழங்கு ,கண்டங்கத்தரி ,அமுக்கிராக் கிழங்கு ,காகோலி ,க்ஷீர காகோலி ,வெண் சிற்றாமுட்டி ,மஞ்சள் சிற்றாமுட்டி ,காட்டுபருத்தி ,முடுக்கன் கிழங்கு )
மேலே கூறிய ஐவகை கூட்டுபொருளில்-தயார் செய்யப்பட்ட பாலில்,நெய்யில் வறுக்கப்பட்ட கோதுமை மாவை கலந்து அதில் சர்க்கரை ,நெய் ,தேன் ,இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் ..இதனால் குறைவில்லாத விந்து வளர்ச்சியை ஒருவன் பெற முடியும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கட்பேறு அளிக்கும் பால் 

செய்முறை -
  • மேதா ,க்ஷீர காகோலி ,கீரை பாலை ,பால்முதுக்கன் கிழங்கு ,கண்டங்ககத்தரி ,நெருஞ்சில் ,மூங்கிலுப்பு ,உளுந்து ,கோதுமை ,சம்பா அரிசி ,அருபாதாங் குறுவை அரிசி-இவற்றில் ஒவ்வோன்றிலும் ஒரு தோலா எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் 
  • இதனில் முப்பத்தி இரண்டு பலம் பசுவின் பாலும் ,முப்பத்தி இரண்டு பலம் நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும் 
  • பால் மட்டும் எஞ்சிய போது வடிகட்டி  தேன் ,நெய் ,சர்க்கரை -இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் 
பயன் -
  • எழுபது வயது முதியரும் பல மக்களை தோற்றுவிக்கக்கூடிய ஆற்றலை அளிக்கும் 
  • முதியவரும் வாலிபனை போன்று மகிழ்ச்சி அடைவர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அரிசி திப்பிலி பால் 
  • முப்பது அரிசி திப்பிலி துண்டுகளை மைய்ய பொடி செய்து நான்கு தோலா நெய்யும் ,நன்கு தோலா எண்ணையும் சேர்த்து வறுத்த தூளில் தேன் சர்க்கரை இவற்றை கலக்க வேண்டும் ..இதை பால் கறக்கும் பாத்திரத்தில் வைத்து கறந்து(பால் கறக்கும் பசுவுக்கு -காட்டு உளுந்து இலை,கரும்பு ,மருத இலை இவற்றை உணவாக கொடுக்க வேண்டும் -பசு பருத்த காம்பும் ,தாய்பசுவின் நிறம் உடையதும் ,சிவப்பு அல்லது கருப்பு கன்றை முதலாக ஈன்றதும் -சாதுவானதும் )..இப்பாலை -தரை மேல் வைக்காமல் வலுவிற்கு ஏற்றவாறு பருக வேண்டும் ,பசி எடுத்த பின் அற்பதாங் குறுவை சோற்றை பால் நெய்ய்டுடன் பருக வேண்டும் 
பயன் 
  • இவ்வாறு பருகுவதால் ஒரு இரவு முழுவதும் பெண்ணுடன் செய்தாலும் -ஆணுக்கு தளர்ச்சி (ஆண் குறி தளர்ச்சி அடையாது )அடையாது ..விரைவில் வெளிவராது ..
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பாயாசம் ..

செய்முறை 
  • நெருஞ்சில் ,பால் முதுக்கன் கிழங்கு இவற்றின் சாறில் நான்கு மடங்கு முன்பு கூறிய பசுவின் பாலை சேர்த்து அதில் உளுந்து அறுபதாங் குறுவை அரிசி இவற்றை போட்டு வேக வைத்து பாயசாமக்கி கொள்ளவேண்டும் 
பயன் 
  • இதனில் மிகுதியான நெய் சேர்த்து பருகினால் -விந்து அதிகமாக வளர்ச்சி பெரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அடைகள்..

செய்முறை 
  • ஜீவனிய கனத்தை சேர்ந்த உயிரூட்ட கூடிய மனதிற்கு பிடித்தமான சுவையை உண்டு பண்ணக்கூடிய பழங்களில் நான்கு பலமும் ,பூனை காலி விதையில் நான்கு பலமும் ,எள்ளுபொடியில் எட்டு பலமும் ,பயற்றின் மாவு எட்டு பலமும் ,கோதுமை ,சம்பா அரிசி இவற்றின் மாவுகள் நான்கு பலமும் சேர்த்து நான்கு பலம் நெய் ஊற்றி பிசைந்து பாலையும் சேர்த்து கலந்து அடை தட்ட வேண்டும் 
பயன் -
  • தட்டிய அடைகளை நெய்யில் வறுத்து உண்டால் -ஆண்மை பெருகும் ..பல மனைவியரை கொண்டவரும் சந்தோஷம் அடைவான் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை வளர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் நெய் 
  • பதினாறு பலம் நெய் தண்ணீர் விட்டான் கிழங்கு நான்கு பலம் ,நூற்றைம்பது பலம் பாலில் கலந்து காய்ச்சி முறை படி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் ..
  • இந்த நெய்யில் சர்க்கரை ,அரிசி திப்பிலி பொடி தேன் இவற்றை சேர்த்து பருக விந்து வளர்ச்சி பெரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை தரும் அதிமதுர மருந்து 
  • ஒரு தோலா அதிமதுர சூர்ணதைச் சம அளவு நெய் தேன் இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் ..அதன் பிறகு பால் பருக வேண்டும் ..இதனால் சிற்றின்ப வேட்கை குறையாமல் இருக்கும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பால் நெய் பயன்படுத்துவதன் பயன் ..
  • நாள் தோறும் நெய்யும் பாலும் பருகுபவன் பயமற்று நோயற்று இளமையோடு நாள் தோறும் புணரலாம் 
  • காளை போன்று பெண்களை புணரும் ஆற்றலை பெறலாம் ..


மேலே கூறிய அனைத்திற்கும் ஆதாரம் ..
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் ,அத்தியாயம் இரண்டு ,பாதம் மூன்று ,பாடல் -3-20
குறிப்பு -ஒரு பலம் =நாற்பத்தி எட்டு கிராம் ,
                  ஒரு தோலா =பன்னிரண்டு கிராம் ---ஆயுர்வேத முறைப்படி  

அடுத்து .....அசைவ உணவில் ஆண்மை பெருக்கும் பதார்த்தங்கள் ..

Post Comment

சனி, செப்டம்பர் 04, 2010

ஆண்மை அளிக்கும் பால்


செய்முறை -
  1. பேரீச்சம் காயின் சதை பற்று ,உளுந்து ,க்ஷீர காகோலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,இலுப்பை பூ ,சிறு திராக்ஷை ,பூனைகாலி விதை -இவற்றை தனி தனியாக ஒரு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் ) எடுத்துகொள்ள வேண்டும் 
  2. மேலே சொன்னவற்றுடன் முப்பத்தி இரண்டு பலம் தண்ணீரில் காய்ச்சி -நாலில் ஒரு பங்காக சுருக்க வைக்க வேண்டும் 
  3. இதனை வடிகட்டி -பதினாறு பலம் பால் சேர்த்து காய்ச்ச வேண்டும் 
 பயன்படுத்தும் முறை -
  • அறுபதாங் குறுவை அரிசி சோற்றோடு நிறைய நெய் சேர்த்து சர்க்கரையுடன் சாப்பிட வேண்டும் 
பயன் 
  • ஆண்மை மிகுதியாக வளரவைக்கும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டு பாதம் இரண்டு பாடல் -18 -20

Post Comment

வியாழன், செப்டம்பர் 02, 2010

வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்


ஆயுர்வேதம் சொல்கிறது 

वृष्यानां श्रेष्टं -नक्र रेथसां ।।
அதாவது ஆண்மை வளர்க்ககூடிய மருந்து -எல்லாவற்றிலும் சிறந்தது முதலையின் விந்து..
ஆச்சார்யர் சரகர் இதனை வலியுறுத்தி சொல்கிறார் ..

அதனை எப்படி சேகரிப்பது என்று தெரியவில்லை ..விலங்கியல் பாட பிரிவில் வல்லுனர்களோ -வெட்டினரி அறிவியலில் தலை சிறந்தவர்கள் யாராவது இருந்தால் இதை சேகரிக்க முடியுமா என்று கேட்டு சொல்லுங்கள் ..
வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உண்டு என்று(ஒரு ஒப்பீட்டுக்காக=எவ்வளவு நேரம் நேரம் உறவு கொண்டாலும் -யானை போன்று அதிகாமாகவும் ,குதிரை போன்று வேகமாகவும் ,சிட்டுகுருவி போல் அடிக்கடியும் உறவு கொள்வான் என்று தான் சாஸ்திரம் சொல்கிறது  ) சாஸ்திரம் சொல்கிறது ..



Post Comment

புதன், செப்டம்பர் 01, 2010

மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..



மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..

செய்முறை ..
  1. பூனைகாலி விதை ,உளுந்து ,பேறீச்சம்காய்,தண்ணீர்விட்டான் கிழங்கு ,ஸ்ருங்காடக (தாமரை )கிழங்கு ,சிறு திராக்ஷை -தனி தனியாக இரண்டு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் )-எடுத்துகொள்ளவேண்டும் 
  2. பதினாறு மடங்கு தண்ணீர் +பதினாறு மடங்கு பால் எடுத்து கொள்ளவேண்டும் -
  3. மேலே கூறப்பட்டுள்ள பொருளோடு காய்ச்சவேண்டும் -பாலின் அளவுக்கு சுருங்க வைக்க வேண்டும் -சுண்ட காய்ச்ச வேண்டும் 
  4. எடுத்து துணியில் வடிகட்டி கொள்ளவேண்டும் 
  5. இதனுடன் சர்க்கரை +மூங்கிலுப்பு +நெய் =தனி தனியாக ஆறு பலம் (ஆறு மடங்கு ) சேர்க்க வேண்டும் 
பயன்படுத்தும் முறை -
  1. தேனுடன் கலந்து மேல் கூறிய உணவை பருகவேண்டும் 
  2. பின் அருபாடாங்குர்வை அரிசி சோற்றை உண்ணவேண்டும் 
பயன் 
  • கோலூன்றும் முதியவரும் வலிமை பெற்று -குழந்தைகளை பெறுவார் ..
  • நல்ல மனமும் .உறுதியான உடலும் ,மன மகிழ்ச்சியும் பெறுவர்..
  • ஆண்மை பெருகும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகித்ஸா ஸ்தானம் -அத்தியாம் இரண்டு பாதம் இரண்டு -பாடல் -

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

குழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..

முதியவரும்  பல புதல்வர்களை உண்டாக்க முடியக்கொடிய ஒரு வீட்டிலேயே செய்யக்கொடிய ஒரு சமையல் மாதிரி ஒரு மாத்திரை 

செய்முறை -
  1. தூய்மையானதும் ,ஈரப்பசையுள்ளதுமான அறுபதாங் குறுவை அரிசி யினை(நவ சஷ்டிக்க ஷாலி தானியம்) பாலில் ஊற வைக்க வேண்டும் 
  2. பெரிய உரலில் பால் சேர்த்து (மேலே கூறப்பட்ட ஊறவைத்த அரிசியினை )அரைக்க வேண்டும் (உரலில் குத்த வேண்டும் )
  3. நன்றாக மைய்ய அரைக்கப்பட்ட அரிசியின் சாருடன் மேலும்  சம அளவு பால் சேர்த்து கல்வத்தில் (பழைய கிரைண்டர் மாதிரி) அரைக்க வேண்டும் 
  4. இதன் சாறினை பிழிந்து வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும் ...
  5. இந்த சாறில் பூனைக்காலி விதை சூர்ணம் + பூனைகாலி விதை கசாயம் ,உளுந்து கசாயம் (விந்து அணு குறைப்பாட்டை தீர்க்கும் ) ,சிற்றாமுட்டி கசாயம் ,அதிவிடயகிழங்கு உடன் கீரை பாலை ,ஜீவந்தி க்வாதம் ,ஜீவனிய கன க்வாதம் ,நெருஞ்சில் முல்.அதிமதுரம் ,தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி ),பால்முதுக்கன் கிழங்கு ,திராக்ஷை ,பேரிச்சை இவற்றை தனி தனியாக கஷாயமாகவோ எடுத்து ,மேலே எடுக்கப்பட்ட சாறை கொதிக்கவைத்து பாலிலே காய்ச்ச வேண்டும் -இது நாலில் ஒரு பங்காக சுருங்க வைக்க வேண்டும் ..
  6. இதனுடன் -மூங்கிலுப்பு ,நெய்யில் வருத்த உளுந்து ,அறுபதாங் குறுவை அரிசி இவற்றின் பொடியினை கலந்து ஒரு கெட்டியான உருண்டை போல் பிசைந்து கொள்ளவேண்டும் ..
  7. இந்த கலவையுடன் தேன்,சர்க்கரை சேர்த்து இலந்தை அளவுக்கு மாத்திரையாக உருட்ட வேண்டும் 
  8. இந்த உருண்டையினை நெய்யில் வறுக்க வேண்டும் 
பயன்படுத்தும் முறை -
செரிக்கும் ஆற்றல் அறிந்து பால் அல்லது மாம்ச சாறுதான் காலை மாலை தேவை கருதி -அதிகமாகவோ ,ஒன்று அல்லது இரண்டோ சாப்பிடவேண்டும் 

பயன் -
  1. இந்த மாத்திரையை பயன் படுத்தினால் முதியவரும்  பல புதல்வர்களை உண்டாக்க முடியும் 
  2. வயதானவரும் குறைவின்றி விந்தை பெறலாம் .
ஆதாரம் -சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டாவது அத்தியாயம் -இரண்டாவது பாதம்,பாட்டு 3-9

உணவே மருந்து-மருந்தே உணவு -என்ற கோட்பாட்டின் கீழ் -மிக எளிதாக அனைவராலும் எளிதாக செய்து கொள்ளகூடிய ஒரு விசயம் இது ..

குறிப்பு -மேலே கூறியுள்ள மூலிகை ஒன்று அல்லது இரண்டு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ..

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?-விந்துவை பற்றி ஆதிகால சரகர் என்ன சொல்கிறார் ?

ஆசார்யர் சரகர் தனது சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டில் கீழ்க்கண்டவற்றை விவரித்து கூறுகிறார் ..இது உண்மை ,அனைத்திற்கும் சம்ஸ்க்ருத பாட்டு ரெபரன்ஸ் உள்ளது ..

வாஜீ கரணம்

இரசாயனத்தை பயன்படுத்தி மனிதன் நோயற்று வாழத் தொடங்கியவுடன் உள்ளத்திற்க்கு உவகையூட்டும் வாஜீகர்ணத்தை நாட வேண்டும் .
எனெனில் அறம் பொருள் அன்பு புகழ் அனைத்தும் இதனையே சார்ந்துள்ளது .மகப்பேறின் காரணம் வாஜீகரணமேயாகும்.

ஆண்மையை வளர்க்கும் முறை -வாஜீ கரண சிகிசையையை எப்படி செய்யவேண்டும் ?
  1. ரசாயன சிகிச்சையை மேற்கொள்வது போல் மேற்கொள்ளவேண்டும் 
  2. முதலில் -உடலை தூய்மை படுத்தும் சிகிசைகளான பஞ்சகர்ம எனப்படும் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும் 
வலிமை ஆண்மை மகபேற்றின் பெருக்கம் இவற்றை விரும்பும் மனிதன் வாந்தி பேதி (பஞ்சகர்ம சிகிச்சை ) மருந்து உண்டு உடலைத் தூய்மைபடுத்தி வலிமையையும் ஆண்மையை வளர்க்கும் எண்ணை வசதிகளுடன் கசாய வஸ்திகளை(பஞ்சகர்ம சிகிச்சை ) முறைப்படி செய்து கொள்ளவேண்டும் .இவர்களுக்காக எண்ணை நெய் பால் சர்க்கரை தேன் முதலிய பொருட்களுடன் கூடிய மருந்துகளை கொண்டு வஸ்திகளைச்(பஞ்சகர்ம சிகிச்சை ) செய்விக்கவேண்டும் ..பிறகு பால் மாமிசரசம் இவற்றை உண்பதற்கு கொடுக்க வேண்டும் .

கட்டுப்பாடுகள் எவை எவை ?

ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும் ,எழுவது வயதிற்கு பின்பும் பெண்களோடும் புணரகூடாது.
மிகவும் இளமையாக உள்ளபோது தாதுக்கள் போதுமான அளவு வலிமை அடையாத போது புணர்ச்சியினால் விந்து உலர்ந்து போய் விடுகிறது 
குறைந்த தண்ணீருடைய குளம் கடுமையாக வெயிலினால் உலர்வது போல் 
பட்டுப்போன உலர்ந்த செல்லரிக்கப்பட்ட வறட்சியான மர கட்டை -தொட்டவுடன் உடைந்து விடுவது போல் 
தாதுக்கள் சரிவிகிதில் இல்லாதனுக்கு அளிக்கப்படும் வாஜீகர்ண சிகிச்சையில் கட்டுப்பாடு தேவை 

விந்து குறைய காரணம் என்ன ?

முதுமை,கவலை ,
நோய் ,
மிக்க உடல் உழைப்பு 
,பட்டினி கிடத்தல் 
மிகுதியான பெண் புணர்ச்சி -       ஆகியவற்றால் விந்து குறைவு ஏற்படுகிறது 



சிற்றின்ப வேட்கை தோன்றாமைக்கு காரணம் என்ன ?-செக்ஸ் உணர்வு இல்லாமைக்கு காரணம் இவைகள் 

விந்து குறைவு 
பயம் 
நம்பிக்கையின்மை 
துக்கம் 
பெண்களிடம் குற்றத்தை காணுதல் 
புணர்ச்சியின் சுவை அறியாமை 
பெண்களோடு அடியோடு தொடர்பு இன்மை 
அதிக புணர்ச்சியினால் பெரும் இன்பதை அடைதல் -   ஆகிய காரணங்களாலும் மனம் உடல் பலஹீனத்தாலும் குறையும் 


விந்துவின் இடம் -வெளியாகும் வகை -என்னென்ன 

கரும்பில் சாறு போல்,தயிரில் நெய் போல் ,எள்ளில் எண்ணை போல் -விந்து மனிதன் உடல் முழுவதும் பரவி உள்ளது 
தொடுபுலனில் இன்பத்தால் -ஈரமான ஆடையை பிழிந்தால் தண்ணீர் வெளிவருவது போல் -உடல் முழுவதும் உள்ள விந்து வெளியாகும் 

விந்து வெளியாக காரணம் என்னென்ன 

சிற்றின்ப வேட்கை 
பெண்களின் மீது பெரு விருப்பம் 
விந்துவின் இளகும் தன்மை 
பிசுபிசுப்பு தனை குறைவாக இருக்கும் தன்மை 
நுண்ணியதன்மை
வெளியாகும் தன்மை  
வாயுவின் விரைவு தன்மை -  ஆகிய காரணங்களால் விந்து வெளிப்படுகிறது 

பயனுள்ள விந்து எப்படி இருக்கும் ?

அடர்த்தியானதும் 
இனிமை (மதுர )ஆனதும் 
எண்ணை பசை உள்ளதும் 
கெட்ட நாற்ற மில்லாததும் 
குரு (கெட்டியான )தன்மை உடையதும் 
பிசுபிசு தன்மை உடையதும் - உள்ள விந்து கட்டாயமாக மகப்பேறை தரும் 


நாளை ..வாஜீகர்ண சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உணவுகள் ..

Post Comment

சனி, ஆகஸ்ட் 28, 2010

வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?











ஆயுர்வேதம் எட்டு வகைகளாக பிரிகிறது ..அதில் ரசாயனம் (வயதாகாமல் என்றும் இளமையாக இருப்பது )மற்றும் வாஜீகர்ணம் (ஆண்மை பெருக்கும்-முறைகள் -குதிரை போன்று வேகமாக செயல்பட வைக்ககூடிய துறை )..

நாம் இப்போது ரசாயனம் மற்றும் வாஜீகர்ணம் துறையின் உள்ள நுணுக்கங்களை தெரிய இருக்கிறோம் 

வாஜீ கரணம் என்றால் என்ன?

சரகரின் கூற்று படி 
  • எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை -உறவில் குதிரை (stallion ) போல் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ -அந்த விஷயங்கள் வஜீர்கர்ணம் 
  • உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம் 
 -(சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாட்டு நாலு முதல் ஐம்பத்து ஒன்று வரை )

ஆச்சார்யா வாக்பட்டரின் கூற்றுபடி -
  • எந்த ஆண்மகன் -வாஜீ கர்ண சிகிச்சையை மேற்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம் ,உடலில் பூரிப்பு ,ஆத்மார்த்த சந்தோசம் ,நல்ல குழந்தை செல்வம் ,நல்ல குல பெருமை ,நீடித்த ஆயுள் கிடைக்கும் 
  • அதுமட்டுமில்லாது அவன் பெண்களால் கவரப்படுவான் ,உறவில் குதிரை போல் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
யாருக்கெல்லாம் எந்த வாஜீகர்ண சிகிச்சை தேவை படும் ?
  1. வஜீகர்ண சிகிச்சையின் அவசியம் என்ன ? யாருக்கு ?
  2. பிறப்பிலிருந்தே உடல் வலு குறைந்தவர்
  3. உடலுறவு கொள்வதில் வலு குறைந்தவர்
  4. அதிகமான உடலுறவின் காரணமாக விந்தை அதிகம் இழந்தவர்
  5. உடலிலும் மனதிலும் -பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
  6. நோயினால் -(சர்க்கரை நோய் மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பல்ஹீனமானவர்
  7. அதிக பெண்களை மனைவியாக பெற்றவர்
  8. இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
  9. பலம் குறைந்த காலம் ,பலம் குறைக்கவைக்கும் தேசத்தில் உள்ளவர்
  10. அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
(சரக சம்ஹிதை -இரண்டாவது அத்தியாயம் -மூன்றிலிருந்து பத்து வரை உள்ள பாட்டில் )

வாஜீகர்ண சிகிச்சை பெற தகுதியானவன் யார் ?
  1. குழந்தை இல்லாதவர்
  2. விந்து தாது குறைந்ததால் பலம் இழந்தவர்
  3. உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
  4. உடலுறவு -பாலுணர்வே இல்லாதவர்
  5. ஆண்மை இழந்தவர்
  6. என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
  7. அதிக வசதி படைத்தவர் (பணக்கார )
  8. தன் இச்சைகளை அடக்க தெரிந்தவர்
வாஜி கர்ண சிகிச்சை பெற தகுதியில்லாதவன் யார் 
  1. சமூகத்தில் -தகாத குணம் உள்ளவன் -அனாத்மா 
  2. பதினாறு வயதிற்கு குறைந்தவன் -எழுபது வயதிற்கு மேலுள்ளவர்கள் 
  3. அதிக காம இச்சை கொண்ட-நல்ல எண்ணம் இல்லாதவன் 


தொடரும் .

Post Comment